முஸ்­லிம்­க­ளு­ட­னான சிங்­க­ள­வரின் பாரம்­ப­ரிய நல்­லு­றவு அன்றும் இன்றும்

0 909

இலங்­கையின் வர­லாற்றுப் புரா­தனச் சின்­னங்­களை வெளி­நாட்­டி­னரும் புகைப்­படம் எடுக்­கவே செய்­கி­றார்கள். உள்­நாட்டு உயர்­கல்வி மாண­வர்­களும் தமது அறி­வியல் தேடலின் பொருட்டு இதைச் செய்­கி­றார்கள். எனினும் அண்­மையில் இரு­முறை சில முஸ்லிம் மாண­வர்கள் தூபி­யில் ஏறிப் புகைப்­படம் எடுத்­த­தற்­காகக் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தார்கள். தற்­போது விடு­தலை கிடைத்­தி­ருக்­கி­றது. எனினும் கூட இதில் பின்­வரும் அணு­கு­முறை வேண்டும்.

1) இலங்­கையில் எங்­கெல்லாம் வர­லாற்­றுப்­பு­ரா­தன சின்­னங்கள் இருக்­கின்­றன என்­பது பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

2) அவற்­றுக்­கான பெயர் பல­கைகள் பல்­வேறு மொழி­க­ளிலும் காணப்­ப­டு­வ­தோடு நிபந்­த­னை­களும் அவ்­வாறே காணப்­பட வேண்டும்.

3) குற்­ற­வா­ளியின் தாய்­மொ­ழி­யி­லேயே விசா­ரிக்­கப்­பட்டும் பதிவும் தாய்­மொ­ழி­யி­லேயே நிகழ்ந்து வாசிக்க வைக்க வேண்டும்.

4) மாண­வர்கள் விளை­யாட்டுப் பரு­வத்தைச் சேர்ந்­த­வர்கள் முன் பின் அனு­ப­வ­மற்­ற­வர்கள் பய­மு­றுத்தி அச்­சப்­ப­டுத்­தினால் அவர்கள் உள­றவும் கூடும் குற்ற ஒப்­புதல் பெறவும் கூடாது. பள்­ளி­வாழ்வு பாழ்­ப­டவும் சமூக வாழ்வில் அவ­மா­னப்­ப­டவும் நேரலாம். எனவே திட்­ட­மிட்டே அவர்கள் செய்­தார்கள் எனும் முடி­வுக்கு வந்­து­வி­டாமல் விஷயம் கையா­ளப்­பட வேண்டும்.

5) இதற்­கான அடிப்­படைக் காரணம் இது­வே­யாகும். சிங்­கள மக்கள் தமது மூதா­தை­யரின் வழியில் பரம்­ப­ரை­யாக முஸ்­லிம்­க­ளோடு வைத்­தி­ருக்கும் பேரன்பை இன்­ற­ளவும் கைவி­ட­வில்லை என்­பதே உண்­மை­யாகும். பின்­வரும் சமீ­பத்­திய நிகழ்­வுகள் மூலம் இதை எண்­பிக்­கலாம்.

6) 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஞான­சா­ர­தேரர் முஸ்­லிம்­களைக் கொடு­மைப்­ப­டுத்­தி­ய­போது சில பிக்­கு­களும் சில பேரி­ன­வாத சிங்­க­ள­வ­ருமே அவரை ஆத­ரித்­தி­ருந்­தார்கள். காரணம் தொன்­று­தொட்டு அன்­றைய முஸ்­லிம்கள் மீது சிங்­களப் பெரும்­பான்மை மக்கள் கொண்­டி­ருந்த அபி­மா­ன­மே­யாகும். இவர்கள் ஞான­சா­ர­தேரர் மீதுதான் குற்றம் குறை கூறி­யி­ருந்­தார்கள். இது பற்றி ஞான­சார தேரரே பிர­லா­பித்­தி­ருந்தார். அதனால் தான் அவர் நான் பாரம்­ப­ரிய முஸ்­லிம்­களை எதிர்க்­க­வில்லை. அடிப்­ப­டை­வாத முஸ்­லிம்­க­ளையே எதிர்க்­கிறேன் எனக் கூறி­யி­ருந்தார். அந்த அள­வுக்கு இலங்கை முஸ்­லிம்­களின் மூதா­தையர் பெரும்­பான்மை சிங்­கள மக்­களின் நம்­பிக்­கையைப் பெற்று இணக்­க­மாக வாழ்ந்­தி­ருக்­கி­றார்கள்.

7) முஸ்லிம் மூதா­தை­யரின் சிறப்­பான செயற்­பா­டுகள் இன்­ற­ளவும் எந்த அள­வுக்குக் கண்­ணி­யப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன என்றால் தற்­போது சில முஸ்­லிம்கள் பல்­வேறு குற்­றங்­களில் ஈடு­பட்­டுக்­கொண்­டிக்கும் நிலை­யிலும் கூட முஸ்­லிம்­க­ளு­ட­னான தமது அபி­மா­னத்தை இன்­ற­ளவும் சிங்­கள மக்கள் பேணிக்­கொண்டே இருக்­கி­றார்கள்.

8) தற்­போது போதைப் பொருள் வர்த்­த­கத்­திலும் கூட சில முஸ்­லிம்கள் ஈடு­ப­டு­வது தெரிந்தும் கூட முஸ்­லிம்­க­ளு­ட­னான அபி­மா­னத்தை சிங்­கள மக்கள் குறைத்துக் கொள்­ள­வில்லை.

9) சில முஸ்­லிம்கள் ஆயுத சேக­ரிப்பில் ஈடு­பட்­ட­தாக அறிந்தும் கூட சிங்­கள மக்கள் அபி­மா­னத்தை மாற்றிக் கொள்­ள­வில்லை.

10) சில புத்தர் சிலைகள் உடைக்­கப்­பட்ட செய்தி கிடைத்தும் கூட இந்த அபி­மானம் மாற­வில்லை.

எனினும் இலங்கை முஸ்­லிம்­களின் மூதா­தையர் ஈட்­டித்­தந்த உயர்­வான நற்­பெ­யரை இன்­றைய தலை­முறை படிப்­ப­டி­யாக இழந்து கொண்­டி­ருக்­கி­றது என்றே கூற வேண்டும். உண்­மையில் தமது முன்­னோரின் மகத்­தான அருங்­கு­ணங்­களைப் பேணு­வதே தற்­போது நாட்­டி­லுள்ள அர­சியல் சூழலில் முஸ்­லிம்­க­ளுக்குத் தக்க பாது­காப்பு அர­ணாகும்.

தமது மூதா­தையர் முன்­மா­திரி காட்­டித்­தந்த இந்த வழி­மு­றைக்கு மாறாக இன்­றைய தலை­முறை முஸ்­லிம்கள் வாழ்ந்து வரு­வார்­க­ளாயின் படு­கு­ழியில் வீழ்ந்­தது போன்ற நிலைக்கு ஆளாகி விடு­வார்கள் என்­பதில் சந்­தே­க­மில்லை. 17 ஆம் நூற்­றாண்டின் நடுப்­ப­கு­தியில் ஒல்­லாந்தப் படை­யிடம் அகப்­பட்டு விடாமல் சில முஸ்லிம் வியா­பா­ரி­களை சிங்­கள மக்கள் காடு­க­ளுக்­கூ­டாக அழைத்து வந்து குடி­யேற்­றி­யதே தற்­போ­தைய நாம்­பு­ளுவைக் கிரா­ம­மாகும். 19 ஆம் நூற்­றாண்டின் ஆரம்­பத்தில் கண்டி வாழ் சில சிங்­க­ளக்­குண்­டர்கள் கொழும்பு வரை முஸ்­லிம்­களைத் தாக்கி வந்­த­போது அவர்­களில் சிலர் பஸ்­யா­லை­யி­லி­ருந்து நாம்­பு­ளு­வைக்குத் திரும்ப முயன்­ற­போது அவர்­களைத் தமது இனம் என்றும் பாராது பஸ்­யாலை வாழ் சிங்­கள மக்­களே விரட்­டி­ய­டித்து நாம்­பு­ளுவை முஸ்­லிம்­களைக் காப்­பாற்­றி­னார்கள். எனினும் 1915 ஆம் ஆண்டில் இத்­த­கைய நல்­லு­றவு இல்­லாமற் போன­தால்தான் சிங்­கள மக்கள் முஸ்­லிம்­களை தாக்­கி­யி­ருந்­தார்கள். இதை நாம்­பு­ளுவை முபாரக் ஆசி­ரியர் தனது நூலில் பதி­விட்­டி­ருந்தார்.

அப்­போது ஆங்­கி­லே­யரின் ஆட்­சி­யி­ருந்­ததால் அவ­ச­ர­கால சட்­டத்தின் மூலமும் இரா­ணுவ சட்­டத்தின் மூலமும் சிங்­களக் குண்­டர்கள் ஒழிக்­கப்­பட்­டார்கள். தற்­போது ஆட்சி அதி­காரம் சிங்­கள மய­மா­கவும் பாது­காப்பு துறை 100 வீதம் சிங்­கள மய­மா­கவும் இருக்­கை­யிலும் கூட நாடு முழுக்கப் பர­வ­லாக சிதறி சிறு சிறு குழு­வி­ன­ராக வாழும் முஸ்­லிம்கள் தப்­பிப்­பி­ழைத்து வாழக்­கா­ரணம்.

முஸ்லிம் மூதா­தை­யரின் அருங்­கு­ணங்­களும் சீரிய நடத்­தை­க­ளு­மாகும். இலங்­கையின் பண்­டைய பொரு­ளா­தாரம் விவ­சாய பொரு­ளா­தா­ர­மாகும். இது முஸ்­லிம்­களின் மூல­த­னத்­தி­லேயே தங்­கி­யி­ருந்­தது. இதனால் முஸ்­லிம்­க­ளுக்கு சிங்­க­ள­வ­ரிடம் பெரு­ம­திப்பு இருந்­தது. பின்பு ஏற்­று­மதி, இறக்­கு­மதி கலந்த வர்த்­தகப் பொரு­ளா­தாரம் உரு­வான பிறகே போட்டி நிலை உரு­வா­கி­யது. தற்­போது குற்­ற­வா­ளி­களின் பெயர்­களை பத்­தி­ரி­கைகள் வெளி­யி­டு­கையில் முஸ்­லிம்­களின் பெயர்­களும் அடிக்­கடி காணப்­ப­டு­கின்­றன. இது துவேஷம் என நம்மில் பலர் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். முஸ்­லிம்­களின் பெயர்­களை இப்­படி அப்­பட்­ட­மாக வெளிக்­காட்­ட­லாமா? எனவும் வின­வு­கின்­றனர். இவ்­வாறு ஏற்­பட என்ன காரணம் என்­பதை நாம் ஆராய்ந்­தால்தான் உண்மை துலங்கும்.

1000 ஆண்­டு­க­ளுக்கு முன்­பி­ருந்தே இலங்கை முஸ்­லிம்கள் ஏனைய இனங்கள் மத்­தியில் கௌர­வ­மா­கவும் மிக மரி­யா­தை­யா­கவும் வாழ்ந்­தி­ருக்­கின்­றனர். நமது மூதா­தையர் எவரும் நீதி­மன்­றத்தில் சாட்சி சொல்ல பைபளில் சத்­தியம் செய்ய வேண்­டி­யி­ருக்­க­வில்லை. கொடுக்கல் வாங்­கல்­களில் 100 வீதம் முஸ்­லிம்­களின் மூதா­தை­யர்கள் நேர்­மை­யா­கவே வாழ்ந்­தி­ருந்­தார்கள்.

நாடு முழுக்க உள்ள முஸ்லிம் கிரா­மங்கள் எப்­படி உரு­வா­கின? வர்த்­த­கத்­துக்கு விவ­சா­யமும் தோட்டக் கைத்­தொ­ழிலும் வெளி­நாட்டுச் சஞ்­சா­ரமும் தேவைப்­பட்­டன. இத­னால்தான் முஸ்­லிம்கள் நாடு முழுக்கப் பர­வ­லாகக் குடி­யே­றினர். நீருள்ள இடங்­களில் விவ­சா­யி­களும் கட­லுள்ள இடங்­களில் மீன­வர்­களும் குடி­யே­றி­யது போன்றே வர்த்­தக வாய்ப்­புள்ள இடங்­களில் எங்கும் முஸ்­லிம்கள் குடி­யே­றி­யி­ருந்­தனர். அதுவும் முஸ்­லிம்கள் எங்கும் வலுக்­கட்­டா­ய­மாகக் குடி­யே­றி­யி­ருக்­க­வில்லை.  விவ­சா­யி­க­ளுக்கும் பண்­ணை­யா­ளர்­க­ளுக்கும் மீன­வர்­க­ளுக்கும் மளிகை மற்றும் தட்­டு­முட்டு சாமான் கொள்­வ­ன­வுக்கும் முஸ்லிம் வியா­பா­ரிகள் தேவைப்­பட்­டதால் முஸ்­லிம்கள் பர­வ­லாகக் குடி­ய­மர ஏனைய சமூ­கங்கள் ஒத்­து­ழைப்பு வழங்­கின. கடல் வாணி­பத்­துக்­காக முஸ்­லிம்கள் மரக்­க­லங்­களும் வைத்­தி­ருந்­தனர். மரக்­கல எனும் பெயர் இதையே குறிக்­கின்­றது. மரைக்­காயர் எனும் பெயரும் வந்­தது. தற்­போ­துள்­ளது போல திறந்த பொரு­ளா­தா­ரமோ இதற்­குமுன் காணப்­பட்ட வர்த்­த­கத்­தோடு விவ­சா­யமும் கலந்த கலப்புப் பொரு­ளா­தா­ரமோ அப்­போது இருக்­க­வில்லை. விவ­சாய பொரு­ளா­தா­ரமே இருந்­தது. அப்­போது முஸ்லிம் வர்த்­த­கர்­களே அதற்­கான பொரு­ளா­தார நிறைவை செய்­த­ளித்­தனர். பணப்­ப­ரி­மாற்­றத்தை முஸ்­லிம்­களே நாடு­மு­ழுக்கப் பர­வ­லாக்­கினர். அதற்கு முன் பண்­டப்­ப­ரி­மாற்­றமே காணப்­பட்­டது. அதா­வது ஒரு பொருளைக் கொடுத்து அதே பெறு­ம­திற்கு ஏற்ப இன்­னொரு பொருளைப் பெற்றுக் கொள்­வ­தாகும்.

விவ­சாய மற்றும் தோட்ட உற்­பத்­திக்கு ஆகக்­கு­றைந்த இலா­பத்­துக்­காக முத­லீ­டு­களை வழங்கி நியா­ய­மான விலை­களில் கொள்­முதல் செய்து கிரா­மங்கள் தோறும் மாடு­க­ளிலும் கழு­தை­க­ளிலும் ஏற்­றிச்­சென்று முஸ்லிம் வியா­பா­ரிகள் விற்­பார்கள். இதை தவ­ளம என்­பார்கள். முஸ்­லிம்கள் கொள்­முதல் பொருட்­களை சேமித்து வைக்கும் இடமே மடிகே எனக்­கூ­றப்­பட்­டது. இத்­த­கைய இடங்­களை இன்றும் காணலாம்.

முஸ்லிம் வியா­பா­ரி­களின் போக்­கு­வ­ரத்து வச­திக்­கா­கவே கிரா­மங்கள் தோறும் அக்­கா­லத்தில் மண்­வீ­திகள் போடப்­பட்­டன. முஸ்லிம் ஏற்­று­மதி, இறக்­கு­மதி மொத்த வியா­பா­ரி­களின் பொரு­ளு­த­வி­யா­லேயே பிர­தான தார்­வீ­திகள் போடப்­பட்­டன. கிரா­மங்கள் தோறும் நடந்து போய் மளிகை மற்றும் வீட்டு தட்­டு­முட்டு சாமான்­களை காவிக்­கொண்டு விற்ற முஸ்லிம்­களே பல்­பொடி, சவக்­காரம், சீப்பு, கண்­ணாடி, செருப்பு, கத்தி, பிளேட், நெருப்பு பெட்டி, சட்டை, சாரி, கோப்பி, தேயிலை, சீனி, கொச்­சிக்காய்த் தூள், கொத்­த­மல்லித் தூள், அரிசி, பழ­வர்க்கம், மரக்­க­றி­வ­கைகள், கத்­திரி, கோடாரி, அரிவாள், சவ­ரக்­கத்தி, அடுப்பு, கூடை, விளக்கு, மெழு­கு­வர்த்தி, புளி, கொரக்காய், உப்பு, கடுகு, மிளகு, ஏலம் ஆகி­ய­வற்­றோடு மேலும் பல பொருட்­க­ளையும் காவிச்­சென்று விற்­பார்கள். கிரா­மிய மக்கள் அன்­றாடம் இவர்­களை வழி­பார்த்து நிற்­பார்கள். முஸ்லிம் வியா­பா­ரிகள் தாரா­ள­மாக பண உதவி செய்­வார்கள் கடனும் கொடுப்­பார்கள். தம்­மிடம் முத­லீடு பெற்­றவன் விவ­சா­யத்தில் நஷ்­ட­முற்று விட்டால் முஸ்லிம் வியா­பா­ரிகள் கொடுத்த பணத்தைத் திருப்­பித்­தர வேண்டாம் எனக் கூறி­வி­டு­வார்கள்.

குறிப்­பாக நமது மூதா­தையர் யாவ­ருமே அப்­போது நற்­கு­ண­சா­லி­க­ளா­கவும் பண்­பா­டுள்­ள­வர்­க­ளா­க­வுமே திகழ்ந்­தார்கள். பெரிய படிப்பு படிக்­கா­தி­ருந்த போதும் பொரு­ளீட்­டு­வதில் அதிக ஈடு­பா­டுள்­ள­வர்­க­ளாக இருந்­தார்கள். கொலை, கொள்ளை, காமம், மது, சூது, பொய், வஞ்­சகம், சண்டை, சச்­ச­ரவு, பெருமை, பொறாமை, உலோ­பித்­தனம், சதி ஆகி­யன இருக்­க­வில்லை.

இத்­த­கைய அருங்­கு­ணங்­களால் அக்­கா­லத்­திய இந்­நாட்டு மக்கள் முஸ்­லிம்­களின் விட­யத்தில் பேரன்­பையும் பெரு­ம­திப்­பையும் வைத்­தி­ருந்­தார்கள். பொலிஸில் யாரேனும் அகப்­பட்­டு­விட்டால் ஒரு முஸ்லிம் போய் சொன்னால் அவர் விடு­த­லை­யாகி விடுவார். தற்­போதும் கூட சில கிரா­மங்­களில் சிங்­க­ள­வர்கள் முஸ்­லிம்­களை முத­லாளி முத­லாளி என அழைப்­பதைக் காணலாம்.

இரு­த­ரப்­பி­ன­ருக்கும் மத்­தியில் அக்­கா­லத்தில் பிரச்­சினை ஏற்­ப­டு­மாயின் ஒரு முஸ்­லிமால் அதில் தலை­யிட்டுத் தீர்த்து வைக்க முடியும். அந்த அள­வுக்கு நாட்டின் சமா­தானக் காவ­லர்­க­ளா­கவே முஸ்­லிம்கள் வாழ்ந்­தி­ருக்­கின்­றனர்.

தற்­போது அந்த நிலை முற்­றிலும் மாறி எல்லா குற்­றங்­க­ளிலும் முஸ்­லிம்கள் பர­வ­லாக ஈடு­பட்டு சிறை­களில் அதிக எண்­ணிக்­கை­யாக அடை­பட்­டி­ருக்­கி­றார்கள். தின­சரி நீதி­மன்­றங்­களில் அதிக முஸ்லிம் கைதி­களின் பெயர்கள் அழைக்­கப்­ப­டு­கின்­றன. இது ஊட­கங்­க­ளுக்கும் ஏனைய சமூ­கங்­க­ளுக்கும் அதி­ச­யிக்­கத்­தக்க விட­ய­மா­கவே இருக்­கி­றது. அவை இதை வெளி­யி­டு­வது குறித்தும் ஏனைய சமூ­கத்­தினர் இதை அவ­தா­னிப்­பதைக் குறித்தும் முஸ்­லிம்கள் வெட்­கப்­ப­டு­வதை விடுத்து எதிர்ப்­பதில் எவ்­வித அர்த்­தமும் இல்லை.

 1. பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான நம்­பிக்­கை­யாளர் சபைத் தேர்­விலும் சச்­ச­ரவு நீதி­மன்றில் வழக்­காடல்.
 2. பள்­ளி­வா­சல்­களில் அதி­கார இழு­பறி வரு­டாந்த கணக்­க­றிக்­கையில் தில்லு முல்லு.
 3. பள்­ளி­வாசல் கட்­டு­மா­னங்­களில் மோசடி.
 4. ஹஜ் முக­வர்­களின் சூறை­யாடல்.
 5. ஸக்காத் நிதி வசூ­லிப்பில் மோசடி.
 6. வக்ப் சொத்­துக்கள் அப­க­ரிப்பு.
 7. ஸதகா எனும் தர்ம நிதி­யத்தின் பெயரால் வசூல்.
 8. தஃவத்தின் பெயரால் மோசடி– என்­றெல்லாம் செய்­திகள் ஊட­கங்­களில் வரு­மாயின் என்ன செய்­வது?
 9. பொது மைய­வா­டியும் சூறை.
 10. வாரிசு சொத்­திலும் வஞ்­ச­கமும் ஆணா­திக்­கமும்.
 11. காதி­நீ­தி­மன்­றங்­களில் விவா­க­ரத்­து­களின் பெருக்கம்.
 12. தாப­ரிப்பு வழங்­கு­வதில் பெரும் மோசடி.
 13. வர்த்­த­கத்தில் வஞ்­ச­கமும் வட்­டியின் ஆதிக்­கமும்.
 14. போதைப்­பொருள் பாவ­னையும் விற்­ப­னையும்.
 15. சீர­ழிந்த குடும்­பக்­கட்­ட­மைப்பு.

இத்­த­கைய நிலைப்­பா­டு­களால் ஏனைய சமூ­கங்­களின் மத்­தியில் முஸ்­லிம்­களின் மீதான நல்­ல­பி­மா­னங்கள் குறைந்து கொண்டே வரு­வதை நாம் சிந்­தித்துப் பார்க்க வேண்டும். நமது மூதா­தை­யரின் காலத்தில் ஒவ்­வொரு பள்­ளி­வா­சலும் அமைதிப் பூங்­கா­வா­கவே திகழ்ந்­தன. எளிய சிறிய கட்­ட­டங்­க­ளா­யினும் பக்தி மணம் கமழ்ந்­தது. இரட்டை வரி­சையில் மட்­டுமே தொழு­வோரின் எண்­ணிக்கை இருந்­த­போதும் அவர்­களின் தொழு­கை­களில் உயி­ரோட்டம் இருக்­கவே செய்­தது.

வரும்­படி குறை­வாக இருந்­த­போதும் அதில் திருப்தி காணும் பக்­குவம் இருந்­தது. மோதி­னாரே பாங்கும் சொல்வார், ஓதியும் கொடுப்பார், தொழு­விக்­கவும் செய்வார். இப்னு நபா­தாவின் அர­புத்­தமிழ் குத்பா கிதாபை வெள்­ளிக்­கி­ழமை ஜும்­ஆக்­களில் வாசிக்­கவும் செய்வார். வக்பு பள்­ளி­வாசல் என்­பதால் அதைப் பரி­பா­லித்துக் கொண்டும் துப்­பு­ர­வாக்கிக் கொண்டும் விளக்கையும் எரியவிடுவார். யாரேனும் ஹதியாக்கள் கொடுத்தாலன்றி யாவும் இவரது செலவிலேயே நிகழும்.

இலங்கை பல்லினம் வாழுகின்ற பல்வேறு மதங்களுக்கும் உத்தரவாதமுள்ள நாடு எனும் கணிப்பீடே தற்போது மேலெழுந்தவாரியாகக் காணப்படுகின்றது. எனினும் பேரின மத மொழி முன்னுரிமைகளோடு சிறுபான்மைக் காப்பீடான 29 ஆம் ஷரத்து நீக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் ஏதோ ஒரு வகையில் முஸ்லிம்களால் எதுவும் ஆகப்போவதில்லை எனும் கணிப்பில் முஸ்லிம்கள் விட்டு வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் முஸ்லிம்கள் 29 ஆம் ஷரத்தை மீட்டு கரையோர மாவட்டத்தையும் பெற்று முஸ்லிம் அலகு பற்றியும் சிந்திக்க வேண்டும். இவற்றை மதியூகமாக செய்ய வேண்டிய நிலையில்தான் சிலை உடைப்பு, ஆயுத சேகரிப்பு, தூபியில் படம்பிடிப்பு எனும் செய்திகள் காதுகளுக்கு எட்டுகின்றன.

 1. நாடு முழுக்க சிங்கள மக்களே மிகப் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.
 2. முஸ்லிம்கள் சிங்களக் கிராமங்களில் சிறு சிறு தொகையினராக நிலத்தொடர்பின்றி பரவலாக வாழ்கிறார்கள்.
 3. வாழ்வின் அன்றாடத் தேவைகள் யாவற்றுக்கும் முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களைச் சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது.
 4. எல்லாக்கிராமங்களிலும் ஏனையோரே முஸ்லிம்களுக்கான பாதுகாப்பினர் எனும் நிலையே காணப்படுகிறது.
 5. பாதுகாப்புத்துறையில் பெரும்பான்மையினரே 100 வீதம் இருக்கிறார்கள்.

எனவே முஸ்லிம்கள் பொறுப்புடன் விவேகமாக நடந்துகொள்ள வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.