இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பலஸ்தீனர்கள் மரணம்

0 566

காஸா எல்­லையில் போராட்­டக்­கா­ரர்கள் மீது இஸ்­ரே­லிய படைகள் நடத்­திய துப்­பாக்கி சூட்டில்  4 பலஸ்­தீ­னி­யர்கள் கொல்­லப்­பட்­டனர்.

அமெ­ரிக்கா தனது இஸ்ரேல் தூத­ர­கத்­தினை கடந்த ஆண்டு ஜெரூசலேம் நக­ருக்கு இடம் மாற்­றி­யது.  இதற்கு பலஸ்­தீ­னி­யர்கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­தனர்.

தொடர்ந்து இஸ்­ரே­லுக்கு எதி­ராக வாரந்­தோறும் பலஸ்­தீ­னி­யர்கள் போராட்­டங்­களில் ஈடு­பட்டு வந்­தனர். எகிப்து தலை­மை­யி­லான பேச்­சு­வார்த்­தை­யினை தொடர்ந்து பதற்றம் தணிந்து போராட்­டக்­கா­ரர்கள் பலி­யா­வது தடுக்­கப்­பட்­டது.

இந்த போராட்­டத்தின் முதலாம் ஆண்டு தினத்­தினை முன்­னிட்டு பலஸ்­தீ­னி­யர்கள் ஆயி­ரக்­க­ணக்கில்  காஸா எல்லை பகு­தியில் ஒன்­று­கூ­டினர். ஏப்­ரலில் அங்கு தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளதால் பதற்­ற­மான எல்லைப் பகு­தியில் ஆயி­ரக்­க­ணக்­கான இஸ்­ரே­லிய படைகள் குவிக்­கப்­பட்­டன.

போராட்­டத்தில் ஈடு­பட்ட பலஸ்­தீ­னிய இளை­ஞர்­களில் சிலர் இஸ்ரேல் இரா­ணுவம் மீது கற்­களை வீசி தாக்­குதல் நடத்­தினர். இதனால் போராட்­டக்­கா­ரர்­களை கட்­டுப்­ப­டுத்த அவர்கள் மீது துப்­பாக்­கிச்­சூடு நடத்­தப்­பட்­டது. இதில் 4 பலஸ்தீனர்கள் பலியாகினர்.  மேலும், இந்த துப்பாக்கி சூட்டில் 316 பேர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.