ஜனாதிபதி தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தல்கள்

ஜனாதிபதி திட்டவட்டம் ; வர்த்தமானி வெளியாகும் என தகவல்

0 857

ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்பு மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் அதற்கு ஏது­வாக விசேட அர­சாங்க வர்த்­த­மானி அறி­வித்­தலை இரண்­டொரு தினங்­க­ளுக்குள் வெளி­யி­ட­வுள்­ள­தா­கவும் ஜனா­தி­பதி செய­லக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

விரைவில் மாகாண சபைத்­ தேர்­தலை நடத்­து­வது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய மற்றும் சட்­டமா அதிபர் தப்­புல டி லிவேரா ஆகிய இரு­வ­ரையும் கொழும்­பி­லுள்ள தனது உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்­துக்கு அழைத்து விசேட கலந்­து­ரை­யா­ட­லொன்­றினை நடத்­தி­யி­ருக்­கிறார்.

மாகாண சபைத் தேர்­தலை நடத்தும் முறைமை தொடர்பில் உயர் நீதி­மன்றின் கருத்­தினைப் பெற்­றுக்­கொள்­ளும்­படி ஜனா­தி­பதி கடந்த வாரம் சட்­டமா அதி­பரைக் கோரி­யி­ருந்­த­துடன் கருத்து வின­வு­வ­தற்கு முன்பு அது தொடர்பில் தனக்கு எழுத்து மூலம் அறி­விக்­கும்­ப­டியும் அவரைக் கோரி­யி­ருந்தார்.

ஜனா­தி­ப­தியின் கோரிக்­கைக்கு அமை­வாக சட்­டமா அதிபர் மாகாண சபைத் தேர்தல் நடத்­து­வது தொடர்பில் சில முக்­கிய விட­யங்­களை ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்­த­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இத­னை­ய­டுத்தே ஜனா­தி­பதி தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மற்றும் சட்ட மா அதி­பரை தனது உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்­திற்கு அழைத்து கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கிறார்.

ஜனா­தி­பதி வெளி­யி­ட­வுள்ள விசேட அரச வர்த்­த­மானி எதிர்­வரும் மாகாண சபைத் தேர்தல் வட்­டார மற்றும் விகி­தா­சார முறை­யி­லான புதிய தேர்தல் முறையின் கீழ் நடத்­தப்­படும் வகையில் அமைந்­தி­ருக்கும் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

சப்­ர­க­முவ, வட­மத்­திய, கிழக்கு, வடமேல், வடக்கு, தெற்கு, மேல் மாகாணம், மத்­திய மாகாணம் என்­ப­ன­வற்றின் பத­விக்­காலம் பூர்த்­தி­ய­டைந்­துள்ள நிலையில் ஊவா மாகாண சபையின் பத­விக்­காலம் எதிர்­வரும் அக்­டோபர் மாதத்­துடன் நிறை­வ­டை­ய­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஏ.ஆர்.ஏ.பரீல்

 

Leave A Reply

Your email address will not be published.