ஹஜ் முகவர்கள் ஆள் மாறாட்டம்

அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்ய தீர்மானம்; விண்ணப்பித்தோரும் உடந்தை என குற்றச்சாட்டு

0 610

இவ்­வ­ரு­டத்­திற்­கான ஹஜ் ஏற்­பா­டு­களில் சில ஹஜ் முக­வர்கள் ஆள்­மா­றாட்ட நட­வ­டிக்­கைளில் ஈடு­பட்டு வரு­வ­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கும், அரச ஹஜ் குழு­வுக்கும் முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றுள்­ள­தா­கவும் அவ்­வா­றான நட­வ­டிக்­கைளில் ஈடு­பட்­டுள்ள ஹஜ் முக­வர்­களின் ஹஜ் அனு­ம­திப்­பத்­தி­ரத்தை இரத்துச் செய்­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் அரச ஹஜ் குழு தெரி­வித்­துள்­ளது.

இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக விண்­ணப்­பித்து உரிய பதிவுக் கட்­ட­ணத்­தையும் செலுத்­தி­யுள்ள, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்க­ளத்­தினால் ஹஜ் கட­மைக்­காக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­களில் சிலர் இவ் ஆள்­மா­றாட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு முகவர் நிலை­யங்­க­ளுக்கு உடந்­தை­யாக இருப்­ப­தா­கவும் தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றா­ன­வர்கள் தாம் இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை மேற்­கொள்­வ­தில்லை எனத் தெரி­வித்து ஹஜ் முகவர் ஊடாக அவ்­வெற்­றி­டத்­துக்கு வேறு ஒரு­வரை அனுப்பி வைக்கும் முயற்­சி­களில் ஈடு­பட்­டி­ருக்­கி­றார்கள்.

இதற்­கென ஹஜ் முக­வர்­க­ளி­ட­மி­ருந்து ஒரு தொகைப் பணத்­தையும் பெற்­றுக்­கொள்­வ­தாக அரச ஹஜ் குழு­வுக்கு முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ள­தாக அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி. சியாத் தெரி­வித்தார்.
இவ்­வா­றான செயல்­களில் ஈடு­பட்­டுள்ள ஹஜ் விண்­ணப்­பதா ரிக­ளுக்கு அடுத்த வருடம் ஹஜ் கட­மைக்­கான வாய்ப்பு வழங்­கப்­பட மாட்­டா­தெ­னவும் அவர் கூறினார்.

ஹஜ் கட­மைக்­காக இவ்­வ­ருடம் தெரிவு செய்­யப்­பட்டு கட­மையை ஏதோ கார­ணங்­க­ளினால் மேற்­கொள்ள முடி­யாத விண்­ணப்­ப­தா­ரிகள் அது பற்றி எதிர்­வரும் 15 ஆம் திக­திக்கு முன்பு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு எழுத்து மூலம் அறி­விக்க வேண்டும். அவ்­வாறு அறி­விக்­கப்­பட்­டாலே அவர்­க­ளுக்கு அடுத்த வருடம் ஹஜ் கட­மைக்­கான வாய்ப்பு வழங்­கப்­ப­டு­மெ­னவும் அரச ஹஜ் குழு தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை, இவ்­வ­ருடம் ஹஜ் கட­மைக்­காக விண்­ணப்­பித்து பதி­வுக்­கட்­ட­ணத்­தையும் செலுத்­தி­யுள்ள, ஹஜ் கட­மைக்­காக இவ்­வ­ருடம் தெரிவு செய்­யப்­ப­டாத விண்­ணப்­ப­தா­ரி­களில் 155 பேர் அரச ஹஜ் குழு­வுக்கு மேன்­மு­றை­யீடு செய்­துள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்றுள்ள மேன்முறையீடுகள் பரிசீலனைக்குட் படுத்தப்பட்டு நியாயமான காரணங்கள் குறிப்பிடப்பட்டிருந்தால் சிலர் ஹஜ் கடமைக்குத் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.