மாவனல்லை பதுரியா கேட்போர் கூட நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தம்

யார் பொறுப்பு?

0 754

மாவ­னல்லை கிருங்­க­தெ­னிய பது­ரியா மத்­திய கல்­லூ­ரியின் கேட்போர் கூட நிர்­மாணப் பணிகள் கடந்த ஒரு வரு­டங்­க­ளுக்கு மேலாக இடையில் கைவி­டப்­பட்டு நிறுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. அப்­போ­தைய சப­்ர­க­முவ மாகாண சபையின் முத­ல­மைச்­சராக இருந்த மஹீ­பால ஹேரத் சுமார் 3 கோடியே 94 இலட்சம் ரூபா அளவில் நிதி ஒதுக்கி இந்த கேட்போர் கூடத்தை நிர்­மா­ணிப்­ப­தற்­காக நட­வ­டிக்­கை­களை எடுத்தார்.

ஆனாலும் இந்த கட்­டிட நிர்­மாணம் இடையில் கைவி­டப்­ப­டுள்ள நிலையில், பகு­தி­ய­ளவில் நிர்­மா­ணிக்­கப்­பட்­ட­தாக உள்ள கட்­டி­டத்தை சூழ பற்­றைக்­கா­டுகள் வளர்ந்­துள்­ளன.

பது­ரியா மத்­திய கல்­லூ­ரி­யா­னது சப­்ர­க­முவ மாகா­ணத்தில் மாத்­தி­ரமன்றி இலங்கை முழு­வ­தற்கும் தர­மான கல்­வி­யி­ய­லா­ளர்கள், அறி­ஞர்கள், பல்­துறை சார்ந்த நிபு­ணர்­களை உரு­வாக்கும் பணியில் முன்­ன­ணியில் இருக்கும் ஒரு பாட­சா­லை­யாகும். 1918 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்­பிக்­கப்­பட்ட இப்­பா­ட­சா­லைக்கு 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 100 வரு­டங்கள் நிறை­வ­டைந்­துள்ள ஒரு பாட­சா­லை­யாகும்.

ஆனாலும் இப்­பா­ட­சா­லையின் கல்விப் பணிக்கு 100 வரு­டங்கள் நிறை­வ­டைந்­தி­ருந்­தாலும் பாட­சாலை இன்றும் நிவர்த்தி செய்­யப்­ப­டாத பல குறை­பா­டு­களைக் கொண்­ட­தாக இருந்து வரு­கின்­றது. அதிலும் பிர­தான குறை­பா­டாக இருந்து வரு­வது 100 வரு­டங்­க­ளா­கியும் இது­வ­ரையில் ஒரு கேட்போர் கூடம் இல்­லா­மை­யாகும்.

இந்த குறை­பாட்டை நிவர்த்தி செய்­வ­தற்­காக அப்­போ­தைய முல­மைச்­ச­ராக இருந்த மஹீ­பால ஹேரத் சுமார் 3 கோடி 94 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கி இக்­கல்­லூ­ரிக்­கான கேட்போர் கூடம் ஒன்றை நிர்­மா­ணித்து தர நட­வ­டிக்கை எடுத்தார். ஆனாலும் கட்­டிட நிர்­மாணம் ஆரம்­பிக்­கப்­பட்டு ஒரு­ப­குதி வேலைகள் நிர்­மா­ணிக்­கப்­பட்­ட­தா­யினும் உரிய முறையில் திட்­ட­மி­டப்­பட்ட காலத்தில் முழு­மை­யான பணிகள் பூர்த்தி செய்­யப்­ப­டாமல் கைவி­டப்­பட்ட நிலை காணப்­ப­டு­கின்­றது.

பது­ரியா மத்­திய கல்­லூ­ரியில் சுமார் 3500 மாண­வர்கள் அளவில் கல்வி கற்­கின்­றனர். இந்த மாண­வர்­க­ளது கலை கலா­சாரம் மற்றும் பல்­வேறு துறை­க­ளி­லு­மான திற­மை­களை வெளிப்­ப­டுத்த மட்­டு­மல்­லாது ஆசி­ரி­யர்­க­ளது திறன் விருத்­திக்­கான செய­ல­மர்­வுகள், கருத்­த­ரங்­குகள், மாண­வர்­க­ளுக்­காக பரி­ச­ளிப்பு உட்­பட பெரி­ய­ள­வி­லான நிகழ்­வு­களை நடத்த அயலில் உள்ள பிர­தேச சபை கேட்போர் கூடத்தை கட்­டணம் செலுத்தி பயன்­ப­டுத்த வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

இந்த கட்­டிட நிர்­மாணம் தொடர்­பாக மாவ­னல்லை வலயக் கல்விக் காரி­யா­ல­யத்­திற்கு 2019 ஜூலை 07 ஆம் திகதி சமர்ப்­பித்த தகவல் அறி­வ­தற்­கான உரிமைச் சட்­டத்தின் அடிப்­ப­டை­யி­லான விண்­ணப்பப் படி­வத்­திற்கு 2019.07.22 என்று திக­தி­யிட்டு மாவ­னல்லை வலய பிரதி கல்வி பணிப்­பாளர் பீ.தம்­மிக அநு­ர­கு­மார வழங்­கி­யுள்ள பதிலில் கேட்போர் கூட நிர்­மாணம் தொடர்­பாக பின்­வரும் தகவல்கள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன.

”இந்த கேட்போர் கூடத்தை நிர்­மா­ணிப்­ப­தற்­காக 3 கோடி 94 இலட்­சத்து 89 ஆயி­ரத்து 832 ரூபா நிதியை சப்­ர­க­முவ மாகாண கல்வி அமைச்சு ஒதுக்­கி­யி­ருக்­கின்­றது. கொழும்பு கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள மியுச்­சுவல் எஞ்­சி­னி­யரிங் என்ற கட்­டிட நிர்­மாண கம்­ப­னிக்கு கட்­டிட நிர்­மா­ணத்­திற்­கான ஒப்­பந்­தத்தை 2016.11.11 இல் செய்து கட்­டிட வேலை­களை 2018.08. 11 ஆம் திகதி நிறைவு செய்ய வேண்டும் என்ற அடிப்­ப­டையில் கைய­ளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இந்த கட்­டிட நிர்­மாண கம்­பனி இரண்டு வரு­டங்­க­ளுக்கு மேல் கடந்­துள்ள நிலையில் இது­வ­ரையில் 19 வீத­மான வேலை­களை மாத்­தி­ரமே நிறைவு செய்­தி­ருப்­ப­தோடு அதற்­காக 50 இலட்­சத்து 70 ஆயிரம் ரூபா செலவு செய்­தி­ருக்­கின்­றது. அதற்­கான நிதி வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அத்­துடன் இந்த கட்­டிட நிர்­மாண வேலை­களை கண்­கா­ணிக்கும் பொறுப்பு ரம்­புக்­க­னையில் உள்ள நிறை­வேற்று பொறி­யி­ய­லாளர் அலு­வ­ல­கத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

நிறை­வேற்று பொறி­யி­ய­லாளர் ஹசங்க என்­ப­வரைச் சந்­தித்து தகவல் அறி­வ­தற்­கான விண்­ணப்­பத்தை சமர்ப்­பித்து தகவல் கோரிய போது குறிப்­பிட்ட பொறி­யிய­லாளர், வேலை­களை பொறுப்­பேற்ற இந்த கம்­பனி வேலை­களை உரிய காலத்தில் நிறைவு செய்­யாமல் தாம­தித்­ததால் அக் கம்­ப­னி­யு­ட­னான ஒப்­பந்தம் இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் புதிய விலை மனு கோரப்­பட்டு புதிய கட்­டிய நிர்­மாண கம்­ப­னி­யொன்றை தெரிவு செய்து மீண்டும் கட்­டிட நிர்­மாண வேலை­களை ஆரம்­பிக்க சப்­ர­க­முவ மாகாண கல்வி அமைச்சு நட­வ­டிக்கை எடுக்கும் என்றார். அத்­துடன் இடை நிறுத்­தப்­பட்­டுள்ள வேலை­களை உடன் ஆரம்­பித்து பூர்த்தி செய்­யு­மாறு 2018.09. 13 ஆம் திகதி அவரால் உரிய மியுச்­சுவல் கட்­டிட நிர்­மாண கம்­ப­னிக்கு கடிதம் மூலம் அறி­வித்­தி­ருந்தார். அதற்கும் அந்த கட்­டிட நிர்­மாண கம்­பனி நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­க­வில்லை.
அதன் பின்னர் சப­்ர­க­முவ மாகாண கல்வி தகவல் தொழில்­நுட்ப மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சின் செய­லாளர் மஹிந்த எஸ். வீர­சூ­ரி­யவும் இந்த கட்­டிட நிர்­மாண கம்­ப­னிக்கு 2019.05.06 ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பி 2016.11.11 ஆம் திகதி ஒப்­பந்தம் செய்து கட்­டிட நிர்­மாண வேலைகள் ஒப்­ப­டைக்­கப்­பட்டு 2017.11.11 இல் நிர்­மாண வேலை­களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரப்­பட்­டது. ஆனாலும் உரிய கட்­டிட நிர்­மாண கம்­பனி குறிப்­பிட்ட காலத்­தையும் கடந்து பணி­களை நிறைவு செய்ய தவ­றி­விட்­டதால் குறித்த ஒப்­பந்­தத்தை இரத்துச் செய்ய நட­வ­டிக்கை எடுத்­த­தாக கம்­பனி ஒப்­பந்­தக்­கா­ர­ருக்கு அறி­வித்­துள்ளது.

நிறை­வேற்று பொறி­யி­யலாளர் அலு­வ­லகம் மேற்­கு­றித்த இரண்டு கடி­தங்­க­ளதும் பிர­தி­களை என்­னிடம் சமர்ப்­பித்­தது. இவ்­வா­றாக பார்க்கும் போது நிதி ஒதுக்­கப்­பட்டும் கேட்போர் கூட நிர்­மாண வேலை­களை நிறைவு செய்து உரிய கட்டிடத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டமை இந்த பாடசாலையின் வரலாற்றில் அடைந்த ஒரு துர்ப்பாக்கியமான நிகழ்வாகும்.
அதனால் கூடிய சீக்கிரம் இந்த கேட்போர் கூட நிர்மாணம் தொடர்பாக பாடசாலை அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்கம் மற்றும் ஊருக்காக உழைக்கக் கூடிய அரசியல் செல்வாக்குள்ள பிரமுகர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து கூடுதல் கரிசனை காட்டி ஒதுக்கப்பட்ட மீதமுள்ள பணத்தை முழுமையாக செலவிட்டு கேட்போர் கூட நிர்மாண வேலைகளை பூர்த்தி செய்ய அழுத்தம் வழங்க வேண்டும் என இப்பாடசாலை மாணவர்களது பெற்றோர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

எம்.எஸ்.அமீர் ஹுசைன்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.