மாகாண சபை தொகுதி எல்லை நிர்ணய விவகாரம்: மீளாய்வுக்குழு இன்னும் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை

நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்து

0 520

மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்கை தொடர்­பாக பிர­தமர் தலை­மை­யி­லான  மீளாய்­வுக்­குழு அமைக்­கப்­பட்டு  இரண்டு மாதங்கள் கடந்­துள்ள போதும் இன்னும் அந்தக் குழுவின் அறிக்கை ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வில்லை. இந்த விடயம் தொடர்­பாக சபா­நா­யகர் விரைவில் நட­வ­டிக்­கை­யெ­டுக்க வேண்­டு­மென எதிர்க்­கட்­சி­யினர் சபையில் கோரிக்கை விடுத்­தனர்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை ஒழுங்குப் பிரச்­சி­னை­களை எழுப்­பியே அவர்கள் இவ்­வா­றாகக் கோரிக்கை விடுத்­தனர். அதன்­போது தனது கருத்தை முன்­வைத்த எதிர்க்­கட்சி எம்.பியான தினேஷ் குண­வர்­தன தெரி­விக்­கையில்,

மாகாண சபை தேர்­த­லுக்­கான எல்லை நிர்­ணய அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வ­ரப்­பட்டு அது பாரா­ளு­மன்­றத்­தினால் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. இதனை தொடர்ந்து பிர­தமர் தலை­மையில் எல்லை நிர்­ணயம்  தொடர்­பான மீளாய்வுக் குழு­வொன்று அமைக்­கப்­பட்டு அதற்கு இரண்டு  மாத காலம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இதன்­படி அந்தக் குழு­வினால் இரண்டு மாதத்­திற்குள் அது தொடர்­பான அறிக்­கையை சபா­நா­ய­க­ருக்கு சமர்ப்­பித்து அவ­ரி­னூ­டாக ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால் தற்­போது இரண்டு  மாதங்கள் கடந்­துள்ள போதும் அந்த அறிக்கை இன்னும் அனுப்பி வைக்­கப்­ப­ட­வில்லை. இது தொடர்­பாக சபா­நா­யகர் நட­வ­டிக்­கை­யெ­டுக்க வேண்டும். என்றார்.

இதே­வேளை, அவரை தொடர்ந்து தனது கருத்தை முன்­வைத்த வாசு­தேவ நாண­யக்­கார எம்.பி.,  இரண்டு  மாதங்கள் முடி­வ­டைந்­து­விட்­டது. இன்னும் அது தொடர்­பான எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. இந்த விடயம் தொடர்­பாக பிர­தமர் சபையில் விளக்­க­ம­ளிக்க வேண்டும் என்றார்.

இதன்­போது பதி­ல­ளித்த சபைக்கு தலைமை தாங்­கிய பிரதி சபா­நா­யகர் ஆனந்த குமா­ர­சிறி,  இந்த விடயம் தொடர்­பாக சபா­நா­யகர் வந்­த­வுடன் அவ­ருக்கு அறி­விக்க நட­வ­டிக்­கை­யெ­டுப்­ப­தாகத் தெரி­வித்தார்.  இந்­நி­லையில் தனது கருத்தை முன்­வைத்த எதிர்க்­கட்­சி­களின் பிர­தம கொர­டா­வான மஹிந்த  அம­ர­வீர தெரி­விக்­கையில்,  சபாநாயகர் இல்லாத நேரத்தில் பிரதி சபாநாயரே சபாநாயகரின் பொறுப்புகளை முன்னெடுக்கின்றார். இதன்படி அவர் விரைவில் இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனத் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.