முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல்

உலமா சபை, சூரா சபை, பள்ளிவாசல்கள் சம்மேளனம், சாகல ரத்நாயக்க, அலிசப்ரி பாதுகாப்பு, கல்வி, மதவிவகார அமைச்சு, திணைக்கள அதிகாரிகளும் பங்கேற்பு

0 78

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­கு­வ­தற்­கான உயர்­மட்ட கலந்­து­ரை­யா­ட­லொன்று நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்­றது.

தேசிய பாது­காப்பு தொடர்­பான ஜனா­தி­ப­தியின் ஆலோ­ச­கரும், ஜனா­தி­ப­தியின் பணிக்­கு­ழாமின் பிர­தா­னி­யு­மான சாகல ரத்­நா­யக்க தலை­மையில் இடம்­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­டலில் வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்­ரியும் கலந்து கொண்­டி­ருந்தார்.

மேலும் பாது­காப்பு அமைச்சின் உயர்­அ­தி­கா­ரிகள், கல்வி அமைச்சின் அதி­கா­ரிகள், புத்­த­சா­சன சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சின் அதி­கா­ரிகள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் அமைச்சின் அதி­கா­ரிகள், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை மற்றும் தேசிய சூரா சபை பிர­தி­நி­திகள், கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் உட்­பட சம்­பந்­தப்­பட்ட துறைசார் அதி­கா­ரிகள், சிறைச்­சாலை ஆணை­யாளர் நாயகம் என்போர் கலந்து கொண்­டனர்.

கலந்­து­ரை­யா­டலில் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லை­ய­டுத்து பாது­காப்­பினை காரணம் காட்டி மூடப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்­களை மீளத் திறப்­பது குறித்து ஆலோ­சிக்­கப்­பட்­டது.

மஹர சிறைச்­சாலை வளா­கத்­தினுள் இயங்கி வந்த தற்­போது மூடப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சலை மீளத் திறப்­பது பாது­காப்பு பிரி­வி­னரின் கவ­னத்­துக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது. மூடப்­பட்­டுள்ள இந்தப் பள்­ளி­வா­சலைத் திறப்­பதில் சிறைச்­சாலை நிர்­வா­கத்­துக்கு பிரச்­சி­னை­யாக இருப்பின் அப்­பள்­ளி­வா­சலை வேறோர் இடத்தில் நிர்­மா­ணிப்­பது தொடர்பில் கவனம் செலுத்­தப்­பட்­டது. இது தொடர்பில் காலம் தாழ்த்­தாது உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு சிறைச்­சா­லைகள் ஆணை­யாளர் நாயகம் வேண்­டப்­பட்டார்.

அடுத்து உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லை­ய­டுத்து பாது­காப்பு காரணம் கருதி மூடப்­பட்­டுள்ள ஏக்­கலை ஜும்ஆ பள்­ளி­வாசல் பொலிஸார் மற்றும் உரிய தரப்­பி­ன­ருடன் பேச்­சு­வார்த்தை நடாத்தி தாம­த­மில்­லாமல் திறப்­பது குறித்தும் தீர்­மானம் மெற்­கொள்­ளப்­பட்­டது.

குர்ஆன் நூல்கள், இஸ்­லா­மிய நூல்கள் இறக்­கு­ம­தியின் போது எதிர்­கொள்ளும் சவால்­களை நீக்­கு­வது தொடர்­பிலும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இவ்­வாறு குர்ஆன், இஸ்­லா­மிய நூல்கள் பாது­காப்பு அமைச்சின் அனு­ம­தியைப் பெற்றுக் கொண்­டதன் பின்பே விடு­விக்­கப்­ப­டு­வ­தற்குப் பதி­லாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் ஒரு குழு­வினை நிய­மித்து அக்­கு­ழுவின் சிபா­ரி­சு­களின் கீழ் இறக்குமதி செய்வதென தீர்மானிக்கப்பட்டது.

மேலும் நாட்டில் இயங்கிவரும் மத்ரஸாக்களுக்கென தயாரிக்கப்பட்டுள்ள தனியான சட்ட வரைபொன்று அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த சட்டவரைபின்படி மத்ரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் உள்வாங்கப்படவுள்ளன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.