இஸ்­லா­மோ போபியா

0 1,259
  • எம்.எம்.ஏ ஸமட்

உல­க­ளவில் இஸ்லாம் அல்­லது முஸ்­லிம்கள் தொடர்­பி­லான அச்சம், வெறுப்பு, பார­பட்சம் அதி­க­ரித்து வரு­வதை உல­க­ளா­விய ரீதியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற நட­வ­டிக்­கைகள்  பறை­சாற்றிக் கொண்­டி­ருக்­கின்­றன.

இஸ்­லா­மிய பெயர் தாங்­கி­ய­வர்­க­ளினால் உல­க­ளவில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற வெறுக்­கத்­தக்க நட­வ­டிக்­கைகள் மற்றும் இஸ்­லாத்­தி­னதும், முஸ்­லிம்­க­ளி­னதும் வளர்ச்சி மீதான காழ்ப்­பு­ணர்ச்சி என்­பன இந்த ‘இஸ்­லா­மோ போபியா’ இஸ்லாம் மற்றும் முஸ்­லிம்கள் தொடர்­பாக பிற சமூ­கங்­களின் மத்­தியில் உரு­வா­கி­யி­ருக்­கின்ற சமூக அச்­சத்­திற்குக் கார­ண­மாக அமை­வ­தாகக் கரு­தப்­ப­டு­கி­றது.

இஸ்லாம் தொடர்­பான சமூக அச்சம் (இஸ்­லா­மோ போபியா) என்ற புதிய சொற்­பி­ர­யோகம் 20ஆம் நூற்­றாண்டின் ஆரம்­பத்தில் உரு­வா­னது. 1970களில் உரு­வான இந்தப் புதிய சொற்­பதம் 1980 மற்றும் 1990களில் முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக மாறி­யது.  ஏக காலத்தில்  பிரித்­தா­னி­யாவில் உரு­வாக்­கப்­பட்ட ‘ரெனிமேட் ட்ரஸ்ட் கொமிஷன்’ அறிக்­கையின் மூலம் இஸ்­லா­மோ போபியா என்ற சொல் பிர­சித்­தி­பெற்­ற­துடன் அக­ரா­தி­க­ளிலும் இடம்­பெற்­றது.

அழகுத் தேச­மான இலங்­கையில் 2018 மார்ச்சில் அம்­பா­றை­யிலும், கண்­டி­யிலும், திக­ன­யிலும் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் முதல் அமைதித் தேச­மான நியூ­ஸி­லாந்தின் கிறிஸ்சர்ச் நக­ரி­லுள்ள இரு பள்­ளி­வா­சல்­களில் ஜும்ஆ தொழு­கைக்­காக வந்­தி­ருந்­த அப்­பாவி முஸ்­லிம்கள் மீது கடந்த வெள்­ளிக்­கி­ழமை அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த பிரெண்டன் ஹரிசன் டரன்ட் என்ற வல­து­சாரி தீவி­ர­வாதி மேற்­கொண்ட தாக்­குதல் வரை முஸ்லிம்கள் மீதான வெறுப்­பு­ணர்வின் வெளிப்­பாடு என்­பதை மதங்­க­ளையும், மனி­தர்­க­ளையும் நேசிக்­கின்ற மனி­தா­பி­மா­ன­முள்­ள­வர்­களின் கண்­ட­னங்கள் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­ன்றன.

இஸ்­லா­மோ போபி­யாவும் முதன்மைக் கார­ணியும்

இஸ்­லா­மோ போபியா, முஸ்லிம் போபி­யா என்­ப­வற்­றுக்கு பிர­தான கார­ணி­யென்றால் அது இஸ்­லாத்­தி­னதும் முஸ்­லிம்­க­ளி­னதும் பெரு வளர்ச்சி என்­பதை மறுக்­க­மு­டி­யாது. இஸ்­லாத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் அழிப்­ப­தற்கு எத்­த­கைய திட்­டங்­களை வகுத்து செயற்­ப­டு­கின்­ற­போ­திலும் இஸ்லாம் வளர்ந்து கொண்­டி­ருக்­கி­றது என்­பது இஸ்­லா­மிய போபி­யா­விற்கு உட்­பட்­ட­வர்­க­ளினால் ஜீர­ணிக்க முடி­யாமல் இருக்­கி­றது. இதனை  நியூ­ஸி­லாந்துத் தாக்­கு­தலும் தாக்­குதல் பயங்­க­ர­வாதி வெளி­யிட்ட கருத்­துக்­களும் புடம்­போட்­டி­ருக்­கி­ன்றன. ‘நர­கத்­திற்கு அக­தி­களை வர­வேற்­கின்றேன்’ என அப்­ப­யங்­க­ர­வாதி அவ­னது துப்­பாக்­கியில் எழுதி வைத்­ததன் மூலம் அக­தி­க­ளி­னாலும் ஐரோப்­பிய நாடு­களில் முஸ்­லிம்கள் பெருகி வளர்ச்­சி­ய­டை­கி­றார்கள் என்­பதை புலப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

உலகின் 7.6 பில்­லியன் மக்கள் தொகையில்  பின்­பற்­றப்­ப­டு­கின்ற மதங்­களின் வரிசை நிலையில் அதி­க­ள­வி­லான மக்கள் பின்­பற்­று­கின்ற இரண்­டா­வது மார்க்­க­மாக இஸ்லாம் உள்­ளது. 2017ஆம் ஆண்டின் உலக சனத்­தொகை புள்­ளி­வி­ப­ரங்­களின் பிர­காரம் உலகில் 1.8 பில்­லியன் முஸ்­லிம்கள் உள்­ளனர். உலக சனத்­தொ­கையில் 25 வீதத்­தினை முஸ்­லிம்கள் கொண்­டுள்­ளனர். அதி­க­ள­வி­லான முஸ்­லிம்கள் மத்­தி­ய­கி­ழக்கு, வட ஆபி­ரிக்க, ஆசிய நாடு­களில் வாழ்­கின்­றனர். ஏறக்­கு­றைய 50 நாடு­களில் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யி­ன­ராக வாழ்­கின்­றனர். முஸ்­லிம்­களின் எண்­ணிக்­கையில் 62 வீத­மானோர் தெற்கு மற்றும் தென்­கி­ழக்­கா­சிய நாடு­களில் வாழ்­வ­தாக அப்­புள்­ளி­வி­பர அறிக்கை குறிப்­பி­டு­கி­றது.

இதில் ஐரோப்­பிய நாடு­களின் மொத்த சனத் தொகையில் 4.9 வீதத்தை முஸ்­லிம்கள் கொண்­டுள்­ளனர். சைபி­ரஸில் 25.4 வீதமும் பிரான்ஸில் 8.8 வீதமும், சுவீ­டனில் 8.1 வீதமும், பெல்­ஜி­யத்தில் 7.6 வீதமும், நெதர்­லாந்தில் 7.1 வீதமும், பிரித்­தா­னிய ஐக்­கிய இராஜ்­யத்தில் 6.3 வீதமும் என ஐரோப்­பிய நாடு­களில் முஸ்­லிம்கள் வாழும் நிலையில் நியூ­ஸி­லாந்தின் மொத்த சனத்­தொ­கையில் ஒரு வீதமே முஸ்­லிம்கள் வாழ்­கி­றார்கள்.

இருப்­பினும், முஸ்­லிம்கள் அமெ­ரிக்­காவில் 3.45 மில்­லி­ய­னா­கவும்  அமெ­ரிக்­காவின் முழு சனத்­தொகை வளர்ச்­சியில் முஸ்­லிம்கள் 1.1 வீதம் பங்­க­ளிப்பு செய்­வ­தான அண்­மைய தர­வு­க­ளுடன் 2050ஆம் ஆண்­ட­ளவில் உலக முஸ்­லிம்­களின் எண்­ணிக்கை 2.8 பில்­லி­ய­னாகக் காணப்­ப­டு­மென குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.

இஸ்­லாத்தின் வளர்ச்சி வேகத்­தையும், முஸ்­லிம்­க­ளி­னதும் சனத்­தொகை உள்­ளிட்ட அனைத்து முன்­னேற்­றங்­க­ளையும்; சகித்­துக்­கொள்ள இய­லாத நிலையில், அவற்றை அழித்­தொ­ழிக்கும் சதித்­திட்­டத்தின் கீழ்  மேற்­குல இஸ்­லா­மிய எதிர்ப்­பா­ளர்­களின் முயற்­சியே நூற்­றுக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் தினமும் அழிக்­கப்­ப­டு­வதும் முஸ்­லிம்­களின் பல கோடி பெறு­ம­தி­யான சொத்து செல்­வங்கள் அழிந்­துள்­ள­மை­யு­மாகும்.  வல்­ல­ர­சு­க­ளுக்கு சமாந்­தி­ர­மாக வளர்ச்­சி­கண்ட ஈராக், லிபியா போன்ற நாடு­களில் பொய்க்­கா­ர­ணங்கள் சோடிக்­கப்­பட்டு மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல், அழிப்பு நட­வ­டிக்­கைகள் இவற்­றிற்கு சான்­றாகும்.

முஸ்­லிம்கள் தொடர்­பான அநா­வ­சியப் பயம் கொண்­ட­வர்­க­ளினால் இஸ்லாம், தீவி­ர­வாதப் போக்குக் கொண்­டது என முழு உல­கையும் நம்­ப­வைக்கும் வகையில்    அதற்­கான ஒழுங்­க­மைக்­கப்­பட்ட செயற்­றிட்­டங்­களும் பிர­சா­ரங்­களும் அன்று முதல் இன்­று­வரை முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதற்­காகப் பல முக­வர்கள் உல­க­ளா­விய ரீதியில் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். அவர்­க­ளுக்­கான சகல உத­வி­களும் நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் இத்­த­கை­ய­வர்­க­ளினால் வழங்­கப்­பட்டு வரு­கி­ன்றன.

இஸ்லாம் தொடர்­பாக மேற்­கு­லகின் பயம் உலகின் பல நாடு­க­ளுக்கும் வியா­பித்­துள்ள நிலையில், இதனால்,  அர­பு­லக முஸ்­லிம்கள் மாத்­தி­ர­மல்ல ஆசிய, தென்­கி­ழக்­கா­சிய நாடு­க­ளி­லுள்ள முஸ்­லிம்­களும் தத்­த­மது நாடு­களில்  நெருக்­கு­தல்­க­ளையும், தாக்­குல்­க­ளையும் சந்­திக்க வேண்­டி­ய­வர்­க­ளாக உள்­ளனர்.

அர­பு­லக நாடு­களில் அல்­லது உல­க­ளா­விய நாடு­களில் வாழும் முஸ்­லிம்கள் தங்­க­ளுக்குள் காணப்­படும் முரண்­பா­டு­களைத் தீர்த்­துக்­கொள்­வ­தற்­காக மேற்­கொள்­கின்ற கருத்­தா­டல்­களை, செயற்­பா­டு­களை சாத­கமாக்கி, அக்­க­ருத்­தா­டல்­க­ளுக்கும் செயற்­பா­டு­க­ளுக்கும்  உத­விக்­கரம் நீட்­டு­வ­தான மாயையை ஏற்­ப­டுத்தி, அம்­மா­யையின் பிடிக்குள் அவர்­களைச் சிக்­க­வைத்து, அவர்­க­ளுக்­கி­டையில் பிரி­வி­னை­களை ஊக்­கப்­ப­டுத்தி, இயக்­கங்­க­ளா­கவும், அமைப்­புக்­க­ளா­கவும் உரு­வாக்கி,  ஒட்­டு­மொத்த உலக முஸ்­லிம்­க­ளையும் அழிவின் விளிம்­புக்கு  மேற்­குல இஸ்­லா­மிய எதிர்ப்­பா­ளர்கள் இட்டுச் சென்­றுள்­ளனர்.

இதனை சிரி­யா­விலும், ஈராக்­கிலும், யெம­னிலும் இன்னும் சில நாடு­க­ளிலும் வெவ்­வேறு பெயர்­களில் இயங்­கு­கின்ற அமைப்­புக்­க­ளுக்­கி­டை­யிலும் அந்­நாட்டு அர­சு­க­ளுக்கும் இயக்­கங்­க­ளுக்­கி­டை­யிலும் அமெ­ரிக்க, ரஷ்யா உட்­பட மேற்­குலக நாடு­களின் ஒத்­து­ழைப்­புடன் நடந்­தே­று­கின்ற கோர யுத்­தங்­க­ளையும் அதன் அழி­வு­க­ளையும் சுட்­டிக்­காட்ட முடியும்.

இஸ்­லா­மி­யர்­களைக் கொண்டே இஸ்­லாத்­தையும், இஸ்­லா­மி­யர்­க­ளையும் கேவ­லப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் அழிப்­ப­தற்­கா­கவும் இடம்­பெறும் நிகழ்­வு­களை தங்­க­ளது ஆளு­கை­க­ளுக்­குட்­பட்ட ஊட­கங்கள் வாயி­லாகக் காட்­சிப்­ப­டுத்தி உலகை நம்­ப­வைக்கும் செயற்­பா­டு­க­ளுக்கு மத்­தியில் மாற்­று­ம­தத்­தி­னரைக் கொண்டும் முஸ்­லிம்­களைக் கொன்றழிக்கும் செயற்­பா­டு­களும் இடம்­பெ­று­வதை நியூ­ஸி­லாந்து பள்­ளி­வாசல் தாக்­கு­தல்கள் ஒப்­பு­வித்­தி­ருக்­கி­ன்றன. இதன் ஆரம்பம் 2001 இல் அமெ­ரிக்­காவில் ஆரம்­பிக்­கப்­பட்­டது என்­பதை தற்­போது நினை­வு­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது.

சர்­வ­தேச அளவில் முஸ்­லிம்கள் தொடர்­பான அச்சம், வெறுப்­பு­ணர்வு, பார­பட்சம் என்­ப­வற்றை உரு­வாக்­கு­வ­தற்­கா­கவும், தனி­நபர் இலா­ப­ம­டை­வ­தற்­கா­கவும் 2001ஆம் ஆண்டு  நன்கு திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்ட அமெ­ரிக்க இரட்டைக் கோபுரத் தாக்­கு­தல்தான் இஸ்­லா­மோ போபி­யாவை உல­க­ளவில் உரு­வாக்­கி­யது

2001ஆம் நூற்­றாண்டில் முஸ்லிம் விரோத சக்­திகள் மேற்­கொண்ட அமெ­ரிக்க இரட்டைக் கோபுரத் ­தாக்­கு­தலின் பின்­னணி வெளிச்­சத்­திற்கு வந்த போதிலும் முஸ்­லிம்கள் தொடர்­பான அச்சம், வெறுப்­பு­ணர்வு, பார­பட்சம் இன்னும் முடி­வுக்கு வர­வில்லை. முஸ்­லிம்கள் தொடர்­பான ஏனைய சமூகப் பதற்றம் வளர்ந்து கொண்டே செல்­கி­றது.

இஸ்­லா­மோ போபி­யா அதி­க­ரிப்பின் பின்­ன­ணி

அமை­தி­யையும், சமா­தா­னத்­தையும், விட்­டுக்­கொ­டுப்­பையும், மனித சகோ­த­ரத்­து­வத்­தையும் நிலை­நி­றுத்தி வழி­காட்டும் இஸ்லாம் அடிப்­ப­டை­வா­தத்­தையும், தீவி­ர­வா­தத்­தையும், பயங்­க­ர­வா­தத்­தையும் ஊ­க்கு­விப்­ப­தா­கவும், இஸ்­லாத்தைப் பின்­பற்­று­கின்ற முஸ்­லிம்கள் அடிப்­ப­டை­வா­தி­க­ளா­கவும், தீவி­ர­வா­தி­க­ளா­கவும், பயங்­க­ர­வா­தி­க­ளா­கவும் செயற்­ப­டு­கி­றார்கள் எனவும் சித்­தி­ரிப்­ப­தற்­கான முயற்­சி­களில் ஒன்­றுதான் 2001ஆம் ஆண்டு செப்­டம்பர் 11ஆம் திகதி அமெ­ரிக்­காவின் தலை­நகர் நியூ­யோர்க்கில் இடம்­பெற்ற இரட்­டைக்­கோ­புர வர்த்­தகக் கட்­டி­டத் தொகுதி தாக்­கு­தல்­க­ளாகும்.

இத்­தாக்­கு­தலின் பின்­ன­ணியில் அமெ­ரிக்­காவின் முன்னாள் ஜனா­தி­பதி ஜோர்ஜ் டப்­ளியு புஷ் இருந்­தி­ருக்­கிறார். இத்­தாக்­கு­தலும் அதனால் அவர் அடைந்த இலா­பமும் என்ன என்­ப­தெல்லாம் நீண்ட நெடிய கதை­யாக தற்­போது வெளி­வந்து முடிந்த நிலையில், அன்று இத்­தாக்­குதல் அமெ­ரிக்­காவில் வாழ்­கின்ற முஸ்­லிம்­களின் மீது மாத்­தி­ர­மல்ல முழு உல­கிலும் வாழும் முஸ்­லிம்கள் தொடர்பில் மேற்­கு­லக சமூக அச்­சத்­தையும், வெறுப்­பு­ணர்­வையும், பார­பட்­சத்­தையும் அதி­க­ரிக்கச் செய்­தன.

இத்­தாக்­குதல் சம்­ப­வ­மா­னது உல­க­ளவில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான நட­வ­டிக்­கை­களை  மேற்­கொள்ள முன்­னெ­டுக்­கப்­பட்ட நாட­க­மென்றே கூறப்­ப­டு­கி­றது. இந்த நாட­கத்தின் வில்­ல­னாக காட்­டப்­பட்­ட­வர்தான் ஒசாமா பின்­லேடன். ஓசாமா பின்­லேடன் விமா­னங்­களைப் பயன்­ப­டுத்தி இத்­தாக்­கு­தல்­களை மேற்­கொண்டார் என்­பதை நிரூ­பிப்­ப­தற்கும், அவரைத் தேடிக் கண்­டு­பி­டிக்கும் முயற்­சி­க­ளுக்­கா­கவும் அமெ­ரிக்­காவும் அதன் நேச­நா­டு­களும் கோடிக்­க­ணக்­கான டொலர்­களைச் செல­வ­ழித்து ஆயி­ரக்­க­ணக்­கான முஸ்­லிம்­களை பலி­கொண்­டி­ருக்­கி­றது. ஈராக்­கிலும், ஆப்­கா­னிஸ்­தா­னிலும் மேற்­கொண்ட தாக்­கு­தல்­களும், அழி­வு­களும்  இதன் வெளிப்­பா­டு­கள்தான்.

இருந்தும். விமா­னங்கள் மோதி இவ்­விரு கட்­ட­டங்­களும் தரை­மட்­ட­மா­க­வில்லை. அவை திட்­ட­மிட்டு தரை­மட்­ட­மாக்­கப்­பட்டு இத்­தாக்­குதல் பழியை இஸ்­லாத்தை ஏற்­று­வாழும் ஒரு குழு அல்­லது ஒரு தனி­நபர் மீது சுமத்­து­வ­தற்கு மேற்­கொள்­ளப்­பட்ட சதித்­திட்­ட­மென்­பதை  சமூக நெருக்­க­டி­களை ஆராயும் ஆய்­வா­ளர்கள் மிகத் துல்­லி­ய­மா­கவும் அறி­வு­பூர்­வ­மா­கவும் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள்.

அதா­வது, விமா­னங்கள் அலு­மி­னியத் தக­ரங்­களால் தயா­ரிக்­கப்­பட்ட தொன்று. இவ்­வாறு அலு­மி­னியத் தக­ரங்­களால் தயா­ரிக்­கப்­பட்ட விமா­னத்­தினால் சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட இரும்பால் கட்­டப்­பட்ட கட்­டி­டத்தை இடிப்­ப­தற்கு வாய்ப்­பில்லை. ஏனெனில், ஒரு விமானம் ஒரு மரத்தில் மோதினால் கூட விமானம் சேத­ம­டை­யுமே தவிர மரம் பெரி­தாக சேத­ம­டை­வ­தில்லை. ஆதலால், இக்­கட்­ட­ட­மா­னது திட்­ட­மி­டப்­பட்டு இடிக்­கப்­பட்­டது. இக்­கட்­டட இடிப்பின் பின்­ன­ணியில் பலர் இருந்தும் இதில் முக்­கிய பங்கு வகித்­தி­ருப்­ப­வர்கள் இஸ்­ரே­லி­யர்­கள்தான் என்­பதை அந்த ஆய்­வா­ளர்கள் ஆதா­ர­பூர்­வ­மாக குறிப்­பிட்­டி­ருப்­பதை சுட்­டிக்­காட்ட வேண்டும்.

இஸ்­ரே­லி­யர்­க­ளி­னதும், முஸ்லிம் விரோத எதிர்ப்­பா­ளர்­க­ளி­னதும் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான செயற்­பா­டுகள் இன்று நேற்று தொடங்­கி­ய­தல்ல. இஸ்லாம் என்று இவ்­வு­லகில் வளர்ச்­சி­ய­டையத் தொடங்­கி­யதோ அன்­றி­லி­ருந்து இஸ்­லாத்­தையும், முஸ்­லிம்­க­ளையும் அழிக்க அவர்கள் மிகக் கச்­சி­த­மான இர­க­சியத் திட்­டங்கள் மற்றும் பொறி முறை­மை­க­ளி­னூ­டாக அவற்றை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இஸ்­லாத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் வள­ர­விடக் கூடா­தென்­பதே இதன் மறு­பக்­க­மா­க­வுள்­ளது.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொண்டு வரு­கின்ற சதித் திட்­டங்­க­ளி­னூ­டாக முஸ்லிம் நாடு­களை அர­சியல் ரீதி­யாக அடி­மைப்­ப­டுத்­தவும்,  பொரு­ளா­தார ரீதி­யாக முஸ்லிம் நாடு­களின் வளங்­களைச் சுரண்­டவும், இன்னும், கல்வி, கலா­சார, மொழி, ரீதி­யாக அடி­மைப்­ப­டுத்தி இஸ்­லா­மியப் பாரம்­ப­ரி­யங்­க­ளி­லி­ருந்து அந்­நி­யப்­ப­டுத்­துவும் முயற்­சிக்­கி­றார்கள். அவர்கள் மேற்­கொண்­டுள்ள முயற்­சிகள் அவர்­க­ளுக்கு பொது­வாக வெற்­றி­ய­ளித்­தி­ருக்­கி­ன்றன.

முஸ்லிம் நாடு­க­ளிலும், முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் நாடு­க­ளிலும் இடம்­பெற்று வரு­கின்ற வன்­மு­றை­களும், யுத்த அழி­வு­களும், சவூதி அரே­பியா உள்­ளிட்ட அர­பு­லகில் இடம்­பெற்று வரு­கின்ற கலா­சார மாற்­றங்­களும் இவற்றை உண்­மைப்­ப­டுத்திக்  கொண்­டி­ருக்­கின்­ற சூழலில், நியூ­ஸி­லாந்து தாக்­கு­தல்­களின் பின்னர் உலக அரங்கில் இஸ்­லாத்தின் மீதும் முஸ்­லிம்கள்  மீதான வெறுப்­பு­ணர்­வுக்கும் எதிர்ப்­புக்­களும் கிளம்­பி­யி­ருக்­கின்­றன. இத்­தாக்­கு­தலை நியூ­ஸி­லாந்து பிர­தமர் முதல் அந்­நாட்டு மக்கள் வரை கண்­டி­ருத்­தி­ருப்­ப­துடன் பிர­தமர் முதற்­கொண்டு  நாட்டு மக்கள் வரை பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்­பிலும் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்­கா­கவும் மேற்­கொண்ட மனி­தா­பி­மான நட­வ­டிக்­கைகள் இத்­தாக்­கு­தல்­களின் வெறுப்பை காட்­டி­யி­ருப்­ப­துடன் இஸ்­லாத்தின் மீதாக கௌர­வத்­தையும் புடம்­போட்­டி­ருக்­கி­றது.

வெறுப்­பு­ணர்­வுக்­கான எதிர்ப்­புக்கள்

இஸ்­லா­மிய தீவி­ர­வா­தி­க­ளா­கவும், பயங்­க­ர­வா­தி­க­ளா­கவும், முஸ்லிம் வன்­மு­றை­யா­ளர்­க­ளா­கவும், இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தி­க­ளா­கவும் முஸ்­லிம்­களை ஊடகப் பயங்­க­ர­வாதம் புடம்­போட்­டுக்­கொண்­டி­ருக்கும் இக்­கால கட்­டத்தில் நியூ­ஸி­லாந்தின் இரு பள்­ளி­வா­சல்­க­ளிலும் பாலகர் முதல் முதி­யவர் வரை 60 அப்­பாவி முஸ்­லிம்­களைக் கொண்டு குவித்த பிரெண்டன் ஹரிசன் டரன்டை அவன் பின்­பற்­று­கின்ற மதத்தைக் கொண்டு தீவி­ர­வா­தி­யா­கவும், பயங்­க­ர­வா­தி­யா­கவும், அடிப்­ப­டை­வா­தி­யா­கவும் உல­கிற்குக் காட்­டு­வ­தற்கு ஊட­கங்கள் முன்­வ­ர­வில்லை. இருந்­த­போ­திலும் அவுஸ்­தி­ரே­லி­யாவின் பிர­தமர் ஸ்காட் மெரிசன் பிரெண்டன் ஒரு வல­து­சாரித் தீவிரவாதி என வர்ணித்துள்ளார்.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் செனட்சபை உறுப்பினரான கிரேஸர் அன்னிங் பேசிய வெறுப்பு பேச்சைச் சகித்துக்கொள்ள முடியாத 17 வயது சிறுவன்,  முட்டையால் அவரது மொட்டைத் தலையில் அடித்ததன் மூலம் வெறுப்புணர்வினால் எல்லா மக்களையும் மயக்கி முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட செய்ய முடியாது என்பதை வெளிப்படுத்தி நிற்கிறது. இவரது பேச்சுக்கு எதிராக தற்போது சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அவுஸ்திரேலிய பிரதமரும் இப்பேச்சைக் கண்டித்திருப்பதுடன்,  வெறுப்புப் பேச்சுக்கள் பேசுவதை உலகம் நிறுத்த வேண்டுமென துருக்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இச்­சூ­ழ­லில்தான், வெறுப்புப் பேச்சைத் தடை செய்­யக்­கூ­டிய  சட்ட ஏற்­பா­டுகள் இன்னும் இலங்­கையில் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்­லை­யென அண்­மையில் அமைச்சர் ஹக்கீம் சுவிட்­சர்­லாந்துத் தூது­வ­ரிடம் தெரி­வித்­தி­ருந்தார். தற்­போது இக்­க­ருத்துத் தொடர்பில் வாதப்­பி­ர­தி­வா­தங்கள் எழ ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­தாச ராஜபக் ஷ கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் இது தொடர்­பான வாதப்­பி­ர­தி­வா­தங்­களை முன்­வைத்து பேசி­யதைக் காண­மு­டிந்­தது.

இந்­நி­லையில், உள்­நாட்­டிலும் சர்­வ­தேச அரங்­கிலும் முஸ்­லிம்கள் தொடர்­பாக ஏற்­பட்­டுள்ள ‘இஸ்­லாமோ போபியா’ என்ற இந்­நோயைச் சுகப்­ப­டுத்த வேண்­டு­மாயின் முஸ்­லிம்கள் முன்­மா­திரி சமூ­க­மாக செயற்­பட வேண்­டி­யுள்­ளது. ஆனால், தற்­கால முஸ்­லிம்­களின் செயற்­பா­டுகள் முன்­மா­திரி சமூகம் என்ற நிலைப்­பாட்­டி­லி­ருந்து பின்­னோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. அதனால், முஸ்­லிம்கள் மீதான வெறுப்­பு­ணர்வும், பார­பட்­சமும் அதி­க­ரித்துக் கொண்­டுதான் செல்­கி­றது. முஸ்­லிம்கள் தங்­களை முன்­மா­திரி சமூ­க­மாக மாற்­றி­கொள்­ளாத வரை இந்­நிலை தொட­ரத்தான் செய்யும். ஏனெனில், அல்குர்ஆன் கூறுகிறது. “ஒரு சமூகம் தன்னை மாற்றிக் கொள்ளாத வரை அச்சமூகத்தை இறைவனும் மாற்றமாட்டான்”.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.