நோன்பினூடாக ஆன்மீக ரீதியாக பக்குவப்பட்ட இறை திருப்தி சகலருக்கும் கிட்ட வேண்டும்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

0 159

இஸ்­லா­மிய மத நடை­மு­றை­க­ளின்­படி நோன்பு நோற்­பதில் அனை­வ­ருக்­கு­மி­டை­யே­யான பரஸ்­பர நட்பு, சகோ­த­ரத்­துவம், ஒற்­றுமை மற்றும் இஸ்­லா­மிய சமயக் கோட்­பாட்டில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள உன்­னத குணங்கள் நிறை­வேறும் கால­கட்­ட­மாக இது அமை­வதால், ஆன்­மீக ரீதி­யாக பக்­கு­வப்­பட்டு இறை திருப்தி சக­ல­ருக்கும் கிட்ட வேண்டும் என இந்த நோன்புப் பொருநாள் தினத்தில் பிரார்த்­திப்­ப­தாக எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்தார்.

அவர் விடுத்­துள்ள வாழ்த்துச் செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ரமழான் நோன்பு காலம் முடிந்த பிறகு உல­கெங்­கிலும் உள்ள இஸ்­லா­மி­யர்­களின் பிரார்த்­த­னை­களை அல்லாஹ் ஏற்­றுக்­கொள்வான் என்ற நம்­பிக்­கை­யுடன் ஈதுல் பித்ர் பெரு­நாளைக் கொண்­டா­டு­கி­றார்கள்.

இந்தப் பெரு­நாளை உலகம் முழு­வதும் உள்ள இஸ்­லா­மி­யர்கள் மிகுந்த மரி­யா­தை­யுடன் நினைவு கூரு­கின்­றனர்.

அல் குர்­ஆனின் போத­னைகள் மற்றும் முஹம்­மது நபியின் நடை­மு­றை­களை சமய முறை­யாகக் கடைப்­பி­டித்து இலங்கை முஸ்லிம் மக்­களும் மிக்க மகிழ்ச்­சி­யுடன் தூய்­மை­யாக இந்த ெபரு­நா­ளை கொண்­டா­டு­கின்­றனர்.

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்­பதன் மூலம் இறை­வ­னுக்கும் அடி­யா­னுக்கும் இடையே நெருங்­கிய உறவை ஏற்­ப­டுத்த ஒரு தனித்­து­வ­மான வாய்ப்பை உரு­வாக்கி அதன் மூலம் உயர்ந்த மனித நற்­பண்­புகள் மற்றும் ஒழுக்க விழு­மி­யங்­களின் மதிப்பை எடுத்­து­ரைப்­பதும் நன்­மை­களின் பக்கம் நம்மை புடம் போடு­வதும் மிகவும் பாராட்­டத்­தக்­கது.

மனி­தா­பி­மா­னத்­துடன் நாம் நடந்து கொண்டால், உலகம் இத­னை­விட மிகவும் அமை­தி­யா­ன­தாக இருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.பரோ­ப­கார அடிப்­ப­டையில் சமூ­கத்தில் வச­தி­யுள்ளோர் இல்­லாதோர் இடை­வெ­ளியைக் குறைத்து, அனை­வ­ருக்கும் சகோ­த­ரத்­துவ கரங்­களை நீட்டும் ஒரு வாய்ப்­பா­கவும் இந்த பெரு­நாளைக் குறிப்­பி­டலாம்.இந்த சகோ­த­ரத்­துவ பண்பை இலங்கை வாழ் முஸ்லிம் சமூ­கத்­திடம் நாம் பல கால­மாக கண்டு வரு­கிறோம். இது மனித குலத்­துக்கு சிறந்த செய்­தியை கூறு­கி­றது. சமூ­கத்தில் சக­ல­ரையும் உள்­ள­டக்கும் உன்­னத போதனை என்றும் பாராட்­டத்­தக்­கது.

நல்­லி­ணக்­கத்­து­டனும் ஒற்­று­மை­யு­டனும் ஒரு புதிய இலங்­கையை உரு­வாக்க இவ்­வா­றான கலா­சார,சமய நிகழ்­வுகள் மூலம் கிடைக்­கின்ற படிப்­பி­னை­களும் முன்­ணு­தா­ர­ணங்­களும் அளப்­ப­ரி­யது.

எமது நாட்டில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான ஒற்­றுமை, மதங்­க­ளுக்கு இடை­யி­லான நல்­லி­ணக்கம், நட்­பு­றவு என்­றென்றும் பேணப்­பட வேண்டும். நாட்­டுக்கு இதுவே பக்க பலம். அந்­தந்த மதங்­க­ளுக்­கு­ரிய மரி­யாதை வழங்­கப்­பட வேண்டும். பன்­மு­கத்­தன்­மையை பாராட்ட வேண்டும். பன்­மு­கத்­தன்­மையில் உருவாகும் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும், கலாசார விழுமியங்களுக்கும் உரிய மரியாதையும் கௌரவமும் அளிக்கப்பட வேண்டும்.

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் மக்களும் உலகளாவிய இஸ்லாமிய பெருமக்களுக்கும் என்னெஞ்ஞார்ந்த நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.