எனது வேண்டுகோளுக்கிணங்கவே ஹஜ் கோட்டா 3500 ஆக அதிகரிக்கப்பட்டது

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்

0 530

முஸ்லிம் சமய விவகார அமைச்சராக பதவி வகித்த சமயம் தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்­புல்­லாஹ் விடுத்த வேண்­டு­கோ­ளுக்­க­மைய சவூதி அரே­பியா அர­சாங்கம் இலங்­கையின் ஹஜ் கோட்­டாவை 2500 இல் இருந்து 3500 ஆக உயர்த்­து­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாக ஆளுநரின் ஊட­கப்­பி­ரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, இலங்­கைக்கு இது­வரை காலமும் 2500 ஹஜ் கோட்டா வழங்­கப்­பட்­டி­ருந்­தது. கிட்­டத்­தட்ட 13000 பேர் ஹஜ் செல்ல  விண்­ணப்­பித்­தி­ருந்தும் ஹஜ் செல்­வ­தற்­கான வாய்ப்பு கிடைக்­காமல் இருந்த நிலையை கருத்­திற்­கொண்டு இரண்டு வார காலமே முஸ்லிம் சமய கலா­சார அமைச்­ச­ராக இருந்த முன்னாள் அமைச்சர் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் பொறுப்­பேற்­ற­வுடன் உட­ன­டி­யாக சவூதி அரே­பிய அர­சாங்­கத்தின் இலங்­கை­கான தூதுவர் அஷ்ஷெய்க் நாசர் அல்­ஹா­லி­துடன் முஸ்லிம் சமய கலா­சார ஆலோ­சகர் ராபி­ததுல்  ஆலமி அல் இஸ்­லாமி செய­லாளர் கலா­நிதி ஈஸாயி, சவூதி  இள­வ­ரசர் முக்ரின் உட்­பட பல தரப்­பி­னர்­க­ளோடு பேசி  2500 கோட்­டாவை ஆகக் குறைந்­தது 1000 இனால்  அதி­க­ரித்து 3500 தர வேண்டும் என்ற வேண்­டுகோள் கடிதம் ஒன்றை அனுப்­பி­யி­ருந்தார். இதனை பரீ­சி­லித்த சவூதி அரசு இலங்­கையின் ஹஜ் கோட்­டாவை 3500 ஆக அதி­க­ரிக்க தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் இது தொடர்­பான  உடன்­ப­டிக்­கையைக் கைச்­சாத்­தி­டு­மாறு இலங்கை அர­சாங்­கத்­திற்கு  வேண்­டுகோள் விடுத்­துள்­ள­தா­கவும் சவூதி தூதுவர் காத்­தான்­கு­டிக்கு விஜயம் செய்து முன்னாள் அமைச்சர் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்­புல்­லாஹ்­விடம் தெரி­வித்தார். இரண்டு வார காலம் இந்த அமைச்சை பொறுப்­பேற்று ஹஜ் கோட்­டாவை 1000 இனால்  அதி­க­ரிக்க வேண்­டு­மென்ற எனது முயற்சி வெற்­றி­ய­ளித்­துள்­ளது என்று அந்த செய்­தியில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.