நியூ­ஸி­லாந்து: இரு முக்­கி­யஸ்­தர்கள் இஸ்­லாத்தை தழு­வினர்

0 762

நியூ­ஸி­லாந்து பள்­ளி­வாசல் தாக்­குதல் சம்­ப­வத்தைத் தொடர்ந்து அந்­நாட்டின் இரு முக்­கி­யஸ்­தர்கள் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இஸ்­லாத்தை தழு­வி­யுள்­ளனர்.

நியூ­ஸி­லாந்தின் பிர­பல ரக்பி விளை­யாட்டு வீரரும் கடந்த 10 வரு­டங்­க­ளுக்கு முன்னர் இஸ்­லாத்தை தழு­வி­ய­வ­ரு­மான சொன்னி பில் வில்­லி­யம்ஸின் தாயார் லீ வில்­லியம் மற்றும் சொன்னி பில் வில்­லி­யம்ஸின் நெருங்­கிய நண்­பரும் ரக்பி வீர­ரு­மான ஒபா துங்­கா­பாஸி ஆகிய இரு­வ­ருமே இவ்­வாறு இஸ்­லாத்தை தழு­வி­யுள்­ள­தாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வி­ரு­வரும் இஸ்­லாத்தைத் தழு­விய செய்­தியை சிம்­பாப்வே நாட்டைச் சேர்ந்த இமாம் ஷெய்க் சாஜித் உமர் உட்­பட பல அறி­ஞர்கள் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் தமது வாழ்த்­துக்­க­ளையும் தெரி­வித்­துள்­ளனர்.

குறித்த தாக்­குதல் நடந்த இரு வாரங்­க­ளுக்குள் இவ்­வி­ரு­வரும் இஸ்­லாத்தை தழு­வி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

கிரைஸ்ட்சேர்ச் தாக்­கு­தலைத் தொடர்ந்து அங்கு விஜயம் செய்த சொன்னி பில் வில்­லியம்ஸ், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு ஆறுதல் கூறி­ய­துடன் காய­ம­டைந்­தோ­ரையும் வைத்­தி­ய­சா­லை­க­ளுக்குச் சென்று பார்­வை­யிட்டார். அவ­ருடன் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய அவரது நண்பர்  ஒபா துங்காபாஸியும் இணைந்து வைத்தியசாலைகளுக்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.