புனித ஹஜ் யாத்திரைக்காக 2 மில்லியன் பேர் சவூதியில்

வெப்பநிலை அதிகரிப்பு ; பாதுகாப்பான யாத்திரைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

0 72

இம்­முறை புனித ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்­வ­தற்­காக நேற்று வரை சுமார் 2 மில்­லியன் யாத்­தி­ரி­கர்கள் மக்கா நகரை வந்­த­டைந்­துள்­ளனர். திங்­கட்­கி­ழமை வரை 1.5 மில்­லியன் வெளி­நாட்டு யாத்­தி­ரி­கர்கள் சவூ­தியை வந்­த­டைந்­துள்­ள­தாக சவூதி கட­வுச்­சீட்டு அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.

திங்கட்கிழமை வரை 1,547,295 பேர் ஆகாயம், கடல் மற்றும் தரை மார்க்­க­மாக சவூ­தியை வந்­த­டைந்­துள்­ளனர். இதற்­கப்பால் மேலும் பல இலட்சம் யாத்­தி­ரி­கர்கள் சவூதி அரே­பி­யாவின் பல்­வேறு நக­ரங்­க­ளி­லி­ருந்தும் யாத்­தி­ரைக்­காக வருகை தந்த வண்­ண­முள்­ளனர்.

சென்ற வருடம் 1.8 மில்­லியன் பேர் ஹஜ் கட­மையை நிறை­வேற்­றி­யி­ருந்த நிலையில் இவ்­வ­ருடம் இந்த எண்­ணிக்கை 2 மில்­லி­யனைத் தாண்டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வ­ருட ஹஜ் யாத்­திரை ஜூன் 14 ஆம் திகதி ஆரம்­ப­மா­கி­றது. மக்­காவை வந்­த­டைந்­துள்ள யாத்­தி­ரி­கர்கள் அனை­வரும் எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை மினாவை வந்­த­டைவர். மறு­தினம் அற­பாவில் தரித்­தி­ருப்­ப­துடன் ஹஜ் யாத்­தி­ரையின் பிர­தான அம்­சங்­களை நிறைவு செய்வர்.

இம்­முறை ஹஜ் யாத்­திரை காலத்தில் வெப்­ப­நிலை 48 செல்­சி­ய­ஸாக அதி­க­ரிக்கும் என்­பதால் யாத்­தி­ரி­கர்­களை வெப்­பத்தில் இருந்து பாது­காப்­ப­தற்­கான முன்­னேற்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

மேலும் யாத்­தி­ரி­கர்கள் ஒன்­று­கூடும் இடங்­களில் பாது­காப்பும் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. யாத்­தி­ரையின் அமை­தியை சீர்­கு­லைக்கும் வகையில் செயற்­படும் எவ­ருக்கு எதி­ரா­கவும் மிகக் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என ஜ் பாது­காப்புக் குழுவின் தலை­வரும் பொது மக்கள் பாது­காப்பு துறையின் பணிப்­பா­ள­ரு­மான லெப்­டினன்ட் ஜெனரல் முஹம்மத் அல் பஸ்­ஸாமி தெரி­வித்­துள்ளார். அல்­லர்வின் விருந்­தி­னர்­க­ளான யாத்­தி­ரி­கர்­க­ளி­னதும் புனித தலங்­க­ளி­னதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவோர் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.