வரட்சியால் கடும் அவதி

0 564

நாட்டில் நில­வு­கின்ற வரட்­சி­யான கால­நிலை கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­களின் எண்­ணிக்கை 4 இலட்­சத்து 67 ஆயி­ர­மாக அதி­க­ரித்­துள்­ள­தாக இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.

நாட­ளா­விய ரீதியில் 15 மாவட்­டங்­களைச் சேர்ந்த ஒரு இலட்­சத்து 21 ஆயி­ரத்து 182 குடும்­பங்­களைச் சேர்ந்த 4 இலட்­சத்து 67 ஆயி­ரத்து 328 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

களுத்­துறை மாவட்­டத்தில் 58 ஆயி­ரத்து 175 குடும்­பங்­களைச் சேர்ந்த 2 இலட்­சத்து 44 ஆயி­ரத்து 65 பேரும், மன்னார் மாவட்­டத்தில் 14 ஆயி­ரத்து 97 குடும்­பங்­களைச் சேர்ந்த 51 ஆயி­ரத்து 63 பேரும்,  யாழ் மாவட்­டத்தில் 10 ஆயி­ரத்து 71 குடும்­பங்­களைச் சேர்ந்த 33 ஆயி­ரத்து 488 பேரும்,  புத்­தளம் மாவட்­டத்தில் 9, 339 குடும்­பங்­களைச் சேர்ந்த 32 ஆயி­ரத்து 564 பேரும்,  மாத்­தளை மாவட்­டத்தில் 8391 குடும்­பங்­களைச் சேர்ந்த 30 ஆயி­ரத்து 508 பேரும், அம்­பாறை மாவட்­டத்தில் 3, 797 குடும்­பங்­களைச் சேர்ந்த 13 ஆயி­ரத்து 557 பேரும்,  கம்­பஹா மாவட்­டத்தில் 4, 617 குடும்­பங்­களைச் சேர்ந்த 15 ஆயி­ரத்து 515 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இதே போன்று கண்டி மாவட்­டத்தில் 3, 465 குடும்­பங்­களைச் சேர்ந்த 12 ஆயி­ரத்து 725 பேரும், பொலன்­ன­றுவை மாவட்­டத்தில் 2, 028 குடும்­பங்­களைச் சேர்ந்த 7367 பேரும்,  குரு­ணாகல் மாவட்­டத்தில் 1, 939 குடும்­பங்­களைச் சேர்ந்த 6, 868 பேரும்,  கேகாலை மாவட்­டத்தில் 1523 குடும்­பங்­களைச் சேர்ந்த 5523 பேரும்,  மாத்­தறை மாவட்­டத்தில் 2318 குடும்­பங்­களைச் சேர்ந்த 8899 பேரும்,  வவு­னியா மாவட்­டத்தில் 39 குடும்­பங்­களைச் சேர்ந்த 105 பேரும்,  இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் 73 குடும்­பங்­களைச் சேர்ந்த 308 பேரும், மொன­ரா­கலை மாவட்­டத்தில் 340 குடும்­பங்­களைச் சேர்ந்த 1530 பேரும், ஹம்­பாந்­தோட்டை மாவட்­டத்தில் 2149 குடும்­பங்­களைச் சேர்ந்த 9316 பேரும், கிளி­நொச்சி மாவட்­டத்தில் 970 குடும்­பங்­களைச் சேர்ந்த 3243 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இன்­றைய தினம் வடமேல் மற்றும் வட மத்­திய மாகா­ணங்­க­ளிலும், மன்னார், வவு­னியா, முல்­லைத்­தீவு மற்றும் கம்­பஹா ஆகிய மாவட்­டங்­க­ளிலும், நாளை வியா­ழக்­கி­ழமை வடமேல், மத்­திய மாகா­ணங்­க­ளிலும் மன்னார், வவு­னியா, முல்­லை­தீவு, கம்­பஹா, கொழும்பு, அம்­பாறை மற்றும் மொன­ரா­கலை ஆகிய மாவட்­டங்­க­ளிலும் கூடிய வெப்­ப­நிலை நிலவும் என எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

மேற்கு, வட மேல், சப்­ர­க­முவ, மத்­திய, ஊவா, தென் மற்றும் கிழக்கு ஆகிய மாகா­ணங்­க­ளிலும், அநு­ரா­த­புரம் மற்றும் வவு­னியா ஆகிய மாவட்­டங்­களில் பிற்­பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யக் கூடும் என இலங்கை வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் எதிர்வு கூறி­யுள்­ளது. இதே­வேளை இன்று ஒட்­டப்­பணை, கொஹொம்­ப­கஸ்­வெவ, பலு­கஸ்­வெவ, தல­ட­கம, மாஹோ, தல­கி­ரி­யா­கம, யக்­குரே, கிளங்குப்பளை மற்றும் புன்னைக்குடா ஆகிய பிரதேசங்களில் நண்பகல் 12.11 மணியளவில் சூரியன் உச்சம் கொடுக்கும் என்பதால் அந்த பிரதேசங்களில் அதிக உஷ்ணமான காலநிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.