அப்­பா­வி­களின் கைதும் அமைச்சு பொறுப்­பேற்பும்

0 693

ஏப்ரல் 21 குண்டு வெடிப்பு சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் உரு­வான நிலை­மை­களை முன்­னி­றுத்தி அமைச்சுப் பத­வி­களை துறந்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களுள் சிலர், சில நாட்­க­ளுக்கு முன்னர் தமது அமைச்சு பத­வி­களை மீளப் பொறுப்­பேற்­றதில் குறை­காண்­கின்­றனர். இவர்­களின் குற்­றச்­சாட்­டு­களில் ஓர­ளவு நியாயம் உள்­ள­தென்­பதை யாரும் மறுப்­ப­தற்­கில்லை.
சஹ்ரான் குழு­வி­னரின் திட்­ட­மிட்ட சதியின் விளை­வாக முஸ்லிம் மக்கள் பல்­முனை உள்­மன தாக்­கு­தல்­க­ளுக்கு முகம்­கொ­டுத்­து­வரும் நிலையில், இந்த பத­வி­யேற்­புகள் விமர்­சிக்­கப்­ப­டு­வதில் முழு­மை­யாக பிழை­காண முடி­யா­துள்­ளது. எனினும், பத­வி­யேற்றபின் பின்­ன­ணியை அறி­விக்­காது, அதற்­கான நியா­யங்­களை முன்­னு­ரைக்­காது பத­வி­யேற்­றதன் விளைவே இப்­ப­டி­யான விமர்­ச­னங்கள் என்­பதை புரிந்­து­கொள்ள வேண்டும்.

அமைச்­சு­களை பொறுப்­பெ­டுத்த மறு­நாளே, புர்­கா­வுக்கு தடை­கோரி சமர்­ப்பிக்­கப்­பட்ட அமைச்­ச­ரவைப் பத்­திரம் அன்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் அமைச்சர் ரவூப் ஹக்­கீமின் தலை­யீட்டால் பிற்­போ­டப்­பட்­டது என்­பதை பலர் கவ­னிக்­க­வில்லை.

அநி­யா­ய­மாக கைது­செய்­யப்­பட்­ட­வர்­க­ளது விட­யத்தில் அவர்­களின் விடு­த­லைக்­காக இயங்­கிய ஒருவன் என்­கிற அடிப்­ப­டையில், கைதா­ன­வர்கள் அனை­வரும் விடு­தலை செய்­யப்­ப­டு­வ­தற்கு முன் ஏன் பத­வி­யேற்­றார்கள் என்ற பர­வ­லான குற்­றச்­சாட்­டுக்கு பதி­ல­ளிக்­கலாம் என நினைக்­கிறேன்.
குண்டு வெடிப்பு சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் கைதுகள் நடந்­த­போது, அப்­பா­வி­களின் விடு­த­லைக்­கான சரி­யான திட்­ட­மிட்ட முன்­னெ­டுப்­பு­களை முஸ்லிம் காங்­கிரஸ் மட்­டுமே செய்­தது என்­பதில் யாரும் குறை­காண முடி­யாது. நாம் இதற்­கான நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்த பின்னர், முஸ்லிம் சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் உட்­பட மேலும் சிலர் கட்சி பேதங்­க­ளுக்கு அப்பால் இயங்­கி­ய­தோடு தம்­மா­லான உதவி ஒத்­தா­சை­களை வழங்­கி­னார்கள். இருப்­பினும் சட்­டமா அதிபர் அலு­வ­ல­கத்­து­ட­னான தொடர்­பு­களில் 99% முஸ்லிம் காங்­கிரஸ் சட்­டத்­த­ர­ணி­களே பங்­க­ளிப்புச் செய்­தனர்.

பிர­தமர் ஏற்­பாட்டில் பிரதி பாது­காப்பு அமைச்சர், பாது­காப்பு உயர் அதி­கா­ரிகள், சட்­டமா அதிபர் திணைக்­கள அதி­கா­ரிகள், முன்னாள் சட்­டமா அதி­பரும் தற்­போ­தைய அமைச்­ச­ரு­மான திலக் மாரப்­பன போன்றோர் அடங்­கிய குழு­வுடன் ரவூப் ஹக்கீம், மு.கா. செய­லாளர் நிஸாம் காரி­யப்பர் போன்றோர் நடாத்­திய தொடர் சந்­திப்­புகள் அப்­பா­விகள் பலரை விடு­தலை செய்ய வழி­கோ­லி­யது.

சட்­டத்­த­ர­ணி­க­ளான ரிஸ்வி ஜவ­ஹர்ஷா, சிபான் மஹ்ரூப் போன்­றோரின் அர்ப்­ப­ணிப்­பு­ட­னான செயற்­பாடு, கணினி மற்றும் கோவைப்­ப­டுத்தல் உட்­பட தொடர்­பாடல் பணி­களில் பேரு­த­வி­யாக செயற்­படும் ஸக்கி அஹ­மது போன்­ற­வர்­களின் சோர்­வற்ற உழைப்பின் பிர­தி­ப­ல­னாக மன­நி­றைவு தரும் முடி­வு­களை எட்­ட­மு­டி­யு­மாக இருந்­தது.

கைது­செய்­யப்­பட்ட அனை­வ­ரி­னதும் தர­வுகள் தாருஸ்­ஸலாம் காரி­யா­ல­யத்­துக்கு கிடைத்­தன என்று சொல்­ல­மு­டி­யா­விட்­டாலும், நாட்டின் நாலா­புறம் இருந்தும் நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்கள் எம்மை சந்­தித்து, எமக்கு அவ­சி­ய­மான குற்றப் பத்­தி­ரிகை (B Report) உட­னான தக­வல்­களை வழங்­கினர். இவற்றில் 18 கோப்­புகள் மாத்­தி­ரமே விடு­தலை செய்­யப்­ப­டாமல் எங்­க­ளிடம் எஞ்­சி­யி­ருக்­கின்­றன. விரைவில் அவற்­றையும் முடி­வுக்கு கொண்­டு­வந்­து­வி­டலாம். எஞ்­சி­யுள்ள கோப்­பு­களில் பெரும்­பா­லா­னவை பார­து­ர­மான குற்றப் பத்­தி­ரிகை குறிப்­பு­களைக் கொண்­ட­வை­யாக இருப்­பதால், அவற்­றுக்­கான காலம் இன்னும் தள்­ளிப்­போ­கலாம்.

பார­தூ­ர­மான குற்­றச்­சாட்­டு­களின் பார­தூரம் பற்றி விளக்­கு­வ­தற்­காக சில­வற்றை குறிப்­பி­டலாம்.

• சஹ்­ரானின் மத்­ர­சாவில் விரி­வு­ரை­யா­ள­ராக பணி­யாற்­றி­ய­துடன் ஐ.எஸ். பற்­றியும் வகுப்­பெ­டுத்தார் என்ற மாண­வர்­களின் வாக்­கு­மூலம்.

• இப்­ராஹீம் ஹாஜி­யா­ரிடம் பணம்­பெற்று, பள்­ளி­வாசல் கட்டி சஹ்­ரானை கொண்­டு­வந்து திறப்­பு­விழா நாடாத்தி, சஹ்­ரானைக் கொண்டே குத்பா பிர­சங்கம் நிகழ்த்­தி­யது.

• சஹ்ரான் திறப்­பு­விழா நடாத்­திய பள்­ளிக்கு சவூ­தி­யி­லி­ருந்து நிதி­யு­தவி பெற்­றுக்­கொ­டுத்­தமை.

• மாவ­னல்லை சிலை உடைப்பை நடாத்­தி­ய­வர்­களின் விரி­வு­ரை­களில் பங்­கு­பற்­றி­யமை.

• ஐ.எஸ். பற்றி முகநூல் மூல­மாக நண்பர் வட்­டத்தை உரு­வாக்கி செயற்­பட்­டது.

• தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அங்­கத்­த­வ­ராக இருந்­தமை.

போன்ற பார­தூ­ர­மான குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­ட­வர்­கள்­போக, மேலும் சிலர் பின்­வரும் செயற்­பா­டு­க­ளினால் பயங்­க­ர­வா­தத்­துக்கு துணை­போ­யி­ருக்­கலாம் என்ற சந்­தே­கத்தில் கைதா­கி­யுள்­ளனர்.

• உரிய அனு­மதிப் பத்­திரம் இல்­லாமல் (கல் உடைப்­ப­தற்கு) வெடி­பொ­ருட்­களை வைத்­தி­ருந்­த­வர்கள்.

• வெளி­நாட்டு தூத­ர­கங்­க­ளி­னதும் பொலிஸ் உய­ர­தி­கா­ரி­க­ளி­னதும் இறப்பர் முத்­தி­ரை­களை வைத்­தி­ருந்­த­வர்கள் (போலிக் கச்­சேரி).

• பிறரின் அடை­யாள அட்­டைகள், கட­வுச்­சீட்டு போன்­ற­வற்றை வைத்­தி­ருந்­த­வர்கள்.

• அனு­ம­திப்­பத்­திரம் இல்­லாது துப்­பாக்­கி­களை வைத்­தி­ருந்­த­வர்கள்.

• வெடி­குண்­டு­களை வீட்டில் மறைத்து வைத்­தி­ருந்­த­வர்கள் (மோப்ப நாய்கள் மூலம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன)

• துப்­பாக்கி ரவை­களை ஒளித்து வைத்­தி­ருந்­த­வர்கள்

• உயர் பாது­காப்பு வல­யங்­களை வீடியோ எடுத்­த­வர்கள்.

• சஹ்ரான் சார்ந்­தோ­ருக்கு வீடு­களை வாட­கைக்கு கொடுத்­த­வர்கள் மற்றும் ஏற்­பாடு செய்­த­வர்கள்.

• மேற்­படி வீடு­களில் பணி­பு­ரிந்­த­வர்கள், அங்கு ஆயுதப் பயிற்சி நடத்­தப்­பட்­டது பற்றி தெரிந்­தி­ருந்தும் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கா­த­வர்கள்.

• சட்­ட­வி­ரோ­த­மாக புதையல் கண்­டு­பி­டிக்கும் அதி­ந­வீன இலத்­தி­ர­னியல் கரு­வி­களை வைத்­தி­ருந்­த­வர்கள். (இதனைக் கொண்டு புதைக்­கப்­பட்­டி­ருந்த விடு­தலைப் புலி­களின் ஆயு­தங்­களை தோண்­டி­யெ­டுத்து பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு கொடுத்­தி­ருக்­கலாம்)

இவ்­வா­றான குற்­றச்­சாட்­டு­க­ளுடன் ஏதோ­வொரு வகையில் நம்­ம­வர்கள் சம்­பந்­தப்­பட்­டுள்­ளதால், இவற்­றுக்கும் பயங்­க­ர­வா­தி­க­ளு­டனா தொடர்­பு­க­ளுக்­கு­மான பின்­ன­ணிகள் எது­வு­மில்லை என்று மறு­த­லிப்­பது இல­கு­வா­ன­தல்ல. குற்றப் பத்­தி­ரி­கை­களில் இவர்கள் ‘சந்­தேக நபர்கள்’ என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தாலும் இவர்­களின் கடந்­த­கால தொடர்­புகள் சம்­பந்­த­மான விசா­ர­ணைகள், பொருட்கள் சம்­பந்­த­மான இர­சா­யன பரி­சோ­த­னைகள், தொலை­பேசி உரை­யாடல் விப­ரங்கள், நட­மா­டிய மற்றும் தொடர்­பி­லி­ருந்த நபர்கள் போன்ற விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன.

ஆயி­ரக்­க­ணக்­கான அப்­பா­விகள் கைதாகி இன்னும் விடு­தலை செய்­யப்­ப­டா­துள்­ளனர் என்­பதில் எவ்­வித உண்­மையும் கிடை­யாது. சாதா­ரண சந்­தே­கங்­களின் அடிப்­ப­டையில் கைது­செய்­யப்­பட்­ட­வர்­களில் பெரும்­பா­லானோர் வெளியில் வந்­து­விட்­டனர். இவ்­வ­ளவு பெருந்­தொ­கை­யா­னோரை விடு­தலை செய்­வ­தற்கு அமைச்சு பத­வி­களை துறந்து, கொடுத்த அழுத்­தமே கார­ண­மாகும். பிர­த­மரின் நேரடிக் கண்­கா­ணிப்பில் இயங்­கக்­கூ­டிய அமைப்­பொன்றின் மூல­மாக முஸ்லிம் காங்­கிரஸ் சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கு இவ்­வ­ளவு தூரம் இதனை சாதித்­துக்­கொள்ள வழி­ய­மைத்­ததும் அதுவே என்­பதை எவ­ராலும் மறுக்க முடி­யாது.

அப்­பா­விகள் என்ற சொற்­ப­தத்­துக்குள் அடங்­கா­த­வர்­களே இன்னும் மீத­முள்­ளனர் என்ற கசப்­பான உண்­மையை ஏற்­றுக்­கொண்டே ஆக­வேண்­டி­யுள்­ளது. இருப்­பினும் அவர்­களின் விடு­தலை பற்றி தினந்­தோறும் எம்மை தொடர்பு கொள்­ப­வர்­க­ளுக்கு நம்­பிக்­கை­யூட்டும் ஆறுதல் வார்த்­தை­களை சொல்­லிக்­கொண்­டி­ருப்­ப­துடன் நின்­று­வி­டாது, எமது சட்­டத்­த­ர­ணிகள் தொடர்ந்தும் சட்­டமா அதி­பரின் காரி­யா­லய படிக்­கட்­டு­களில் ஏறி இறங்கிக் கொண்­டுதான் இருக்­கின்­றனர்.

இனியும் ‘அப்­பா­விகள் விடு­தலை செய்­யப்­ப­ட­வில்லை’ என்று பகி­ரங்­க­மாக கோஷம் எழுப்­பிக்­கொண்டு, அமைச்­சு­களை மீள பொறுப்­பேற்­க­மு­டி­யாது என்பதற்கு அதனை ஒரு காரணமாக முன்வைப்போமாயின்,

பயங்கரவாதிகளை விடுதலை செய்யுமாறு முஸ்லிம் பாராளுமன்ற குழுவினர் அரசுக்கு அழுத்தம்’ என்ற தலைப்புச் செய்திகள் நாளிதழ்களை அலங்கரிக்கும் அளவுக்கு மீதமுள்ளவர்களின் குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை.
அப்படி ஏதும் நடந்தால், அதன் விளைவுகள் விபரீதமாக அமைவது மாத்திரமன்றி தொடர்ச்சியான எமது முன்னெடுப்புகளுக்கான வாசல் முழுமையாக மூடப்பட்டுவிடும். சர்வதேச அழுத்தங்கள், தொடர் உண்ணாவிரதங்கள், வீதிமறியல் போராட்டங்கள் வெளியிலிருந்து தமிழ் தரப்பு அரசுக்கு வழங்கும் ஆதரவு போன்ற விடயங்கள் இருந்தும், யுத்தகாலத்தில் கைதுசெய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகள் இன்றுவரை விடுதலை செய்யப்படாது இருக்கும் சூழலில் முஸ்லிம் அமைச்சர்கள் பதவிவிலகி, குறுகிய காலத்துக்குள் இதனை சாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குற்றமற்ற எவரும் இன்னும் விடுதலையாகாமல் இருந்தால், அவர்களின் விடுதலை விரைவில் நடந்தேறவும் எங்களது பணி வெற்றிபெறவும் பிரார்த்தியுங்கள்.

ரவூப் ஹஸீர்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.