அரச ஹஜ் குழு உறுப்பினர்களை அமைச்சர் நியமிப்பது ஏற்கத்தக்கதல்ல

சட்ட வரைபை திருத்த வலியுறுத்து

0 939

அரச ஹஜ் குழு­வுக்கு நிய­மிக்­கப்­படும் 9 உறுப்­பி­னர்­களில் 7 பேர் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­ச­ரினால் நிய­மிக்­கப்­ப­டு­வார்கள் என்ற ஹஜ் சட்ட வரைபு திருத்­தி­ய­மைக்­கப்­ப­ட­வேண்டும். ஹஜ் குழு­வுக்கு 7 பேரே நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும். 7 பேரில் இரு­வரே அமைச்­ச­ரினால் நிய­மிக்­கப்­பட வேண்டும் என்ற திருத்தம் நேற்று முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

ஹஜ் சட்ட வரைவு தொடர்பில் ஆராயும் கலந்­து­ரை­யாடல் நேற்று மாலை பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் இடம்­பெற்­றது.

அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தலை­மையில் நடை­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­டலில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கலந்து கொண்­டனர்.

கலந்­து­ரை­யா­டலின் போது மேற்­கு­றிப்­பிட்ட திருத்தம் ஹஜ் சட்­ட­வ­ரைபில் உள்­ள­டக்­கப்­பட வேண்­டு­மென சமூக வலு­வூட்டல் இரா­ஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி இத்­தி­ருத்­தத்தை முன்­வைத்தார்.

இக்­க­லந்­து­ரை­யா­டலின் போது இரா­ஜாங்க அமைச்சர் அமீர் அலி கருத்து தெரி­விக்­கையில்,

ஹஜ் குழு­வுக்கு தெரிவு செய்­யப்­படும் 9 பேரில் 7 பேர் அமைச்­ச­ரினால் நிய­மிக்­கப்­ப­டு­வ­தா­னது அர­சியல் மயப்­ப­டுத்­த­லாகும். அதனால் ஹஜ் குழு­வுக்கு 7 பேரே நிய­மிக்­கப்­பட வேண்டும். இவர்­களில் இரு­வரே அமைச்­ச­ரினால் நிய­மிக்­கப்­பட வேண்டும். ஏனைய ஐவரும் உலமா சபையின் தலைவர், வக்பு சபையின் தலைவர், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர், சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அல்­லது நிர்­வாக சேவை அதி­காரி ஒருவர் மற்றும் அமைச்சின் செய­லா­ள­ராக அமைய வேண்டும்.

எதிர்­கா­லத்தில் முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்கு மாற்று மத அமைச்சர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்டால் ஹஜ் குழு நிய­ம­னத்தில் பாத­கங்கள் ஏற்­படும் என்­பதைக் கருத்திற் கொண்டே இந்த திருத்தம் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்றார்.

நேற்­றைய கூட்­டத்தில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரி­வித்த ஆலோ­ச­னை­களை உள்­ள­டக்கி சட்ட வரைபைத் தயா­ரித்து மீண்டும் சிவில் சமூக பிர­தி­நி­திகள், புத்­தி­ஜீ­விகள் ஆகி­யோ­ருடன் எதிர்­வரும் 26 ஆம் திக­திக்கு மேலு­மொரு கலந்­து­ரை­யா­டலை நடாத்தி ஹஜ் சட்ட வரை­பினைப் பூர்த்தி செய்­வ­தாகத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

நேற்­றைய கலந்­து­ரை­யா­டலில் இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான எம்.எஸ்.எஸ். அமீர்­அலி, அலி­சாஹிர் மௌலானா, பைசல் காசிம், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஏ.எச்.எம்.பௌஸி, முஜிபுர் ரஹ்மான், நஸீர், மன்சூர் மற்றும் கல்வி அமைச்சின் கண்­கா­ணிப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் எம்.ஆர்.எம்.மலிக், முஸ்லிம் சமய விவகார அமைச்சின் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப், அமைச்சின் செயலாளர் திருமதி.எம்.எஸ்.மொஹமட், அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி.சியாத் உட்பட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.