பால்மா விவகாரம்; தகவலறியும் சட்டத்தின் கீழ் வர்த்தக அமைச்சிடம் தகவல்களை கோரும் ஹலால் சான்றிதழ் பேரவை

0 714

ஹலால் தரச் சான்­றி­த­ழினை வழங்கும் ஹலால்  சான்­றிதழ் பேரவை, இலங்கை கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்­சிடம் தக­வ­ல­றியும் உரிமைச் சட்­டத்தின் கீழ் பால்­மாக்­களின் தரம் தொடர்­பான தக­வல்­களைக் கோரி­யுள்­ளது.

குறித்த கோரிக்­கையை கைத்­தொழில் மற்றும் வர்த்­தக, அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன், பிரதி அமைச்சர் புத்­திக்க பதி­ரன மற்றும் அமைச்சின் செய­லாளர் ரஞ்சித் அசோக்க ஆகி­யோ­ரிடம் ஹலால்  சான்­றிதழ் பேரவை  முன்­வைத்­துள்­ளது.

இது தொடர்­பாக  ஹலால்  சான்­றிதழ் பேரவை வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில்,  ஹலால்  சான்­றிதழ் பேரவை அமைப்­பா­னது நூறு சத­வீதம் இலங்­கை­யர்­க­ளையே அங்­கத்­த­வர்­க­ளாகக் கொண்­டுள்­ளது. அத்­துடன் இது சர்­வ­தேச ரீதியில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஹலால் சான்­றிதழ் வழங்கும் இலங்­கை­யி­லுள்ள அமைப்­பாகும்.  ஹலால்  சான்­றிதழ் பேரவை சட்­ட­திட்­டங்­க­ளுக்கு அமை­வாக இது­வரை ஹலால் சான்­றி­தழ்­களை வழங்கி வந்­துள்­ளது. இலங்­கைக்கு இறக்­கு­மதி செய்­யப்­பட்ட பால்­மாக்­களில் பன்றிக் கொழுப்பு அடங்­கி­யுள்­ள­தாக அண்­மையில் தக­வல்கள் வெளி­யா­கின.  ஹலால்  சான்­றிதழ் பேர­வை­யினால் சான்­றிதழ் வழங்­கப்­பட்ட பால்­மாக்­க­ளிலும் பன்­றிக்­கொ­ழுப்பு அடங்­கி­யுள்­ள­தாக தகவல் வெளி­யா­ன­மை­யினால் பொது­மக்கள் மன உளைச்­ச­லுக்கு உள்­ளா­கி­யுள்­ள­துடன்  ஹலால்  சான்­றிதழ் பேர­வை­யினால் வழங்­கப்­படும் ஹலால் சான்­றி­தழின் நம்­ப­கத்­தன்மை குறித்து சந்­தே­கமும் அவர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது.

இலங்­கைக்கு இறக்­கு­மதி செய்­யப்­பட்ட பால்மாப் பொருட்­களுள் லக்ஸ்ப்ரே, ரெட்கவ், நெஸ்ப்ரே, ரத்தி, அங்கர், அன்லீன், டயமண்ட், மெலிபன் மில்க் மற்றும் மெல்கோ ஆகி­ய­வற்­றுக்கு  ஹலால்  சான்­றிதழ் பேரவை, ஹலால் சான்­றி­த­ழினை வழங்­கி­யுள்­ளது.

தக­வல்­களை அறிந்­து­கொள்ளும் உரிமை இருக்­கின்­ற­தென்­பதன் அடிப்­ப­டையில் பின்­வரும் தக­வல்­களை  ஹலால்  சான்­றிதழ் பேரவை  கோரு­கி­றது.

இது­வ­ரையில் பால்மா பொருட்­களில் பன்றிக் கொழுப்பு கலக்­கப்­பட்­டுள்­ள­தாக கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர், பிரதி அமைச்சர் அல்­லது அமைச்­சுக்கு கிடைக்­கப்­பெற்ற முறைப்­பா­டுகள், இறக்­கு­மதி செய்­யப்­பட்ட பால்­மாக்­களில் பன்­றிக்­கொ­ழுப்பு இருப்­ப­தாக உறுதி செய்­யப்­பட்­டமை தொடர்­பான விட­யங்கள், பால்­மாக்­களின் தரத்தை பரி­சோ­திக்க பயன்­ப­டுத்­தப்­பட்ட இர­சா­யன பகுப்­பாய்வு முறைகள், அது தொடர்­பான நம்­பத்­த­குந்த அறிக்­கைகள் என்­ப­வற்றை  எமக்கு தந்­து­த­வு­மாறு கோருகிறோம் மேலும் மேற்சொன்ன விடயங்கள் தொடர்பான ஒத்திசைவான தகவல்களையும் கடந்த ஆறு மாதங்கள், 3 வருடங்கள் மற்றும் அதற்கு முன்னரான காலப் பகுதிக்குரிய தகவல்களை வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.