குஜராத் போலி என்கவுண்டர்கள்: முஸ்லிம் குறி வைக்கப்பட்டனரா?

0 681
  • சுசித்­திரா மொகந்தி

குஜ­ராத்தில் 2002 -– 2006 கால­கட்­டத்தில் நடந்த 17 என்­க­வுண்­டர்கள் பற்றி விசா­ரித்த ஓய்­வு­பெற்ற நீதி­பதி ஹர்ஜித் சிங் பேடி கமிட்டி, அந்த சம்­ப­வங்­களில் மாநிலத் தலை­வர்கள் யாருக்­குமோ அல்­லது அப்­போ­தி­ருந்த உய­ர­தி­கா­ரிகள், உயர் பதவி வகித்­த­வர்கள் யாருக்­குமோ தொடர்பு இருப்­ப­தற்­கான எந்த ஆதா­ரங்­களும் இல்­லை­யென்று கூறி­யுள்­ளது.

17ஆவது மக்­க­ளவைத் தேர்­தலை எதிர்­கொள்ளும் சூழ்­நி­லையில் பா.ஜ.க.வுக்கு இது பெரிய நிம்­ம­தியைக் கொடுத்­தி­ருக்­கி­றது.

இருந்­த­போ­திலும், மூன்று என்­க­வுண்­டர்­களில் தவறு நடந்­தி­ருப்­ப­தாகத் தெரி­வதால் அந்த வழக்­கு­களில் தொடர்­பு­டைய காவல்­துறை அதி­கா­ரிகள் பற்றி மேற்­கொண்டு விசா­ரணை நடத்த வேண்­டு­மென்றும் அந்தக் கமிட்டி கூறி­யுள்­ளது.

இந்த மூன்று சம்­ப­வங்­க­ளிலும் கொல்­லப்­பட்­ட­வர்­களின் குடும்­பத்­தி­ன­ருக்கு நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­தற்கும் கமிட்டி பரிந்­துரை செய்­துள்­ளது.

2002 முதல் 2006 வரையில் குஜராத் மாநி­லத்தை நரேந்­திர மோடி ஆட்­சி­செய்த காலத்தில் நடந்த 17 என்­க­வுண்டர் சம்­ப­வங்கள் நடந்­தன.

ஏற்­கெ­னவே காவல்­து­றையின் காவலில் இருந்­த­வர்கள் உட்­பட, பலரும் திட்­ட­மி­டப்­பட்ட என்­க­வுண்­டர்கள் மூலம் கொல்­லப்­பட்­டார்கள் என்று உச்­ச­நீ­தி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட இரண்டு வழக்­கு­களில் புகார் தெரி­விக்­கப்­பட்­டது.

மூன்று என்­க­வுண்­டர்கள் போலி­யாக நடத்­தப்­பட்­டவை என்று பேடி கமிட்டி அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்டு, அந்த சம்­ப­வங்­களில் தொடர்­பு­டைய காவல்­துறை அதி­கா­ரிகள் மீது நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது. எனவே இந்த மூன்று வழக்­கு­க­ளிலும் மேற்­கொண்டு விசா­ரணை நடத்­தப்­படும்” என்று பிர­பல கிரி­மினல் வழக்­க­றிஞர் கீத்தா லூத்ரா பி.பி.சி.யிடம் தெரி­வித்தார்.

முஸ்லிம் தீவி­ர­வா­தி­களை குறி­வைத்து கொலை­செய்த சம்­ப­வங்­களில் மாநில அரசு கைகோர்த்து செயற்­பட்­ட­தென்று முன்னாள் டி.ஜி.பி.யான ஆர்.பி. ஸ்ரீகுமார் கூறிய தீவிர குற்­றச்­சாட்­டு­களை பேடி கமிட்டி நிரா­க­ரித்­து­விட்­டது.

சிறு­பான்மை சமூ­கங்­களை சேர்ந்­த­வர்கள் திட்­ட­மிட்டுக் கொல்­லப்­பட்­டது போல தெரி­ய­வில்லை என்று கமிட்­டியின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. என்­க­வுண்­டர்­களில் கொல்­லப்­பட்­ட­வர்கள் வெவ்­வேறு சமூ­கத்­த­வர்கள் என்றும், அவர்­களில் பெரும்­பா­லானோர் மீது கிரி­மினல் குற்றப் பதி­வுகள் இருந்­தன என்றும் அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

2007 ஆம் ஆண்டில் பத்­தி­ரி­கை­யாளர் பி.ஜி. வர்கீஸ், பிர­பல பாட­லா­சி­ரியர் ஜாவித் அக்தர், மனித உரி­மைகள் ஆர்­வலர் ஷப்னம் ஹஸ்மி ஆகியோர் இந்த மனுக்­களைத் தாக்கல் செய்­தனர்.

2012இல் அக்தர், வர்கீஸ் ஆகிய மனு­தா­ரர்­களின் முறை­யீ­டு­களைக் கேட்­ட­றிந்த நீதி­மன்றம், உச்­ச­நீ­தி­மன்­றத்தில் பணி­யாற்றி ஓய்­வு­பெற்ற நீதி­பதி எஸ்.எஸ். பேடியை தலை­வ­ராகக் கொண்ட கண்­கா­ணிப்பு கமிட்­டியை அமைத்து, 2002 முதல் 2006 வரை­யி­லான காலத்தில் குஜராத் மாநி­லத்தில் நடந்த என்­க­வுண்டர் மர­ணங்கள் பற்றி விசா­ரிக்­கு­மாறு கேட்டுக் கொண்­டது.

பேடி கமிட்டி 2018 பெப்­ர­வரி மாதத்தில் உச்­ச­நீ­தி­மன்­றத்தில் அறிக்கை தாக்கல் செய்­தது.

விசா­ரணை நடத்­திய 17 என்­க­வுண்டர் சம்­ப­வங்­களில், மூன்று சம்­ப­வங்கள் போலி­யா­ன­வை­யென முடிவு செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்த சம்­ப­வங்­களில் தொடர்­பு­டைய காவல்­துறை அதி­கா­ரிகள் குறித்து விசா­ரணை நடத்த வேண்­டு­மென்றும் அதில் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது.

பி.பி.சி. வசம் கிடைத்­துள்ள பேடி கமிட்டி அறிக்கை நக­லின்­படி, “சமீர் கான், ஹாஜி இஸ்­மாயில், காசிம் ஜாபர் ஹுசேன் ஆகியோர் போலி என்­க­வுண்­டர்கள் மூலம் கொல்­லப்­பட்­டி­ருப்­ப­தாக சாட்­சிகள் மற்றும் ஆவ­ணங்­களின் மூலம் தெரிய வரு­கி­றது” என்று கூறப்­பட்­டுள்­ளது.

ஆய்­வாளர் அந்­தஸ்­தி­லுள்ள மூன்று அதி­கா­ரிகள் உட்­பட காவல்­துறை அதி­கா­ரிகள் 9 பேரின் பெயர்­களை கமிட்டி குறிப்­பிட்­டுள்­ளது. இருந்­த­போ­திலும், இந்த வழக்­கு­களில் எந்த ஐ.பி.எஸ். அதி­கா­ரிகள் மீதும் வழக்கு தொடர்­வ­தற்கு அந்தக் கமிட்டி பரிந்­துரை செய்­ய­வில்லை.

இந்த அறிக்கை குறித்து சந்­தே­கப்­ப­டு­வ­தற்கு எந்தக் கார­ணமும் கிடை­யா­தென்று முன்னாள் சொலி­சிட்டர் ஜென­ரலும், உச்­ச­நீ­தி­மன்ற மூத்த வழக்­க­றி­ஞ­ரு­மான மோகன் பரா­சரன் பி.பி.சியிடம் தெரி­வித்தார்.

“முஸ்­லிம்கள் குறி­வைத்துக் கொல்­லப்­பட்­டார்கள் என்று புகார் கூறப்­பட்ட நிலையில், முஸ்­லிம்கள் குறி­வைத்துக் கொல்­லப்­ப­ட­வில்லை என்று பேடி கமிட்டி கூறி­யி­ருப்­பது நல்ல விஷயம். இப்­போது மனு­தா­ரர்கள் மற்றும் எதிர்­ம­னு­தா­ரர்கள் உள்­ளிட்­டோரின் தரப்­பு­க­ளிடம் உச்ச நீதி­மன்றம் விசா­ரணை நடத்தும்” என்று பரா­சரன் தெரி­வித்தார்.

பேடி கமிட்டி அறிக்கை / கண்­ட­றிந்த விஷ­யங்­களை இர­க­சி­ய­மாக வைக்க வேண்­டு­மென்று குஜராத் அரசு விடுத்த கோரிக்­கையை நிரா­க­ரித்த உச்ச நீதி­மன்றம், பேடி கமிட்­டியின் அறிக்­கையை இந்த வழக்­கு­களில் தொடர்­பு­டை­ய­வர்கள் மற்றும் மனு­தா­ரர்­க­ளுக்கு அளிக்க வேண்­டு­மென்று கடந்த வாரம் உத்­த­ர­விட்­டது.

மூன்று போலி என்­க­வுண்டர் வழக்­குகள் என்ன?

மூன்று வழக்­குகள் சரி­யா­ன­வற்றைப் போலத் தெரி­ய­வில்லை என்று பேடி கமிட்டி முடிவு செய்­துள்­ளது. அவற்றில் தொடர்­பு­டைய காவல்­துறை அதி­கா­ரிகள் மீது விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டு­மென்று கமிட்டி பரிந்­துரை செய்­துள்­ளது.

உச்­ச­நீ­தி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­வாறு மூன்று சம்­ப­வங்­களின் சிறு குறிப்­புகள் இங்கே தரப்­பட்­டுள்­ளன.

2002 ஆம் ஆண்டில் காவல் துறை­யி­னரின் பாது­கா­வலில் இருந்த காசிம் ஜாபர் என்­பவர் அடித்துக் கொல்­லப்­பட்­ட­தாகக் கூறப்­படும் புகார் இதில் ஒரு நிகழ்­வாக நீதி­பதி பேடி கமிட்­டியால் குறிப்­பிடப் பட்­டுள்­ளது. காவல் துறை­யினர் இரும்புக் கம்­பிகள், சேலைகள், கயி­றுகள் வைத்­தி­ருந்­ததைப் பார்த்­த­தாக, கமிட்டி முன்பு ஆஜ­ரான சாட்­சிகள் கூறி­ய­தாக அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

“அவரும் அவ­ரு­டைய சகாக்­களும் எந்தக் கிரி­மினல் நட­வ­டிக்­கை­யிலும் ஈடு­பட்­ட­தற்­கான ஆதா­ரங்கள் எதுவும் இல்லை என்­பதால், அவர்­களை கிரி­மி­னல்கள் என்று காட்­டு­வ­தற்கு காவல்­துறை அதி­கா­ரிகள் மேற்­கொண்ட முயற்­சி­க­ளுக்கு பலன் கிடைக்­க­வில்லை. 2006 ஏப்ரல் 13 ஆம் திகதி  ராயல் ஹோட்­டலில் வைக்­கப்­பட்­ட­தையே நியா­யப்­ப­டுத்த முடி­யாது” என்று தனது அறிக்­கையில் பேடி கூறி­யுள்ளார்.

உயி­ரி­ழந்­த­வரின் மனைவி மற்றும் பிள்­ளை­க­ளுக்கு ரூபா 14 லட்சம் நஷ்­ட­ஈடு வழங்க வேண்­டு­மென்று 2013 நவம்பர் 21 ஆம் திக­தி­யிட்ட உத்­த­ரவில் கமிட்டி உத்­த­ர­விட்­டுள்­ளது.

ஹாஜி இஸ்­மாயில் குறித்த இரண்­டா­வது என்கவுண்டர் வழக்கில், கண்காணிப்பு கமிட்டி முன்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை என்பதால் காவல் துறையினர் மீது சந்தேகம் எழுகிறது. தடயவியல் துறையின் ஆதாரங்களிலும் குறைபாடுகள் இருப்பதாக கமிட்டி கண்டறிந்துள்ளது.

சமீர் கான் குறித்த மூன்றாவது என்கவுண்டர் சம்பவம் 2002இல் நடந்திருப்பதாக நீதிபதி பேடி கமிட்டி குறிப்பிட்டுள்ளது. அவர் ஜெய்ஷ்-முகமது (JeM) தீவிரவாதி என்றும், அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட மிக முக்கிய நபர்களைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டினாரென்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

இத்துடன் சமீரின் குடும்பத்துக்கு ரூபா 10 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் குழு பரிந்துரை செய்திருக்கிறது.

நன்றி: பி.பி.சி தமிழ்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.