பால்மா விவ­கா­ரத்தில் பாரிய சந்­தே­கங்கள்

விசா­ர­ணைக்கு தெரி­வுக்­குழு அமைக்­கப்­ப­ட­வேண்டும் என சபையில் மரிக்கார் எம்.பி. வலி­யு­றுத்து

0 558

இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்­மாவில் பன்றிக்­கொ­ழுப்பு கலந்­தி­ருப்­ப­தாக பிர­தி­ய­மைச்சர் புத்­திக்க பத்­தி­ரன இந்த சபையில் அறி­வித்­தி­ருந்தார். அது­தொ­டர்­பாக நுகர்வோர் அதி­கா­ர­சபை பரி­சீ­லனை செய்­வதாக தெரி­வித்­தி­ருக்­கின்­ற­போதும் அந்த நிறு­வ­னங்கள் முறை­யாகப்  பரி­சீ­லனை செய்­வ­தில்லை. அதனால் இது தொடர்பில் பாரிய சந்­தேகம் எழு­கின்­றது என்று கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம். மரிக்கார் நேற்­றைய தினம் சபையில் சுட்­டிக்­காட்­டினார். பாரா­ளு­மன்றம் நேற்று சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் கூடி­யது. சபா­நா­ய­கரின் அறி­விப்­புக்­களை அடுத்து, ஐக்­கிய தேசியக் கட்சி உறுப்­பினர் எஸ்.எம். மரிக்கார் ஒழுங்குப் பிரச்­சி­னை­யொன்றை முன்­வைத்து தெரி­விக்­கையில்,  பால் மாவில் பன்றிக் கொழுப்பு கலந்­தி­ருப்­பது குறித்து இந்த நாட்­டி­லி­ருக்கும் முஸ்லிம் மக்­களும் பன்றி இறைச்­சியை ஆகா­ரத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளாமல் இருக்கும் சிங்­கள, தமிழ் மக்­களும் பாரிய பிரச்­சி­னைக்கு முகம்­கொ­டுக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. அத்­துடன் இது­தொ­டர்­பாக பரி­சீ­லனை மேற்­கொள்ளும் நிறு­வ­னங்­க­ளுக்குப் பணம் வழங்­கியும் அந்த நிறு­வ­னங்கள் அதனை செய்­வ­தில்லை என்றால் பாரிய பிரச்­சி­னை­யாகும்.

அதனால் இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்­மாவைப் பயன்­ப­டுத்­து­வதா இல்­லையா என்­பது தொடர்பில்  நாட்­டி­லி­ருக்கும் 20வீத­மான மக்கள் பாரிய சிக்­க­லுக்கு உள்­ளாகி இருக்­கின்­றனர். இந்த விட­யத்தின் பார­தூ­ரத்தை கருத்­திற்­கொண்டு இது­தொ­டர்­பாக தேடிப்­பார்க்க பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழு­வொன்றை அமைக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கின்றேன் என்றார்.

இதற்கு சபா­நா­யகர் பதி­ல­ளிக்­கையில், இந்த விடயம் தொடர்­பாக சம்­பந்­தப்­பட்ட அமைச்­ச­ருக்கு அறி­வு­றுத்­து­கின்றேன் என்றார்.

இதன்­போது சுகா­தார அமைச்சர் ராஜித்த சேனா­ரத்ன தெரி­விக்­கையில், இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா தொடர்­பாக சபைக்கு தெரி­வித்த விட­யங்கள் உண்­மைக்கு புறம்­பா­ன­தாகும். அது­தொ­டர்பில் பூரண பரி­சீ­லனை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது. எமது அமைச்சின் உணவு பாது­காப்பு பிரி­வினர் அது­தொ­டர்­பான பூரண அறிக்­கையை எனக்கு காட்­டி­னார்கள். அதனை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கின்றேன். அந்த அறிக்­கையில் நியூ­ஸி­லாந்தில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வ­றிக்கை மற்றும் எமது நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வ­றிக்­கையும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. அதில் பாலைத்­த­விர வேறு எந்த விட­யங்­களும் குறித்த பால்­மாவில் இல்­லை­யெனத் தெரி­விக்­கப்­ப­டுள்­ளது.

அதனால் வேறு எங்­கி­ருந்தோ வந்த முற்­றிலும் பொய்­யான அறி­க்கையே பிரதி அமைச்­சரால் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அது­தொ­டர்­பான பூரண அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிப்பேன் என்றார்.

இதன்­போது எதிர்க்­கட்சி உறுப்­பினர் ரஞ்சித் சொய்சா ஒழுங்கு பிரச்­சி­னையை முன்­வைத்து தெரி­விக்­கையில், பிரதி அமைச்சர் புத்­திக்க பத்­தி­ரன, அவ­ரிடம் இருக்கும் அறிக்­கை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே பால்மா தொடர்­பாக சபைக்கு அறி­வித்­தி­ருந்தார். ஆனால் தற்­போது பிரதி அமைச்சர் சபையில் இல்­லாத நேரத்தில் முழுத் தேசத்­துக்கும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் பிரதி அமைச்­சரின் கூற்றை சுகா­தார அமைச்சர்  பொய்­யான கூற்று என தெரி­விப்­பதன் மூலம் பிரதி அமைச்­ச­ருக்கு பதி­ல­ளிக்கும் சந்­தர்ப்பம் இல்­லாமல் போயுள்­ளது. பால்மா நிறு­வ­னங்­க­ளிடம் பணம் பெற்­றுக்­கொள்­ப­வர்கள் தொடர்­பா­கவும் எங்­க­ளுக்கு தெரியும் என்றார்.

அதன்­போது எழுந்த விமல் வீர­வன்ச எம்.பி. தெரி­விக்­கையில், சுகா­தார அமைச்­சரின் கருத்­துப்­படி இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்­மாவில் எந்தப் பிரச்­சி­னையும் இல்லை. ஆனால் இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்­மாவை ஆராய்ச்சி செய்­வ­தற்­காக, புத்­தி­ஜீ­விகள் அடங்­கிய மவ்­பிம லங்கா அமைப்பு அதன் மாதி­ரி­களை பிரித்­தா­னி­யா­வுக்கு அனுப்பி அதன் ஆய்­வ­றிக்­கையை பெற்­றுக்­கொண்­டுள்­ளது. இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்­மாவில் இவ்­வா­றான அம்­சங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக  அந்த அமைப்பு நாட்டு மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

அத­னைத்­தொ­டர்ந்து பால்மா கம்­ப­னிகள் மவ்­பிம லங்கா அமைப்­புக்கு எதி­ராக நீதி­மன்ற நட­வ­டிக்­கையை எடுத்­தது. தற்­போதும் அது­தொ­டர்­பான நீதி­மன்ற விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. குறித்த அமைப்பு தங்­களின் சாட்­சி­யாக, பிரித்­தா­னி­யாவில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆராய்ச்­சியின் அறிக்­கையை நீதி­மன்­றத்­துக்கு சமர்ப்­பித்­துள்­ளது. அதனால் இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா தொடர்பில் எந்த பரி­சீ­ல­னையும் இல்­லாமல் பிரச்­சினை இல்லை என தெரி­விப்­பது தவ­றாகும்.

அத்­துடன் புத்­திக்க பத்­தி­ரன பிரதி அமைச்சர் நுகர்வோர் பாது­காப்பு அதி­கா­ர­ச­பையின் அறிக்­கை­க­ளு­டனே அந்த விட­யங்­களை முன்­வைத்தார். இலங்­கையில் ஆராய்ச்சி நிறு­வ­னங்­க­ளுக்கு இந்த பால்மா மாதி­ரி­களை அனுப்­பினால் அது­தொ­டர்பில் முடி­வுகள் வரு­வதில்லை என்றே பிரதி அமைச்சர் தெரி­வித்தார். அதா­வது, ஆராய்ச்சி நிறு­வ­னங்­க­ளையும் கம்­ப­னிக்­கா­ரர்கள் பணம் கொடுத்து வாங்­கிக்­கொண்­டார்­களா என்ற சந்­தேகம் இருக்­கின்­றது. இதனால் பால்மா கம்­ப­னிக்­கா­ரர்­களின் கொந்தராத்தை மேற்கொள்ளாமல் இதுதொடர்பில் சர்வதேச ரீதியில் முறையான விசாரணை நடத்தவேண்டும் என்பதுடன் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றையும் அமைக்கவேண்டும் என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஆனந்த அளுத்கமகே தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பில் பிரதியமைச்சர் இந்த சபையில் ஒரு கருத்தை முன்வைத்தார். ஆனால் சுகாரதார அமைச்சர் அந்தக் கருத்து பொய்யெனத் தெரிவிக்கின்றார். இவர்களில் யார் உண்மையைத் தெரிவிக்கின்றார்கள் என்பதை மக்களுக்குத் தெரிவிக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.