10 Years Challenge நாம் ஏன் இந்த சவாலை தவிர்க்க வேண்டும்?

0 1,069

பேஸ்புக் அல்­லது ட்விட்­டரில் நீங்கள் இருந்தால் #10 Year Challenge எவ்­வ­ளவு வைர­லாக பர­வி­யி­ருக்­கி­றது என்­பது உங்­க­ளுக்கு தெரிந்­தி­ருக்கும்.

நீங்­களோ அல்­லது உங்­க­ளுக்கு தெரிந்­த­வர்கள் எவரோ தற்­போது மற்றும் 10 ஆண்­டு­க­ளுக்கு முன்பு எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டத்தை பகிர்ந்­தி­ருக்­கலாம். பிரச்­சினை இல்லை.

முதலில் இந்தப் போக்கில் எந்த தீங்கும் இல்­லாத மாதி­ரிதான் இருந்­தது. ஆனால், சமூக ஊட­கங்­களில் வைர­லாகும் ஒவ்­வொரு விஷ­யத்­திற்கும் பின்னால் நிச்­சயம் ஏதோ ஒன்று இருக்கும்.

ஏதேனும் தொழில் யோச­னையின் ஒரு பகு­தியா இது? ஒரு தரவு வங்கி தயா­ரிப்­ப­தற்­காக, உங்கள் பழைய மற்றும் புதிய புகைப்­ப­டங்­களை கொண்டு வரவேண்­டு­மென்றே கேட்­கி­றார்­களா? இதற்கு பின் ஏதேனும் சதித்­திட்டம் இருக்­கி­றதா? இதி­லி­ருந்து நாம் தள்ளி இருக்க வேண்­டுமா?

பேஸ்புக் கூறு­வது என்ன?

இந்தக் கேள்­வி­க­ளுக்கு எல்லாம் விடை தேடு­வ­தற்கு முன்னால், இது­கு­றித்து பேஸ்புக் என்ன கூறி­யுள்­ளது என்று பார்க்­கலாம். “இது பயன்­பாட்­டாளர் ஒரு­வரால் தொடங்­கப்­பட்ட மீம். தானா­கவே வைர­லாகி உள்­ளது. இந்த ட்ரென்டை பேஸ்புக் தொடங்­க­வில்லை” என்­கி­றது.

“ஏற்­க­னவே இருக்கும் புகைப்­ப­டத்தை வைத்­துதான் மீம்கள் செய்­யப்­ப­டு­கின்­றன. பேஸ்புக் இதனை எந்த வகை­யிலும் பயன்­ப­டுத்­த­வில்லை. ஆனால், பேஸ்புக் பய­னா­ளர்கள், முகம் அடை­யா­ளப்­ப­டுத்தும் தன்மை என்று அறி­யப்­படும் பேஷியல் ரெகக்­னிஷன் வச­தியை ஒன் அல்­லது ஓஃப் செய்­யலாம் என்­பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.”

பேஸ்புக் தெளி­வாக கூறி­யி­ருக்­கி­றது. ஆனால், #10YearChallenge குறித்து மட்­டு­மல்­லாமல் சமீ­பத்தில் இந்த மாதி­ரி­யான விளை­யாட்­டுகள் அல்­லது மீம்கள் பெரும் திட்­டத்தின் ஒரு பகு­தி­யாக இருந்­தி­ருக்­கின்­றன. இவற்றின் திட்டம் தர­வு­களை சேக­ரிப்­பது.

இந்த சவால் ஒரு டைம் பாஸோ அல்­லது கேளிக்­கையோ இல்லை, இதி­லி­ருந்து விலகி இருப்­பதே நல்­லது.

இது நாம் அச்­சப்­பட வேண்­டிய விஷ­யமா?

இதனால் ஏதும் தீங்கு ஏற்­ப­டுமா என்று சைபர் சட்ட வல்­லுநர் பவன் டக்­கலை பிபிசி தொடர்பு கொண்டு பேசி­யது. ஆம், சைபர் கிரி­மி­னல்கள் இதனை தவ­றாக பயன்­ப­டுத்­தலாம்” என்று அவர் தெரி­வித்தார்.

10 ஆண்­டுகள் பழைய புகைப்­ப­டத்தை சமூக ஊட­கத்தில் பகிர்­வதால் என்ன பிரச்­சினை என்று கேட்­ட­தற்கு பதி­ல­ளித்த அவர், “இந்தப் புகைப்­ப­டங்­களை தவ­றாகப் பயன்­ப­டுத்­தி­ய­தற்­கான ஆதா­ரங்கள் இது­வரை ஏது­மில்லை. ஆனால், இவ்­வ­ளவு நாட்­க­ளாக கிடைத்­தி­ராத பழைய புகைப்­படம் இப்­போது கிடைத்­துள்­ளது. மக்கள் அவர்­க­ளா­கவே கொடுக்­கின்­றனர்” என்றார்.

“இந்தப் புகைப்­ப­டங்கள் சமூக ஊட­கத்தில் பகி­ரப்­ப­டும்­போது, அவற்றை மார்ஃப் செய்து மாற்­றலாம், உங்­களை இலக்­காக ஆக்க முடியும்.”

ஆனால், பேஸ்புக் ரெகக்­னிஷன் தொழில்­நுட்­பத்­திற்கும் இதற்கும் என்ன தொடர்பு? “பேஷியல் ரெகக்­னிஷன் குறித்து உலகம் முழு­வதும் பல்­வேறு விஷ­யங்கள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. இதனை வைத்து 10 ஆண்­டு­களில் எந்த அள­விற்கு வடிவம் மாறி­யுள்­ளது என்­பதை எளி­தாக கண்­டு­பி­டிக்க முடியும்” என்­கிறார் டக்கல்

பழைய புகைப்­ப­டங்கள் ஏன் ஆபத்­தா­னவை?

இந்தப் புகைப்­ப­டங்கள் 10 ஆண்­டு­க­ளுக்கு முன்­பா­கவே பேஸ்­புக்கில் பதி­வேற்­றப்­பட்­டது தானே? ஏற்­க­னவே பேஸ்­புக்கில் இருக்கும் புகைப்­படம், தற்­போது இதனால் என்ன ஆபத்து?

“குறிப்­பிட்ட புகைப்­படம் பேஸ்­புக்கில் ஏற்­க­னவே இருப்­பது உண்­மைதான். ஆனால், அது எங்­கேயோ இருந்­தது. இந்த சவாலை ஏற்று உங்கள் புதிய புகைப்­ப­டத்­தோடு, பழைய புகைப்­ப­டத்தை வைக்­கி­றீர்கள்.”

“இது­போன்று செய்­யும்­போது, இது­வரை சமூக வலைத்­த­ளங்­களில் இல்­லாத புதிய தர­வு­களை நீங்கள் உரு­வாக்­கு­கி­றீர்கள். இதனை சைபர் கிரி­மி­னல்கள் தவ­றாக பயன்­ப­டுத்த முடியும்.”

“எனவே, இது மாதி­ரி­யான சவால்­களை தவிர்ப்­பது அவ­சியம். ஏனென்றால், நீங்கள் உங்கள் புகைப்­ப­டத்தை பகி­ரும்­போது, நிறு­வ­னங்­க­ளுக்கு உங்­க­ளது பழைய மற்றும் முக்­கி­ய­மான தக­வல்­களை தரு­கி­றீர்கள். மேலும், எந்­த­ள­விற்கு அவற்றை தவ­றாகப் பயன்­ப­டுத்த முடியும் என்­பதை உங்­களால் நினைத்­துக்­கூட பார்க்க முடி­யாது” என்றார் அவர்.

எந்­தெந்த நிறு­வ­னங்கள் இதன் மீது ஒரு கண் வைத்­தி­ருக்­கின்­றன?

டக்கல் மாதி­ரி­யான நிபு­ணர்­களின் எச்­ச­ரிக்கை ஒரு­பு­ற­மி­ருந்­தாலும், இது ஒரு சாதா­ரண படம்­தானே. இதை வைத்து நிறு­வ­னங்கள் எவ்­வாறு பல­ன­டை­ய­மு­டியும், மேலும் இதை எப்­படி அவர்கள் பயன்­ப­டுத்­தக்­கூடும் என பல­ருக்கும் சந்­தேகம் எழக்­கூடும்.

உல­க­ளவில் பிர­சித்­தி­பெற்ற நாளி­த­ழான வயர்ட் இது­கு­றித்து சொல்­வ­தென்ன?

யாரா­வது உங்­க­ளது பேஸ்புக் படங்­களை பேஷியல் ரெக்­க­க்­னைஷன் மூலம் மேம்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளுக்கு பயன்­ப­டுத்­தினால் அது தவ­றா­குமா?

(பேஷியல் ரெக்­க­­க்னைஷன் என்­பது கணி­த­மு­றைப்­படி உங்­களின் முக அமைப்பை கணக்­கிட்டு தர­வு­களை சேக­ரித்து வைக்கும் ஒரு முறை­யாகும்.)

தொழில்­நுட்பம் என வரும்­போது நீங்கள் என்ன தர­வு­களை உற்­பத்தி செய்­கி­றீர்கள் மற்றும் அந்த தர­வுகள் எப்­படி பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என்­பது முக்­கியம்.

இம்­மா­தி­ரி­யான சவால்­க­ளி­லி­ருந்து உங்­களின் முகம் உங்­களின் வயது சார்ந்து எப்­படி மாறி­யுள்­ளது என்ற தக­வல்­களை அவர்­களின் விளம்­ப­ரத்­துக்கு பயன்­ப­டுத்­த­மு­டியும்.

அடுத்­தது என்ன?

வயர்ட் நிறு­வ­னத்தின் கருத்­துப்­படி, இந்த முக ஆதா­ரங்கள் எந்­த­வொரு தரு­ணத்­திலும் காப்­பீ­டுக்­கான மதிப்­பீடு மற்றும் உடல் நலன் சார்ந்த சேவை­களில் பயன்­ப­டுத்த முடியும். நீங்கள் உங்­களின் வயதை ஒப்­பி­டும்­போது விரை­வாக முதுமை அடை­கி­றீர்கள் எனில் நீங்கள் காப்­பீடு நிறு­வ­னங்­க­ளுக்கு நல்ல நுகர்வோர் கிடை­யாது.

2016ஆம் ஆண்டு அமேசான் நிறு­வனம் முக அமைப்பை கண்டுபிடிக்கும் சேவைகளை துவக்கியது. பின்னர், அமெரிக்க அரச நிறுவனங்களிடம் ஒப்படைத்தது. இந்த தொழில்நுட்பம் தனிநபர் தகவல்கள் குறித்த கவலைகளை அதிகரித்ததை இந்த நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

காவல்துறைக்கோ அல்லது வேறு ஏதேனும் நிறுவனத்துக்கு இந்த தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில், அவர்களுக்கு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் தரவுகள் மட்டும் கிடைப்பதில்லை, குற்றச்செயல்களில் ஈடுபடாதவர்களின் தகவல்களும் அவர்களின் கைகளுக்குச் செல்கின்றன என்ற அச்சமும் இன்னமும் இருக்கிறது.

நன்றி : பி.பி.சி.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.