ஈராக்கைக் கட்­டி­யெ­ழுப்ப பிரான்ஸ் நிதி­யு­தவி

0 590

ஐ.எஸ்.இற்கு எதி­ரான யுத்­தத்தின் பின்னர் ஈராக்கைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு ஒரு பில்­லியன் அமெ­ரிக்க டொலர்  நிதி­யு­தவி வழங்­கு­வ­தற்கு உறு­தி­பூண்­டுள்­ள­தாக பிரான்ஸ் வெளி­நாட்­ட­மைச்சர் ஜியீன் யுவெஸ் லி ட்ரியான் தெரி­வித்­துள்ளார்

கடந்த திங்­கட்­கி­ழமை பக்­தாதில் ஈராக் வெளி­நாட்­ட­மைச்­சரை சந்­தித்த லி ட்ரியான் இந்த உதவி ஈராக்கில் மிகவும் சேதத்­திற்­குள்­ளான பகு­தி­களைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காகப் பயன்­ப­டுத்­தப்­படும் எனவும் தெரி­வித்தார்.

மீள்­கட்­டு­மானப் பணி­க­ளுக்கு 88 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் தேவை­யென ஈராக் திட்­ட­மிடல் அமைச்சு மதிப்­பீடு செய்­துள்­ளது. கடந்த வருடம் குவைத்தில் நடை­பெற்ற உதவி வழங்கும் நாடு­களின் மாநாட்டில் ஈராக் 30 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை நிதி­யீட்டம் செய்­து­கொண்­டது.

ஈராக்கின் சிறு­பான்­மை­யி­ன­ரான யெஸீதி சமூ­கத்­திற்கு உதவி வழங்­கி­ய­மைக்­காக ஈராக் வெளி­நாட்­ட­மைச்சர் மொஹமட் அல்­ஹாகிம் பிரான்­ஸுக்கு நன்­றி­களைத் தெரி­வித்­துக்­கொண்டார். இந்த தசாப்­தத்தின் ஆரம்­பத்தில் வடக்கு ஈராக்­கினை ஐ.எஸ். கிளர்ச்­சிக்­கா­ரர்கள் குறு­கிய காலம் கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருந்­த­போது ஆயி­ரக்­க­ணக்­கான யெஸீதி மக்­களை அடி­மை­க­ளாக வைத்­தி­ருந்­த­தோடு கொலையும் செய்­தனர். ஈராக்­கிலும் சிரி­யா­விலும் ஆள்புலப் பிரதேசரீதியாக தோற்கடிப்பதற்கான சர்வதேசக் கூட்டணியில் பிரான்ஸும் ஒரு அங்கத்துவ நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.