சாஹிரா மாணவிகளுக்கு அநீதி இழைக்க வேண்டாம்

பெறுபேறுகளை விரைவில் வெளியிடுங்கள் என சபையில் சஜித் கோரிக்கை ஒரு சில தினங்களில் வெளியிட நடவடிக்கை என்கிறார் கல்வி அமைச்சர் சுசில்

0 55

(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
திரு­கோ­ண­மலை சாஹிரா கல்­லூரி மாண­வர்­களின் உயர்­தர பரீட்சை பெறு­பே­றுகள் வெளி­யி­டு­வதை மேலும் தாம­தப்­ப­டுத்தி அவர்­க­ளுக்கு அநீதி இழைக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்த எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ, பெறு­பே­று­களை விரைவில் வெளி­யிட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கல்வி அமைச்சரிடம் நேற்று சபையில் கோரிக்­கை­வி­டுத்தார்.

இதற்கு பதி­ல­ளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரே­ம­ஜ­யந்த, இன்னும் சில தினங்­களில் அம்­மா­ண­வி­களின் பெறு­பே­றுகள் வெளி­யி­டப்­படும். அது தொடர்­பான நட­வ­டிக்­கை­களை பரீட்சை ஆணை­யாளர் நாயகம் முன்­னெ­டுத்து வரு­கிறார் என தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச எழுப்­பிய இடை­யீட்டு கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.
எதிர்க்­கட்சித் தலைவர் தனது கேள்­வி­யின்­போது, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மகரூப் இது தொடர்­பாக என்­னிடம் தெரி­வித்தார். திரு­கோ­ண­மலை சாஹிரா கல்­லூரி மாண­விகள் 70 பேரின் உயர்­தர பரீட்சை பெறு­பே­றுகள் இடை நிறுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

பரீட்சை பெறு­பே­றுகள் ஒரு வார­கா­லத்­துக்குள் வெளி­யிட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என இந்த சபையில் கடந்த இரண்டு வாரங்­க­ளுக்கு முன்னர் தெரி­வித்­தி­ருந்­தீர்கள். ஆனால் இது­வரை பெறு­பே­றுகள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. அதனால் அந்த மாண­வி­க­ளுக்கு அநீதி ஏற்­ப­டாமல் அவர்­களின் பெறு­பே­று­களை விரை­வாக வெளி­யிட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு கல்வி அமைச்சர் பதி­ல­ளிக்­கையில்,

இது தொடர்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மகரூப் என்­னி­டமும் தொலை­பே­சியில் கலந்­து­ரை­யா­டினார். பரீட்சை மண்­ட­பத்­துக்குள் பர்தா அணிந்து வரு­வ­தாக இருந்தால், இரண்டு காது­களும் தெரியும் வகையில் இருக்­க­வேண்டும். அதற்கு பல கார­ணங்கள் இருக்­கின்­றன.

அதனை இந்த இடத்தில் நான் தெரி­விக்­க­வில்லை. இந்த விட­யங்கள் இடம்­பெ­று­கின்ற பிர­தே­சங்­களும் இருக்­கின்­றன. அது தொடர்­பா­கவும் தற்­போது நான் ஒன்றும் தெரி­விக்­கப்­போ­வ­தில்லை.

இந்த விடயம் கார­ண­மா­கவே இவ்­வாறு பரீட்சை பெறு­பேறு இடை நிறுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. இந்த விட­யத்தை அதி­காரி ஒருவர் அள­வுக்கு அதிகமான வகையில் எடுத்­துக்­கொண்­டுள்ளார் என்­றாலும் மாண­வர்­களின் பெறு­பே­று­க­ளுக்கு எந்த பாதிப்பும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை.

பெறு­பே­று­களை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பரீட்சைகள் ஆணையாளர் இன்னும் ஒரு சில தினங்களில் அதனை வெளியிடுவார் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.