டமஸ்கஸில் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் திறக்கப்பட்டது

0 701

சிரியப் படை­க­ளுடன் மோதலில் ஈடு­பட்ட கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்த பிராந்­திய எதிர்­நிலை நாடு­க­ளுடன் இரா­ஜ­தந்­திரத் தொடர்­பு­களை வலுப்­ப­டுத்தும் நகர்­வு­களை ஜனா­தி­பதி பஷர் அல்-­அஸாத் மேற்­கொண்டு வரும் நிலையில் டமஸ்­கஸில் ஏழு ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் ஐக்­கிய அரபு அமீ­ரக தூத­ரகம் திறக்­கப்­பட்­டுள்­ளது.

2011 ஆம் ஆண்டு பஷர் அல்-­அ­ஸா­திற்கு எதி­ராக மக்கள் எதிர்ப்பு ஆரம்­ப­மா­கி­ய­தை­ய­டுத்து ஐக்­கிய அரபு அமீ­ரகம் தூதரகத்தை மீள அழைத்துக் கொண்­டது. அந்தப் போராட்டம் கொடூ­ர­மான பல்­முனை யுத்­த­மாக மாறி­ய­தோடு அதன் கார­ண­மாக இலட்சக்கணக்­கான மக்கள் கொல்­லப்­பட்­டனர், மில்­லியன் கணக்­கானோர் தமது வாழ்­வி­டங்­களை இழந்­தனர், நாட்டின் உட்­கட்­ட­மைப்­புக்­களும் சேத­ம­டைந்­தன.

சுமார் ஏழு ஆண்­டு­களின் பின்னர் சிரியப் படை­யினர் நாட்டின் பெரும்­பா­லான பகு­தி­களை தமது கட்­டுப்­பாட்­டினுள் கொண்டு வந்­த­த­னை­ய­டுத்து கடந்த வியா­ழக்­கி­ழமை மத்­திய டமஸ்­க­ஸி­லுள்ள அபூ றுமானேஹ் மாவட்­டத்தில் அமைந்­துள்ள கட்­ட­டத்தில் இரா­ஜ­தந்­தி­ரிகள் மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்­களும் பங்­கு­பற்­று­த­லுடன் ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் கொடி ஏற்­றப்­பட்­டது. தூத­ர­கத்தின் பதில் பொறுப்­ப­தி­காரி ஏலவே பணி­களை ஆரம்­பித்­து­விட்டார் என அமீ­ரக அறிக்­கை­யொன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தூத­ரகம் மீளத் திறக்­கப்­ப­டு­வதன் நோக்கம் சிரி­யா­வு­ட­னான உற­வினை சுமுக நிலைக்குக் கொண்டு வரு­வதும் அரபு – சிரியா விவ­கா­ரங்­களில் பிராந்­தியத் தலையீடுகள் இடம்பெறும் ஆபத்தை தடுப்பதுமாகும் என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளதாக சவூதிக்கு சொந்தமான அல்-அரபிய்யா தொலைக்காட்சி அலைவரிசை தெரிவித்துள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.