நல்லாட்சியில் ஊழல் இருப்பின் பதில் கூறும் பொறுப்பு  ஜனாதிபதிக்கும் உண்டு

ஐ.தே.க. தவிசாளர் கபீர் சுட்டிக்காட்டு

0 821

நல்­லாட்­சியின் கடந்த மூன்­றரை வருட காலப்­ப­கு­திக்குள் ஊழல் மோசடி இடம்­பெற்­ற­தாக ஜனா­தி­பதி கூறு­கின்றார். அர­சாங்­கத்தின் தலைவர் என்ற ரீதியில் இதற்குப் பொறுப்­பு­கூற வேண்­டிய கடப்­பாடு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் இருக்­கி­றது என்று கேகாலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தவி­சா­ள­ரு­மான கபீர் ஹாசிம் தெரி­வித்தார்.

இது குறித்து அவர் வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

சர்­வ­தேச ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று முன்­தினம் (25) கருத்து தெரி­விக்­கையில், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­ய­மையை நியா­யப்­ப­டுத்­தி­ய­துடன், 2015 ஜன­வரி – 2018 ஒக்­டோபர் வரை­யான காலப்­ப­கு­தியில் இடம்­பெற்ற ஊழல் துஷ்­பி­ர­யோ­கமே அதற்­கான பிர­தான காரணம் எனவும், இது­தொ­டர்பில் விசா­ரணை செய்­வ­தற்கு ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வொன்றை நிய­மிக்­க­வுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

இந்தக் காலப்­ப­கு­தியில் தேசிய நல்­லி­ணக்க அர­சாங்­கத்தின் தலை­வ­ராக இருந்த மைத்­திரி, நாட்டின் தலை­வ­ராக மட்­டு­மன்றி, அர­சாங்­கத்தின் தலை­வ­ரா­கவும் இருந்­த­வ­ராவார். அர­சாங்­கத்­தினால் அமைச்­ச­ர­வையில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னங்கள் அனைத்­துக்கும் அமைச்­ச­ர­வையின் தலைவர் என்ற வகையில், அவரே தலைமை தாங்­கினார்

இந்த 3 ½  வருட காலப்­ப­கு­தியில் துஷ்­பி­ர­யோகம் இடம்­பெற்­றி­ருந்தால், அந்தக் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு ஜனா­தி­ப­தியும் சம­னான பங்­கினைக் கொண்­டி­ருக்­கின்றார். இது­தொ­டர்பில் ஆராய, ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வொன்றை அமைக்க வேண்டும் என்­பதை நாமும் வலி­யு­றுத்­து­வ­தோடு, விசா­ர­ணை­க­ளையும் தொடங்க வேண்­டு­மென அவ­ரிடம் கோரு­கின்றோம்.

அத்­துடன், பாரா­ளு­மன்­றத்தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு பெரும்­பான்மை பலத்தைக் காட்­டி­னாலும், அவரை தனது வாழ்­நாளில் பிர­த­ம­ராக நிய­மிக்­க­மாட்டேன் என அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

அவ­ரது இந்தக் கருத்து  பாரா­ளு­மன்ற அடிப்­படை ஜன­நா­ய­கத்­துக்கு முர­ணா­னது எனவும், அர­சி­ய­ல­மைப்பு ஷரத்­துக்கு மாறு­பட்­டது எனவும் நாங்கள் தெரி­விப்­ப­தோடு, தமது தனிப்­பட்ட விருப்பு வெறுப்­புக்­களை அர­சி­ய­ல­மைப்பில் அவர் புகுத்த முனை­கிறார் எனவும் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றோம்.

இறு­தி­யாக, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன, அவரது வாழ்நாள் வரை ஜனாதிபதியாக இருப்பதற்கு தெரிவு செய்யப்படவில்லை எனவும், ஆகக் குறைந்தது அவரது ஜனாதிபதி பதவிக்காலம் இன்னும் 12 மாதத்துக்கு குறைவானதாகவே இருக்கின்றது என்பதையும் ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்த விரும்புகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.