வீடுகள், தனியார் நிறுவனங்களிலுள்ள அரபு எழுத்துக்களை அகற்றத் தேவையில்லை

முஸ்லீம் கவுன்சிலடம் அமைச்சர் மனோ

0 757

அரபு மொழி­யி­லான பெயர்ப் பல­கை­களை அரச நிறு­வ­னங்­க­ளிலும் வீதி­க­ளிலும் மாத்­தி­ரமே பயன்­ப­டுத்த முடி­யாது. வீடு­க­ளிலும், தனியார் நிறு­வ­னங்கள் மற்றும் பள்­ளி­வா­சல்கள், அரபுக் கல்­லூ­ரி­க­ளிலும் பயன்­ப­டுத்த முடியும் என தேசிய நல்­லி­ணக்க அரச கரும மொழிகள், சமூக மேம்­பாடு, இந்து சமய விவ­கார அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்­துள்ளார்.

கல்­மு­னையில் அல்­ஹா­மியா அறபுக் கல்­லூ­ரி­யி­லுள்ள அறபு மொழி­யி­லான பெயர்ப் பல­கை­களை அப்­பு­றப்­ப­டுத்­து­மாறு பொலி­ஸாரால் விடுக்­கப்­பட்ட உத்­த­ரவை யடுத்து அவ்­வி­வ­காரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் மூலம் அமைச்சர் மனோ கணே­சனின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்­த­தைத்­தொ­டர்ந்து அமைச்சர் மேற்­கண்ட தீர்­மா­னத்தை விடுத்­துள்ளார்.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் விளக்­க­ம­ளிக்­கையில் கூறி­ய­தா­வது,

அறபு மொழி­யி­லான பெயர்ப் பல­கை­களை வீடுகள், தனியார் நிறு­வ­னங்கள் மற்றும் மத்­ரஸா, அர­புக்­கல்­லூ­ரிகள், பள்­ளி­வா­சல்கள் போன்ற இடங்­க­ளி­லி­ருந்து அகற்­று­மாறு எவ­ராலும் உத்­த­ர­விட முடி­யாது என அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்­துள்ளார். எனவே முஸ்­லிம்கள் இது விட­ய­மாக ஐயம் கொள்­ளத்­தே­வை­யில்லை.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அரச நிறு­வங்­க­ளிலும் வீதி­க­ளி­லு­முள்ள அரபு மொழி­யி­லான பெயர்ப் பல­கை­களை அகற்­று­மாறே பணிப்­புரை விடுத்­துள்ளார். இது தொடர்­பான சுற்று நிருபம் வெளியிடப்படும் எனவும் அவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலிடம் உறுதியளித்துள்ளதாக என்.எம். அமீன் மேலும் தெரிவித்துள்ளார்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.