பட்டினி, அதிக வெப்பத்தில் சிக்கித் தவிக்கும் காஸா!

0 99

பலஸ்­தீ­னிய அக­தி­க­ளுக்­கான ஐ.நா. நிறு­வனம் (UNRWA) காஸாவில் இலட்­சக்­க­ணக்­கான மக்கள் போதிய தங்­கு­மிடம், உணவு, மருந்து மற்றும் சுத்­த­மான நீர் போன்ற அடிப்­படைத் தேவை­களை இழந்­துள்­ளனர் என்று தெரி­வித்­துள்­ளது.
நிவா­ரண உத­விகள் போது­மான அளவு காஸா பிராந்­தி­யத்தைச் சென்­ற­டை­ய­வில்லை என்றும் அவ்­வ­மைப்பு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

பசி, பட்­டினி கார­ண­மாக கடந்த வாரம் குறைந்­தது 34 பேர் (அவர்­களில் பெரும்­பாலோர் குழந்­தைகள்) இறந்­துள்­ளனர் என காஸாவின் சுகா­தார அமைச்­சகம் கூறி­யது. அதே நேரத்தில் 50,000 க்கும் மேற்­பட்ட குழந்­தை­களை கடு­மை­யான ஊட்­டச்­சத்து குறை­பாட்­டி­லி­ருந்து பாது­காக்க அவ­சர சிகிச்சை தேவை என்று UNRWA எச்­ச­ரித்­துள்­ளது.

இத­னி­டையே காஸாவில் கடும் வெப்­ப­மான கால­நிலை நிலவி வரு­கி­றது. அங்கு மின்­சாரம் அல்­லது சுத்­த­மான நீர் இல்லை. கிட்­டத்­தட்ட 2.3 மில்­லியன் மக்கள் இஸ்­ரேலின் கொடூ­ர­மான போர் மற்றும் அடக்­கு­முறை கார­ண­மாக தங்கள் வீடு­களை விட்டு வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர்.

கூடா­ரங்­களில், நெரி­ச­லான தங்­கு­மி­டங்­களில், ஐ.நா பாட­சா­லை­களில், அல்­லது தனியார் வீடு­களில் வாழும் குடும்­பங்கள், குளி­ரூட்­டிகள் அல்­லது மழை கிடைக்­காமல், அதி­க­ரித்து வரும் ஊட்­டச்­சத்து குறை­பாடு மற்றும் நோய்­களின் தாக்கங்களுக்கு மத்­தி­யி­லேயே இந்த கோடை கால வெப்­ப­நி­லையை எதிர்­கொள்ள நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்த வாரம் காஸாவில் வெப்­ப­நிலை 30°C க்கு மேல் இருக்கும் என்று கணிக்­கப்­பட்­டுள்­ளது. சமீ­பத்­திய கோடை­கா­லங்­களில் மத்­தி­ய­தரைக் கடல் முழு­வதும் தொடர்ச்­சி­யான வெப்ப அலை­களை உரு­வாக்கி வந்­துள்­ளது.

காஸாவுக்­கான மின்­சாரம் பெரும்­பாலும் இஸ்­ரேலில் இருந்தே வழங்­கப்­பட்­டது. ஆனால் காஸா மீது இஸ்ரேல் போரைத் தொடங்­கி­ய­வுடன், பிர­தே­சத்தின் ஒரே மின் நிலை­யத்­திற்­கான எரி­பொருள் வழங்­கு­வது துண்­டிக்­கப்­பட்­டது. தனியார் ஜென­ரேட்­டர்­களை இயக்­கு­வ­தற்­கான டீசல் வெகு­வாக தீர்ந்­து­விட்­டமையும் குறிப்­பி­டத்­தக்­கது.

2023 ஒக்­டோபர் 7 இல் காஸாவில் தாக்­கு­தல்கள் ஆரம்­பித்­த­து­ முதல் 37,800 க்கும் மேற்­பட்ட பலஸ்­தீ­னி­யர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். அவர்­களில் பெரும்­பாலோர் பெண்கள் மற்றும் குழந்­தை­க­ளாவர். மேலும் 86,800 க்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர் என உள்ளூர் சுகா­தார அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.

எட்டு மாதங்களுக்கும் மேலாக தொடரும் இஸ்ரேலிய தாக்குதல் காரணமாக, உணவு, சுத்தமான நீர் மற்றும் மருந்து ஆகியன முறையாக கிடைக்கப் பெறாத முற்றுகைக்கு மத்தியில் காஸாவின் பெரும்பாலான பகுதிகள் இடிந்து கிடப்பதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.