வெளிநாட்டில் பெற்றோர்! சீரழியும் பிள்ளைகள்

0 3,618

இன்­றைய சமூ­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு என்பது தவிர்க்க முடி­யாத ஒன்­றாக மாறி விட்­டது. வெளி­நாட்­டுக்குச் சென்றால் அதி­க­மாகப் பொரு­ளீட்­டலாம், வீடு கட்­டலாம் என்ற சரா­சரி மனித ஆசை­யு­ட­னேயே எம்­ம­வர்கள் வெளி­நாட்டை நோக்கி படை­யெ­டுக்­கி­றார்கள். வெளி­நாட்­டுக்குச் செல்­வதும் பொரு­ளீட்­டு­வதும் தவிர்க்­கப்­பட வேண்­டிய ஒன்­றல்ல. இருந்­த­போ­திலும் திரு­ம­ண­மா­ன­வர்கள் வெளி­நாட்­டுக்கு வேலை­வாய்ப்பு கருதி செல்லும்போது அவர்­க­ளு­டைய பிள்­ளை­களின் பாது­காப்பு எந்­த­ளவு உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என்­பது தொடர்­பாக விழிப்­ப­டைய வேண்­டி­யது காலத்தின் கட்­டாயத் தேவை­யாகும்.

கடன் சுமை, குடும்ப உறவில் ஏற்­படும் சிக்­கல்கள் உட்­பட பல்­வேறு பொரு­ளா­தார பிரச்­சி­னைகள் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பை நாடு­வ­தற்கு கார­ணங்­க­ளாக அமை­கின்­றன. இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தின் அறிக்­கை­க­ளின்­படி வரு­டாந்தம் இரண்டு இலட்சத்திற்கும் மேற்­பட்டோர் வேலை­வாய்ப்பு கருதி வெளி­நாட்­டுக்குச் செல்­கின்­றார்கள். இந்த எண்­ணிக்கை வரு­டாந்தம் உயர்ந்த வண்­ண­மே­யுள்­ளது.

இவர்­களுள் 56,057 இற்கும் மேற்­பட்டோர் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு பணிப்­பெண்­க­ளாக சென்­ற­வர்­க­ளாவர். வெளி­நா­டு­க­ளுக்கு வேலை­வாய்ப்­புக்­காக சென்­ற­வர்கள் தொடர்­பாக இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் 2017 இல் வெளி­யிட்ட அறிக்­கை­க­ளின்­படி இலங்­கை­யர்கள் தொடர்­பாக 4617 முறைப்­பா­டுகள் பதி­வு­செய்­யப்­பட்­டி­ருந்­தன. அவற்றுள் 364 பேர் துன்­பு­றுத்­தப்­பட்டு சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­ட­தா­கவும் 397 பேர் இலங்­கையில் உள்­ள­ குடும்பத்தினரை தொடர்பு கொள்­வதில் இன்­னல்­களை சந்­தித்­த­தா­கவும் 64 பேர் காணா­ம­லாக்­கப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கின்­றன. 1794 பேர் சட்­டத்­துக்கு முர­ணான குற்­றச்­சாட்­டு­களில் சந்­தேக நபர்­க­ளாக சிக்­கி­யுள்­ள­துடன் 291 மர­ணச்­சம்­ப­வங்­களும் பதி­வா­கி­யுள்­ளன. மேலும், 89 பேர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­துடன் 647 பேர் ஊதியம் வழங்­கப்­ப­டாமல் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுத்­த­தாக அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன.

வெளி­நாடு செல்­வ­தற்கு எத்­தனை நியா­ய­மான கார­ணங்கள் முன்­வைக்­கப்­பட்­டாலும் பிள்­ளை­களை சிறந்த முறையில் வளர்ப்­ப­தற்கு வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு தடை­யாக அமையும் என்­பதில் மாற்­றுக்­க­ருத்­து­க­ளுக்கு இட­மில்லை. குடும்ப வாழ்க்­கையைப் பொறுத்­த­வ­ரையில் ஒரு தந்­தை­யி­னு­டைய வகி­பாகம் இன்­றி­ய­மை­யாத ஒன்­றாகும். இன்று பெரும்­பாலும் வெளி­நாட்டில் உள்­ள­வர்கள் தந்­தை­மார்­க­ளா­கவே உள்­ளனர்.

பிள்­ளை­க­ளு­டைய மன­நி­லையைப் பொறுத்­த­வ­ரையில் வயது வந்த ஒரு­வரின் துணை­யின்றி அவர்­களால் வாழ முடி­யாத நிலையே காணப்­ப­டு­கி­றது. மனப்­பக்­குவம் இல்­லாத போது எதையும் செய்­யக்­கூ­டிய துணிச்சல் பிள்­ளை­க­ளுக்கு காணப்­ப­டு­கி­றது. பெற்­றோருள் ஒரு­வரோ அல்­லது இரு­வ­ருமோ அருகில் இல்­லாமல் சவால் மிகுந்த இந்த பரு­வத்தை சமா­ளிப்­பது கடி­ன­மான ஒன்று என்­பதை சொல்லித் தெரி­ய­வேண்­டி­ய­தில்லை.

வெளி­நாட்டில் நீண்ட காலம் ஒருவர் தங்­கி­விடும் போது குறித்த நபர் தனி­மைக்கு பழக்­கப்­படும் ஒரு நிலை உண்­டா­கி­ வி­டு­கி­றது. குடும்­பத்­துடன் அன்பைப் பகிர்ந்து கொள்ளும் நிலை படிப்­ப­டி­யாக தளர்­வ­டை­கி­றது. புதிய சூழல் ஏற்­ப­டுத்தும் பிர­தான தாக்­கமே இது­வென்­பது உள­வி­ய­லா­ளர்­களின் கருத்­தாகும். தனிமை அனை­வ­ரையும் தவறு செய்­யவே தூண்டும். மனி­தனை தவறு செய்­யத்­தூண்டும் சக்தி தனி­மைக்கு உண்டு. வெளி­நாடு சென்­ற­வர்கள் தனி­மையின் தாக்­கத்தால் மேற்­கத்­தைய கலா­சா­ரத்தை பின்­பற்றும் நிலை தோன்­று­வதால் நாட்டில் உள்ள பிள்­ளை­களின் எதிர்­காலம் சீர்­கெ­டு­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­றுகள் உண்­டா­கி­வி­டு­கின்­றன.

குடும்­பத்தை விட்டு வெகு­தூரம் செல்­வதால் நண்­பர்­களின் செல்­வாக்கு அதி­க­ரித்து குடும்­பத்தின் செல்­வாக்கு குறைந்து விடு­கின்­றது. இதன் மூலம் சுய இன்பம், தன்­னினச் சேர்க்கை போன்ற சிற்­றின்ப மோகங்கள் ஒரு மனி­தனை குடும்ப வாழ்க்­கையில் இருந்தும் தூர­மாக்கி விடு­கின்­றது.

பிள்­ளைகள் சிறந்த முறையில் வளர்­வ­தற்கு தாயி­னு­டைய அன்பும் தந்­தை­யு­டைய அர­வ­ணைப்பும் அவ­சி­ய­மாகும். இரு­வருள் ஒரு­வ­ரேனும் கலா­சார ரீதி­யாக சீர்­கு­லை­வது ஏதா­வது ஒரு வகையில் பிள்­ளையை பாதிக்கும். அந்­த­வ­கையில் தந்தை வெளி­நாட்டில் இருக்கும் பட்­சத்தில் வீட்டில் உள்ள பிள்­ளை­களின் ஒழுக்க விட­யங்­களை கண்­கா­ணிப்­பது இல­கு­வான காரி­ய­மல்ல. மேலும் இதன்­போது பதின்ம வய­தினர் போதைப் பொருள் பாவ­னைக்கு உட்­ப­டவும் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­தப்­ப­டவும் வாய்ப்­புள்­ளது.

இலங்­கை­யர்கள் பல்­வேறு நாடு­களில் வேலை­வாய்ப்பை பெற்­றி­ருக்­கி­றார்கள். உலக நாடு­களை எடுத்துக் கொண்டால் கத்தார், சவூதி, ஜப்பான், குவைத், ஐக்­கிய அரபு அமீ­ரகம் போன்ற நாடு­களில் இலங்­கை­யர்கள் வேலை செய்­கி­றார்கள். வரு­டாந்தம் இலட்­சக்­க­ணக்­கான இலங்­கை­யர்­களின் மனித வலு­வினை பிறி­தொரு நாடே பெற்­றுக்­கொள்­கி­றது. இது இலங்கை அரசின் கையா­லா­காத தன்­மையை எடுத்துக் காட்­டு­கின்­றது. நம் நாட்­ட­வர்­களின் மனித சக்தி நமக்­குத்தான் கிடைக்க வேண்டும். எம்­ம­வர்­களின் மனித வலு­வினை பிற நாட்­ட­வர்கள் பெறும்­போது குறித்த நாடுகள் இலங்­கையை பின் தள்­ளு­வ­தற்கு இலங்­கையே கார­ண­மாக அமைந்து விடு­கின்­றது.

சிறுவர் உரி­மை­களும் அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டிய விட­யங்­களும் சிறுவர் தினத்தில் மாத்­தி­ரமே பேசப்­படும் பொரு­ளாக மாறி­விட்­டது. ஏனைய நாட்­களில் சிறு­வர்­களின் தேவைகள் கண்­டு­கொள்­ளப்­ப­டு­வ­தில்லை என்­பது தான் நிதர்­ச­ன­மான உண்மை. அந்த வகையில் வெளி­நாடு செல்லும் பெற்­றோர்கள் தொடர்­பாக இலங்கை அர­சாங்கம் என்ன நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கி­றது என்று வின­வினால் நிச்­ச­ய­மாக அதற்கு விடை கிடை­யாது.

சென்ற நூற்­றாண்டின் ஆரம்­பத்தில் மலே­ஷியா மற்றும் சிங்­கப்பூர் போன்ற நாடுகள் இலங்­கையை விட அர­சியல், பொரு­ளா­தார நிலை­மையில் பின்­தங்­கியே காணப்­பட்­டன. ஆனால் தற்­போது சகல துறை­க­ளிலும் குறித்த நாடுகள் இலங்­கையை பின்­தள்­ளி­யி­ருக்­கி­றது. அதற்­கான காரணம் மனித வலுச்­சக்­தி­யினை வெளி­நாட்­டுக்கு விலை­பேசி விற்­காமல் உள்­நாட்­டி­லேயே பிர­யோ­கித்­தமை தான் என்று கூறினால் அது மிகை­யா­காது. ஒரு நாடு, நாட்டின் பொரு­ளா­தார நலன் திட்­டங்­களில் வெற்றி காண வேண்டும் என்றால் தூர­நோக்­குடன் செயற்­படும் பட்­சத்­தி­லேயே அது சாத்­தி­ய­மாகும். மலே­ஷி­யாவும் சிங்­கப்­பூரும், “இன்­றைய சிறு­வர்­களே நாளைய தலை­வர்கள்” என்ற அம்­சத்தை விளங்கிச் செயற்­பட்­டி­ருக்­கின்­றன. நாட்டின் குடி­மக்­க­ளுக்கு நல்ல முறையில் ஊதியம் வழங்­கப்­பட வேண்டும். அவ்­வாறு இல்­லா­விடின் பிள்­ளை­களைப் பிரிந்து வெளி­நாடு செல்ல வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலைதான் அனை­வ­ருக்கும் உண்­டாகும்.

இன்று பிள்­ளை­களைப் பிரிந்து வெளி­நாடு செல்லும் பெற்­றோர்கள் தமக்கு சொந்­த­மாக வீடு இல்­லாத பிரச்­சி­னை­யையே கூறி வரு­கின்­றார்கள். ஆனால் எமது நாட்டில் வீட­மைப்புத் திட்டம் பர­வ­லாக பேசப்­படும் ஒன்­றா­கவே காணப்­ப­டு­கி­றது. ஆயி­ரக்­க­ணக்­கான வீடுகள் அர­சாங்­கத்­தினால் கட்­டப்­ப­டு­வ­தா­கவும் அதற்­காக கோடிக்­க­ணக்கில் நிதி ஒதுக்­கப்­ப­டு­வ­தா­கவும் தொலை­காட்சி, பத்­தி­ரிகை மற்றும் வானொலி விளம்­ப­ரங்­களில் காண்­கிறோம். ஆனால் இன்று நமது சமூ­கத்தில் பலர் சொந்த வீடின்றி தவிக்கும் நிலை தொடர்­கி­றது என்று கூறு­வதை விட இனி­மேலும் தொடரும் என்று கூறு­வதே மிகப் பொருத்­த­மா­னது. கட்­டப்­ப­டு­கின்ற வீடுகள் உரிய முறையில் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டு­வ­தில்லை என்­பதே உண்மை. சுனாமி, மண்­ச­ரிவு போன்ற இயற்கை அனர்த்­தங்­க­ளினால் வீடு­களை இழந்­த­வர்­க­ளுக்கு,  வீடு­களை வழங்க வீடுகள் கட்­டப்­பட்­டுள்ள போதிலும் அவை யாருக்கும் உத­வாத காட்­டுச்­செ­டிகள் போல பார்ப்­பா­ரின்றி கிடக்­கின்­றன.

குறைந்­த­பட்சம் கட்­டப்­பட்ட வீடு­களை பகிர்ந்­த­ளித்­தா­லா­வது பலர் வெளி­நாட்டு வேலை வாய்ப்பை நாடு­வதை மட்­டுப்­ப­டுத்­தலாம். ஆனால் அர­சாங்­கத்தின் ஆமை வேகம் எம்­ம­வர்­களை வெளி­நாட்டு வேலை வாய்ப்பை நாட வைக்­கி­றது. எமது பிள்­ளைகள் சீர்­கெ­டு­வ­தற்கு எமது அர­சாங்கம் கார­ண­மாக அமைந்து விடு­கின்­றது.

நாட்டின் பல துறைகள் சீர்­கெ­டு­வ­தற்கு மூளை­சா­லி­களின் வெளி­யேற்றம் கார­ண­மாக அமை­கி­றது. அரச ஊழி­யர்­களின் சம்­பளப் பிரச்­சினை மற்றும் தனியார் நிறு­வ­னங்­களின் ஆதிக்கம் என்­ப­னவும் வெளி­நாட்டு வேலை வாய்ப்பை நாடு­வ­தற்கு கார­ணங்­க­ளாக அமை­கின்­றன. அர­சாங்கப் பரீட்­சைகள் தொடர்பில் காணப்­ப­டு­கின்ற கடும்­போட்­டி­களும் வெளி­நாட்டு வேலை வாய்ப்பை தேட கார­ண­மாக அமை­கி­றது.

இன்று பல வீடு­களில் பிள்­ளை­களின் பிறழ்வு நடத்­தைக்கு தந்தை வெளி­நாட்டில் உள்­ளமை பிர­தான கார­ண­மாக அமை­கி­றது. ஒரு சில வீடு­களில் பிள்­ளை­களின் பிறழ்வு நடத்­தையை கட்­டுப்­ப­டுத்­து­வ­தென்­பது தாய் ஒரு­வரால் மாத்­திரம் சாத்­தி­ய­மான ஒன்­றாக இருப்­ப­தில்லை. இதன்­போது மனப்­பக்­குவம் இல்­லாத பிள்ளை தான்­தோன்­றித்­த­ன­மாக வளர்­வ­தற்­கான சந்­தர்ப்பம் அமைந்து விடு­கி­றது. இவ்­வா­றான பிள்­ளை­களின் தந்­தைமார் வெளி­நாட்டில் காலம் கடத்­து­வதால் பிள்­ளை­களின் எதிர்­காலம் சீர்­கெடும் ஒரு­நிலை உரு­வா­கி­றது. வெளி­நாட்டு சம்­பாத்­தி­யமே சிறந்­த­தென பொரு­ளீட்டச் சென்ற எத்­த­னையோ தந்­தை­மார்கள் இன்று பிள்­ளை­களின் எதிர் காலத்தை எண்ணி வருந்­து­வதை நாம் கண்­கூ­டாக பார்க்­கிறோம். அவ்­வா­றான பிள்­ளைகள் சமூ­கத்­துக்கு சுமை­யாக ஊர்­மக்­களின் சாபத்தை நாளாந்தம் கேட்டு வரு­கி­றார்கள்.

இலங்­கையில் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்ட சிறு­வர்­களில் பாதி­ப்

பே­ரிலும் அதி­க­மா­ன­வர்­க­ளு­டைய தாயோ அல்­லது தந்­தையோ வெளி­நாட்டில் உள்­ள­வர்­க­ளாக இருந்­ததை கடந்த கால சம்­ப­வங்கள் நமக்கு உணர்த்­து­கி­றன்றன. நம்மில் பலர் பிள்­ளை­க­ளுக்­கா­கவே வாழ்­கிறோம். பிள்­ளைகள் மீது பாலியல் சீண்டல் நடை­பெ­று­வதை எந்தவொரு பெற்­றோ­ராலும் நிச்­ச­ய­மாக ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. ஆகவே இந்த அடிப்­படை நலன் கரு­தி­யா­வது இன்­றைய தந்­தை­மார்கள் வெளி­நாட்டு வேலை வாய்ப்பை தவிர்க்க வேண்டும்.

எமது நாட்டின் உழைப்பை இன்­னொரு நாடு சுரண்­டு­வ­தற்கு இட­ம­ளித்­துள்ள எமது அர­சாங்கம் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பை எமது நாட்­ட­வர்கள் துறந்து இலங்­கைக்­குள்­ளேயே அனை­வ­ருக்கும் வேலை­வாய்ப்பை ஏற்­ப­டுத்திக் கொடுக்கும் சாத்­தி­யத்­திற்கு இட­மில்லை. ஆகக்­கு­றைந்­தது சிறு­வர்­களின் உள விருத்­தி­யையும் பாது­காப்­பையும் உறு­திப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­யை­யா­வது அர­சாங்கம் மேற்­கொள்ள வேண்டும்.

செல்­வங்­களுள் மிகச் சிறந்த செல்வம் குழந்தைச் செல்வம் தான். அத்தகைய செல்­வங்­களை நாம் விட்டுப் பிரி­வ­தென்­பது அந்த செல்­வங்­களை உள ரீதி­யாக பாதிக்கும். அன்பு தான் அனை­வ­ருக்கும் தேவை­யான அடிப்­படை அம்சம். கண்­ணீரைக் கூட ஆனந்தக் கண்­ணீ­ராக்கும் சக்தி அன்­புக்கு உண்டு. ஆகவே, நாம் எமது பிள்­ளைகள் மீது­அன்பு செலுத்த நேரம் ஒதுக்க வேண்டும். தூரம் கூடினால் பேசும் ஆசை குறையும். பேச்சு குறைந்தால் அன்பும் குறைந்து செல்லும். பிள்­ளை­களின் மனதை நோக­டிக்கும் வெளி­நாட்டு வாழ்க்கை நிச்­ச­ய­மாக வேண்­டாத ஒன்று. வெளிநாடு செல்­வ­தற்கு எத்­தனை நியா­ய­மான கார­ணங்கள் முன்­வைக்­கப்­பட்­டாலும் பிள்­ளை­களை சிறந்த முறையில் வளர்ப்­ப­தற்கு  வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு தடை­யாக அமையும் என்­பதில் மாற்று கருத்­துக்­க­ளுக்கு இட­மில்லை. எனவே முடிந்­த­வரை நாட்­டுக்­குள்­ளேயே தொழிலை அமைத்­துக்­கொள்ள நாம் அனைவரும் முன்வரவேண்டும். முடிந்தவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பினை புறக்கணிக்க வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.