சம்­பந்தனின் மித­வாத அர­சி­யல் கொள்­கை பின்­பற்றப்­பட வேண்­டும்

0 285

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரும் முது­பெரும் தமிழ் அரசி­யல்­வா­தி­யு­மான இரா­ஜ­வ­ரோ­தயம் சம்­பந்­தனின் மறைவு இலங்­கையின் தேசி­ய அர­சி­ய­லில் பாரிய வெற்­றி­டத்தைத் தோற்­று­வித்­துள்­ளது என்­பதை அவ­ருக்கு பல்­வேறு தரப்­பு­க­ளி­லி­ருந்தும் முன்­வைக்­கப்­படும் அனு­தா­பங்கள் மற்றும் அஞ்­ச­லி­க­ள் உணர்த்தி நிற்­கின்­ற­ன.

தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷைகளை வென்­று கொடு­ப்­­ப­தையே தனது ஒரே இலக்­காகக் கொண்டு அர­சியல் செய்த அவரை எந்­த­வொரு சக்­தி­யாலும் விலை­பேச முடி­ய­வில்லை. இறுதி வரை மிக எளி­மை­யான வாழ்க்­கையையே வாழ்ந்து வந்த அவர் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வை மரணிப்­ப­தற்கு முன்­னரே பெற்றுக் கொடுப்பேன் என்ற உறு­தி­யோ­டுதான் அர­சியல் பணியை முன்­னெ­டுத்து வந்தார். எனினும் அவ­ரது முது­மை அதற்கு இடம்­­­­கொ­டுக்­கவில்லை. அதே­­போன்று தென்­னி­லங்­கையின் அர­சியல் மாற்­றங்­களும் சமீ­பத்­திய நிகழ்­வு­களும் அரசியல் தீர்வு பற்­றிய பேச்­சுக்­களை பின்­தள்­ளி­யி­ருந்­த­­ன. கோத்­த­பாய ராஜ­பக்ச ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்பட்ட பின்னர் அர­சியல் தீர்வு பற்­றிய பேச்­சுக்கே இட­மில்லை என்ற நிலையே தோற்றம் பெற்­றது. அவர் பதவி வில­கிய பின்னர் ரணில் விக்­ர­ம­சிங்­க ஜனாதி­பதி­யானார். அவ­ரும் தைப்­பொங்­க­லுக்கு முன் தீர்­வு, சித்­­திரைப் புத்­தாண்­டுக்கு முன் தீர்வு என அறிக்­கை­களை விட்­டாரே தவிர உருப்­ப­டி­யான எந்த முயற்­சி­க­ளை­யும் முன்­­னெ­டுக்­க­வில்லை. தற்­போது சம்பந்தன் உயி­ருடன் இருக்கும் காலத்தில் அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடி­யாமல் போன­மை கவ­லைக்­கு­ரி­யது என ஜனா­தி­ப­தி தெரி­வித்­தி­ருப்­பது வேடிக்­கை­யா­ன­தாகும். அந்த வகையில் தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு என்பது இனி எட்­டாக்­க­னியே என்­ப­தையே சம்பந்­தனின் மறைவு எடுத்­துக் கூறு­வ­தா­க­வுள்­ள­து.

தமிழ் முஸ்லிம் உறவைப் பொறுத்­த­வரை சம்­பந்தன் மிகவும் நிதான­மா­ன­தொரு பாத்­தி­ரத்தை வகித்தார் என்­பதை அனை­வரும் ஏற்றுக் கொள்­வர். விடு­தலைப் புலி­களால் முஸ்­லிம்­க­ளுக்கு அநி­யாயம் இழைக்­கப்­பட்­டது என்பதை அவர் ஏற்றுக் கொண்­டி­ருந்தார். முஸ்லிம் மக்­க­ளும் ஏற்றுக் கொள்­ளத்­தக்க அர­சியல் தீர்வு வழங்­கப்­பட வேண்டும் என்­பதில் அவர் உறு­தி­யா­­க­­வி­ருந்தார். வடக்கும் கிழக்­கும் இணைக்கப்­பட வேண்டும் என்­பதில் உறு­தி­யான நிலைப்­பாட்டைக் கொண்­டிந்த அவர் முஸ்லிம் மக்­களின் ஒத்­து­ழைப்­பின்றி அதனை சாத்­தி­ய­மாக்க முடி­யாது என்ற யதார்த்­தத்­தையும் பகி­ரங்­க­மா­கவே ஒப்புக் கொண்­­டி­ருந்தார்.

கிழக்கு மாகா­ணத்தில் முஸ்லிம் முத­ல­மைச்சர் ஒரு­வரை நிய­மிப்­பதற்கு அவர் முழு­மை­யான ஆத­ரவை வழங்­கி­யி­ருந்தார். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல் நடந்­த­போது இத் தாக்­கு­த­லுக்­கும் முஸ்லிம் சமூ­கத்­திற்கும் எந்­த­வித சம்­பந்­த­மு­மில்லை என அவர் அடித்துக் கூறி­னார்.

இலங்­கையில் பெரும்­பான்­மை சமூ­கத்­தி­ட­மி­ருந்து பாது­காப்பைப் பெற்றுக் கொள்ள வேண்­டு­மானால் தமி­­ழர்­களும் முஸ்­லிம்­களும் ஒன்­று­பட்டுச் செயற்­பட வேண்டும் என்­பதை அவர் எப்போதும் வலி­யு­றுத்தி வந்தார். இதற்­காக அவர் பல தட­வை­கள் முஸ்லிம் தலை­வர்­க­ளுடன் பேச்­சுக்­க­ளையும் நடத்­தி­யி­ருந்­தார்.

இவ்­வாறு முஸ்லிம் சமூ­கத்­திற்கும் தமிழ் சமூ­கத்­திற்­கு­மி­டையில் உறவுப் பால­மாக விளங்­கிய அன்­னாரின் மறைவு இரு சமூ­கத்­திற்கும் பேரி­ழப்பு என்­பதில் மாற்றுக் கருத்­தி­ருக்க முடி­யா­து.

சம்பந்தன் ஐயாவின் வெற்­றிடம் எந்­த­வ­கை­யிலும் நிரப்­பப்­பட முடி­யா­தது. ஆனால் அவ­ரது சிந்­த­னைகள், அவ­ரது எதிர்­பார்ப்­புகள், அபி­லா­ஷைகள் அவ­ருக்குப் பின் வரும் தமிழ் தலை­மை­களால் முன்­கொண்டு செல்­லப்­பட வேண்டும். அவர் காட்­டிய மித­வாத அர­சி­யல்­பாதை கடைப்­பி­டிக்­கப்­பட வேண்டும். நாட்டைப் பிளவு­ப­டுத்­தாது அனை­வரும் இலங்­கையர் என்ற அடை­யா­ளத்­துடன் சகல உரி­மை­க­ளையும் வளங்­க­ளையும் பெற்று வாழ வேண்டும் என அவர் காட்­டிய அர­சி­யல்­பா­தையில் பய­ணிக்க அனை­வரும் முன்­வர வேண்டும். குறிப்பாக­ அவர் விரும்­பி­யது போன்­றே எதிர்­கா­லத்­திலும் தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் ஒன்றுபட்ட அர­சியல் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.
அன்­னாரின் ஆத்­மா சாந்­தி­ய­டைய பிரார்த்­திப்போம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.