மு.கா. உயர்பீடம் கூடி தீர்மானிக்கும்

0 687

பயங்­க­ர­வாத தாக்­கு­த­லை­ய­டுத்து ஏற்­பட்ட அழுத்­தங்கள் கார­ண­மாக கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திக­தி­யன்று பத­வி­களை துறந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மீண்டும் பத­வி­யேற்­பது குறித்து உயர்­பீட கலந்­து­ரை­யா­டலின் பின்னர் தீர்­மானம் எடுக்­கப்­படும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது குறித்து அக்­கட்­சியின் முக்­கி­யஸ்தர் ஒருவர் தெரி­விக்­கையில், முஸ்லிம் அமைச்­சர்கள் பல கோரிக்­கை­களை முன்­வைத்து உயி­ரிய நோக்­குடன் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­தனர். இந்த அடிப்­ப­டையில் பிர­தான முஸ்லிம் கட்சி என்­ற­வ­கையில் எமது கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள ஒரு அமைச்­சரும் மூன்று இரா­ஜாங்க அமைச்­சர்­களும் பதவி துறந்­தனர். எனினும் ஆளும் கூட்­ட­ணியின் பிர­தான கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­களால் பத­வி­களை மீள பொறுப்­பேற்­கு­மாறு தொடர்ந்து வலி­யு­றுத்­தப்­பட்­டு­வந்­தது. இருந்­த­போ­திலும் நமது கோரிக்­கை­களை முன்­வைத்து தொடர்ந்தும் பத­வி­யேற்­பதை தாம­தப்­ப­டுத்தி வந்தோம். எனினும் கடந்த வாரம் பாரா­ளு­மன்றில் மீண்டும் அமைச்­சுப்­பொ­றுப்­புக்­களை ஏற்­பது தொடர்பில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. எவ்­வா­றா­யினும் கட்­சியின் உயர்­பீடம் கூடியே இதற்கு தீர்­மா­னத்தை மேற்­கொள்ளும் என தெரி­வித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உறுப்­பி­னரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எச்.எம்.எம்.ஹரீஸ் தனது அமைச்சுப் பத­வி­களை மீண்டும் பொறுப்­பேற்க மாட்டார் என்­பது உறு­தி­யா­கி­யுள்ள நிலையில் அமைச்சர் பத­வி­களைத் துறந்த ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பத­வி­யேற்­பது பற்றி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் இன்னும் உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்­பொன்­றினை வெளியிடவில்லை. மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்பது சர்ச்சைக்கு உட்பட்டுள்ள நிலையில் இதுபற்றி கட்சியின் உயர்பீடம் கூடி தீர்மானம் ஒன்றினை எட்டவுள்ளதாக அறியமுடிகிறது.

vidivelli 

 

 

Leave A Reply

Your email address will not be published.