இருதலைக்கொள்ளி எறும்பாக கல்முனை

0 877

இன்று கல்­முனை இரு­முனை நெருக்­கு­த­லுக்குள் மாட்­டி­யி­ருக்­கி­றது. இந்த நெருக்­கு­தலின் விளைவால் நூறாண்­டுகள் பல கடந்தும் கண்ணை இமை காப்­ப­துபோல் நம் முன்­னோர்கள் காத்­து­வந்த கல்­முனை நம்­மை­விட்டும் கைந­ழுவி விடுமோ என்ற கவலை கடு­மை­யாக வதைக்­கி­றது.

இப்­பி­ரச்­சி­னைகள் தாமாக உரு­வா­னது பாதி, நம்­ம­வர்கள் தன்­ன­ல­னுக்­காக உரு­வாக்­கி­யது அல்­லது வளர்த்­து­விட்­டது பாதி. இது தீர்க்­க­மு­டி­யாத பிரச்­சினை அல்ல. தீர்க்கத் தெரி­யாமல் தள்­ளாடும் பிரச்­சினை.

சாய்ந்­த­ம­ருது உள்­ளூ­ராட்சிக் கோரிக்கை

அன்று மறைந்த தலைவர், மறைந்த முன்னாள் மாவட்ட நீதி­பதி ஹுசைன் அவர்­களின் வீட்­டுக்­கு ­முன்னால் நடை­பெற்ற பகி­ரங்க கூட்­டத்தில் உரிய நியா­யங்­க­ளைக்­கூறி “சாய்ந்­த­ம­ரு­துக்கு பிர­தேச சபை தர­மாட்டேன், பிர­தேச செய­லகம் தரு­வதில் பிரச்­சினை இல்லை’; என்று பகி­ரங்­க­மாக கூறினார். அதன்­பி­ர­காரம் பிர­தேச செய­லகம் வழங்­கினார். அத்­துடன் அப்­பி­ரச்­சினை முடி­வுக்கு வந்­தது.

2012 ஆம் ஆண்டு சிராஸ் மீரா­சா­ஹிபின் நியா­ய­மற்ற மேயர் பதவி பறிப்­பின்­மூலம் அக்­கோ­ரிக்கை மீண்டும் உயிர்­பெற கள­ம­மைக்­கப்­பட்­டது. இந்த நியா­ய­மற்ற பதவி பறிப்பை கல்­முனை செய்­ய­வில்லை. மாறாக அவர்­க­ளது கட்­சியே செய்­தது. சுருங்­கக்­கூறின் சாய்ந்­த­ம­ருது உள்­ளூ­ராட்சிக் கோரிக்­கையின் மீள்­பி­றப்­பிற்கு அந்தக் கட்­சியே கார­ணமாய் அமைந்­தது.

அதனைத் தொடர்ந்து பள்­ளி­வாசல் நிர்­வாகம் உள்­ளூ­ராட்சிக் கோரிக்­கையை அந்­தக்­கட்­சி­யிடம் முன்­வைத்­த­போது மறைந்த தலைவர் கூறி­ய­தைப்­போன்று வெளிப்­ப­டை­யாக நேர்­மை­யாக அதைச் செய்­ய­மு­டி­யாது; என்று கூறி­யி­ருக்­கலாம். ஆனால் பொய் வாக்­கு­றுதி கொடுக்­கப்­பட்­டது.

சாய்ந்­த­ம­ரு­துக்கு தனி­யாக சபை கொடுப்­பதில் உள்ள பிரச்­சி­னைகள் வாக்­கு­றுதி கொடுத்­த­வர்­க­ளுக்குத் தெரியும். ஆனாலும் கொடுத்­தார்கள். போதாக்­கு­றைக்கு ரணிலைக் கொண்­டு­வந்து பகி­ரங்க மேடையில் மீண்டும் வாக்­கு­றுதி கொடுத்­தார்கள். ஏன் கொடுத்­தார்கள்?

ஒரு சில தனி­ந­பர்கள் பாரா­ளு­மன்றம் செல்­வ­தற்­காக கொடுத்­தார்கள். வாக்­கு­றுதி கொடுத்­த­வர்கள் நான்­காகப் பிரிக்க நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்க வேண்டும். இந்த ஆட்­சியில் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்க்­க­மு­டி­யாத எந்­த­வொரு முஸ்­லிம்­கட்­சியும் எதிர்­கா­லத்தில் எந்­த­வொரு ஆட்­சி­யிலும் பிரச்­சி­னை­களைத் தீர்க்­க­மு­டியும் என்று கூறினால் அதை­விட ஏமாற்று இருக்­க­மு­டி­யாது.

அதன்பின் கொடுத்த பொய்­வாக்­கு­று­தியைச் சமா­ளிப்­ப­தற்­காக 40 தட­வைக்­குமேல் நிர்­வா­க­ச­பை­யினர் கொழும்­புக்கு அழைக்­கப்­பட்டு ஏமாற்­றப்­பட்­டார்கள். இறு­தியில் விரக்­தியின் விளிம்­பிற்குத் தள்­ளப்­பட்ட அவர்கள் போராட்­டத்தில் இறங்­கி­னார்கள்.

திசை­தி­ருப்­பப்­பட்ட போராட்டம்

தம்மை ஏமாற்­றிய அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கெ­தி­ராக அவர்கள் போரா­டு­வ­தற்கு அவர்­க­ளுக்கு எல்லா உரி­மையும் இருக்­கி­றது, (வன்­மு­றை­யைத் ­த­விர).

துர­திஷ்­ட­வ­ச­மாக அப்­போ­ராட்டம் சகோ­தர ஊருக்­கெ­தி­ரான போராட்­ட­மாக யதார்த்த வடிவம் பெற்­றது.

சமூ­க­வ­லைத்­த­ளங்கள் பிர­தே­ச­வா­தத்தைக் கக்­கின. மேடைகள் அடுத்த ஊருக்­கெ­தி­ரான துவே­சப்­பேச்­சுக்­களால் நிரம்பி வழிந்­தன. பயான்­கள்­கூட மார்க்­கத்­திற்குப் பதி­லாக ஊர்த்­து­வே­சத்தை உமிழ்ந்­தன. வர­லாற்று ரீதி­யாக ஒரே பரம்­ப­ரையில் வந்­து­தித்த, திரு­ம­ணங்­களால் பாதி சனத்­தொகை பின்­னிப்­பி­ணைந்த ஊர­வர்­களின் உணர்­வுகள் குத்திக் குத­றப்­பட்­டன. இலக்­கிய நிகழ்­வுக்குச் சென்­ற­வர்­களே சுற்­றி­வ­ளைக்­கப்­ப­டு­ம­ளவு ஊர்­க­ளுக்­கெ­தி­ரான வன்மம் வளர்ந்­தது.

இவற்­றிற்­கெல்லாம் காரணம் யார்? தான் பாரா­ளு­மன்றம் செல்­வ­தற்­காக பொய்­வாக்­கு­றுதி கொடுத்து ஏமாற்­றி­ய­வர்கள் இல்­லையா? ஒருவர் பாரா­ளு­மன்றம் செல்­ல­வேண்டும் என்­ப­தற்­காக, ஒரு கட்சி முஸ்லிம் அர­சி­யலில் கோலோச்ச வேண்­டு­மென்­ப­தற்­காக ஒரு ஊரே இம்­சைப்­ப­டுத்­தப்­பட்­டதே!,

அந்த ஊரின் நியா­யங்கள் புரிந்­து­கொள்­ளப்­ப­ட­வில்லை. சபை கிடைக்­கா­விட்டால் குறிப்­பி­டத்­தக்க இழப்­புகள் எது­வு­மில்லை. கிடைத்தால் சிறிய அடை­வுகள் உண்டு. அடுத்த ஊர் இழப்­பு­களை சந்­திக்­க­நேர்ந்தால் அது பாரிய இழப்­பாக இருக்கும். ஆனால் எண்­க­ணித கணக்­கு­களைச் சொல்லி அவர்­களே நியா­யங்­க­ளையும் கூறிக்­கொண்­டார்கள்.

இணைக்­கும்­போது மூன்று, பிரிக்­கும்­போது மட்டும் ஏன் ஒன்று? என்ற நியாயம் அவர்­க­ளிடம் எடு­ப­ட­வில்லை. அன்­றைய கிரா­ம­ச­பை­யொன்று தனி­யாக செல்­ல­வி­ரும்­பும்­போது அன்­றைய பட்­டி­ன­ச­பை­யொன்றும் தனி­யாக செல்­ல­வி­ரும்பும் நியா­யத்தை ஏற்­றுக்­கொள்ள மறுத்­தார்கள்.

கல்­மு­னையைப் பாது­காக்க அடுத்த ஊரின் உத­வியை நாடு­வ­தாக ஏவம் கேட்­கப்­பட்­டது. கல்­மு­னையைப் பாது­காக்க கல்­மு­னையைத் தனி­யா­க­வி­டுங்கள். இணைத்­த­தை­யெல்லாம் பிரித்­து­வி­டுங்கள். 87 ஆம் ஆண்டு இருந்த கல்­மு­னையைத் தாருங்கள்; என்று கூறி­யது

மாற்­றிப்­பே­சப்­பட்­டது. ஒரு சிறிய அடை­வுக்­காக ஒரு சகோ­தர ஊரின் இத­யங்கள் ரண­க­ள­மாக்­கப்­பட்­டன. கல்­மு­னைக்கு ஏன் இந்த தலை­யெ­ழுத்து? யாரோ பொய்­வாக்­கு­றுதி கொடுத்து ஏமாற்­றி­ய­தால்­தானே கல்­முனை இந்த இழிசொல் கேட்­க­வேண்டி வந்­தது.

இறு­தியில், உள்­ளூ­ராட்சி சபைத்­தேர்­தலில் அந்­தக்­கட்சி அந்த ஊர்­மக்­களால் துரத்­தப்­பட்­டது.

உள்­ளூ­ராட்சித் தேர்­தலைத் தொடர்ந்து ஓரு­வகை அமைதி நில­வி­யது.

அதன்பின் அந்தக் கட்­சிக்கும் அவ்வூர் நிர்­வா­கத்­திற்கும் இடையில் இடை­வெளி ஏற்­பட்­டது. நிர்­வாகம் சந்­திக்­க­முற்­பட்­ட­போது அக்­கட்­சியின் தலைவர் தன்னை நிரா­க­ரித்த நிர்­வா­கத்தை சந்­திக்­க­மு­டி­யாது, அவ்­வாறு சந்­திக்க வேண்­டு­மாயின் தனது கட்­சியின் அவ்­வூரைச் சேர்ந்த மத்­திய குழு­வி­ன­ரு­டன்தான் வர­வேண்டும் என்று கூறி­ய­தாக கதைகள் அடி­பட்­டன. (இதன் உண்மைத் தன்மை உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை). இது உண்­மை­யாயின் அது சரியோ, பிழையோ, அந்த சந்­தர்ப்­பத்தில் நான்­காகப் பிரிக்­க­மு­டி­யாத கைய­று­நி­லையில் இருக்­கும்­போது, இப்­பி­ரச்­சினை மீண்டும் விஸ்­வ­ரூபம் எடுப்­பதைத் தடுப்­ப­தற்­கான ஒரு உத்­தி­யாக அது இருந்­தி­ருக்­கலாம்.

எது எவ்­வாறு இருந்­த­போ­திலும் தாம் நிரா­க­ரித்து, தோற்­க­டித்து வித்­தி­யா­ச­மான மாலை, மரி­யா­தைகள் வழங்கி அனுப்­பிய கட்­சியை மீண்டும் அவர்­க­ளாக சந்­திப்­பதில் நிர்­வா­கத்­தினர் தர்­ம­சங்­க­டங்­களை எதிர்­நோக்­கி­யதைப் புரிந்­து­கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

அவ்வூர் மக்­களின் பார்­வையைப் பொறுத்­த­வ­ரை­யிலும் நிர்­வாகம் கூறி­ய­வர்­க­ளுக்கே நாம் வாக்­க­ளித்தோம். எனவே, நிர்­வா­கமே சபை பெற்­றுத்­த­ர­வேண்டும் என்ற நிலைப்­பாடே இருந்­தது.

இந்­நி­லையில் நிர்­வாகம் ஏனைய அர­சி­யல்­வா­தி­களின் தயவை நாடிக்­கொண்­டி­ருந்­தது. கட்­சி­களைத் துரத்­தி­விட்டு மக்­க­ளிடம் வாக்­கு­க­ளையும் பெற்­று­விட்டு கட்­சி­க­ளைக்­கு­றை­கூறி கட்­சி­க­ளுக்­கெ­தி­ரான போராட்­ட­மொன்றை மீண்டும் ஆரம்­பிப்­பதில் தர்­ம­சங்­க­டங்கள் நிர்­வா­கத்­திற்­கி­ருந்­தன. இது அந்த ஒரு­வகை அமை­திக்குக் காரணம்.

கேட்­டு­வாங்­கிய வினை

இரண்­டா­வது தட­வை­யாக தமது அர­சியல் ஆதா­யத்­திற்­காக கல்­மு­னையை வேள்­வித்­தீக்குள் தள்ளல்:

இந்­நி­லையில் கல்­மு­னையில் எதைச் சாதித்­ததா­கவோ தெரி­ய­வில்லை; வர­வேற்பு வைத்­தார்கள். சரி வர­வேற்பில் வாருங்கள் பேசுவோம்; என்று அழைத்­தது எதற்­காக? கொடுக்க முடியும்; என்­ப­த­னாலா? கொடுக்க முடி­யா­த­வர்கள் எதற்­காக பேச அழைத்­தார்கள்?

அதன்பின் நிர்­வாகம் சார்பில் ஒரு குழு சந்­தித்த­தா­கவும் ஒரு குறித்த கால­அ­வ­காசம் கொடுக்­கப்­பட்­ட­தா­கவும் கூறப்­பட்­டது? அத­னைத்­தொ­டர்ந்து அவர்கள் countdown போடத்­தொ­டங்­கி­னார்கள். அதனைச் சமா­ளிக்க கடந்த 26 ஆம் திகதி கொழும்பில் ஒரு கூட்­டத்தைப் போட்டு 4 வரு­டங்­க­ளுக்­குப்­பி­றகு இப்­பொ­ழு­துதான் ஊர்­க­ளுடன் பேசு­வ­தாக ஒரு கண்­து­டைப்பு முடிவு எடுக்­கப்­பட்­டது.

விளைவு, மீண்டும் அந்த ஊரில் சல­ச­லப்பு. அவர்­க­ளது கட்சித் தலைவர் தன் கையா­லாகாத் தனத்தைப் புரிந்­து­கொண்டு சற்­றுத்­தூ­ர­மாக இருக்­கும்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாருங்கள் பேசுவோம்; என அழைத்து மீண்டும் ஒரு ஏமாற்று நாடகம் ஆடி பிரச்­சி­னைக்கு மீண்டும் ஊட்­டச்­சத்து வழங்­கி­யி­ருக்­கின்றார்.

இதன் விளைவு, அடுத்த பக்கம் ஏமாற்­றிய அர­சி­யல்­வா­திக்­கெ­தி­ரான போராட்­டத்தில் அநி­யா­ய­மாக இரு ஊர்­களின் அந்­நி­யோன்ய உறவு மீண்­டு­மொ­ரு­முறை சோத­னைக்­குள்­ளாகப் போகின்­றது.

அதற்­கான அடை­யாளம் இப்­பொ­ழுதே வெளிப்­பட ஆரம்­பித்­து­விட்­டது. முக­நூல்­களில் பிர­தே­ச­வாதம் மீண்டும் கொடி­கட்டிப் பறக்­கி­றது. கல்­முனை முக­வெற்­றி­லையா? தொங்கல் வெற்­றி­லையா? கல்­முனை முஸ்­லிம்­களின் சொத்து; என்­பது சரியா? என்ற வாதங்­க­ளெல்லாம் ஏற்­க­னவே இறக்கை கட்­டிப்­ப­றக்க ஆரம்­பித்­து­விட்­டன. இவற்­றிற்­­கெல்லாம் காரணம் யார்?

கடந்த தேர்­தலில் தான் பாரா­ளு­மன்றம் செல்­வ­தற்­காக பொய்­வாக்­கு­று­தி­கொ­டுத்து அதன் அறு­வ­டையை செய்­த­வர்கள் கல்­முனை மக்கள். அதன்பின் கடந்த உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் நீங்கள் வேண்டாம் என்று துரத்­தப்­பட்டு ஒதுக்­கப்­பட்­டி­ருந்­த­போது, மீண்டும் வாருங்கள் பேச, தரு­கிறேன் சபையை என்று அடுத்த தேர்­த­லுக்கு வாக்­குப்­பெற ஏமாற்று நாடகம் மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட்டு அது மெது மெது­வாக விஸ்­வ­ரூபம் எடுக்க ஆரம்­பிக்­கின்­றது. இதன் அறு­வ­டையை கல்­முனை மக்கள் செய்யத் தயா­ராக வேண்டும். இங்கு எழு­கின்ற கேள்வி, ஒரு தனி­நபர் பாரா­ளு­மன்றம் செல்­வ­தற்­காக இரு ஊர்­களின் உறவு ஏன் பாதிக்­கப்­ப­ட­வேண்டும்? எந்­தக்­குற்­றமும் செய்­யாமல் கல்­முனை ஏன் பழிச்­சொல்­லுக்கும் இழி சொல்­லுக்கும் ஆளாக்­கப்­பட வேண்டும். தாம் காலங்­கா­ல­மாக காத்­து­வந்த கல்­முனை மாந­கரை இழந்­து­வி­டுமோ என்­கின்ற அச்ச நிலைக்கு ஏன் தள்­ளப்­ப­ட­வேண்டும்?

கடந்த தேர்­தலில் பாரா­ளு­மன்றம் செல்ல, பொய்­வாக்­கு­றுதி கொடுத்து அனு­ப­வித்­தது போதா­தென்று அடுத்­த­தேர்­த­லிலும் பாரா­ளு­மன்றம்

செல்ல பொய்­வாக்­கு­றுதி வழங்க அழைத்து பிரச்­சினை வளர்த்­து­வி­டப்­பட்­டி­ருக்­கின்­றதே!

18 வரு­ட­மாக வாக்­க­ளித்து கண்­ட ­ப­ல­னேது?

கடந்த 18 வரு­ட­மாக ஒரே நபர்­க­ளுக்கு வாக்­க­ளித்­தீர்கள். அதனால் கல்­முனை மக்கள் சாதித்­தது;

என்னை புதுப்­பிக்­க­மாட்­டாயா? என்று கெஞ்­சு­கின்ற மார்க்கட்.

என்னை எல்­லோரும் மாந­க­ர­சபை என அழைக்­கும்­போது வெட்­க­மாக இருக்­கி­றது. காரை­தீவு பிர­தேச சபையே எவ்­வ­ளவு அழ­காக இருக்­கிறாள். எனக்கேன் இந்­தக்­கோலம் எனக் கண்ணீர் வடிக்கும் மாந­க­ர­சபைக் கட்­டிடம்.

நீயும் ஒரு மாந­கர மைதா­ன­மாமே! மெய்யா? என தூரத்து மாந­கர மைதா­னங்­க­ளெல்லாம் கேலி செய்­கின்­றன. விளை­யாட்­டுத்­து­றையும் உன் மன்­ன­னிடம் சில காலம் இருந்­த­தாமே! அடிக்­கல்லும் நட்­ட­தாமே! முளைத்­து­விட்­டதா? என்று பகிடி செய்­கி­றார்கள்! என்று மூக்கால் முனங்­கு­கி­றது; மைதானம்.

பஸ் தரிப்­பி­டமோ அருகே செல்­கின்ற பஸ்­களைப் பார்த்து முறைக்­கி­றதாம். அம்­பாறை பஸ் நிலை­யத்தைப் பார்! மாத்­தறை பஸ் நிலை­யத்தைப் பார்! இன்னும் எத்­த­னையோ பஸ் நிலை­யங்­களைப் பார்! என் தலை­விரி கோலத்­தையும் பார்!! என்னை இந்த நிலைக்கு ஆளாக்­கி­யவன் எங்கே? என்று தேடு­கி­றதாம். மொத்­தத்தில் கல்­முனைக் கன்னி சோபை­யி­ழந்து கிடக்­கின்றாள்.

இதுதான் கல்­முனை மக்கள் 18 வரு­டங்கள் வாக்­க­ளித்­தற்­கான பரிசு. இந்த நிலையில் இவர்­க­ளது பொய் வாக்­கு­று­தி­களால் இழி சொல்­லுக்கும் பழிச்­சொல்­லுக்கும் ஆளா­க­வேண்­டிய நிலை? ஏன் இந்தத் தலை­விதி? கல்­முனை மக்கள் தெரி­வு­செய்­த­தற்கு நன்­றிக்­க­ட­னாக எதையும் உருப்­ப­டி­யாக செய்­யத்தான் முடி­ய­வில்லை. அடுத்த ஊருடன் மூட்­டி­வி­டவும் வேண்­டுமா?

அதே­நேரம் சாய்ந்­த­ம­ருது மக்­களும் யோசிக்க வேண்டும். கையா­லா­கா­த­வர்­களைத் தெரி­வு­செய்­ததில் கல்­முனை மக்­க­ளை­விட, சாய்ந்­த­ம­ருது மக்­க­ளுக்கு அதிக பங்­குண்டு. அவ­ரவர் தேடிக்­கொண்­ட­துதான் அவ­ர­வ­ருக்கு கிடைக்கும்; என்­கி­றது திரு­மறை.

இரு ஊர்­மக்­களும் குறிப்­பாக தேடிக்­கொண்­ட­துதான் இந்­த­வினை, என்­பதைப் புரிந்­து­கொள்ள வேண்டும். இந்த இரண்டு ஊர்­களின் உறவு என்­பது ஆயி­ரங்­கா­லத்துப் பயிர். ஒரு சில அடை­வு­க­ளுக்­காக, அந்த அடை­வுகள் தூரத்­துப்­பச்­சை­யாக இருப்­பதே இந்த இரண்டு ஊர்­களும் தேர்­தல்­க­ளின்­போது தன்­கை­களால் செய்­த­வி­னைதான், என்­பதைப் புரிந்­து­கொண்டு சற்று நிதா­ன­மாக அப்­பாவி ஊர்­களின் மனங்கள் நோக­டிக்­கப்­ப­டாமல், அடுத்த சகோ­தர ஊர்­களின் எதிர்­காலம் இரு­ளுக்குள் தள்­ளப்­பட்­டு­வி­டாமல் காரி­யங்கள் சாதிக்­கப்­பட வேண்டும்.

தேர்­தல்கள் இனியும் வரும். வர­லாறும் மாறும் இன்­ஷா­அல்லாஹ். சமூ­க­நீதி தழைத்­தோங்கும். அபி­லா­ஷைகள் இறை­வனின் உத­வியால் நிறை­வேறும்; என்­பதில் நம்­பிக்கை கொள்வோம்.

கல்­முனை பிர­தேச செய­லகப் பிரச்­சினை

துப்­பாக்­கி­மு­னையில் உரு­வாக்­கப்­பட்ட ஒரு பி செய­ல­கத்தின் கதை இது என நமக்குத் தெரியும். முன்­னைய ஆக்­கத்தில் விரி­வாக குறிப்­பிட்­டி­ருக்­கின்றோம்.

1989 வரை இந்த எல்லைப் பிரச்­சினை இவர்­க­ளுக்கு இருக்­க­வில்லை. ஆயுதம் தூக்­கி­ய­போ­துதான் எல்லைப் பிரச்­சி­னைகள் இவர்­க­ளுக்குத் தோன்­றின என்­பது ஒரு புறம்.

அன்று இந்­திய அமை­திப்­படை இருந்­த­போது, ‘கல்­முனை’ முஸ்­லிம்­களால் அடாத்­தாகப் பிடிக்­கப்­பட்­ட­தாக அப்­ப­டை­யிடம் கூறி­யி­ருந்­தார்கள். 1989 ஆம் ஆண்டு எமது பிர­ஜைகள் குழு ஸ்தாபிக்­கப்­பட்­டபின் மிகுந்த பிர­யத்­த­னப்­பட்டு IPKF இடம் மறு­பக்க உண்­மையைப் புரி­ய­வைத்தோம். இன்­றைய இளந்­த­லை­மு­றை­யி­ன­ருக்கோ அல்­லது மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்கோ அந்த வர­லாறு தெரி­யாது.

இன்­றைய அவர்­க­ளு­டைய வாதம் 29 குறிச்­சி­க­ளுக்கு ஏன் ஒரு செய­லகம் வழங்­க­மு­டி­யாது? என்­ப­தாகும். இதைத்தான் அவர்கள் எல்­லோ­ரி­டமும் சொல்­கி­றார்கள். இங்கு யாரும் அவர்­க­ளுக்கு செய­லகம் வழங்­கு­வதை எதிர்க்­க­வில்லை. ஆனால் பழைய கல்­மு­னைப்­பட்­டின சபை எல்­லைக்குள் இருக்­கின்ற இரண்டும் இன்னும் ஒரு பாதி­யு­மான இரண்­டரை தமிழ் குறிச்­சி­க­ளுக்­காக மொத்த கல்­முனை நக­ரத்­தையே தம் எல்­லை­யாக கேட்­ப­தைத்தான் எதிர்க்­கின்­றார்கள்.

எஞ்­சிய 26 குறிச்­சி­க­ளுக்கும் ஒரு பிர­தேச செய­ல­கத்தை மட்­டு­மல்ல, ஒரு பிர­தேச சபை­யையே அவர்கள் பெற்­றுக்­கொள்­ளலாம். அதற்கு யாரும் தடைகிடையாது. அதற்கு அவர்கள் உடன்பட்டால் நாளையே அவர்களது பிரச்சினையும் தீர்ந்து, சாய்ந்தமருது பிரச்சினையும் தீர்த்து சகலருடைய பிரச்சினைகளும் தீரும்.

மருதமுனையையும் நற்பிட்டிமுனையையும் இணைத்து தனியாக ஒரு சபையும் ஒரு செயலகமும் வழங்கமுடியும். அல்லது நற்பிட்டிமுனையை கல்முனையுடன் இணைக்கவும் முடியும். எனவே, 29 கிராமசேவகர் பிரிவு என்பது பிழையான கூற்று. 2 1/2 குறிச்சிகள்தான் பிரச்சினை.

வெறும் 2 1/2 குறிச்சிகள்கூட முஸ்லிம் பெரும்பான்மை எல்லைக்குள் இருக்கமுடியாதென்றால் காரைதீவிற்குள் மாளிகைக்காடும் மாவடிப்பள்ளியும் எப்படி இருக்க முடியும்? நாவிதன்வெளியில் மத்தியமுகாம் எப்படி இருக்கமுடியும்? தமிழ், முஸ்லிம் ஒற்றுமையை வட, கிழக்கில் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? தமிழர் கோரிக்கை எவ்வாறு நியாயப்படுத்தப்பட முடியும்? அவ்வாறாயின் தேசிய அரசியலில் த.தே.கூ. எந்தப்பக்கம் நிற்கின்றதோ அதற்கு எதிரான தேசியக்கட்சியையா முஸ்லிம்கள் ஆதரிக்கவேண்டும். எதிர்காலத்தில் ஒவ்வொருவிடயத்திலும் தமிழர்களும் முஸ்லிம்களும் எதிரும் புதிருமான அரசியலையா செய்யவேண்டும்? தமிழ்த்தரப்பினர் ஒவ்வொரு விடயத்திலும் முஸ்லிம்களுக்கெதிரான இவ்வாறு இறுக்கமான நிலைப்பாட்டை எடுத்தால் நிலைமை என்னாவது?

இந்த நியாயங்களைச் சொல்லத் தெரியாமல், பாராளுமன்றில் பேசத்தெரியாமல் கல்முனை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படுகிறது.

இவற்றிற்கு யார் காரணம்?

கல்முனைத் தொகுதி மக்கள் தேர்தல்களின்போது தம் கைகளால் தேடிக்கொண்ட வினைகள் இல்லையா?

எனவே, சிந்தியுங்கள். உங்களுக்குள் தர்க்கித்துப்பிரிந்து உங்களை நீங்களே பலவீனப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.