2018 இல் 480,799 வாகனங்கள் பதிவு

0 462

கடந்த 2018 ஆம் ஆண்டில் மாத்திரம்  நான்கு இலட்சத்து  80 ஆயிரத்து  799 வாகனங்கள்  பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரையில்   மொத்தமாக 77 இலட்சத்து 27 ஆயிரத்து 921 வாகனங்கள்  நாடளாவிய ரீதியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கையில் நான்கு இலட்சத்து 51 ஆயிரத்து 680 தொடக்கம் ஆறு இலட்சத்து 1651 வாகனங்கள் புதிதாக பதியப்பட்டிருந்தன. ஆகவே கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் 22 ஆயிரத்து 146 புதிய வாகனங்கள் கூடுதலாக பதியப்பட்டுள்ளன. அதேபோல் கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கையின் வாகனக் கணக்கெடுப்பின் பிரகாரம் 33 இலட்சத்து 90 ஆயிரத்து 993 வாகனங்கள் இலங்கையில் பதியப்பட்டிருந்தன. எனினும், 2008 தொடக்கம் 2018 வரையிலான பத்து ஆண்டு காலத்தில் இலங்கையில் மேலும் 43 இலட்சம் வாகனங்கள் புதிதாக பதியப்பட்டுள்ளன.

மொத்தமாக வாகனப் பதிவுகளில் 43 இலட்சத்து 83 ஆயிரத்து 773 பதிவுகள் மோட்டார் வாகனங்கள் சார்ந்ததும், 8 இலட்சத்து  37 ஆயிரத்து 632 மோட்டார் வாகனங்களும் 11 இலட்சத்து 59 ஆயிரத்து 587 முச்சக்கரவண்டிகளும் புதிதாக பதியப்பட்டுள்ளன. அதேபோல் மிகவும் குறைந்த அளவில் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள வாகனமாக ஹர்ஷ் வர்க்க வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இரண்டு வாகனங்களே இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் மொத்தமாக 481 ஹர்ஷ் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.