அறுவாக்காடு குப்பை திட்ட விவகாரம்: பிரதமருடன் பேச்சு நடத்த திட்டம்

சிவில் பிரதிநிதிகள், சர்வ மத தலைவர்கள், முஸ்லிம், புத்தளம் மாவட்ட எம்.பி.க்கள் சந்திப்பில் தீர்மானம்

0 734

கொழும்பு மாவட்ட குப்பைப் பிரச்சினைக்கு தீர்வாக முன்னெடுக்கப்படும் புத்தளம் அறுவாக்காடு திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டத்திற்கு எதிர்ப்பு வலுவடைந்துள்ள நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்­றைய தினம் பாரா­ளு­மன்றக் குழு அறையில் புத்­தளம் மாவட்ட சிவில் பிர­தி­நி­திகள், சர்வ மத தலை­வர்கள், புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டனும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தி­க­ளு­டனும் இடம்­பெற்ற சந்­திப்­பி­லேயே இவ்­வாறு தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. கொழும்பு மா நகர குப்பை பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. எனினும் புத்­தளம் மாவட்ட மக்­களின் நியா­ய­மான பிரச்­சி­னை­களை கண்­டு­கொள்­ள­வில்லை என சிவில் பிர­தி­நி­திகள் இதன்­போது சுட்­டிக்­காட்­டினார்.

அத்­துடன், அமைச்­ச­ரவை கூட்­டத்தின் போது அமைச்­சர்­க­ளான ரிசாத் பதி­யுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இவ்­வி­காரம் குறித்து சுட்­டிக்­காட்­டி­ய­போது, விட­யத்­திற்கு பொறுப்­பான அமைச்­ச­ரான சம்­பிக்க ரண­வக்க வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்­டதை இதன்­போது சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. இந்­நி­லையில் அவ­ருடன் பேச்சு நடத்­து­வ­தை­விட பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­னி­லையில் இவ்­வி­டயம் குறித்து கலந்­து­ரை­யா­டலாம் என அமைச்சர் ஹக்கீம் இதன்­போது யோசனை முன்­வைத்தார். இதனை ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் பிர­தி­நி­தி­களும் ஏற்­றுக்­கொண்­டனர்.

இந்தக் கூட்­டத்தில் சர்­வ­மத தலை­வர்­க­ளான குசல தம்ப தேரர், சுந்தர் ராம குருக்கள், அப்­துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் உட்­பட புத்­தளம் கிளீன் அமைப்­பினர், அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதி­யுதீன், இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான அமீர் அலி ,அலி­சாஹிர் மௌலானா , பாலித ரங்கே பண்­டார மற்றும் பிரதி அமைச்சர் அப்­துல்லாஹ் மஹ்ரூப், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஏ.எல்.எம். நசீர் , எம்.ஐ.எம்.மன்சூர் , கலா­நிதி இஸ்­மாயில், முஜிபுர் ரஹ்மான், இம்ரான் மஹ்ரூப், எம்.எஸ்.தௌபீக் , ஏ.எச்.எம்.பௌஸி, ஹெக்டர் அப்புஹாமி , மஸ்தான் ,அருந்திக்க பெர்னாண்டோ,  எஸ்.எம்.மரைக்கார், சனத் நிசாந்த உள்ளிட்டோரும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.