திண்மக்கழிவுகளை அறுவாக்காட்டில் கொட்டும் திட்டத்தை உடன் கைவிடுக

பிர­தமர், அமைச்­சர்­க­ளிடம் அமைச்சர் ரிஷாட் வலி­யு­றுத்து

0 699

கொழும்­பி­லுள்ள திண்­மக்­க­ழி­வு­களை புத்­தளம் அறு­வாக்­காட்டில் கொட்டும் திட்­டத்தை உட­ன­டி­யாகக் கைவிட வேண்­டு­மென  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களிடம் அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் வலி­யு­றுத்­தி­யுள்ளார். நேற்­று­முன்­தினம் பாரா­ளு­மன்ற கட்­டி­டத்­தொ­கு­தியில் பிர­தமர் தலை­மையில் இடம்­பெற்ற அமைச்­ச­ரவை கூட்­டத்­திற்கு முற்­கூட்­டி­ய­தான தயார்­ப­டுத்தும் கூட்­டத்தின் போது, நிகழ்ச்சி நிரலில் புத்­தளம் அறு­வக்­காட்டு குப்பை பிரச்­சினை மற்றும் திண்­மக்­க­ழி­வ­கற்றல் திட்டம் தொடர்­பான விவ­காரம் எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போதே, அமைச்சர் ரிஷாட் அறு­வக்­காட்டு குப்பை திட்­டத்­திற்கு தமது கட்சி பூரண எதிர்ப்பு எனவும் இது தொடர்பில் தொடர்ந்தும் பேச்சு நடத்த, பிர­தமர் சந்­தர்ப்­ப­மொன்று தர­வேண்­டு­மெ­னவும் கோரினார்.

பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற இந்தக் கூட்­டத்தில் இந்த விவ­கா­ரத்­திற்கு பொறுப்­பான அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க வராத நிலை­யிலும் அமைச்சர் றிஷாடின் பலத்த எதிர்ப்பு மற்றும் சக அமைச்­சர்கள் சிலர் அமைச்சர் றிஷாடின் கோரிக்­கைக்கு ஆத­ரவு தெரி­வித்­தமை கார­ண­மாக இந்த விவ­காரம் இன்று எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் இங்கு கருத்து தெரி­வித்­த­போது,

புதிய தொழில்­நுட்­பங்கள் விர­வி­யுள்ள தற்­போ­தைய கால கட்­டத்தில், கொழும்பு குப்­பை­களை புத்­த­ளத்­திற்கு கொண்டு சென்று நிறைக்க வேண்­டிய எந்த தேவையும் அர­சுக்கு இல்லை. நாங்கள் இந்த திட்­டத்தை ஒரு மாபி­யா­வா­கவே பார்க்­கின்றோம். அத்­துடன் பகி­ரங்­க­மாக இதனை எதிர்க்­கின்றோம் என்றார்.

சீமெந்து கூட்­டுத்­தா­பனம் எனது அமைச்சின் கீழே வரு­கின்ற போதும் இன்ஸி சீமெந்து நிறு­வ­னத்­திற்கு 50 வருட குத்­த­கைக்கு கொடுக்­கப்­பட்­டுள்ள அறு­வக்­காட்டு பகு­தி­யி­லுள்ள குழி­களை நிரப்­பு­வ­தற்­கான எந்த அனு­ம­தி­யையும் நாங்கள் வழங்­க­வில்லை, நான் இந்த அமைச்சை பொறுப்­பேற்­ப­தற்கு முன்னர் சீமெந்து கூட்­டுத்­தா­பனம் 5141 ஏக்கர் காணியை 50 வருட குத்­த­கைக்கு ஹொல்சிம் லங்கா லிமிட்டட் (தற்­போ­தைய இன்சீ நிறு­வனம் ) இற்கு வழங்­கி­யது. அதற்­காக அந்த இடத்தை குப்­பை­களால் நிரப்ப வேண்­டு­மென எந்த தேவையும் இல்லை.

1990 ஆம் ஆண்டு வடக்­கி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட 1 இலட்சம் அக­தி­களை புத்­தளம் பிர­தே­சமே தாங்­கி­யது, அகதி மக்­க­ளுக்கு இருப்­பிட வச­தி­ய­ளித்து, உணவு வழங்கி, வளங்­களை பகிர்ந்து கொடுத்த பிர­தேசம் புத்­தளம்.

நுரைச்­சோலை மின் நிலை­யத்தை மக்­களின் எதிர்ப்­பு­க­ளையும் மீறி முன்­னைய அரசு கொண்­டு­வந்­தது. எந்த வித­மான பாதிப்பும் ஏற்­ப­டா­தென அப்­போது உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட போதும் தற்­போது அங்கு வாழும் மக்கள் தொடர்ச்­சி­யான பேரா­பத்­துடன் வாழ்க்கை நடத்­து­கின்­றனர். அது மாத்­தி­ர­மன்றி அங்கு அமைக்­கப்­பட்ட சீமெந்து தொழிற்­சா­லையால் சுற்­றுச்­சூழல் மிகவும் மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­ப­தி­யையும் பிர­த­ம­ரையும் இந்த ஆட்­சி­யையும் கொண்டு வரு­வதில் 90 சத வீத­மான புத்­தளம் மாவட்ட மக்கள் பங்­க­ளிப்பு நல்­கினர். அவர்­க­ளுக்கு இந்த துரோகம் செய்­யக்­கூ­டாது.

இம்­முறை வரவு செல­வுத்­திட்­டத்தில் இந்த திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த 7600 மில்­லியன் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. ஒவ்­வொரு வரு­டமும் இப்­ப­டித்­தானா ஒதுக்­கப்­போ­கின்­றீர்கள்?. குப்பைகளை மீள் சுழற்சி செய்ய எத்தனையோ நவீன முறைகள் இருக்கும் போது, குப்பைகளை காவிச்சென்று கொட்டுவதற்கு இவ்வளவு தொகையை செலவிடுவது ஏன்? உலகில் எந்த நாட்டிலும் இல்லாத நடைமுறையை நீங்கள் அறிமுகப்படுத்துவதன் உள்நோக்கம்தான் என்ன? இது யாரை திருப்திப்படுத்துவதற்காக என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.