நாட்டின் அபிவிருத்தி பற்றி நான் கனவு காண்கிறேன்

ஆபத்தான தொங்கு பாலத்திலிருந்து இலங்கைத் தாய்த் திருநாடு எனும் குழந்தையை பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளேன் என்கிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

0 62

இலங்­கையின் பிர­தான உத்­தி­யோ­க­பூர்வ இரு­த­ரப்பு கடன் வழங்­கு­நர்­க­ளுடன் நேற்று (26) காலை கடன் மறு­சீ­ர­மைப்பு பேச்­சு­வார்த்­தை­களை நிறைவு செய்து உத்­தி­யோ­க­பூர்வ கடன் வழங்­குநர் குழு­வுடன் இறுதி உடன்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது. சீனாவின் எக்ஸிம் வங்­கி­யுடன் நேற்று பீஜிங்கில் இறுதி உடன்­பாடு எட்­டப்­பட்­ட­தோடு அதற்­கான முறை­யான நடை­மு­றைகள் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

நாட்டை நேசிக்கும் அனை­வ­ருக்கும் இது நற்­செய்தி என்று தெரி­வித்த ஜனா­தி­பதி, சிலர் ஜனா­தி­பதி பத­விக்­காக கடு­மை­யாக பாடு­படும் நிலையில் தான் நாட்­டிற்­காக பாடு­பட்டு வரு­வ­தா­கவும் தெரி­வித்தார்.

அவர்கள் தமக்குக் கிடைக்கும் பத­வி­களைப் பற்றிக் கனவு காணும் போது, தான் ​​நாட்டின் அபி­வி­ருத்­தியைப் பற்றிக் கனவு காண்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

நேற்று விசேட உரை­யொன்றை ஆற்றும் போதே ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க இவ்­வாறு தெரி­வித்தார்.

மேலும் அவர் உரை­யாற்­று­கையில், அன்று மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தியின் பிர­காரம் இலங்கைத் தாயை ஆபத்­தான தொங்கு பாலத்தின் ஊடாக கொண்டு வர முடிந்­தது.

ஹுனு­வட்­டயே நாட­கத்தில் வரு­வதைப் போன்று கடி­ன­மான நிலை­மையில் குழந்­தையைப் பாது­காப்­ப­தற்கு அஞ்சி எந்த ஆத­ர­வையும் வழங்­காத தரப்­பினர், குழந்தை தொங்கு பாலத்தை கடக்கும் முன்பே குழந்­தையின் உரி­மையைக் கேட்டு போரா­டு­கின்­றனர்.

கடனை செலுத்த முடி­யாமல் வங்­கு­ரோத்­தான நாடென்று முத்­திரை குத்­தப்­பட்ட ஒரு நாடு இரண்டு வரு­டங்­களில் இந்­த­ளவு முன்­னேற்­றத்தைப் பெற முடிந்­தி­ருப்­பது வெற்­றி­யாகும், அண்­மைய வர­லாற்றில் பொரு­ளா­தார படு­கு­ழியில் விழுந்த உலகின் எந்த நாடும் இவ்­வ­ளவு குறு­கிய காலத்தில் இவ்­வா­றான நிலையை அடைந்­த­தில்லை.

நாடு எதிர்­நோக்கும் சவால்­களை உண்­மை­யாகப் புரிந்­து­கொண்டு அவற்­றிற்கு நடை­முறை தீர்­வு­களை வழங்கி, முடி­வு­களைக் காட்­டிய தன்­னுடன் சேர்ந்து நாட்டை முன்­னோக்கி கொண்டு செல்­வீர்­களா? இல்­லையேல் இன்னும் பிரச்­சி­னையை புரிந்து கொள்­ளாத மற்றும் அதி­கா­ரத்­திற்­காக இருட்டில் தடவிக் கொண்­டி­ருக்கும் குழுக்­க­ளுடன் இணை­வதா என்­பதை நாட்டு மக்கள் தீர்­மா­னிக்க வேண்டும்.

தவ­றான பாதையில் செல்­வதால் ஏற்­படும் ஆபத்­துக்­களை அனை­வரும் அறிந்­து­வைத்­துள்­ளதால், அது தொடர்பில் தீர்­மா­னத்தை எடுப்­ப­தற்கு மக்­க­ளுக்கு முழு உரி­மையும் சுதந்­தி­ரமும் காணப்­ப­டு­கி­றது.

மக்கள் எடுக்கும் தீர்­மானம் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்­காது. அது நாடு மற்றும் குழந்­தை­களின் எதிர்­கா­லத்­தையே தீர்­மா­னிக்கும்.

வங்­கு­ரோத்து அடைந்து நாட்டின் பொரு­ளா­தாரம் படு­கு­ழியில் வீழ்ந்­தி­ருந்த நாட்டை மீட்­ப­தற்கு தனது கட்­சிக்கு பாரா­ளு­மன்ற அதிகாரம் இருக்கவில்லை. தன்னால் நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகளோ தான் நியமித்த அமைச்சரவையோ இருக்கவில்லை. அவை எதுவும் இன்றி உலகையே ஆச்சரியப்படுத்தும் விதத்தில் இரண்டு வருடங்களில் நிலையான நாட்டை கட்டியெழுப்ப தன்னால் முடிந்துள்ளது என்றார்.

2022 ஆகஸ்ட் 3 ஆம் திகதி பாரா­ளு­மன்றக் கூட்­டத்­தொ­டரின் ஆரம்ப உரை­யின்­போது, வீழ்ச்­சி­ய­டைந்த பொரு­ளா­தா­ரத்தை மீண்டும் கட்­டி­யெ­ழுப்ப பின்­பற்ற வேண்­டிய நான்கு அம்சக் கொள்­கை­களை நான் நாட்­டுக்கு முன்­வைத்தேன்.

1. சர்­வ­தேச நாணய நிதி­யத்­துடன் கலந்­தா­லோ­சித்து, விரி­வான கடன் வச­தி­களைப் பெற்று நாட்டில் நிதி ஒழுக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது,
2. சர்­வ­தேச நிதி மற்றும் சட்ட வல்­லு­னர்­க­ளான Lazard மற்றும் Clifford Chance ஆகி­யோ­ருடன் இணைந்து கடன் உறு­திப்­ப­டுத்தல் திட்­டத்தைத் தயா­ரித்து கடன் வழங்­கு­நர்­க­ளுடன் உடன்­பாட்டை எட்­டு­வது,
3. வெளி­நாட்டு முத­லீட்டை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தோடு, ஏற்­று­மதிப் பொரு­ளா­தா­ரத்தை வலுப்­ப­டுத்தும் கொள்­கைகள், சட்ட திட்­டங்­களை உரு­வாக்­கு­வ­துடன், டிஜிட்டல் பசுமைப் பொரு­ளா­தா­ரத்தை உரு­வாக்­கு­வது,
4. இத்­திட்­டத்தின் மூலம் 2048 ஆம் ஆண்­டுக்குள் கட­னற்ற பொரு­ளா­தா­ரத்தை உரு­வாக்கி அபி­வி­ருத்­தி­ய­டைந்த நாடாக மாற்­று­வது,
ஆகிய நான்கு அம்சக் கொள்­கை­களை அன்று முன்­வைத்தேன்.

அன்று நான் குறிப்­பிட்ட வேலைத்­திட்டம் குறித்தும், அதை எப்­படிச் செயல்­ப­டுத்­து­வது என்­பது பற்­றிய அனைத்துத் தக­வல்­க­ளையும் அவ்­வப்­போது பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைத்தேன். இதை நாங்கள் இர­க­சி­ய­மாகச் செய்­ய­வில்லை. அனைத்தும் வெளிப்­படைத் தன்­மை­யுடன் செய்­யப்­பட்­டன.
நான்கு அம்சக் கொள்­கை­களில் முதல் மூன்று விட­யங்­களும் இப்­போது வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. நமது வேலைத்­திட்­டமும் நாம் கடந்து வந்த பாதையும் சரி­யா­னவை என்­பதை இது நிரூ­பிக்­கி­றது.

கடனை திருப்பிச் செலுத்த முடி­யாமல் வங்­கு­ரோத்து முத்­திரை குத்­தப்­பட்ட நாடு என்ற வகையில், இரண்டே ஆண்­டு­களில் இந்த மாதி­ரி­யான முன்­னேற்­றத்தை எட்ட முடிந்­ததே பாரிய வெற்­றி­யாகும். இவ்­வாறு பொரு­ளா­தார படு­கு­ழியில் விழுந்த ஏனைய நாடு­க­ளுக்கு, சாத­க­மான நிலையை எட்ட நீண்ட காலம் பிடித்­தது. அண்­மைய வர­லாற்றில், உலகில் எந்த நாடும் இவ்­வ­ளவு சிறப்­பான வெற்­றியை இவ்­வ­ளவு குறு­கிய காலத்தில் பெற்­ற­தில்லை.

நமது பொரு­ளா­தாரம் வீழ்ந்­துள்ள படு­குழி தொடர்பில் நாம் தெளி­வாகப் புரிந்து வைத்­தி­ருந்தோம். அதற்குக் கொடுக்­கப்­பட வேண்­டிய சரி­யான தீர்­வு­களை நாங்கள் அறிந்­தி­ருந்தோம். எங்­க­ளு­டைய தொலை­நோக்குப் பார்வை, உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு காரணமாக இந்த நிலையை எங்களால் அடைய முடிந்தது. எனவே, இந்த வழியைப் பின்பற்றினால், நான்காவது கட்டமான 2048 இற்குள் அபிவிருத்தியடைந்த நாடாக மாற முடியும் என்பது இப்போது தெளிவாகிறது.

திறந்த பொருளாதார முகாமைத்துவத்தின் மூலம் வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்காக நாம் இந்த இலக்குகளை எட்டியிருக்கிறோம். எமது உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் கடன் மறுசீரமைப்புக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். அதனால், நாம் இப்போது மீண்டும் சர்வதேசத்தின் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம். அதேநேரம் நாம் இதுவரை கடந்து வந்த பாதை சரியானது என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.