ஐ.தே.க.வினர் எட்டு பேர் சுயாதீனமாக செயற்படுவர்

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷான் விதானகே

0 734

ஐக்­கிய தேசியக் கட்­சியின் எட்டு உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்­றத்தில் சுயா­தீ­ன­மாக செயற்­ப­டு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­துடன் 2019 ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்டம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­டும்­போதும் சுயா­தீன அணி­யாக  செயற்­ப­ட­வுள்­ள­தா­கவும் அந்த அணி குறிப்­பிட்­டுள்­ளது. கிடைக்­கப்­பெற்­றி­ருக்கும் இந்த ஒரு வரு­டத்தில் சகல மக்­க­ளுக்கும் சம­மான சலு­கைகள் கிடைக்­கப்­பெ­ற­வேண்டும். கடந்த மூன்­றரை வரு­டங்­க­ளிலும் நாட்டின் சகல பகு­தி­க­ளுக்கும் முழு­மை­யான சலு­கைகள் பெற்றுக் கொடுக்­கப்­ப­ட­வில்லை.

அவ்­வாறு மக்­களின் ஆட்­சிக்கு எதி­ராக செயற்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதிர்ப்­பினை வெளி­யி­டு­வ­தற்­கா­கவே சுயா­தீ­ன­மாக இயங்­கு­வ­தற்­கான தீர்­மா­னத்தை எடுத்­தாக ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹேஷான் விதா­னகே குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

கடந்த மூன்­றரை வரு­டங்­க­ளாக நாட்டில் வேக­மான முன்­னேற்­றங்கள் எதுவும் இருக்­க­வில்லை. சகல பிர­தேச மக்­க­ளுக்கும் சரி­ச­ம­மான அபி­வி­ருத்தி பணிகள் போய் சேர­வில்லை. அநே­க­மாக கடந்த காலங்­களில் கொழும்பு மாவட்டம் உள்­ளிட்ட குறிப்­பிட்ட பிர­தே­சங்­க­ளுக்கே அபி­வி­ருத்தி பணிகள் போய் சேர்ந்­தி­ருந்­தன.

ஆகவே, கிடைக்கப் ­பெற்­றி­ருக்கும் இந்த ஒரு­வ­ரு­டத்­திலும் மீண்டும் நாட்டை பழைய நிலை­மைக்கு திருப்ப முடி­யாது. அதற்கு ஆளும் கட்­சியின் பின்­வ­ரிசை உறுப்­பி­னர்­களின் பங்கு மிக­முக்­கி­ய­மாகும். என­வே­தான் ஐக்­கிய தேசிய கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் எட்டு உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்­றத்தில் சுயா­தீ­ன­மான இயங்கத் தீர்­மா­னித்­துள்ளோம்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை உரு­வாக்க நாங்­களும் பாரிய ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கி­யுள்ளோம். கடந்த சில தினங்­க­ளாக  சில அமைச்­சர்­களின் நட­வ­டிக்­கை­களை பார்க்­கும்­போது அவர்­களின் செயற்­பா­டுகள் எங்­க­ளுக்கு திருப்­தி­யாக இல்லை. மக்­க­ளாட்­சிக்கு எதி­ராக செயற்­ப­டுப­வர்­களை கட்­டுப்­ப­டுத்தி கிடைக்­கப்­பெற்­றி­ருக்கும் ஒரு வரு­டத்தை சிறப்­பாக முன்­னெ­டுப்­ப­தற்­காக பின்­வ­ரிசை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் என்­ற ­வ­கையில் எங்­களின் வாக்­கு­ரிமையை பயன்­ப­டுத்­துவோம் என பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்­க­வுக்கு அறி­வித்­துள்ளோம். சுயா­தீ­ன­மாக இயங்­கு­வது தொடர்­பிலும் பிர­த­ம­ருக்கு அறி­விக்­க­வுள்ளோம்.

இது­வ­ரையில் எங்­களின் சுயா­தீன அணியில் எட்டுப் பேர் ஒன்­றி­ணைந்­துள்­ள­துடன் எதிர்­கா­லத்தில் இன்னும் பலர் இணைவர். மேலும் 2019 ஆம் ஆண்டு சமர்ப்­பிக்­கப்ப­ட­வுள்ள வரவு செலவுத் திட்­டத்­திற்கு வாக்களிக்காமல் சுயாதீனமாக செயற்படவும் தீர்மானித்துள்ளோம்.

ஆளும் தரப்பு சார்பில் நாங்கள் சுயாதீனமாக செயற்பட்டாலும் கட்சியில் எந்தப் பிளவுகளும் ஏற்படாது. கட்சி உறுப்பினர்கள் என்றவகையில் கட்சியின் செயற்பாடுகள் அனைத்திற்கும் முழுமையான பங்களிப்பினை பெற்றுக்கொடுப்போம் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.