இலங்கையின் சோதனை

0 1,130
  • எம்.எம்.ஏ.ஸமட்

உலக நாடு­களின் பிர­தேச, சூழல் அமை­வு­க­ளுக்கு ஏற்ப  அந்­தந்த தேசங்­க­ளுக்­கான பருவ காலங்கள் காணப்­பட்­டாலும் அல்­லது  பருவ காலங்கள் வகுக்­கப்­பட்­டாலும், அத்­தே­சங்­க­ளுக்­கான பருவ காலங்­களில் நிகழ்­கின்ற இயற்கை மாற்­றங்­களை இறை­வனே நிர்­ணயிக்­கின்றான். அனைத்தும் படைத்த இறை­வனின் நிய­திப்­ப­டியே இவ்­வு­லகம் நடந்­தே­று­கி­றது. இயற்­கையின் பருவ கால மாற்­றங்­க­ளினால் தாக்­கங்­களும் விளை­வு­களும் ஏற்­படும் என்று அறி­வியல் எதிர்வு கூறி­னாலும், அம்­மாற்­றங்கள் ஏற்­ப­டுத்தும் விளை­வ­ுகளின் அளவு எவ்­வாறு அமை­யு­மென்று அறி­வியல் உல­கினால் அறி­விக்க முடி­யாது. அதை அறிந்­த­வனும் இறை­வன்தான். இறை­வனின் படைப்­பான இயற்கை கூறுகள் சில வேளை மனி­த­னுக்கு மகிழ்ச்சியை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும், சில­வேளை சோதனை நிறைந்­த­தா­கவும் அமைந்து விடு­கி­றது.

கால­நிலை மாற்­றங்­க­ளினால்; மனித இனம் மாத்­தி­ர­மின்றி விலங்­கி­னங்­களும் பல அசௌ­க­ரி­யங்­களை காலத்­திற்­குக்­காலம் அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கி­றது. இம்­மாற்­றங்­களை அறி­வி­யலால் மாற்ற முடி­யா­த­போ­திலும், அதனால் ஏற்­படும் தாக்­கங்­க­ளி­லி­ருந்து பாது­காத்­துக்­கொள்­வ­தற்­காக அறி­வி­யலை பயன்­ப­டுத்த முடியும். அந்­த­வ­கையில், வர­லாறு கண்­டி­ராத வெப்­ப­மான கால­நிலை இலங்கை மக்­களை வெளுத்து வாங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றது. இந்­நி­லையில், கால­நி­லை­மாற்­றங்கள் பற்­றியும் அவற்றின் அவஸ்­தை­க­ளி­லி­ருந்து பாது­காப்புப் பெறு­வ­தற்­கான வழி­மு­றைகள் பற்­றியும் மக்கள் அறிந்­து­கொள்­வ­தோடு அவற்றில் அக்­கறை கொள்­வதும் அவ­சி­ய­மா­ன­தாகும்.

கால­நிலை மாற்­றமும் இலங்­கையும்

யாதே­னு­மொரு பிர­தே­சத்தில் நீண்­ட­கா­ல­மாக வளி­மண்­ட­லத்தில் காணப்­படும் நிலை கால­நிலை என வரை­வி­லக்­கணம் செய்­யப்­ப­டு­கி­றது. கால­நிலை என்­பது வளி­மண்­ட­லத்தின் மூலப் பொருட்கள் மற்றும் அவற்றின் மாற்­றங்கள் என்­ப­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்­டது. சூரி­யக்­க­திர்கள், வெப்­ப­நிலை, ஈரத்­தன்மை, மேகம், மழை­வீழ்ச்சி, அதன் அளவு, வளி­மண்­டல அமுக்கம் காற்றின் வேகம் அது வீசும் திசை என்­ப­வற்றில் ஏற்­ப­டு­கின்ற மாற்­றங்கள் கால­நி­லையின் தன்­மை­யிலும் மாற்­றங்­களை உரு­வாக்­கு­கின்­றன. இந்த மாற்­றங்கள் சூழலில் பல தாக்­கங்­க­ளையும் விளை­வு­க­ளையும் ஏற்­ப­டுத்­து­கி­றது.

மத்­திய கோட்­டிற்கு வட அக­லாங்கு 5 பாகை முதல் 9 பாகை வரை­யி­லான இடை­வெ­ளிக்­குள்ளும் கிழக்கே நெட்­டாங்கு 79 பாகை முதல் 81 பாகை வரை­யி­லான இடை­வெ­ளிக்­குள்ளும் இலங்கை அமைந்­துள்­ளதன் நிமித்­தம், இலங்­கையின் கால­நி­லை­யா­னது மத்­திய கோட்டு கால­நிலை நிலவும் நாடு­களின் கால­நி­லைக்­கான இயல்­பு­களைக் கொண்­டுள்­ளது. இக்­கா­ல­நி­லைத்­தன்­மைக்கு ஏற்ப கால­நி­லையில் மாற்­றங்கள் ஏற்­ப­டு­கின்­றன. குறிப்­பாக வெப்­ப­நி­லை­யிலும் மழை வீழ்ச்­சி­யிலும் இம்­மாற்­றங்­களைக் காண­மு­டி­கி­றது.

இம்­மாற்­றங்­க­ளுக்கு இலங்­கையின் புவி­யி­யல்­தன்­மையும் கார­ண­மா­க­வுள்­ளன. உய­ர­மான மலைகள், மலைத்­தொ­டர்கள், மேட்டு நிலங்கள், சம­வெ­ளிகள், தாழ்­நி­லங்கள் என்ற புவி­யியல் தன்­மைகள்  காணப்­ப­டு­வ­தனால் பரு­வப்பெயர்ச்சிக் காற்றுக் காலங்­களில் ஏற்­ப­டு­கின்ற காற்றின் தன்மை, காலத்­திற்­கு­ரிய மழை வீழ்ச்சி, வெப்­ப­நிலை, ஒப்­பீட்­ட­ள­வி­லான ஈரத்­தன்மை மற்றும் ஏனைய கால­நிலை மாற்­றங்­க­ளுக்கு இப்­பு­வி­யி­யல்­தன்மை பெரிதும் தாக்கம் செலுத்­து­வ­தாக ஆய்­வா­ளர்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.

அத்­தோடு, வளி­மண்­ட­லத்தில் ஏற்­ப­டு­கின்ற தொடர்ச்­சி­யான மாற்­றங்கள் அல்­லது நிலத்தை முறை­த­வறிப் பயன்­ப­டுத்தல் போன்ற கார­ணங்­க­ளி­னாலும் கால­நி­லையில் மாற்­றங்கள் ஏற்­ப­டு­கின்­றன. அதி­க­ரித்த எரி­பொருள் பாவனை, தொழிற்­சா­லை­க­ளி­லி­ருந்து வெளி­யேறும் வாயுக்கள், அதி­க­ரித்த வாகனப் பயன்­பாடு என்­ப­வற்றின் தாக்­கமும் கால­நி­லை­மாற்­றத்­திற்கு கார­ண­மாக அமை­கின்­றன.

அத்­துடன், துரி­த­மாக அதி­க­ரித்து வரு­கின்ற பச்­சை­வீட்டு விளைவின் கார­ண­மா­கவும் புவி வெப்­ப­நி­லை­யா­னது அதி­க­ரித்­துள்­ளது. பச்­சை­வீட்டு விளைவின் கார­ண­மாக புவியின் மேற்­ப­ரப்­பிலே வெப்­ப­நி­லை­யா­னது சாதா­ரண நிலை­யிலும் பார்க்க 30 பாகை செல்­சியஸ் வரையில் வெப்­ப­ம­டை­வ­துடன், இதன் மூலம் உயி­ரியல் தன்­மைகள் அழிந்து வரு­கின்­றன. இயற்கை வளி­மண்­ட­லத்தில் இவ்­வாறு அதி­க­ரித்து வரு­கின்ற பச்சை வீட்டு விளை­விற்கு கார­ண­மாக அமை­கின்ற நீராவி, காபன்­­யொக்சைட், நைட்ரஸ் ஒக்சைட், மீதேன், ஓசோன், ஹைட்­ரோ­பு­ளோரோ காபன், சல்பர் ஹெக்­சா­பு­ளோரைட் போன்­றவை கார­ண­மாக அமை­கின்­றன. மனித சுக­போக வாழ்­வுக்­காக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற செயற்­பா­டுகள் ஆரோக்­கிய வாழ்க்கை தரும் கால­நி­லை­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தி வரு­கி­றது.

வாக­னங்­க­ளுக்கு மேல் வாக­னங்கள் கொள்­வ­னவு செய்­யப்­ப­டு­வ­தனால் அவ்­வா­க­னங்­களைச் செலுத்­து­வ­தற்கு பாதைகள் போது­மா­ன­தாக இல்­லாத நிலை­யினை நக­ரப்­பு­றங்­களில்  காண­மு­டி­கி­றது. அவற்­றிற்­காக பயன்­ப­டுத்­தப்­படும் எரி­பொ­ருட்­களின் அளவும் அதி­க­ரிக்­கப்­பட்டு அவை கால­நிலை மாற்­றங்­க­ளிலும் தாக்­கத்தைச் செலுத்­து­கின்­றன. அத்­தோடு, தொழிற்­சா­லை­க­ளி­லி­ருந்து வெளி­வ­ரு­கின்­றன. நச்சு வாயுக்­களும் கால­நி­லை­மாற்­றத்தின் ஏதுக்­க­ளா­க­வுள்­ளன. இவ்­வற்றின் கார­ண­மாக எல்­லோ­ருமே கால­நிலை மாற்­றத்தின் விளைவை அனு­ப­விக்க வேண்­டி­யுள்­ளது. கடந்த 5ஆம் திகதி முதல் சுட்­டெ­ரிக்கும் வெயி­லினால் இலங்கை மக்கள் அவஸ்த்­தைப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றார்கள்.

நாட்டின் உற்­பத்தித் தேவையின் நிமித்தம் பல தொழிற்­சா­லைகள், நிலை­யங்கள் இயங்­கி­னா­லும், அவற்­றினால் நன்­மைகள் பெறப்­பட்­டாலும் அவற்றில் ஆபத்­தான பக்­க­வி­ளை­வுகளும் காணப்­ப­டு­கின்­றன. இதனால், சூழல் மாச­டை­வ­தோடு கால­நி­லை­யிலும் மாற்­றங்கள் ஏற்­பட வழி ஏற்­ப­டு­கி­றது. இயற்கை சூழலும் மக்­களும் பாதிக்­கப்­ப­டு­கி­றார்கள். இந்­நி­லை­மை­களைக் கருத்­திற்­கொண்­டுதான் கடந்த காலத்தில் சம்பூர் அனல் மின் நிலைய நிர்­மா­ணத்­திற்கு எதி­ராக அப்­பி­ர­தேச மக்கள் போராட்­டங்­களை நடத்­தினர் என்­பதை இங்கு ஞாப­மூட்ட வேண்­டி­யுள்­ளது.

மக்­களின் நலன்­களில் அக்­க­றை­கொள்­ளாத, அவர்­களின் விருப்பு வெறுப்­புக்­களைப் பொருட்படுத்­தாத அனு­ம­தியின் மூலம் இயங்­கு­கின்ற உற்­பத்தி நிலை­யங்­களின் தாக்­கங்கள் தொடர்பில் ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வதும் அதனால், மக்­க­ளுக்கும் சூழ­லுக்கும் கால­நி­லைக்கும் பாதிப்பு ஏற்­ப­டா­ததை உறுதி செய்­வ­திலும் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் அக்க­றை­கொள்­வது அவ­சி­ய­மாகும். ஏனெனில், கால­நிலை மாற்­றத்­திற்கு இத்­த­கைய உற்­பத்தி நிலை­யங்­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றப்­ப­டு­கின்ற வாயுக்­க­ளி­னதும், பிற­பொ­ருட்­க­ளி­னதும் தாக்கம் கார­ணி­க­ளாக அமை­கின்­றன என்­பது கவ­னத்­திற்­கொள்­ளத்­தக்­கது.

குறிப்­பாக சம­கா­லத்தில் நில­வு­கின்ற வெப்­ப­நி­லை­யினால் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­வர்­களில் அதி­க­மானோர் உல்­லாச சுக­போக வாழ்க்கை வாழ்­ப­வர்­க­ளல்ல. நாளாந்த வாழ்க்­கைக்­காக ஓடி உழைக்கும் உழைப்­பா­ளி­களும் தகரக் கொட்­டில்­க­ளிலும், அகதி முகாம்­க­ளிலும் வாழும் அப்­பா­வி­களும் அவர்­க­ளது குழந்­தைகளும் என்­பதை குளி­ரூட்­டிய வாக­னங்­களில் பய­ணிப்­போரும் தொழி­ல­கங்­களில் கட­மை­பு­ரி­வோரும், இல்­லங்­களில் வாழு­வோரும் ஒரு கணம் சிந்­தித்­துப்­பார்க்க வேண்டும்.

உஷ்­ணத்தின் தாக்­கங்­களும் சுகா­தார அறி­வு­ரை­களும்

இலங்கை வளி­மண்­ட­லத்தின் வரு­டாந்த சரா­சரி வெப்­ப­நி­லை­யா­னது கடந்த சில தசாப்த காலங்­க­ளாக குறிப்­பி­டத்­தக்­க­ளவு அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக ஆய்­வா­ளர்கள் குறிப்­பி­டு­கின்­றனர். இதன்­பி­ர­காரம், 1961 முதல் 1990 வரை­யி­லான காலப்­ப­கு­தியில் சரா­சரி வளி­மண்­டல வெப்ப நிலையின் அதி­க­ரிப்பு வேக­மா­னது 0.016 பாகை செல்­சியஸ் ஆக அதி­க­ரித்­துள்­ளது.

இந்த அதி­க­ரிப்­புக்கு பச்சை வீட்டு விளை­வா­னது அரைப் பகுதி அளவில் தாக்கம் செலுத்­தி­யுள்­ள­துடன் அண்­மைக்­கா­ல­மாக இடம்­பெற்ற துரித நக­ர­ம­ய­மாக்­கலின் விளைவு எனவும் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. இருப்­பினும் இலங்கை மத்­தி­ய­கோட்டு கால­நி­லைத்­தன்­மைக்கு உட்­பட்ட நாடா­க­வுள்ள நிலையில் கடந்த சில வாரங்­க­ளாக நிலவும் வெப்­ப­மான கால­நி­லை­யா­னது மக்­களை பெரும் அசௌ­க­ரித்­துக்குள் தள்­ளி­யுள்­ளது.;

இந்து சமுத்­திரத்தின் மேலான காற்றின் திசை­மாற்றம் அதனால் ஏற்­பட்ட சமுத்­தி­ரத்தின் வெப்­ப­நி­லை­மாற்றம் மற்றும் சூரியன் நேர­டி­யாக இலங்­கைக்கு மேலால் காணப்­ப­டு­வது போன்ற கார­ணங்கள் வர­லாறு கண்­டி­ராத அதிக வெப்­ப­நிலை கொண்ட கால­நி­லையை உரு­வாக்­கி­யுள்­ளது. இந்த வெப்ப கால­நிலை இம்­மாதம் 15ஆம் திகதி வரை காணப்­ப­டு­மென வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் ஏற்­க­னவே மக்­களை அறி­வு­றுத்­தி­யி­ருந்­ததைச் சுட்­டிக்­காட்ட வேண்டும்.

பொது­வாக மத்­திய மாகா­ணத்தின் நுவ­ரே­லி­யாவைத் தவிர, நாட்டின் ஏனைய மாகாணப் பிர­தே­சங்­களில் வெப்­ப­நிலை அதி­க­மா­கவே காணப்­ப­டு­கி­றது. வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தின் வெப்­ப­நிலை மற்றும் வளி­மண்டல ஈரப்­பதன் தொடர்­பான விப­ரங்­களின் பிர­காரம்  வவு­னி­யாவில் 38 பாகை செல்­சியஸ் வெப்­ப­நி­லையும் நுவ­ரெ­லி­யாவில் 12 பாகை செல்­சியஸ் வெப்­ப­நிலையும் காணப்­ப­டு­வதை அவ்­வி­ப­ரங்­க­ளி­னூ­டாக அறிய முடி­கி­றது. அத்­துடன் பல பிர­தே­சங்­களில் இடி மின்னல் ஏற்­படும் அபா­யமும் காணப்­ப­டு­மெ­னவும் அது­கு­றித்­தான பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை மக்கள் முன்­னெ­டுக்க வேண்­டு­மெ­னவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

சுட்­டெரிக்கும் வெயி­லையும் பொருட்­ப­டுத்­தாது ஏப்ரல் கால விடு­மு­றையை அனு­ப­வித்­திட நாட்டின் பல பிர­தேசங்­க­ளையும் சேர்ந்த மக்கள் பல்­வேறு பிர­தே­சங்­க­ளுக்கு சுற்­றுலாச் செல்ல தயா­ராகிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். குறிப்­பாக பலர் நுவ­ரெ­லி­யா­விற்கு படை­யெ­டுப்பர். இந்­நி­லையில் அதி­க­ள­வி­லான மக்கள் நுவ­ரெ­லியாப் பிர­தேசத்­துக்கு வருகை தரு­வ­தனால் இப்­ப­கு­தி­களில் தங்­கு­மிட அறை­க­ளுக்­கான கட்­டணம் மிக அதி­க­மாக இருக்­கு­மெ­னவும் எதிர்வு கூறப்­ப­டு­கி­றது.

இந்­நி­லை­யில், இஸ்­லா­மிய வரம்பைப் பேணி விடு­முறை காலத்தை அனு­ப­விக்­கு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா இந்­நாட்டு முஸ்­லிம்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. பிள்­ளை­க­ளையும், குடும்­பத்­த­வர்­க­ளையும் பிற இடங்­க­ளுக்கு அழைத்துச் செல்­வது இஸ்­லா­மிய போத­னை­க­ளுக்கு முர­ணா­ன­தல்ல என்­றாலும், முஸ்­லிம்கள் என்ற வகையில் நமது செயற்­பா­டுகள் இஸ்­லா­மிய வரை­ய­றையை மீறக் கூடாது. ஆடைகள் அணி­வது முதல் உணவு உண்­பது, குடிப்­பது வரை இஸ்­லா­மிய வழி­காட்­டலின் பிர­காரம் அமைத்­துக்­கொள்ள வேண்­டு­மெ­னவும்  அத்­தோடு பிற­ருக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்தக் கூடாது எனவும் முஸ்­லிம்­களை ஜம்­இய்­யதுல் உலமா கேட்­டுள்­ள­தையும் இங்கு சுட்­டிக்­காட்­டு­வது பொருத்­த­மாகும்.

இந்­நி­லையில் அதி­க­ரித்த வெப்­ப­நி­லை­யினால் விவ­சா­யி­களும், நாளாந்த தொழி­லா­ளர்­களும், தகரக் கொட்­டி­ல்களில் வாழும் மக்­களும் பெரும் சிர­மங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர். வரட்­சி­யான கால­நி­லையின் கார­ண­மாக நாட­ளா­விய ரீதியில் 13 மாவட்­டங்­க­ளி­லுள்ள 43 பிர­தேச செய­லகப் பிரி­வு­களில் 3 இலட்­சத்­துக்கும் அதி­க­மானோர் பாதிக்­கப்­பட்­டுள்­ளதை இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் தக­வல்கள் மூலம் அறி­ய­மு­டி­கி­றது.

அத்­தோடு, இக்­கா­லங்­களில் தொடர்­ச்சி­யாக மின்­வி­சி­றிகள் இயங்­குவ­தனால் மின்­சாரக் கட்­டணப் பட­்டி­யலும் அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக குடும்பத் தலை­வர்கள் கூறு­வ­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.  ஒரு சில வர்த்­தக மாபி­யாக்கள்; தாகம் தீர்க்கும் பழங்கள் மற்றும் குடி­பா­னங்­க­ளுக்­கான விலை­க­ளையும் அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக மக்கள் தெரி­விப்­ப­தையும் கவ­னத்­திற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது.

அதி­க­ரித்த வெயி­லினால் குறிப்­பாக குழந்­தைகள், சிறு­வர்கள், முதி­ய­வர்கள்; வெகு­வாக பாதிக்­கப்­ப­டு­கின்­றனர்.  வெயிலில் வேலை செய்த ஓரி­ருவர் ஒரு சில பிர­தே­சங்­களில் மயங்கி விழுந்த செய்­தி­களும் வெளி­வந்­தி­ருந்­தன.  இந்­நி­லையில் மலை­யக மற்றும் வடக்கு, கிழக்கில் நிலவும் உஷ்­ண­மான கால­நி­லை­யினால் காய்ச்சல், இருமல், தோல் நோய் என்­ப­வற்­றுக்கு சிறு­வர்கள் ஆளாகி வரு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றன. இவ்­வெயில் காலங்­களில் உடல் வெப்­ப­நிலை அதி­க­ரிப்­ப­தனால் ஏற்­படும் வெப்­பத்­த­ளர்ச்சி, அதிக நேரம் வெயிலில் வேலை செய்­வ­தனால் ஏற்­படும் வெப்ப மயக்கம், வெயில் காலங்­களில் தேவை­யான அள­விற்கு தண்ணீர் குடிக்­கா­த­தனால் ஏற்­படும் சிறுநீர்க்கடுப்பு, உடலில் அதிக வியர்வைச் சுரப்பு ஏற்படுவதனால் உண்டாகும் வியர்க்குரு போன்ற உடல் உபாதைகளிலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ளவும் வெயில் காலங்களில் அணியும் ஆடை, உண்ணும் உணவு, குடிக்கும் பானம் போன்ற விடயங்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவும் இவை தொடர்பான ஆலோசனைகளை உரியவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளவும் மக்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.

சூழல் வெப்பநிலை அதிகரிக்கும்போது, மனிதர்களின் உடல் வெப்பநிலையும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதனால் அதிகளவிலான சுத்தமான நீரைப் பருகுதல், கூடுதலாக வெயிலில் செல்லாதிருத்தல், உடல் சுகவீனமுற்றதாக உணர்ந்தால் உடனே வைத்தியசாலை செல்லுதல், குழந்தைகளை வெயிலில்  அனுப்பாதிருத்தல் மற்றும் இள நிறத்திலான ஆடைகளை அணிதல் ஆகிய விடயங்களில்  கவனம் செலுத்துவதன் மூலம்  இயற்கையின் சோதனையான சுட்டெரிக்கும் வெயிலினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மக்கள் ஒருபக்கம் செயற்கையின் சோதனையாக மின்துண்டிப்பு; மறுபக்கம் சுட்டெரிக்கும் வெயில் என இரு முனை சோதனைகளுக்கு முகங்கொடுத்திருக்கிறார்களா என வினவப்படுகின்ற நிலையில், மின்துண்டிப்பு 10ஆம் திகதி புதன் கிழமையுடன் நிறைவுக்கு வருவதாக பொறுப்பான அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் 15ஆம் திகதி வரை காணப்படுமென வளிமன்டலவியல்  திணைக்களம் தெரிவித்திருக்கிறது. இவை  துன்பத்தின் பின் இன்பம் வரும் எனும் தத்துவத்தை உணரவும் செய்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டி யுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.