உட்படுத்தல் கல்வியும் தெளிவூட்டலும்

0 10,651

இறைவன் பலரை எவ்­வித அங்­க­வீ­ன­மு­மின்றிப் படைக்­கின்றான். சிலரை அங்­க­வீ­னத்­தோடு படை­க்கின்றான். அவ்­வாறு எவ்­வித அங்­க­வீ­ன­மு­மின்றிப் பிறக்­கின்­ற­வர்கள் இயற்­கை­யாக அல்­லது செயற்­கை­யாக நிகழ்­கின்ற ஆபத்­து­க­ளுக்­குள்­ளாகி அதனால் அங்­க­வீ­ன­மு­டை­ய­வர்­க­ளாக மாறு­கின்­றார்கள். 

இருப்­பினும், அவ்­வா­றா­ன­வர்­க­ளி­டத்தில் மாற்றுத் திறன்கள், ஆற்­றல்கள், ஆளு­மைகள் மறைந்து காணப்­ப­டு­கின்­றன. அவ்­வாறு காணப்­ப­டு­கின்ற ஆற்­றல்கள், திறன்கள் அடை­யாளம் காணப்­பட்டு அவை வலுப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­போது, அத்­த­கைய விஷேட தேவை­யு­டை­ய­வர்கள் அல்­லது மாற்றுத் திற­னா­ளிகள் சாத­னை­யா­ளர்­க­ளா­கவும், வெற்­றி­யா­ளர்­க­ளா­கவும், ஆளு­மை­யுள்­ள­வர்­க­ளாகவும் சமூக நீரோட்­டத்தில் இணைந்து கொள்­வார்கள்.

மாறாக, சமூ­கத்தின் மத்­தியில் வாழும் மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் சமூ­கத்­தி­னாலும், சூழ­லி­னாலும் புறக்­க­ணிக்­கப்­ப­டு­கின்­ற­போது, அவர்­களின் உரி­மைகள் மதிக்­கப்­ப­டா­த­போது, அவர்கள் மீது மனி­தா­பி­மானம் காட்­டப்­ப­டாது அவர்களை சமூக நீரோட்­டத்தில் இணைப்­ப­தற்­கான முயற்­சிகள் எடுக்­கப்­ப­டா­த­போது, அத்­த­கைய மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் அவர்­க­ளுக்குள் உறைந்து கிடக்கும் ஆளு­மை­களை வெளிப்­ப­டுத்த முடி­யாது, அடை­வு­களை அடைந்து கொள்­ளாது ஒதுங்கி ஓர­மாகி வாழும் நிலைக்குத் தள்­ளப்­பட்டு விடு­வார்கள்.
இவ்­வா­றான மாற்­றுத்­தி­றனா­ளிகள் சமூ­கத்தின் மத்­தி­யி­லி­ருந்து ஓர­மாக்­கப்­ப­டாது அவர்கள் மனி­தா­பி­மா­னத்­துடன் அணு­கப்­ப­டு­வதும் அவர்­களின் உரி­மைகள் மதிக்­கப்­ப­டு­வதும் அவர்­க­ளுக்­கான கல்வி வாய்ப்பு வழங்­கப்­ப­டு­வ­துடன் அவர்கள் பாது­காக்­கப்­ப­டு­வதும் அவ­சி­ய­மாகும். இதனை அடைந்து கொள்­வ­தற்­கான ஒரு செயற்­றிட்­ட­மா­கவே உட்­ப­டுத்தல் கல்வி நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என்­பது சுட்­டிக்­காட்­டத்­தக்­க­தாகும்.

மாற்­றுத்­தி­ற­னா­ளி­களும் உரிமைகளும்

உட­லிலோ அல்­லது உள்­ளத்­திலோ ஏற்­பட்ட மாற்­றத்தின் கார­ண­மாக சில­ரினால் சில விட­யங்­களைப் புரி­ய­மு­டி­யாமல் போய்­விடும். அவ்­வா­றா­ன­வர்கள் மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் என்ற வரை­ய­றைக்குள் வந்­து­வி­டு­கின்­றனர். மர­ப­ணு­வினால் பிறப்பில் ஏற்­படும் மாற்­றங்கள், தாயின் கருவில் இருக்­கும்­போது அல்­லது பிறந்­த­வு­டனே ஏற்­படும் நோய்கள் மூலம் ஏற்­படும் மாற்­றங்கள், விபத்­தினால், தெரி­யாத கார­ணங்­க­ளினால் என உடலில் அல்­லது உள்­ளத்தில் ஏற்­ப­டு­கின்ற மாற்­றங்­க­ளினால் பலர் நிரந்­தர வலு­வி­ழந்­த­வர்­க­ளாக மாறு­கின்­றனர்.
உடல் ஊனம், புலன் குறை­பாடு, பார்வைக் குறை­பாடு, கேள்விக் குறை­பாடு, நுகர்ச்சி மற்றும் சுவைசார் புலன் குறை­பாடு, மன­வ­ளர்ச்சிக் குறை­பாடு, உளப் பிறழ்ச்சி என்­ப­வற்­றுக்கு உள்­ளா­குவோர் இந்த மாற்­றுத்­தி­ற­னாளி நபர்கள் என்ற வகைக்­குள்­ளா­கின்­றனர்.

இவர்கள் தமது தனிப்­ப­ட்ட வாழ்­விலும் சமூக, பொரு­ளா­தார, கல்வி, அர­சியல் என பல்­வேறு துறை­க­ளிலும் பல இடர்­பா­டு­களை எதிர்­நோக்­கு­கின்­றனர். இவ்­வாறு இடர்­பா­டு­களை எதிர்­நோக்­கு­கின்ற இவர்கள் மீது மனி­தா­பி­மானம் காட்­டப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். அவர்­களின் உரி­மைகள் மதிக்­கப்­ப­டு­வதும் பாது­காக்­கப்­ப­டு­வதும் முக்­கி­ய­மாகும்.

2007 ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் சபையில் மேற்­கொள்­ளப்­பட்ட மாற்­றுத்­தி­ற­னாளி நபர்­களின் உரி­மைக்­கான ஒப்­பந்­த­மா­னது இந்­ந­பர்­களின் உரி­மை­களைப் பாது­காக்­கு­மாறு வலி­யு­றுத்­து­கி­றது. அதில், மாற்­றுத்­தி­ற­னாளி நபர்­களின் உரி­மைகள் தொடர்பில் பல்­வேறு விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளன.

“நாம் அனை­வரும், உலக அமைதி, சுதந்­திரம் மற்றும் நியாயம் ஆகி­ய­வற்றின் முக்­கி­யத்­து­வத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட சமத்­து­வ­மான மனித குடும்­பத்தின் உறுப்­பி­னர்கள் என்றும், நாம் அனை­வரும் சமம் மற்றும் நம் அனை­வ­ருக்கும் மனித உரி­மைகள் உண்டு என்றும் மாற்­றுத்­தி­ற­னாளி நபர்கள் அனை­வரும் அனைத்து மனித உரி­மை­க­ளையும், அடிப்­படை சுதந்­தி­ரத்­தையும் அனு­ப­விக்க வேண்­டும் என்று அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அத்­துடன் அவர்­க­ளுக்கு எதி­ராக எந்த பார­பட்­சமும் இருக்கக் கூடாது என்­பதை நாம் அனை­வரும் ஏற்­றுக்­கொள்ள வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

சுற்­றுப்­புறச் சூழல் மற்றும் மக்­க­ளு­டைய எண்­ணங்­க­ளும்தான் மாற்­றுத்­தி­ற­னா­ளி­களின் இய­லா­மையை ஊக்­கப்­ப­டுத்­து­கி­றது என்­பதைப் புரிந்­து­கொள்ள வேண்டும். மாற்­றுத்­தி­ற­னாளி நபர்­களின் முன்­னேற்­றத்­திற்­காக உல­க­ளவில் உள்ள பொது­வான விதிகள் மற்றும் செயற்­பா­டு­களால் அவற்றை அடை­வ­தற்கு உரு­வாக்­கப்­படும் சட்­டங்கள், விதிகள், திட்­டங்கள், முடி­வுகள் மற்றும் செயல்கள் ஆகி­ய­வற்றை நாம் கருத்­திற்­கொள்­வது மிகவும் அவ­சி­ய­மாகும். ஒவ்­வொரு அர­சாங்­கமும், சர்­வ­தேச நிறு­வ­னங்­களும் வறுமை ஒழிப்பு, தொழில்­வாய்ப்பு போன்ற தேசிய வளர்ச்­சிக்­கான திட்­டங்­களை மேற்­கொள்­ளும்­போது மாற்­றுத்­தி­ற­னாளி நபர்­களின் நிலை­மை­யையும் சம அளவில் கருத்­திற்­கொள்ள வேண்டும்.

அத்­தோடு, வாழ்க்­கையில் பல சூழ்­நி­லை­க­ளிலும் உள்ள விட­யங்­களை நாம் புரிந்­து­கொண்டு செயற்­ப­டு­வது மாற்­றுத்­தி­ற­னாளி நபர்­களின் வாழ்க்கை மேம்­பட உத­வி­யாக இருக்கும். அபி­வி­ருத்­தி­ய­டைந்த, அபி­வி­ருத்­தி­ய­டை­யாத நாடு­களில் வாழும் மாற்­றுத்­தி­ற­னாளி நபர்கள் சம­மாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு அனைத்து செயற்­பா­டு­க­ளிலும் சம அளவில் ஈடு­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பதை உறு­தி­செய்ய வேண்­டு­மென ஐக்­கிய நாடு­களின் மாற்­றுத்­தி­ற­னாளி நபர்­க­ளுக்­கான ஒப்­பந்­தத்தின் சுருக்­கத்தில் கூறப்­பட்­டுள்­ளது.

இந்­ந­பர்­களின் அடிப்­படை உரி­மை­களில் கல்வி உரி­மையும் ஒன்­றாகும். ஐக்­கிய நாடுகள் சபையின் கல்­விக்­கான அமைப்­பான யுனெஸ்கோ அமைப்பின் தக­வல்­களின் பிர­காரம் அபி­வி­ருத்தி அடைந்­து­வரும் நாடு­களில் 90 வீத­மான சிறு­வர்கள் கல்வி வாய்ப்பை இழந்­த­வர்­க­ளாக உள்­ள­தாகக் குறிப்­பி­டப்­ப­டுள்­ளது. இருப்­பினும், இலங்­கையைப் பொறுத்­த­வரை, மாற்­றுத்­தி­ற­னாளி சிறு­வர்கள் உட்­பட பாட­சாலை செல்­லாத மாண­வர்­களை பாட­சா­லை­களில் இணைக்கும் நட­வ­டிக்­கைகள் திட்­ட­மிட்ட அடிப்­ப­டையில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­ற­மையை சுட்­டிக்­காட்­டு­வது அவ­சி­ய­மாகும்.

மாற்­றுத்­தி­ற­னாளி நபர்­க­ளான விஷேட தேவை­யு­டைய மாண­வர்­களின் கல்வி மேம்­பாட்டு நட­வ­டிக்கை தொடர்பில் கடந்த பல வரு­டங்­க­ளாக மத்­திய கல்வி அமைச்­சி­னாலும். மத்­திய கல்வி அமைச்சின் பரிந்­து­ரை­க­ளுக்­க­மைய மாகாணக் கல்வி அமைச்­சுக்­க­ளி­னாலும், கல்­வித்­தி­ணைக்­க­ளங்­க­ளி­னாலும்; அக்­கறை செலுத்­தப்­பட்டு வரு­வது முக்­கிய அம்­ச­மாகும்.

விஷேட தேவை­யு­டை­யோரும் பாட­சா­லை­களும்

இலங்­கையில் விஷேட தேவை­யு­டை­ய­வர்கள் ஆறு­வ­கை­யி­ன­ர்­க­ளாக பிரிக்­கப்­பட்டு அவர்­க­ளுக்­கான கல்வி வாய்ப்­புக்கள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.
உடல் குறை­பாடு, உளக் குறை­பாடு, பார்வைக் குறை­பாடு, கேள்விக் குறை­பாடு, பேச்சுக் குறை­பாடு உடை­ய­வர்கள், மன­வெ­ழுச்சிக் குறை­பாடு உடை­ய­வர்கள் எனப் பாகு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். இவர்­க­ளுக்­கான கல்வி வாய்ப்பை வழங்­கு­வ­தற்­காக விஷேட பயிற்சி பெற்ற ஆசி­ரியர்கள் வரு­டந்­தோறும் பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்டு குறித்த பாட­சா­லை­களில் ஆசி­ரி­யர்­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­கின்­றனர்.

கல்­வி­ய­மைச்சின் 2014ஆம் ஆண்­டுக்­கான புள்ளி விப­ரங்­களின் பிர­காரம். சகல மாகா­ணங்­களும் அடங்­க­லாக 24 விஷேட தேவை­யு­டை­யோ­ருக்­கான பாட­சா­லைகள் உள்­ளன. அத்­தோடு, தேசிய பாட­சா­லை­களில் 104 விஷேட தேவை­யு­டைய மாண­வர்­க­ளுக்­கான பிரி­வு­களும் மாகாணப் பாட­சா­லை­களில் 600 பிரி­வு­க­ளு­மாக 704 விஷேட கல்விப் பிரி­வுகள் உள்­ளன. தேசிய பாட­சா­லை­களில் உள்ள பிரி­வு­களில் 1,220 விஷேட தேவை­யு­டைய மாண­வர்­களும், மாகாணப் பாட­சா­லை­களில் உள்ள பிரி­வு­களில் 6,223 விஷேட தேவை­யு­டைய மாண­வர்­க­ளு­மாக 7,443 மாண­வர்கள் கல்வி கற்­ப­தோடு, உதவி பெறும் விஷேட தேவை­யு­டைய பாட­சா­லை­களில் 2,613 மாண­வர்­களும் கல்வி கற்­கின்­றனர். இது­த­விர, கல்வி அமைச்­சினால் பதிவு செய்­யப்­ப­டாத பல பாட­சா­லைகள் ஒரு­சில அமைப்­புக்­க­ளினால் உரு­வாக்­கப்­பட்டு விஷேட தேவை­யு­டைய மாண­வர்­க­ளுக்­கான கல்வி வாய்ப்பை வழங்கி வரு­கின்­றன.

இம்­மா­ண­வர்­களை சாதா­ரண வகுப்பு மாண­வர்­க­ளுடன் இணைக்­கப்­பட்டு உட்­ப­டுத்தல் கல்­வி­யி­னூ­டாக கற்றல் செயற்­பாட்டில் சம­வாய்ப்பு வழங்­கப்­பட்டு வரு­கின்­றன. அத்­துடன் உட்­ப­டுத்தல் கல்­வியின் அவ­சியம் உண­ரப்­பட்டு அவற்றை சக்­தி­மிக்­க­தாக்­கு­வ­தற்­கான செயற்­பா­டு­களும் கல்வி அமைச்­சி­னாலும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­ற­மையை சுட்­டிக்­காட்ட வேண்டும்.

உட்­ப­டுத்தல் கல்­வியும் நடவடிக்கை­களும்

மூன்றாம் உலக நாடு­களின் தேசிய எழுச்சிக் கோலங்­க­ளோடு தொழி­லாளர் மத்­தி­யிலும் எழுத்­த­றி­வுப்­பலம் அவர்­களை புதிய சிந்­தனை கொண்ட மனி­தர்­க­ளாக திகழச் செய்ய உத­விற்று.

எழுத்­த­றிவு என்­பது அச்­சி­டப்­பட்ட அல்­லது எழு­தப்­பட்ட கருத்­துக்­களைக் குறிப்­பிட்ட கருத்­துடன் பொருத்தி இனம் காணல், புரிதல், விளக்­குதல், புதி­யன புனைதல், தகவல் பரி­மாற்றம் செய்தல், கணித்தல் ஆகி­ய­வற்றின் தொகுப்­பென ஐக்­கிய நாடுகள் சபையின் கல்வி, அறி­வியல், பண்­பாட்டு அமைப்­பான யுனெஸ்கோ வரை­வி­லக்­க­ணப்­ப­டுத்­து­கி­றது.

இருப்­பினும், பொரு­ளியல் கூட்­டு­றவு மற்றும் வளர்ச்­சிக்­கான அமைப்பில் உள்ள நாடுகள் எழுத்­த­றிவு தொடர்­பான கருத்­துக்­களை விரி­வாக்கம் செய்­துள்­ளது. அதா­வது, நவீன தொழில்­நுட்பம், சிக்­க­லான சூழல்கள் போன்­ற­வற்­றி­லி­ருந்து அறிவைப் பெறு­வ­தற்­கான திறன்­களை வளர்த்­துக்­கொள்­வதே எழுத்­த­றிவு என அந்­நா­டுகள் குறிப்­பி­டு­கின்­றன.

கி.மு.8000 ஆண்­ட­ளவில் எழுத்­த­றிவு சிந்­தனை உரு­வா­ன­தாக எழுத்­த­றிவு தொடர்­பான வர­லாற்று ஆய்வு சுட்­டிக்­காட்டும் நிலையில், மனித நாக­ரிக வளர்ச்­சியின் ஆரம்ப காலத்தில் எழுத்­த­றி­வா­னது மேலாண்மை செயல்­களில் ஈடு­ப­டுவோர், அதி­கா­ரத்­தி­லுள்ளோர் மற்றும் சமூ­கத்தின் மேல் வர்க்­கத்­தி­னர்கள் என ஒரு வீதத்­திற்கும் குறை­வா­னவர்கள் மாத்­தி­ரமே எழுத்­த­றி­வு­டை­ய­வர்­க­ளாக இருந்­தார்கள் என எடுத்துக் காட்­டு­கி­றது.

எழுத்­த­றி­வா­னது பரி­ணாம வளர்ச்சி கண்­டுள்ள போதிலும், எழுத, வாசிக்க, எண்ணத் தெரி­யா­த­வர்­க­ளாக பல மில்­லியன் கணக்­கானோர் இன்­று­வரை வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். ஒரு மொழியில் எழுத்­துக்­களை எழு­தவும், படிக்­கவும், தெரி­யாமல் இருத்தல் எழுத்­த­றி­வின்மை என்று வரை­யறை செய்­யப்­ப­டு­கி­றது.

உலகில் பல்­வேறு விட­யங்கள் எழுத்­துக்­க­ளாகப் பரவிக் கிடக்கும் நிலையில், எழுத்­த­றி­வின்­மையால் அவற்றை உணர்ந்து, அறிந்து கொள்ள இய­லாத நிலை ஏற்­ப­டு­கி­றது. ஆதலால், எழுத்­த­றி­வின்­மை­யா­னது கல்­வியால் தீர்க்­கப்­பட வேண்­டிய மிகப் பெரிய சமூகப் பிரச்­சி­னை­யாகக் கரு­தப்­ப­டு­கி­றது.

மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் பலர் குடும்­பங்­க­ளி­னாலும் சமூ­கத்­தி­னாலும் புறக்­க­ணிக்­கப்­பட்ட நிலையில் எழுத வாசிக்கத் தெரி­யா­தவர்­க­ளாக அவர்­க­ளது வாழ்நாள் கழிந்து கொண்­டி­ருப்­பதைக் காண முடி­கி­றது. இருப்­பினும், கற்கும் வலு­வுள்ள ஏற்றத் தாழ்­வு­களைக் கடந்து அனை­வ­ருக்கும் கல்­வியில் சம­சந்­தர்ப்பம் வழங்க வேண்டும் என்­பது தேசிய ரீதியில் கவ­ன­யீர்ப்பைப் பெற­லா­யிற்று.

இதனால், மாற்­றுத்­தி­ற­னாளி மாண­வர்­க­ளுக்­கான விஷேட கல்வித் திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன் அவர்­களை சமூ­கத்­துடன் இணைக்கும் உட்­ப­டுத்தல் கல்வி செயற்­றிட்­டமும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில், இன்று உட்­ப­டுத்தல் கல்வி சிறப்­பான இடத்தை பெற்று வரு­வ­துடன் அதனை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான பல்­வேறு நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

உட்­ப­டுத்தல் கல்விச் செயற்­பா­டுகள் விஷேட தேவை­யு­டைய மாண­வர்­க­ளுக்கு கல்­வியில் சம­சந்­தர்ப்பம் வழங்கும் நோக்­குடன் அவர்­களை சாதா­ரண வகுப்பு மாண­வர்­க­ளுடன் இணைத்து கற்றல் கற்­பித்தல் செயற்­பா­டு­களில் ஈடு­பட வாய்ப்­ப­ளிக்­கப்­ப­டு­கி­றது.

உட்­ப­டுத்தல் கல்வி வெற்றி பெறு­கையில் எல்லாத் தரப்­பி­னரும் வெற்­றி­பெற்­ற­வர்­க­ளாகக் கரு­தப்­ப­டுவர், ஏனெனில், பொது­வாக வில­கி­யுள்ள மாண­வர்கள் ஏனைய சரா­சரி மாண­வர்­க­ளது கற்றல் செயற்­பாட்­டுக்கு ஊறு­வி­ளை­விக்­கின்­றனர் என்றும் கூறப்­ப­டு­கின்­றது. ஆதலால், இத்­திட்டம் வெற்­றி­பெ­றும்­போது எல்­லோரும் வெற்­றி­பெற்­ற­வர்­க­ளாக கரு­தப்­ப­டுவர். உட்­ப­டுத்­தல்­கல்­வி­யி­னூ­டாக விஷேட தேவை­யு­டைய மாண­வர்கள் பல வழி­க­ளிலும் நன்­மை­ய­டைவர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. விஷேட தேவை­யு­டைய மாண­வர்கள் ஏனைய மாண­வர்­க­ளுடன் பழகி விட­யங்­களை பகிர வாய்ப்­பேற்­ப­டு­வ­துடன், சமூ­கத்தில் ஒன்­றி­ணைய அல்­லது சமூ­க­ம­யப்­ப­டுத்­தப்­பட வாய்ப்­பேற்­ப­டு­கி­றது. ஏனைய சரா­சரி மாண­வர்­க­ளுடன் சக­ஜ­மாகப் பழ­கவும், சமூ­க­ம­யப்­ப­டுத்­தவும் வாய்ப்­பேற்­ப­டு­கின்­றது. வகுப்­ப­றையில் விஷேட தேவை­யு­டைய மாண­வர்கள் ஏனைய சரா­சரி மாண­வர்­க­ளுடன் பழ­கு­வதால் சமூ­கத்­திலும் பிரச்­சி­னை­யின்றி ஒன்­றி­ணைந்து வாழ முடி­வ­துடன், சமூக பரஸ்­பர புரிந்­து­ணர்வு மற்றும் ஒரு­வ­ருக்­கொ­ருவர் உத­வுதல் என்­பன ஏற்­ப­டு­கின்­றன. இதனால் சக­லரும் நண்­பர்­க­ளாகப் பழக சந்­தர்ப்பம் கிடைக்கச் செய்­யப்­ப­டு­கி­றது.

அத்­துடன் உட்­ப­டுத்தல் கல்வி, விஷேட தேவை­யு­டை­ய­வர்­களை சமூ­கத்தில் இணைக்­கவும், சிறந்த தொடர்­பா­டலை ஏற்­ப­டுத்­தவும் சிறந்த வழி­யாகக் காணப்­ப­டு­கி­றது. இவற்­றுடன் மீத்­தி­ற­னு­டைய மாண­வர்­களும், ஏனை­யோ­ருடன் இணைந்து பழ­கவும், அவர்­க­ளுக்கு கற்­றலில் வழி­காட்­டவும் உத­வு­கி­றது. இத்­துடன், ஏனைய மாண­வர்­களை மதிக்­கவும் அவர்­க­ளுடன் தொடர்­பா­டலைப் பேணவும் முடி­கி­றது. இதனால், இவர்­க­ளி­டையே நற்­பண்­புகள் வள­ரக்­கூ­டிய வாய்ப்­புக்கள் உட்­ப­டுத்தல் கல்வி தொடர்­பான ஆய்­வு­க­ளி­னூ­டாக அறி­ய­மு­டி­கி­றது.

ஆனால், உட்­ப­டுத்தல் கல்வி பல்­வேறு கார­ணி­க­ளினால் குறிப்­பாக வடக்கு கிழக்கில் வெற்­றி­ய­ளிக்­காத நிலை காணப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அத­வாது, உட்­ப­டுத்­தலால் ஏற்­படும் நன்மை பற்றி இச்­செ­யற்­பாட்டில் ஈடு­படும் அனை­வ­ருக்கும் விளக்­க­ம­ளிக்­காமை. நிலைமைக்­கேற்ப அதி­வி­ரை­வாக அல்­லது மிக­மெ­து­வாக நடை­மு­றைப்­ப­டுத்­துதல், போதிய வளப்­பங்­கின்மை, அர்ப்­ப­ணிப்­பு­ட­னான செயற்­பா­டு­களில் தொடர்ச்­சி­யின்மை, அர்ப்­ப­ணிப்­பற்­ற­வர்­களும் அதிக வேலைப்­ப­ளு­வுள்­ள­வர்­களும் இருத்தல், இது தொடர்பில் பெற்­றோரின் பங்­க­ளிப்பும் விழிப்­பு­ணர்­வின்மை போன்ற பல கார­ணிகள் கூறப்­பட்டு வரு­கின்­றன.

அத்­துடன், பற்­றாக்­கு­றை­யா­க­வுள்ள ஆசி­ரியர் பயிற்சி, உட்­ப­டுத்தல் கல்வி மாண­வர்­க­ளுக்கு பொருத்­த­மான பாடத்­திட்­டத்தை வழங்க முடி­யாமை, இவர்­க­ளுக்கு உத­வக்­கூ­டிய போதிய வள­மின்மை, பாட­சாலை மற்றும் வகுப்­ப­றைகள் பொருத்­த­மற்ற முறையில் அமைக்­கப்­பட்­டுள்­ளமை, நிதி ஒதுக்­கீட்­டுப்­பற்­றாக்­குறை போன்ற குறை­பா­டு­களும் உட்­ப­டுத்தல் கல்வி தொடர்பில் கூறப்­ப­டு­கி­றது.

இத்தகைய காரணங்கள் மற்றும் குறைபாடுகள் கவனத்திற்கொள்ளப்பட்டு உட்படுத்தல் கல்வித்திட்டத்தை வினைத்திறனாக்குவதை இலக்காகக் கொண்டு உலக வங்கியின் அனுசரணையுடன் பொதுக் கல்வித் திட்டத்தின் கீழ் 2019 முதல் 2023 வரையான காலப்பகுதிக்குள் அனைத்து கல்வி வலயங்களிலும் வெற்றிகரமாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வியமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் விஷேட கல்விப் பிரிவின் பணிப்பாளர் கே. ஏ. டி புண்ணியதாச தெரிவித்தார்.
இதன் முதற்கட்டமாக இவ்வாண்டில் 16 கல்வி வலயங்களில் இத்திட்டத்தை வலுவூட்டுவதற்கான அறிவூட்டல் செயலமர்வுகளை நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. கல்வி வலயங்களின் அதிகாரிகள், அதிபர்கள் உட்பட விஷேட கல்வி துறைசார்ந்தோர் இந்த அறிவூட்டல் செயற்றிட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண தீபகம், சிலாபம், பதுளை, பண்டாரவளை, அம்பாறை, அக்கரைப்பற்று மற்றும் கம்பஹா ஆகிய கல்வி வலயங்களில் உட்படுத்தல் கல்வி திட்டம் தொடர்பான அறிவூட்டல் நடைமுறைப்படுத் தப்பட்டுள்ளது.

விஷேட தேவையுடைய மாணவர்கள் உட்படுத்தல் கல்வித் திட்டத்தின் பயன்களை அடைந்து கொள்ளும் பொருட்டு அதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வரும் நிலையில், இக்கல்வித் திட்டம் தொடர்பில் அரசினர் ஆசிரிய கல்லூரி அதிபர்களுடனும் இத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்களை கல்வியமைச்சின் அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் கல்வி அமைச்சின் அதிகாரிகள் குழு மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கல்லூரியின் அதிபர் பா. பரமேஸ்வரனுடன் கலந்துரையாடலொன்றை அண்மையில் நடத்தியிருந்தது.
ஆதலால், இத்தகைய நடவடிக்கைகளினூடாக உட்படுத்தல் கல்விச் செயற்றிட்டத்தை வெற்றி பெறச் செய்து விஷேட தேவையுடையவர்கள் அல்லது மாற்றுத் திறனாளிகள் சாதனையாளர்களாகவும், வெற்றியாளர்களாகவும், ஆளுமையுள்ளவர்களாகவும் சமூக நீரோட்டத்தில் இணைந்து கொள்வதற்கு அனைத்து இன கல்விச் சமூகங்களினதும் அர்ப்பணிப்புக்கள் இன்றியமையாததாகும்.

எம்.எம்.ஏ.ஸமட்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.