இஸ்ரேல் தாக்­கினால் பதி­ல­டி மிகக் கடு­மை­யாக இருக்­கும்

ஈரா­னிய ஜனா­தி­பதி இப்­ராஹிம் ரைஸி எச்­ச­ரிக்கை , பிராந்­திய நாடுகள் ஈரானின் இராணுவ பலத்தை நம்ப வேண்டும் என்றும் அழைப்பு

0 312

ஈரான் மீது இஸ்ரேல் ‘மிகச் சிறிய’ தாக்­கு­தலை நடாத்­தி­னாலும் அது ‘பாரிய மற்றும் கடு­மை­யான’ பதி­ல­டியைச் சந்­திக்க வேண்டி வரும் என ஈரா­னிய அதிபர் இப்­ராஹிம் ரைஸி எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார். அத்­துடன் இஸ்ரேல் மீது ஈரான் நடாத்­திய வான் வழித்­தாக்­கு­த­லா­னது இஸ்­ரேலின் இரா­ணுவத் தோல்வி மாத்­தி­ர­மன்றி ஆக்­கி­ர­மிப்பு ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு மூலோ­பாய ரீதி­யா­கவும் பாரிய பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

நேற்று ஈரானின் தலை­நகர் தெஹ்­ரானில் நடை­பெற்ற தேசிய இரா­ணுவ தின நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இதன்­போது ஈரா­னிய இரா­ணு­வத்தின் பல்­வேறு பிரி­வு­க­ளி­னதும் பாரிய அள­வி­லான இரா­ணுவ அணி­வ­குப்பு இடம்­பெற்­ற­துடன் அவற்றின் அதி­ந­வீன ஆயுத தள­பா­டங்­களும் பாது­காப்பு சாத­னை­களும் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டன.

தனது உரை­யின்­போது இஸ்­ரே­லுடன் இரா­ஜ­தந்­திர உற­வு­களைப் பேண விரும்பும் அரபு நாடு­க­ளுக்கும் அவர் எச்­ச­ரிக்கை விடுத்தார். ‘‘ஈரானின் தாக்­கு­தலின் மூலம் உள­வுத்­துறை, பாது­காப்பு மற்றும் இரா­ணுவம் ஆகி­ய­வற்றில் சியோ­னிச ஆட்சி தோல்­வி­ய­டைந்­துள்­ளது. எல்­லா­வற்­றிற்கும் மேலாக அது ஒரு மூலோ­பாய பின்­ன­டை­வாகும். சில நாடுகள் சியோ­னிச ஆட்­சி­யுடன் உற­வு­களை இயல்­பாக்க முயன்­றன, ஆனால் அவை இப்­போது தங்கள் சொந்த நாடு­க­ளி­லேயே அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இது அந்த ஆட்­சிக்கு ஒரு மூலோ­பாய தோல்­வி­யாகும்” என்று அவர் சுட்­டிக்­காட்­டினார்.

ஈரா­னிய ஜனா­தி­பதி பலஸ்­தீ­னத்­திற்­கான உல­க­ளா­விய ஆத­ர­வையும், அமெ­ரிக்கா மற்றும் இஸ்­ரே­லுக்கு எதி­ரான வெறுப்­பையும் கோடிட்­டுக்­காட்­டினார். பலஸ்­தீ­னத்­திற்­கான ஆத­ரவு மற்றும் எதிர்ப்பு முன்­னணி இப்­போது அனைத்து நாடு­களின் மற்றும் மதங்­களின் அடை­யா­ள­மாக மாறி­யுள்­ளது என்­பதை வலி­யு­றுத்­தினார்.

“எங்கள் ஆயுதப் படைகள் பாது­காப்பு மற்றும் அமை­தியை உறு­தி­செய்து, பிராந்­தியம் முழு­வதும் இறை­யாண்­மையை நிலை­நி­றுத்­து­கின்­றன.மேலும் அவை முற்­றிலும் நம்­ப­க­மா­னவை” என்று ஈரா­னிய ஜனா­தி­பதி கூறினார். பிராந்­திய நாடுகள் இஸ்­ரே­லு­ட­னான வெளி­நாட்டு உற­வுகள் மற்றும் கூட்­டாண்­மை­களை நம்­பு­வதை விட தங்கள் சொந்த வளங்கள் மற்றும் முஸ்லிம் படை­க­ளையே நம்­பி­யி­ருக்க வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தினார்.

இஸ்ரேல் மீது ஈரான் நடாத்­திய ‘உண்­மை­யான வாக்­கு­றுதி’ எனும் பெய­ரி­லான தாக்­கு­த­லா­னது வரை­ய­றுக்­கப்­பட்­டதும் தண்­டிப்­படை நோக்­காகக் கொண்­டதும் என வலி­யு­றுத்­திய அவர் இஸ்­ரே­லிய அர­சாங்கம் ஏதே­னு­மொரு இரா­ணுவ சாக­சத்தை காண்­பிக்க முற்­பட்டால் அதனை பிராந்­தி­யத்­தி­லி­ருந்து முற்­றாக துடைத்­த­ழிப்­ப­தற்கு ஈரான் ஒரு­போதும் பின்­நிற்­காது என்றும் அவர் எச்­ச­ரித்தார்.

ஈரான் நடாத்­திய தாக்­கு­த­லா­னது வெல்ல முடி­யாத இரா­ணுவம் எனும் இஸ்­ரேலின் கட்­டுக்­க­தையை தகர்த்­து­விட்­டது என்றும் அது ஒரு சிலந்தி வலைக்கு ஒப்­பா­னது என்­பது தற்­போது வெளித் தெரிய வந்­துள்­ளது என்றும் அவர் மேலும் தெரி­வித்தார்.

“ஆப­ரேஷன் ட்ரூ ப்ரொமிஸ் ஒரு வரை­ய­றுக்­கப்­பட்ட மற்றும் ஒரு விரி­வான நட­வ­டிக்கை அல்ல. நாங்கள் ஒரு வலு­வான நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டி­ருந்தால், இஸ்­ரேலில் எதுவும் எஞ்­சி­யி­ருக்­காது ”என்றும் அவர் கூறினார்.

ஈரா­னிய ஜனா­தி­பதி மேலும் உரை­யாற்­று­கையில் “ஈரா­னிய இரா­ணுவம் தேசத்தின் சார்­பாக நிற்­கி­றது மற்றும் தாயகம், பிராந்­திய ஒரு­மைப்­பாடு மற்றும் இஸ்­லா­மியப் புரட்­சியின் மதிப்­பு­களைப் பாது­காக்க செயல்­ப­டு­கி­றது. இறை நம்­பிக்கை மற்றும் தெய்­வீக சக்­தியின் மீதான நம்­பிக்கை ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் நமது இரா­ணுவம் உலகின் ஏனைய படை­க­ளி­லி­ருந்து தன்னை வேறு­ப­டுத்திக் கொண்­டுள்­ளது. எமது இரா­ணுவம் திற­மை­யான மற்றும் பயிற்சி பெற்ற படை. அதன் இரா­ணுவ அறிவு நவீ­ன­மா­னது மற்றும் அத்­த­கைய திறமை ஈரா­னிய இரா­ணு­வத்தை ஏனை­ய­வற்­றி­லி­ருந்து வேறு­ப­டுத்­தி­யுள்­ளது. எமது இரா­ணுவம் அதி­ந­வீன கண்­டு­பி­டிப்­புகள் மற்றும் தொழில்­நுட்­பங்­களைக் கொண்­டுள்­ளது.

போர் விமா­னங்கள், கப்­பல்கள், டாங்­கிகள் மற்றும் ஸ்மார்ட் சிஸ்­டம்­களின் உற்­பத்தி உட்­பட இஸ்­லா­மிய குடி­ய­ரசின் இரா­ணுவ திறன்கள், பிராந்­திய மற்றும் திநவீன கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது.

போர் விமானங்கள், கப்பல்கள், டாங்கிகள் மற்றும் ஸ்மார்ட் சிஸ்டம்களின் உற்பத்தி உட்பட இஸ்லாமிய குடியரசின் இராணுவ திறன்கள், பிராந்திய மற்றும் உலக அளவில் நாட்டை ஒரு வலிமைமிக்க சக்தியாக நிலைநிறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். மேலும் பிராந்தியப் நாடு­கள் ஈரானிய ஆயுதப் படைகளை நம்பியிருக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.