வன்முறைகளை கட்டுப்படுத்தி முஸ்லிம்களை பாதுகாக்கவும்

தன்னிச்சையான கைதுகளையும் முடிவுக்கு கொண்டு வாருங்கள்; அரசுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து

0 724

இலங்கை அர­சாங்கம் தன்­னிச்­சை­யான கைது நட­வ­டிக்­கை­களை முடி­வுக்குக் கொண்­டு­வ­ரு­வ­துடன், முஸ்லிம் சமூ­கத்­தி­ன­ருக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­படும் வன்­முறை செயல்­களைத் தடுத்து, அவர்­களைப் பாது­காக்க வேண்­டு­மென வலி­யு­றுத்­தி­யி­ருக்கும் மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­முறைத் தாக்­கு­தல்கள், அச்­சு­றுத்­தல்கள், பாகு­பாடு காண்­பித்தல் என்­ப­வற்றை முடி­விற்குக் கொண்­டு­வரும் வகையில் அர­சாங்கம் விரைந்து செயற்­பட வேண்­டி­யது மிக அவ­சி­ய­மா­ன­தாகும் என்றும் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றது.

இவ்­வி­ட­யத்தை வலி­யு­றுத்தி மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் நேற்­றைய தினம் அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டி­ருக்­கி­றது. அதன் முழு விபரம் வரு­மாறு:

சுமார் 250 இற்கும் அதி­க­மா­னோரைப் பலி­யெ­டுத்த உயிர்த்த ஞாயி­று­தின பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களின் பின்னர் பௌத்த பேரி­ன­வா­திகள் முஸ்லிம் சமூ­கத்­தி­னரின் அடிப்­படை உரி­மை­களை மீறி செயற்­ப­டு­வ­துடன், பல்­வேறு வித­மான வன்­மு­றை­க­ளுக்கும் முஸ்­லிம்கள் இலக்­காகி வரு­கின்­றனர். சில பௌத்த மத­கு­ருமார் மற்றும் பலம்­பொ­ருந்­திய பேரி­ன­வாதக் குழுக்­களால் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக ஏவி விடப்­படும் வன்­முறைத் தாக்­கு­தல்கள், வெறுப்புப் பேச்­சுக்கள் என்­ப­வற்றை அர­சி­யல்­வா­தி­களும், உரிய அதி­கா­ரி­களும் உட­ன­டி­யாக முடி­விற்குக் கொண்­டு­வர வேண்டும்.

தமது பிர­ஜை­களைப் பாது­காப்­பதும், உயிர்த்த ஞாயி­று­தின பயங்­க­ர­வாதத் தாக்­குதல் குற்­ற­வா­ளி­களை சட்­டத்­தின்முன் நிறுத்­து­வதும் இலங்கை அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும். ஆனால் இந்தக் கொடூர தாக்­கு­தல்­க­ளுக்­காக முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் தண்­டிக்கக் கூடாது. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­முறைத் தாக்­கு­தல்கள், அச்­சு­றுத்­தல்கள், பாகு­பாடு காண்­பித்தல் என்­ப­வற்றை முடி­விற்குக் கொண்­டு­வரும் வகையில் அர­சாங்கம் விரைந்து செயற்­பட வேண்­டி­யது மிக அவ­சி­ய­மா­ன­தாகும் என்று மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­ப­கத்தின் தெற்­கா­சியப் பிராந்­தியப் பணிப்­பாளர் நாயகம் மீனாக் ஷி கங்­குலி வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார்.

உயிர்த்த ஞாயி­று­தினத் தாக்­கு­தல்­களின் பின்னர் சுமார் நூற்­றுக்கும் அதி­க­மானோர் அவ­ச­ர­கால சட்டம் மற்றும் பயங்­க­ர­வா­தத்தை தடுக்கும் சட்­டங்கள் என்­ப­வற்றின் கீழ் பொலி­ஸாரால் தன்­னிச்­சை­யாகக் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். சட்­டத்­த­ர­ணிகள், சமூக செயற்­பாட்­டா­ளர்கள் பலரின் கருத்­துப்­படி இவர்­களில் பெரும்­பா­லானோர் பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்­திற்குக் கீழேயே கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள். இச்­சட்­டத்தை நீக்­கு­வ­தாக இலங்கை அர­சாங்கம் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வைக்கு வாக்­க­ளித்­தி­ருந்­தது. தமது தரப்­பினர் பயங்­க­ர­வாத செயல்­க­ளுடன் தொடர்­பு­பட்­டுள்­ள­மைக்கு முறை­யான ஆதா­ரங்கள் எவை­யு­மின்றி அவ்­வப்­போது கைது செய்­யப்­பட்­ட­தாக சட்­டத்­த­ர­ணிகள் சிலர் தெரி­வித்­தி­ருக்­கி­றார்கள். தேடு­தல்­களின் போது புனித அல்-­குர்ஆன், அரபு நூல்கள் போன்­ற­வற்றைத் தம்­வசம் வைத்­தி­ருந்­த­மைக்­கா­கவும் சிலர் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் அவர்கள் கூறி­யி­ருக்­கி­றார்கள்.

இலங்­கையின் மூத்த பௌத்த மத­கு­ரு­வான வரக்­கா­கொட ஞான­ர­தன தேரர் கல்­லெ­றிந்து முஸ்­லிம்­களைக் கொல்­லுதல், கருத்­தடை மாத்­தி­ரை­களை உணவில் கலப்­பதால் முஸ்லிம் உண­வ­கங்­க­ளுக்குச் செல்­வதைத் தவிர்த்தல் போன்ற கருத்­துக்­களை பௌத்­தர்கள் மத்­தியில் வெளி­யிட்டார். அதே­போன்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­முறைச் சம்­ப­வங்­க­ளுடன் நீண்­ட­கா­ல­மாகத் தொடர்­பு­பட்­டி­ருந்த பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது­மன்­னிப்பு அளித்து விடு­தலை செய்தார்.

மேலும் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து நடை­மு­றைக்கு வந்த விட­யங்­களில் ஒன்­றாக பொது இடங்­களில் முகத்தை மறைக்கும் வித­மாக ஆடை­ய­ணி­வது தடை செய்­யப்­பட்­டது. இத­னை­ய­டுத்து அர­சாங்க அலு­வ­ல­கங்­க­ளிலும், பொது இடங்­க­ளிலும் ஆடை தொடர்பில் எதிர்­நோக்­கிய பிரச்­சி­னை­களை முஸ்லிம் சமூக செயற்­பாட்­டாளர் ஒருவர் எம்­மிடம் விப­ரித்தார். தமது கண்­ணியம் தொடர்ந்தும் சவாலுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எவ்வித பக்கச்சார்பும் அற்றவகையில் அனைத்து இலங்கைப் பிரஜைகளினதும் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வாக்குறுதியளித்திருக்கும் வகையில் மனித உரிமைகள் பாதுகாப்பு, நிலைமாறுகால நீதி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் என்பவற்றை ஏற்படுத்த வேண்டுமாயின் நாட்டிற்குள் நீடிக்கும் வன்செயல்களை அரசாங்கம் முடிவிற்குக் கொண்டுவருவது மிக அவசியமானதாகும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.