கசோக்ஜி படுகொலை விவகாரம்: ஐ.நா. அதிகாரி துருக்கி விஜயம்

0 582

ஊடகவியலாளர் ஜமால் கசோக்ஜியின் படுகொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐ.நா. அதிகாரி எக்னஸ் கலமண்ட்  கடந்த செவ்வாய்க்கிழமை துருக்கிக்கு விஜயம் செய்தார். ஜமால் கசோக்ஜியின் படுகொலை செய்யப்பட்ட இஸ்தான்பூல் சவூதி அரேபிய துணைத் தூதரகத்திற்கு விஜயம் செய்து அதன் தரைப் பகுதியை அவர் பார்வையிட்டார்.

ஊடகவியலாளர் ஜமால் கசோக்ஜியின் படுகொலை சம்பந்தமான விசாரணைகளை மேற்கொள்ளும் சர்வதேச நிபுணர்கள் குழுவுக்குத் தலைமை தாங்கும் சட்டத்திற்குப் புறம்பான, தொடரான அல்லது எழுமாறான மரண தண்டனைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளரான எக்னஸ் கலமண்ட் குறித்த இடத்தினைச் சுற்றிவந்ததோடு கொலை தொடர்பான மேலதிக தகவல்களையும் கேட்டறிந்துகொண்டார்.

“உணர்வுகளுக்கு அப்பால் விடயங்களை அறிந்துகொள்ள விரும்புகின்றோம். எமக்கு அதற்கான அனுமதியைத் தாருங்கள் என நாம் மிகவும் மரியாதையுடன் கேட்டுக்கொள்கின்றோம்” என கலமண்ட் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

இஸ்தான்பூல் துணைத் தூதரகத்தின் கட்டடத்தினுள் நுழைவதன் நோக்கம் சவூதி தூதரகத்திற்கான எமது கோரிக்கை மிகத் தாமதமாக வந்தமையாகும். எமது கோரிக்கை ஆய்வு செய்யப்படுவதற்கு அதிக காலத்தை வழங்க வேண்டியிருந்தது.

அவர் தன்னால் கண்டறியப்பட்ட விடயங்கள் தொடர்பான அறிக்கையினை இவ்வருடம் ஜூன் மாதம் மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கவுள்ளார். இந்த விசாரணையினைத் தொடர்வதற்கு சனிக்கிழமை வரை கலமண்ட் துருக்கியில் தங்கியிருப்பார்.

“ஊடகவியலாளர் ஜமால் கசோக்ஜியின் படுகொலை தொடர்பில் கலமண்டடின் துருக்கி விஜயத்தினை வரவேற்கின்றோம்” என துருக்கி ஜனாதிபதியின் தொடர்பாடல் பணிப்பாளர் கடந்த செவ்வாய்க்கிழமை தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

“இதுவரை கஷோக்ஜியின் உடல் எங்கிருக்கின்றது, அவரை கொல்லுமாறு உத்தரவிட்டது யார், உள்ளூரில் இணைந்து செயற்பட்டவர்கள் யார் என்பன போன்ற விபரங்கள் எமக்குத் தெரியாது.  நீதி கட்டாயம் காக்கப்பட வேண்டும்” என்று பஹ்ரித்தீன் அல்துன் குறிப்பிட்டள்ளார். கஷோக்ஜியின் உடலை வெளியேற்றுவதுடன் தொடர்புபட்டதாகத் தெரிவிக்கப்படும் உள்ளூர் நபர் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

வொஷிங்டன் போஸ்ட்டின் பத்தி எழுத்தாளரான கஷோக்ஜி கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி இஸ்தான்பூலிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில்  பல்வேறு முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்ட றியாத், இறுதியில் கைகலப்பொன்றில் துணைத் தூதரக கட்டடத்தினுள் வைத்து கஷோக்ஜி கொல்லப்பட்டார் என ஏற்றுக்கொண்டது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.