அம்பாறை, திகன வன்முறை நஷ்டஈடுகள் வழங்குவதில் தொடர்ந்தும் தாமதம்

0 512

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பொறுப்­பி­லி­ருக்கும் புனர்­வாழ்வு அமைச்சின் புனர்­வாழ்வு அதி­கார சபைக்கு தலை­வரும், செயற்­பாட்டுப் பணிப்­பா­ளரும் புதி­தாக இது­வரை நிய­மிக்­கப்­ப­டா­ததால் அம்­பாறை மற்றும் கண்டி, திகன பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­மு­றை­க­ளின்­போது பாதிப்­புக்­குள்­ளான சொத்­துக்­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கு­வதில் தாமதம் ஏற்­ப­டு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

நல்­லாட்சி தேசிய அர­சாங்­கத்தின் பத­விக்­கா­லத்­தின்­போது மீள் குடி­யேற்றம், புனர்­வாழ்வு, வடக்கு அபி­வி­ருத்தி, இந்து சம­ய­வி­வ­கார அமைச்­ச­ராகப் பத­வி­வ­கித்த டி. எம். சுவா­மி­நா­தனின் உத்­த­ரவின் கீழ் கண்டி, திகன வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட ஒரு இலட்­சத்­துக்கும் குறை­வான நஷ்­ட­ஈ­டு­க­ளுக்­கு­ரிய சொத்­துக்­க­ளுக்கு நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­பட்­டன. ஒரு இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட நஷ்­ட­ஈ­டு­களை வழங்­கு­வ­தற்­காக அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக அமைச்­ச­ரவைப் பத்­தி­ரமும் தயார் செய்­யப்­பட்­டது. இந் நிலை­யிலே தேசிய அர­சாங்கம் பதவி இழக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. தற்­போது தேசிய அர­சாங்­கத்தில் பதவி வகித்த அமைச்சர் டி. எம். சுவா­மி­நாதன் பத­வி­யி­லில்லை. இந்த அமைச்சுப் பெறுப்பு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கே வழங்­கப்­பட்­டுள்­ளது.

அம்­பாறை வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வாசல் உட்­பட 15 சொத்­துக்­க­ளுக்கும், கண்டி, திகன வன்­மு­றை­க­ளின்­போது பாதிக்­கப்­பட்ட 173 சொத்­துக்­க­ளுக்கும் நஷ்­ட­ஈடு வழங்­க­வுள்­ள­தா­கவும் அதற்­கான அமைச்­ச­ரவைப் பத்­திரம் தயார் நிலையில் உள்­ள­தா­கவும் புனர்­வாழ்வு அதி­கார சபையின் உதவிப் பணிப்­பாளர் எஸ். எம். பதூர்தீன் தெரிவித்தார்.
இந்நிலையில் நஷ்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கு புனர்வாழ்வு அதிகார சபைக்கு தலைவரும் செயற்பாட்டுப் பணிப்பாளரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.