வெஸ்மினிஸ்டர் பாராளுமன்ற முறையின் இறுதி அடையாளமே ரணில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 70 ஆவது பிறந்ததினம் மார்ச் 24 ஆம் திகதியாகும். அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது கொழும்பில் பிறந்த போதும் விக்­கி­ர­ம­சிங்க பரம்­பரை கதை­யா­னது காலி, பத்­தே­கம பிர­தே­சத்­தி­லேயே முதலில் எழு­தப்­ப­டு­கின்­றது. அக்­க­தை­யினை அறி­வ­தற்கு முன்னர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பிறப்பு தொடர்பில் கவனம் செலுத்­து­வது பொருத்­த­மாகும். அவர் 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி பிறந்தார். ரணில் விக்­கி­ர­ம­சிங்க என நாட்டு மக்­க­ளி­டத்தில் பிர­சித்தி பெற்­றி­ருப்­பினும் அவ­ரது பெயரில் இன்­னு­மொரு பகு­தியும் உள்­ளது. அவ­ரது முழுப்­பெயர் ரணில் ஸ்ரீயான் விக்­கி­ர­ம­சிங்க ஆகும். ரணில், குடும்­பத்தில் இரண்டாம் பிள்ளை ஆவார். மூத்த பிள்ளை ஷான் விக்­கி­ர­ம­சிங்க ஆவார். இலங்­கைக்கு தொலைக்­காட்சி அலை­வ­ரி­சை­யொன்றை அறி­முகம் செய்­தவர் ஷான்.

0 884
  • அருண சதரசிங்க

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 70 ஆவது பிறந்ததினம் மார்ச் 24 ஆம் திகதியாகும். அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது

கொழும்பில் பிறந்த போதும் விக்­கி­ர­ம­சிங்க பரம்­பரை கதை­யா­னது காலி, பத்­தே­கம பிர­தே­சத்­தி­லேயே முதலில் எழு­தப்­ப­டு­கின்­றது. அக்­க­தை­யினை அறி­வ­தற்கு முன்னர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பிறப்பு தொடர்பில் கவனம் செலுத்­து­வது பொருத்­த­மாகும். அவர் 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி பிறந்தார். ரணில் விக்­கி­ர­ம­சிங்க என நாட்டு மக்­க­ளி­டத்தில் பிர­சித்தி பெற்­றி­ருப்­பினும் அவ­ரது பெயரில் இன்­னு­மொரு பகு­தியும் உள்­ளது. அவ­ரது முழுப்­பெயர் ரணில் ஸ்ரீயான் விக்­கி­ர­ம­சிங்க ஆகும். ரணில், குடும்­பத்தில் இரண்டாம் பிள்ளை ஆவார். மூத்த பிள்ளை ஷான் விக்­கி­ர­ம­சிங்க ஆவார். இலங்­கைக்கு தொலைக்­காட்சி அலை­வ­ரி­சை­யொன்றை அறி­முகம் செய்­தவர் ஷான். தற்­போது அரச தொலைக்­காட்சி அலை­வ­ரி­சை­யாக உள்ள சுயா­தீன ரூப­வா­ஹினி சேவை­யினை அறி­மு­கப்­ப­டுத்­திய பெருமை அவரை சாரும். தற்­போது அவர் டி.என்.எல். அலை­வ­ரி­சையின் பிர­தா­னி­யாவார். விராஜ், சன்ன மற்றும் ஷானிகா ஆகியோர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் இளம் சகோ­தர, சகோ­த­ரி­க­ளாவர்.

ஜே.ஆர். ஜய­வர்­தன கட்­சியின் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­ட­வுடன் எஸ்மண்ட் விக்­கி­ர­ம­சிங்­க­வினை அர­சி­யலில் ஈடு­ப­டு­மாறு அழைப்பு விடுத்தார். எனினும் எஸ்மண்ட் வழ­மை­போ­லவே அந்த யோச­னை­யினை மறுத்தார்.

எனினும், ஜே.ஆர். எவ்­வா­றா­வது விக்­கி­ர­ம­சிங்க பரம்­ப­ரையில் ஒருவர் அர­சி­ய­லுக்கு வர­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருந்தார். இறு­தியில் ஜே.ஆர்., ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை தெரிவு செய்தார்.

ரணி­லுக்கு எழுத்­தினை போதித்­தவர் விஜ­ய­வர்­தன பரம்­ப­ரை­யி­ன­ரினால் உரு­வாக்­கப்­பட்ட விகா­ரை­யான ஹுணுப்­பிட்­டிய கங்­கா­ரா­மய பிர­தான தேரர் தேவுந்­தர வாசிஸ்­ஸர ஆவார். தற்­போ­து­கூட ரணில் விக்­கி­ர­ம­சிங்க கங்­கா­ரா­மய விகா­ரை­யி­னதும், களனி ரஜ­மகா விகா­ரை­யி­னதும் பரித்­தி­யாக சபையின் தலை­வ­ராவார்.

ஏனெனில் களனி விகா­ரையும், கங்­கா­ரா­மய விகா­ரையும் விஜ­ய­வர்­தன குடும்­பத்­திற்கு மிகவும் நெருக்­க­மான விகா­ரை­க­ளாக காணப்­பட்­ட­மை­யாகும். ரணில் பௌத்த மதத்­தினை கற்றுக் கொண்­டது பம்­ப­லப்­பிட்­டிய வஜி­ரா­ரா­ம­யி­லாகும். பௌத்த மதத்­தினை மாத்­தி­ர­மல்­லாமல் ரணில் சிறு­ப­ரா­யத்­தி­லி­ருந்தே நடனம், சங்­கீ­தத்­தி­னையும் கற்றுக் கொண்டார். அவரின் நடன ஆசி­ரியர் ஸ்ரீ ஜயனா ஆவார். ரணி­லுடன் ஜய­னாவின் நடன வகுப்பில் கற்ற அவரின் சம­கால நண்­பி­யாக சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க திகழ்ந்தார். அக்­கா­லத்தில் அவர் நட­னத்­துக்கு  மாத்­தி­ர­மல்­லாது பியானோ வாசிப்­ப­தற்கும் திற­மை­யா­ன­வ­ராகக் காணப்­பட்டார். தமது பரம்­ப­ரையில் அனை­வ­ரையும் போல இவரும் கொழும்பு ரோயல் கல்­லூ­ரியில் தமது கல்­வி­யினை தொடர்ந்தார்.

ரோயல் கல்­லூ­ரியில் ஆரம்பக் கல்­வியை நிறைவு செய்த அவர், கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தில் தனது உயர்­கல்­வியைப் பூர்த்தி செய்­தி­ருந்தார்.

1977ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்­சி­யாக இந்­நாட்டின் நாடா­ளு­மன்­றத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஒரே நாடா­ளு­மன்ற உறுப்­பினர் என்ற பெரு­மையும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு மட்­டுமே உரி­ய­தாகும்.

அத்­துடன் நாடா­ளு­மன்ற உறுப்­பினர், அமைச்சர், சபை முதல்வர், எதிர்க்­கட்சித் தலைவர், பிர­தமர் என்று அர­சி­யலில் பல்­வேறு பத­வி­களை வகித்து அர­சி­யலில் இனி இல்­லை­யென்ற அனு­ப­வத்தைப் பெற்றுக் கொண்­டுள்ளார்.

இலங்­கையில் ஐந்து தட­வைகள் பிர­த­ம­ராக பதவி வகித்த பெரு­மையும் அவ­ருக்கே உரி­ய­தாகும்.

இலங்­கையின் மிகச் சிறந்த அர­சியல் தலை­வ­ராக, துறை தேர்ந்த ராஜ­தந்­தி­ரி­யாக, உலகின் கீர்த்­தி­மிகு ஜன­நா­யக அர­சி­யல்­வா­தி­களில் ஒரு­வ­ரா­கவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சர்­வ­தே­சத்தின் மத்­தியில் புகழ்­பெற்று விளங்­கு­கிறார்.

தனது பல்­க­லைக்­க­ழக நாட்­க­ளி­லி­ருந்தே ஐக்­கிய தேசியக் கட்­சியின் இளைஞர் முன்­ன­ணியில் பணி­யாற்றி வந்த அவர்,  1975 ஆம் ஆண்டு பிய­கம தொகு­தியின் ஐக்­கிய தேசியக் கட்சி அமைப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார்.

ரணில் முதலில் களனி தொகு­திக்கே அமைப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார். களனி மற்றும் தொம்பே ஆகிய தொகு­திகள் இரண்டும் ஒன்­றாக சேர்த்து பிய­கம தொகுதி உரு­வாக்­கப்­பட்ட போது, ஜே.ஆர். ரணி­லுக்கு பிய­கம தொகு­தி­யினை ஒப்­ப­டைத்தார். அது 1976 ஆம் ஆண்­டி­லாகும். 1977 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்ற தேர்­தலில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிய­கம தொகு­தியில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் டேவிட் ஹபன்­க­மவை தோல்­வி­ய­டையச் செய்து வெற்­றி­பெற்றார்.

அந்த தேர்­தலில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க 22,045 வாக்­கு­களை பெற்றார். ஜே.ஆர். ஜய­வர்­தன தனது முத­லா­வது அமைச்­ச­ர­வை­யினை நிய­மிக்­கும்­போது தனது மரு­ம­கனை மறந்­து­வி­ட­வில்லை.

அந்தக் கால­கட்­டத்தில் வயதில் மிகவும் குறைந்த அர­சி­யல்­வா­தி­யாக முன்னாள் ஜனா­தி­பதி ஜே. ஆர். ஜய­வர்­த­னவின் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தில் வெளி­நாட்டு அலு­வல்கள் பிரதி அமைச்­ச­ராகப் பதவி வகித்து வந்தார். அவ­ரது அசா­தா­ர­ண­மான மதி­நுட்பம் மற்றும் பணி­யாற்­று­வ­தற்­கான தனித்­து­வ­மிக்க மன ஆற்றல் ஆகி­ய­வற்றைக் கருத்­திற்­கொண்டு பின்னர், அவர் இளைஞர் விவ­கார மற்றும் வேலை வாய்ப்பு அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்டார்.

அதன் பின்னர் கல்வி அமைச்­ச­ரா­கவும் பணி­யாற்றி வந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அர­சியல் விவ­கா­ரங்­களைப் பற்­றிய ஆழ்ந்த அறிவு பெற்­றவர் என்ற வகையில், கடந்த 1989 ஆம் ஆண்டில் ஜனா­தி­பதி பிரே­ம­தாச தலை­மை­யி­லான அர­சாங்­கத்தில் சபை முதல்­வ­ராகத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார். இவை மட்­டு­மன்றி, அவர் கைத்­தொழில் விஞ்­ஞான மற்றும் தொழி­நுட்ப அமைச்­ச­ரா­கவும் பணி­யாற்­றி­யமை இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த 1977 தொடக்கம் 1994 வரை­யி­லான 17 வரு­ட­காலப் பகு­தியில் ஐக்­கிய தேசியக் கட்சி தொடர்நதும் ஆட்­சி­பீ­டத்தில் அமர்ந்­தி­ருந்த வேளையில் ஆளு­மை­யுள்ள இளம் அர­சி­யல்­வா­தி­யென்ற வகையில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாட்டின் அபி­வி­ருத்­தியில் காத்­தி­ர­மான தீர்க்­க­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

அர­சியல் வாழ்வில் பெற்றுக் கொண்ட அனைத்துப் பத­வி­களும், அமைச்­சுக்­களும் இளம் வய­தி­லேயே உரித்­தாக்கிக் கொள்ளும் அள­விற்கு அதிஷ்டம் பெற்ற ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு தம் துணை­வியார் கிடைத்­ததும் ஓர் அதிஷ்­டமே. ரணில் திரு­மண பந்­தத்தில் இணைந்து கொள்­வது அவர் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருந்த காலப்­ப­கு­தி­யி­லாகும். ரணிலின் மனை­வி­யான மைத்­திரி விக்­கி­ர­ம­சிங்க களனி பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஆங்­கிலப் பிரிவில் பேரா­சி­ரி­ய­ராவார்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க 70 ஆவது பிறந்த தினம் மார்ச் மாதம் 24ஆம் திகதி கொண்­டா­டப்­ப­டு­கின்­றது. 1994 இலி­ருந்து ஒரு தேர்­த­லினை தவிர (2001) கடை­சி­யாக நடந்த தேர்­தலில் வெற்றி பெறும் வரையில் நடந்த ஏனைய அனைத்து தேர்­தல்­க­ளிலும் அவர் தலைமை தாங்­கிய ஐக்­கிய தேசிய கட்சி தோல்­வி­யினைத் தழு­வி­யது. இந்த நடை­மு­றை­யா­னது தோல்­வி­யிலும் அய­ராது தொடர்ந்து முன்­னோக்கிச் சென்ற வின்ஸ்டன் சேர்ச்சில் பின்­பற்­றிய நடை­மு­றை­யாகும். ரணில் விக்­கி­ர­ம­சிங்க பெற்றுக் கொண்ட வெற்­றி­யா­னது, இரு தசாப்த காலம் அவர் மேற்­கொண்ட உழைப்பின் பிர­தி­ப­ல­னா­லேயே அவ­ருக்கு கிடைத்­தது. அக்­கா­லப்­ப­கு­தியில் அவர் வளை­வுகள் நிறைந்த பாதை­யி­லேயே பய­ணித்தார். இறு­தியில் அனைத்து சவால்­க­ளையும் கடந்து இலங்­கையின் பிர­த­ம­ராக நான்­கா­வது முறை­யா­கவும் தெரிவு செய்­யப்­பட்டார்.

இதற்கு முன்பு அந்த சாத­னை­யினைப் படைத்­தி­ருந்­தவர் டட்லி சேனா­நா­யக்க . டட்லி சேனா­நா­யக்­க­வினை போன்று ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அர­சியல் உல­கத்தில் கன­வா­னா­கவே அழைக்­கப்­ப­டு­கின்றார். வெஸ்­மி­னிஸ்டர் பாரா­ளு­மன்ற முறையின் இலங்­கையின் இறுதி அடை­யா­ள­மாக ரணில் விக்­கி­ர­ம­சிங்க நோக்­கப்­ப­டு­கின்றார்.

பாட­சாலைக் கல்வி மற்றும் கல்வி நிரு­வாக சேவை ஆகி­ய­வற்றின் விசேட பண்­பு­மிக்க முன்­னேற்­றத்தை இலக்­காகக் கொண்டு அவர் 1980களில் ஆரம்­பித்­தி­ருந்த தீவிர மாற்றுத் தன்மை கொண்ட கல்­விசார் சீர்­தி­ருத்­தங்­களை நாட்டில் அறி­முகம் செய்­துள்ளார்.

இளைஞர் கழ­கங்கள் மற்றும் இளைஞர் முகாம்கள் ஊடாக ஆக்­கத்­திறன், ஊக்­கு­விப்­புத்­தன்மை மற்றும் திறன் அபி­வி­ருத்தி கொண்ட வேலைத் திட்­டங்­க­ளுடன் இலங்­கையில் சக்­தி­ப­டைத்த இளைஞர் பரம்­ப­ரை­யொன்றை உரு­வாக்கும் முயற்­சி­களை ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­னெ­டுத்தார்.

அதன் பின்னர், கைத்­தொழில், விஞ்­ஞானம் மற்றும் தொழில்­நுட்ப அமைச்சர் என்ற வகையில் உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி மற்றும் கைத்­தொழில் பேட்­டை­களை நிறு­வுதல் ஆகி­யவை ஊடாக கிரா­மப்­பு­றங்­களில் கைத்­தொழில் ஊக்­கு­விப்­பு­களில் கூடிய கவனம் செலுத்தும் ஒரு­வ­ராக அவர் செயற்­பட்டார்.

பிய­கம தேர்தல் தொகு­திக்­கான பாரா­ளு­மன்றப் பிர­தி­நிதி என்ற வகையில், அவர் தனது தொகு­திக்கு பல்­வேறு அபி­வி­ருத்திப் பணி­களை மேற்­கொண்டு தனக்கு  வாக்­க­ளித்த மக்­களின் வர­வேற்பை தொடர்ந்தும் தக்­க­வைத்து வரு­கின்றார்.

அத்­துடன் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான இளைஞர் யுவ­தி­க­ளுக்கு கணி­ச­மான அள­வி­லான கைத்­தொழில் நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்­புக்­களை வழங்கும் வகையில், அவர் பிய­கம சுதந்­திர வர்த்­தக வல­யத்தை உரு­வாக்­கி­யமை தமக்கு வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு செய்த  பெரும் சேவை­யாக இன்றும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.

டட்லி சேன­நா­யக்க மற்றும் ஸ்ரீமாவோ பண்­டா­ர­ந­ாயக்க ஆகியோர் மூன்று தட­வைகள் மாத்­தி­ரமே பிர­த­மர்­க­ளாக இருந்­துள்ள அதே­வேளை, ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாட்டின் வர­லாற்றில் ஐந்து தட­வைகள் (மே 1993, டிசம்பர் 2001, ஜன­வரி 2015 மற்றும் ஓகஸ்ட் 2015, 2018 டிசம்பர்) பிர­த­ம­ராகப் பத­வி­யேற்­றவர் என்ற பெரு­மையைத் தன­தாக்கிக் கொண்­டுள்ளார்.

மேலும், மூன்று வேறு­பட்ட நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­களின் கீழும் தனது பணியைச் செவ்­வனே செய்­துள்ள அர­சியல் அனு­ப­வ­சாலி என்­பதும் இங்கு குறிப்­பி­டத்­தக்­கது. முத­லா­வ­தாக டி. பீ. விஜே­துங்க, அடுத்து சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தற்­போது மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோ­ருடன் கூட்டுப் பொறுப்­புடன் செயற்­பட்டு வரு­கின்றார்.

ரணில் விக்­கி­ர­ம­சி­ங்க பிர­த­ம­ராகப் பதவி வகித்த ஒவ்­வொரு கால­கட்­டத்­திலும் நாட்­டிற்கு மகத்­தான சேவை­யொன்­றையே வழங்­கி­யுள்ளார்.

மேலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மை­யி­லான நல்­லாட்சி (கூட்­டாட்சி) அர­சாங்­கத்­திலும் முக்­கிய பல அம்­சங்­களில் விசே­ட­மாக தங்­களின் தேர்தல் கால வாக்­கு­று­தி­க­ளுக்­கி­ணங்க அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்த விட­யத்தில் அவர் பிர­தான வகி­பா­க­மொன்றைக் கொண்­டுள்ளார். அத்­துடன் மொத்­தத்தில் அவர் நாட்டின் பொரு­ளா­தாரம், கல்வி, வெளி­வி­வ­காரம் மற்றும் வர்த்­தகம் ஆகி­ய­வற்றின் வளர்ச்­சிக்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் துணிச்­ச­லுடன் செய்து வந்தார்.

இன்று ஜன­நா­யக ஆட்­சி­யினை நாட்டில் நிலை­நாட்­டிய பெருமை ரணில் விக்­கி­ர­ம­சிங்கவையே சாரும். கடந்த காலங்­களில் நாட்டில் ஏற்­பட்ட அசா­தா­ரண அர­சியல் சூழ்­நி­லையில் ஜன­நா­யக வெற்­றிக்­காக தன்­னையே அவர் அர்ப்­ப­ணித்தார். பாரா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்­தினைப் பாது­காப்­ப­தற்­காக அவர் மேற்­கொண்ட நட­வ­டிக்­கைகள் என்றும் பேசத்­தக்­கது. குறித்த நட­வ­டிக்­கை­களின் விளை­வினால் அவர் ஜன­நா­ய­கத்தின் யுக­பு­ருஷர் என்றும் போற்­றப்­ப­டு­கின்றார்.

இந்த நாட்டு வர­லாற்றில் சாத்­தி­யப்­ப­டாத ஓர் அர­சியல் வர­லாற்றை ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ராக இருந்து சாதித்து வரு­கின்றார். நாட்­டி­லுள்ள இரு வேறு­பட்ட முர­ணான கொள்­கை­க­ளை­யு­டைய இரு பெரும் கட்­சி­களை ஒன்­றாக ஓர­ணியில் இணைத்து அர­சாங்கம் அமைந்த ஆளு­மைக்கு, ரணில் விக்கிரமசிங்கவே சொந்தக்காரன் என்றால் மிகையாகாது.

பல முரண்பட்ட சிந்தனைகளை அங்கீகரித்து, அனுசரித்து நடக்கும் அவரது அரசியல் போக்கு, எதிர்த்தரப்பு சிந்தனை கொண்ட அரசியல்வாதிகளையும் கவர்ந்துள்ளமையை நடைமுறை அரசியல் நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

அத்துடன், இவரது 40 வருட அரசியல் வாழ்க்கையில் இந்நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகத்துடன் தொடர்ந்தும் நல்லுறவைப் பேணி வந்துள்ளமையை வரலாற்றுத் தகவல்கள் எடுத்துக் காட்டுகின்றன.

சிறுபான்மை மக்களின் இருப்பு, அவர்களது உரிமைகள், அவர்களின் அபிலாஷைகள் என்பவற்றுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்த ஒரு சிறந்த அரசியல்வாதியாக அவர் திகழ்கின்றார்.

நாட்டில் இனவாதிகளின் நடவடிக்கைகள் உக்கிரமடைந்த போதெல்லாம், அவற்றை மட்டுப்படுத்தி மதங்களுக்கிடையிலான நல்லுணர்வுக்கு எதிரான செயற்பாடுகளை தடுப்பது தொடர்பில், அவசியமாயின் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவும், பாராளுமன்றத்தில் அதற்காக குரல் எழுப்பவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எப்போதும் பின் நின்றதில்லையென்றே கூறவேண்டும்.

ஏதேனும் ஒரு மதத்திற்கு அல்லது இனத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக, சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியான ஒரு நிலைப்பாட்டில் நல்லாட்சி அரசாங்கத்திலும்கூட இவர் செயற்பட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.