முஸ்லிம் அமைச்சரவை, இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் கூட்டாக பதவி துறப்பு

0 821

முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கி­யுள்ள நெருக்­கடி நிலை­மைக்குத் தீர்­வாகமுஸ்லிம் அமைச்­சர்­களும், இரா­ஜாங்க அமைச்­சர்­களும், பிர­தி­ய­மைச்சர் ஒரு­வரும், மேல் மாகாண மற்றும் கிழக்கு மாகாண ஆளு­நர்­களும் நேற்று தங்­க­ளது பத­வி­களை இரா­ஜி­னாமாச் செய்­தனர்.

அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசிம், எம்.எச்.ஏ. ஹலீம், ரிஷாத் பதி­யுதீன், இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், எம்.எஸ்.எஸ். அமீர் அலி, அலி­சாஹிர் மௌலானா மற்றும் பிர­தி­ய­மைச்சர் அப்­துல்லாஹ் மஹ்ரூப், மேல் மாகாண ஆளுநர் அசாத்­சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் ஆகி­யோரே தங்­க­ளது பத­வி­களை இரா­ஜி­னாமா செய்து கொண்­ட­வர்­க­ளாவர்.

அமைச்சர் ரிசாத் பதி­யுதீன், மேல்­மா­காண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்­புல்லாஹ் ஆகிய மூவரும் அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்கும், தீவி­ர­வா­திகளுக்கும் ஆத­ரவு வழங்­கி­யுள்­ளார்கள், உதவி செய்­துள்­ளார்கள். அதனால் அவர்­களை பத­வி­க­ளி­லி­ருந்தும் நீக்கி குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்த வேண்டும் என ஜனா­தி­ப­தியைக் கோரி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரதன தேரர் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கண்டி தல­தா­மா­ளிகை வளா­கத்தில் சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ர­தத்தை ஆரம்­பித்தார். அவர்கள் தங்­க­ளது பத­வி­களை இரா­ஜி­னாமா செய்ய வேண்டும். இல்­லையேல் ஜனா­தி­பதி உட­ன­டி­யாகப் பதவி விலக்க வேண்டும் என கோரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

அத்­து­ர­லிய ரதன தேரரின் கோரிக்­கையை எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் பலரும், எதிர்க்­கட்சித் தலை­வரும் ஆத­ரித்­தனர். அவர்கள் பதவி விலக வேண்டும் என அழுத்­தங்கள் பிர­யோ­கித்­தனர்.

பதவி விலக்கக் கோரும் சுவ­ரொட்­டிகள் நாட்டில் பல பகு­தி­களில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டன.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் ஜனா­தி­பதி உட­ன­டி­யாக தீர்­மானம் ஒன்­றினை மேற்­கொள்ள வேண்டும். இல்­லையேல் நாடெங்கும் எதிர்ப்­புகள் மேலோங்கி மக்­களின் சமா­தா­னமும், சக­வாழ்வும் பாதிக்­கப்­படும் என ஜாதிக ஹெல உறு­ம­யவின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க அறிக்­கை­யொன்­றி­னையும் வெளி­யிட்­டி­ருந்தார்.

இதே­வேளை அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனும், ஆளு­நர்கள் அசாத்­சா­லியும், ஹிஸ்­புல்­லாஹ்வும் திங்­கட்­கி­ழமை (நேற்று) பகல் 12 மணிக்கு முன்பு பதவி நீக்­கப்­பட வேண்டும் அல்­லது அவர்­க­ளா­கவே பதவி வில­க­வேண்டும். 12 மணி­வ­ரை­யுமே காலக்­கெடு இல்­லையேல் நாடு முழு­வதும் திரு­வி­ழாவை காண­வேண்டி நேரிடும் என பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் எச்­ச­ரித்­தி­ருந்தார்.

அவர் நேற்றும், நேற்று முன்­தி­னமும் கண்­டிக்கு விஜயம் செய்து உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த அத்­து­ர­லிய ரதன தேரரைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். இது நியா­ய­மான போராட்டம். சிறை சென்ற எனக்கு மரணம் ஒரு பொருட்­டல்ல. எனது உயிரைக் கொடுத்­தேனும் நாட்டை முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்­தி­லி­ருந்தும் மீட்­டெ­டுப்பேன் எனத் தெரி­வித்­தி­ருந்தார். இதே­வேளை எனது உயிரைக் கொடுத்­தேனும் நாட்டைக் காப்­பாற்றத் தீர்­மா­னித்து விட்டேன். அடிப்­ப­டை­வா­தி­க­ளான அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனும், ஆளு­நர்­க­ளான அசாத் சாலியும், ஹிஸ்­புல்­லாஹ்வும் தங்கள் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்யும் வரை ஓய மாட்டேன் என அத்­து­ர­லிய ரதன தேரர் தெரி­வித்­தி­ருந்தார்.

கண்டி அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து பீடா­தி­ப­தி­க­ளான மகா­நா­யக்க தேரர்­களும் ஜனா­தி­ப­திக்கும், பிர­த­ம­ருக்கும் கடி­தங்­களை அனுப்பி வைத்­தி­ருந்­தனர். அத்­து­ர­லிய ரதன தேரரின் கோரிக்கை தொடர்பில் உடன் தீர்வு வழங்­கு­மாறு அவர்கள் ஜனா­தி­ப­தி­யி­டமும், பிர­த­ம­ரி­டமும் கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர். நேற்று மதியம் கண்டி நகரை அண்­மித்த நக­ரங்­க­ளிலும் பதற்­ற­மான சூழ்­நிலை காணப்­பட்­டது. கண்டி, கட்­டு­கஸ்­தோட்டை, அக்­கு­றணை, மட­வளை நக­ரங்­களில் வர்த்­தக நிலை­யங்கள் மூடப்­பட்­டி­ருந்­தன. ஆயி­ரக்­க­ணக்­கான பெரும்­பான்மை யினத்­த­வர்கள் பல பகு­தி­க­ளி­லி­ருந்தும் கண்­டிக்கு வருகை தந்­தி­ருந்­தனர். டயர்கள் எரிக்­கப்­பட்டு எதிர்ப்புத் தெரி­விக்­கப்­பட்­டது. நூற்­றுக்­க­ணக்­கான பொலி­ஸாரும், இரா­ணு­வத்­தி­னரும் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இந்நிலையில் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியும், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்­புல்­லாஹ்வும் இரா­ஜி­னாமா செய்து விட்டதாக மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவினால் அத்துரலிய ரதன தேரரிடம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார்.

நேற்றுக் காலை முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸியின் இல்லத்தில் ஒன்று கூடி கலந்துரையாடலொன்றினை நடாத்தியதன் பின்பே தங்களது பதவிகளை இராஜினாமா செய்வதாகத் தீர்மானித்தனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.