ஹம்தியின் சிறுநீரக சத்திர சிகிச்சை தொடர்பான விசாரணை அறிக்கை சபைக்கு சமர்ப்பிக்கப்படும்

முஜிபுர் ரஹ்மானுக்கு இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல பதில்

0 110

(எம்.ஆர்.எம்.வசீம்)
சிறு­நீ­ரக சத்­திர சிகிச்­சை­யின்­போது ஆரோக்­கி­ய­மான நிலையில் இருந்த சிறு­நீ­ர­கமும் நீக்­கப்­பட்­டி­ருந்­தது. சம்­பவம் இடம்­பெற்று ஒரு­வ­ரு­ட­மா­கியும் இது தொடர்­பான விசா­ரணை அறிக்கை இன்னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. அதனால் இந்த அறிக்கை எப்­போது பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கப்­படும் என முஜிபுர் ரஹ்மான் சபையில் கேள்வி எழுப்­பினார்.

பாரா­ளு­மன்­றத்தில் வியா­ழக்­கி­ழமை வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்­தின்­போது இடை­யிட்டு கேள்வி ஒன்றை முன்­வைத்து குறிப்­பி­டு­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

இது­தொ­டர்­பாக அவர் தொடர்ந்து குறிப்­பி­டு­கையில்,
கொழும்பு சிறுவர் வைத்­தி­ய­சா­லையில் சிறு­நீ­ரக நோய்க்கு சிகிச்சை பெற்­று­வந்த ஹம்தி என்ற 3வயது சிறுவன் கடந்த வருடம் ஜூலை மாத­ம­ளவில் சிறு­நீ­ரக சத்­திர சிகிச்­சைக்கு உள்­வாங்­கப்­பட்­டி­ருந்த போது, சிறு­வ­னது ஆரோக்­கி­ய­மான நிலையில் இருந்த சிறு­நீ­ர­கமும் சத்­திர சிகிச்சை மூலம் அகற்­றப்­பட்­டுள்­ளதால் குறித்த சிறுவன் உயி­ரி­ழந்தான். சத்­தி­ர­சி­கிச்­சையை மேற்­கொண்ட வைத்­தியரும் மிக விரை­வாக நாட்டை விட்டு சென்­று­விட்டார்.

இது­தொ­டர்­பாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாத­ளவில் ரவூப் ஹக்கீம் இந்த சபையில் முன்னாள் சுகா­தார அமைச்­ச­ரிடம் கேள்வி எழுப்­பி­ய­போது, சுகா­தார அமைச்சு இது­தொ­டர்­பாக விசா­ரணை நடத்தி வரு­கி­றது. அந்த விசா­ரணை அறிக்­கை­களை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் ஒரு வரு­ட­மா­கியும் அந்த அறிக்கை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை.

அதனால் இந்த விசா­ரணை அறிக்­கையின் நிலைமை என்ன? அந்த அறிக்­கையை எப்­போது பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கப்­போ­கி­றது என கேட்­கிறேன் என்றார்.

இதற்கு இரா­ஜாங்க அமைச்சர் சீதா அரம்­பே­பொல பதி­ல­ளிக்­கையில், இந்தச் சம்­பவம் தொடர்­பான விசா­ரணை அறிக்கையை அமைச்சின் செயலாளர் ஊடாக பாராளுமன்றத்துக்கு பெற்றுக்கொடுப்பதற்கு இன்றைய தினத்துக்குள் நடவடிக்கை எடுப்பேன். அது தொடர்பாக உங்களுக்கும் அறியத்தருகிறேன் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.