நியூசிலாந்து பள்ளிவாசல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் மனதை உருக்கும் கதைகள்

0 904
  • ஜே. சாவேஜ்

கடந்த 15 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை, நியூ­சி­லாந்தில் கிரைஸ்ட்சேர்ச் நக­ரத்­தி­லுள்ள இரு­வேறு மசூ­தி­களில் தொழு­கையில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்­த­வர்கள் மீது துப்­பாக்­கி­தாரி ஒருவர் நடத்­திய தாக்­கு­தலில் 50 பேர் உயி­ரி­ழந்­தனர்.

அவர்­களில் பெரும்­பான்­மை­யானோர், நியூ­சி­லாந்தின் பாது­காப்பு, தரம்­வாய்ந்த கல்வி, வேலை­வாய்ப்பு போன்­ற­வற்றை எண்ணி உலகின் பல்­வேறு நாடு­க­ளி­லி­ருந்து, பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக குடி­பெ­யர்ந்­த­வர்கள்.

“என்­னு­டைய குழந்­தை­களை வளர்ப்­ப­தற்கு ஒரு மிகச் சிறந்த நாடு கிடைத்­துள்­ள­தாக நான் நினைத்­தி­ருந்தேன்” என்று கூறு­கிறார் கிரைஸ்ட்சர்ச் தாக்­கு­த­லி­லி­ருந்து தப்­பித்­த­வர்­களில் ஒரு­வ­ரான மசா­ருதீன் சையத் அஹ்மத்.

இந்­நி­லையில், கிரைஸ்ட்சேர்ச் தாக்­கு­தலில் உயி­ரி­ழந்த 50 பேரில் சில­ரது மனதை உருக்கும் வாழ்க்கை குறிப்­பு­களை காண்போம்.

“தப்பி பிழைத்து வந்து மர­ணித்­தனர்”

44 வய­தான காலீத் முஸ்­தபா மற்றும் 16 வய­தான அவ­ரது மகன் ஆகியோர் சிரி­யாவின் உள்­நாட்டு போரி­லி­ருந்து தப்பி பிழைத்­த­வர்கள். இவர்­க­ளது குடும்­பத்­தினர் ஏழு பேரும் முதலில் சிரி­யா­வி­லி­ருந்து ஜோர்­தா­னுக்கு சென்ற நிலையில், பின்பு நியூ­சி­லாந்தின் அக­திகள் குடி­யேற்றத் திட்­டத்­தின்கீழ் கிரைஸ்ட்சேர்ச் நக­ரத்­துக்கு சுமார் ஓராண்­டுக்கு முன்னர் வந்­தனர்.

ஏனை­ய­வர்­களைப் போன்றே நியூ­சி­லாந்தை பாது­காப்­பான நாடாக நினைத்­துக்­கொண்­டி­ருந்த இவர்கள் இரு­வரும், கடந்த வெள்­ளிக்­கி­ழமை கிரைஸ்ட்சேர்ச் நக­ரத்­தி­லுள்ள அந்நூர் பள்ளிவாசலில் நடத்­தப்­பட்ட துப்­பாக்­கிச்­சூட்டில் உயி­ரி­ழந்­தனர்.

1990ஆம் ஆண்டு சிரி­யா­வி­லி­ருந்து நியூ­சி­லாந்­துக்கு குடி­யே­றி­ய­வ­ரான அபு அலி என்­பவர், காலிதின் குடும்­பத்­தி­னரை தான் ஒரு­முறை சந்­தித்­துள்­ள­தா­கவும், அவர்கள் நியூ­சி­லாந்தில் இருப்­பதை எண்ணி மகிழ்­வுடன் வாழ்ந்து வந்­த­தாக கூறு­கிறார்.

“மர­ணத்­தி­லி­ருந்து தப்பி பிழைத்த அவர்கள், இங்கு வந்து மர­ணித்­தனர்,” என்று அவர் பிபி­சி­யிடம் கூறினார்.

விரைவில் முடி­வுக்கு வந்த பொற்­காலம்

கிரைஸ்ட்­சேர்ச்சின் இரு­வேறு பள்ளிவாசல்களில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­த­வர்­களில் 24 வய­தான அன்சி அலி­பா­வாவின் வாழ்க்கை பயணம் மிகவும் வித்­தி­யா­ச­மா­னது.

தென்­னிந்­திய மாநி­ல­மான கேர­ளாவை சேர்ந்த அன்சி நடுத்­தர குடும்­பத்தை சேர்ந்­தவர். சவூதி அரே­பி­யாவில் பணி­பு­ரிந்­து­கொண்­டி­ருந்த தந்தை உயி­ரி­ழக்க, தனது 18 வய­தி­லேயே குடும்­பத்தை சுமக்க வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்டார் அன்சி.

தங்­க­ளது முதல் சந்­திப்­பி­லேயே அன்சி ‘அரவணைப்பு மிக்க குணத்தை” கொண்டிருப்பதை எண்ணி தான் அசந்­து­போய்­விட்­ட­தாக கூறு­கிறார் அவ­ரது கணவர் அப்துல் நசீர்.

வெளி­நாட்டில் உயர்­கல்வி படிக்க வேண்டும், பல்­வேறு நாடு­க­ளுக்கு பய­ணிக்க வேண்­டு­மென்ற எண்­ணத்தை கொண்ட இவர்கள், கடந்த ஓராண்­டுக்கு முன்­புதான் நியூ­சி­லாந்­துக்கு சென்­றனர்.

கிரைஸ்ட்­சேர்ச்­சி­லுள்ள ஒரு பல்­க­லைக்­க­ழ­கத்தில் படித்­துக்­கொண்டே, பணி­பு­ரிந்த அன்­சியும், அவ­ரது கண­வரும் சம்­பவ தினத்­தன்று அந்நூர் மசூ­திக்கு சென்­றனர். துப்­பாக்கி சத்தம் கேட்­டதும் அங்­கி­ருந்து ஓட்டம் பிடித்த அன்சி, அரு­கி­லுள்ள வீட்­டிற்குள் வேலியை தாண்டி குதித்தார். அன்­சியை தேடி சென்ற அப்துல், அவர் தெரு­வோ­ரத்தில் அசை­வற்று கிடைப்­பதைக் கண்டார். அப்­போது, மசூ­தி­யி­லி­ருந்து வெளியே தப்­பித்து வந்த சிலர், அன்சி உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக தெரி­வித்­த­தாக அப்துல் கூறு­கிறார். தன் மனை­வியை இழந்­ததை தன்னால் ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை என்­கிறார் அப்துல்.

‘என் அன்­புக்­கு­ரிய கண­வரை இழந்­து­விட்டேன்’

கடந்த புதன்­கி­ழ­மை­யன்று இந்த தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­த­வர்­களில் ஒரு­வ­ரான மொஹம்­மது இம்ரான் கானுக்கு அவ­ருக்கு சொந்­த­மான உண­வ­கத்தின் முன்பு பலர் அஞ்­சலி செலுத்­தினர்.

இந்­தி­யாவை சேர்ந்த இவர், கிரைஸ்ட்சேர்ச் நக­ரத்தில் லின்வுட் பள்ளிவாலில் இரண்­டா­வ­தாக நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் உயி­ரி­ழந்தார்.

“என்­னு­டைய கண­வ­ரது மறை­வுக்கு இரங்கல் தெரி­வித்து, எனக்கு தெரிந்­த­வர்கள், தெரி­யா­த­வர்கள் என எண்­ணி­ல­டங்­கானோர் குறுஞ்­செய்தி அனுப்பி வரு­கின்­றனர். இது அவர் எவ்­வ­ளவு அன்­புக்­கு­ரி­ய­வ­ராக வாழ்ந்தார் என்­பதைக் காட்­டு­கி­றது” என்று அவ­ரது மனைவி டிரேஸி கூறு­கிறார்.

“என்­னு­டைய கண­வரை அனை­வரும் நேசித்­தார்கள் என்­பது தெரியும். ஆனால், அதன் அளவு இவ்­வ­ளவு இருக்­கு­மென்று நான் எதிர்­பார்க்­க­வில்லை” என்று அவர் மேலும் கூறு­கிறார்.

தன்­னு­டைய பதின்ம வயது மக­னையும், இரு­வீட்­டாரின் உற­வி­னர்­க­ளையும் பார்த்­துக்­கொள்ள வேண்­டிய பொறுப்பை ஏற்­றுக்­கொண்­டி­ருப்­ப­தாக டிரேஸி கூறு­கிறார்.

‘அக­தி­க­ளுக்கு உதவ நினைத்தார்’

நியூ­சி­லாந்து தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­த­வர்­களில், அந்­நாட்டை சேர்ந்த 64 வய­தான லிண்டா ஆம்ஸ்ட்­ராங்கும் ஒருவர்.

“தனது இள­மைக்­கா­லத்தில் நியூ­சி­லாந்தின் ஆக்­லாந்து நக­ரத்­துக்கு அருகே உள்ள தீவு ஒன்றில், குளி­ய­லறை கூட இல்­லாத இடத்தில் வாழ்ந்த லிண்டா, பிறகு நக­ரத்­துக்கு குடி­பெ­யர்ந்து மிகப் பெரிய வீடு­களில் வாழ்ந்­த­துடன், மோட்டார் சைக்­கி­ளி­லேயே பல்­வேறு இடங்­க­ளுக்கு பயணம் மேற்­கொண்டார். சிறிது காலம் ஜெர்­ம­னி­யிலும் வாழ்ந்தார்” என்று கூறு­கிறார் அவ­ரது மரு­ம­க­னான கைரோன் கோசி.

எப்­போதும் உத்­வே­கத்­துடன் காணப்­படும் லிண்டா, 2011ஆம் ஆண்டு இஸ்­லாமில் ஆர்வம் கொண்­ட­துடன், ஆக்­லாந்­தி­லுள்ள முஸ்­லிம்கள் அக­திகள் முகாம் ஒன்றில் சேவை செய்தார்.  ஒரு­கட்­டத்தில், இஸ்லாம் குறித்து பல்­வேறு விட­யங்­களை தெரிந்­து­கொண்ட லிண்டா என்­னிடம்,”இவர்கள் (இஸ்­லா­மி­யர்கள்) மிகவும் அரு­மை­யா­ன­வர்­க­ளாக உள்­ளனர். நான் இந்த மதத்­துடன் மிகவும் ஒன்­றி­யதை போல உண­ரு­கிறேன்” என்று கூறினார்.

“சம்­பவ தினத்­தன்று பள்ளிவாசலின் பின்­ப­கு­தியில் அமர்ந்­தி­ருந்த லிண்டா, துப்­பாக்கி சத்­தத்தை கேட்டு, கூட்­டத்­தி­ன­ருக்கு முன்பு வந்து, சுடப்­பட்டு இறந்தார்” என்று அவர் மேலும் கூறினார்.

கடு­மை­யாக உழைத்த வங்­க­ தே­சத்­தவர்

கிரைஸ்ட்சேர்ச் நக­ரத்தில் நடத்­தப்­பட்ட மோச­மான தாக்­கு­தலை இந்த நக­ரத்தில் 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 185 பேர் உயிரிழந்த சம்பவத்தோடு பலர் ஒப்பிடுகின்றனர்.

அந்த நிலநடுக்கத்திற்கு பிறகு, நகரத்தை மீட்டெடுப்பதற்கான பணியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவ்வாறு நியூசிலாந்துக்கு வந்தவர்களில் வங்கதேசத்தை சேர்ந்த ஜக்கரியா புய்யாவும் ஒருவர். கிரைஸ்ட் சேர்ச்சில் வெல்டராக பணியாற்றிய ஜக்கரியா, சம்பவ தினத்தன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக விடுமுறை எடுத்திருந்தார்.

நண்பர்களுடன் அந்நூர் பள்ளிவாலுக்கு சென்ற ஜக்கரியாவுக்கு கிரைஸ்ட் சேர்ச்சில் குடும்பத்தினர் இல்லை என்பதால், அவர் இந்த சம்பவத்தில் இறந்ததை உறுதிப் படுத்துவது சிரமமாக இருந்தது.

பலரது உயிரை காப்­பாற்­றிய மருத்­துவர்

கிரைஸ்ட் சேர்ச் நக­ரத்தை சேர்ந்த பல­ருக்கும் 57 வய­தான இத­யநோய் நிபு­ண­ரான அம்ஜத் ஹமீதை தெரிந்­தி­ருக்­கி­றது.

“மருத்­துவர் அம்­ஜத்தை நான் சந்­தித்­த­போது, என் உடல்­நி­லையை கருதி பணி ஓய்வு பெறு­மாறு வலி­யு­றுத்­தினார். என் போன்ற பல­ரது உயிரைக் காப்­பாற்­றிய அவர் இந்த துப்­பாக்கிச் சூட்டில் உயி­ரி­ழந்­து­விட்டார் என்­பதை என்னால் ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை” என்று கூறு­கிறார் நியூ­சி­லாந்தை சேர்ந்த பீட்டர் ஹிக்கின்ஸ்.

பல தசாப்த ஆண்­டு­க­ளுக்கு முன்­ன­தாக பாலத்­தீ­னத்­தி­லி­ருந்து நியூ­சி­லாந்தில் குடி­யே­றி­ய­வரே மருத்­துவர் அம்ஜத் ஹமீது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.