இலங்கையில் நாத்திகக் கொள்கையை மாணவர்களிடையே புகுத்த முயற்சி

உலமா சபையின் பத்வா குழு இணைப்பாளர் மின்ஹாஜ் முப்தி

0 524

சில கல்­வி­நி­லை­யங்­க­ளி­னூ­டாக இலங்­கையில் மத­சார்­பற்ற நாத்­திகக் கொள்­கையை மாண­வர்­க­ளி­டையே புகுத்­து­வ­தற்கு புத்­தி­ஜீ­விகள் எனக்­கூ­றிக்­கொள்ளும் சிலர் முற்­ப­டு­கின்­றனர். இதனை நாம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. அத்­தடன் இளை­ஞர்­களை அதனுள் உள்­வாங்­க அனு­ம­திக்க முடி­யாது என்று அகில இலங்கை ஜம்­இ­ய்யத்துல் உல­மா­ச­பையின் பத்வா- குழு இணைப்­பாளர் அஷ்ஷெய்க் மின்ஹாஜ்  முப்தி கூறினார்.

இரத்­தி­ன­புரி  ஜென்னத் ஜும்ஆ பள்­ளி­வா­சலில் இயங்கும் மக்தப் பிரிவின் (அற­நெ­றிப்­பா­ட­சா­லையின்) வரு­டாந்த பரி­ச­ளிப்பு விழா நேற்­று­முன்­தினம் மாலை ஜென்னத் ஜும்ஆ பள்­ளி­வாசல் பிர­தான மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. அதில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே இதனை தெரி­வித்தார்.

ஜென்னத் ஜும்ஆ பள்­ளி­வா­சலின் நிரு­வா­க­ச­பையின் தலைவர் மொகமட் இப்­ராஹிம், பொதுச்­செ­ய­லாளர் எம்.எஸ்.எம்.மில்ஹான் (அதிபர்), உறுப்­பி­னர்கள் உள்­ளிட்ட பெருந்­தி­ர­ளா­ன­வர்கள் கலந்து கொண்ட இந்­நி­கழ்வில் அவர் தொடர்ந்து பேசு­கையில்,

இன்­றைய நவீன மய­மாக்­கலில் இளை­ஞர்கள் சமயங்­க­ளுக்கு அப்பால் செல்­கின்­றனர். இதனை தடுத்­து­நி­றுத்தி அவர்­களை நல்­வ­ழிப்­ப­டுத்த  சம­யங்கள் உத­வி­பு­ரியும்.  சமய போத­னை­களை சிறு­வ­ய­தி­லி­ருந்தே பெற்­றோர்கள் தமது பிள்­ளை­க­ளுக்கு புகட்­ட­வேண்டும்.

பெற்­றோர்கள் முறை­யாக தமது பிள்­ளை­களை வளர்க்க வேண்டும். அவ்­வாறு வளர்க்­கா­விட்டால் பின்னர் அவர்­க­ளுக்­காக கண்ணீர் விட்டு அழ­வேண்­டி­யேற்­படும். பிள்­ளை­களை  முறை­யாக  வளர்க்க  வேண்­டிய பொறுப்பு பெண்­களை அதா­வது தாய்­மார்­களை சாரும். கூடுதல் நேரம் தம­து­பிள்­ளை­க­ளுடன்  தாய்­மார்கள் இருப்­ப­தனால் அவர்கள் நல்­வ­ழிப்­ப­டுத்தும் முறை­களை பிள்­ளை­க­ளுக்கு அறி­வூட்­ட­வேண்டும்.

நாம் நமது பிள்­ளை­களை பொறி­யி­ய­லா­ளர்­க­ளாக, வைத்­தி­யர்­க­ளாக, உய­ர­தி­கா­ரி­க­ளாக வளர்க்க நினைக்­கின்றோம். அதே போல் மார்க்கப் பற்­றுள்­ள­வர்­க­ளாக வளர்க்­க­வேண்டும். அத்­துடன் பெற்­றோர்கள் தம­து­பிள்­ளை­க­ளுக்­காக  கூடு­த­லான பிரார்த்­த­னைகள் (துஆ) செய்­ய­வேண்டும்.

சம­யத்தை முறை­யாக கடைப்­பி­டிப்­ப­வர்கள்  மற்றும் மார்க்க அறிவை பெற்­ற­வர்கள் உல­கி­லுள்ள எந்­த­வொரு சவால்­க­ளுக்கும் முகங்­கொ­டுத்து வெற்­றி­கொள்ளக் கூடி­ய­வர்­க­ளாக இருப்­பார்கள். எனவே பெற்­றோர்கள் பண்­பாடு, மதம், மொழி, கலா­சாரம், கல்வி, நடத்தை என்­ப­ன­வற்றில்  பிள்­ளை­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யாக இருக்­க­வேண்டும். நாம் முன்­மா­தி­ரி­யாக இல்­லாமல் நாக­ரி­க­மற்ற முறையில் நடந்­து­கொண்டால் நமது பிள்­ளை­களும் அவ்­வாறே நடப்­பார்கள்.

இன்று சிறை­வாசம் அனு­ப­விப்­ப­வர்­களில்  கூடு­த­லா­ன­வர்கள் இளை­ஞர்­க­ளாக இருக்­கின்­றனர். குறிப்­பாக 11 வயது தொடக்கம் 25 வய­தா­ன­வர்­களே உள்­ளனர். இதனை அகில இலங்கை ஜம்­இ­ய்யத்துல் உலமா சபை மேற்­கொண்ட ஆய்­வி­லி­ருந்து அறிந்து கொண்டோம். இத­னை­விட கூடுதலான இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை மற்றும் நுர்நடத்தை உள்ளவாகளாக உள்ளனர். எமது இளைஞர்கள் எதிர்காலத்தில் இவ்வாறு தீய பழக்க வழக்கங்களுக்கு உட்படக்கூடாது என்பதற்காக இதனை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைபள்ளிவாசல்கள் தோறும் மக்தப் பிரிவுகளை உருவாக்கி சமய போதனைகளை மாணவர்களுக்கு புகட்டிவருகின்றது. என்றார்.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.