ஜீவனின் மன்னிப்பை ஏற்கமுடியாது!

விரிவான விசாரணையே தேவை என்கின்றனர் முஸ்லிம்கள்

0 89

ஆங்­கி­லத்­தில்: பமோதி வர­விட்­ட
தமி­ழி­ல்: ஏ.ஆர்.ஏ.பரீல்

‘‘கொவிட் 19 வைரஸ் தொற்­றினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் ஜனா­ஸாக்கள் கடந்த அர­சாங்­கத்­தினால் பல­வந்­த­மாக தகனம் செய்­யப்­பட்­டமை தவறு என்­பதை ஏற்­றுக்­கொள்­கிறேன். முஸ்லிம் சமூ­கத்­திடம் இதற்­காக ஓர் அமைச்சர் என்ற ரீதியில் மன்­னிப்புக் கோரு­கிறேன்’’ என்று கூறி நீர்­வ­ழங்கல் மற்றும் தோட்ட உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மூ­டாக மன்­னிப்பு கோர முயற்­சிப்­பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஏற்க மறுத்­துள்­ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அமைச்சர் தொண்­ட­மானின் மன்­னிப்பை மறுப்­ப­தா­கவும் ஏனென்றால் அவர் இவ்­வி­வ­கா­ரத்­துடன் தொடர்­பு­பட்­டவர் அல்ல எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளர் நிஸாம் காரி­யப்பர் தெரி­வித்­துள்ளார்.

கொவிட் 19 தொற்று காலத்தில் முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­ப­யவின் பதவிக் காலத்தில் அதி­கா­ரத்­தி­லி­ருந்த அமைச்­சர்­களே மன்­னிப்புக் கோர வேண்­டி­ய­வர்­க­ளாவர். தற்­போ­தைய அமைச்சர் ஜீவன் தொண்­ட­மா­னல்ல. இவர் மன்­னிப்பு கோரு­வது வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான ஒரு தந்­தி­ர­மா­கவே அமைந்­துள்­ளது எனவும் நிஸாம் காரி­யப்பர் தெரி­வித்­துள்ளார்.

2020 ஏப்ரல் மாதம் அர­சாங்க வர்த்­த­மானி அறி­வித்­த­லொன்று வெளி­யி­டப்­பட்­டது. அந்த அறி­வித்­தலில் கொவிட் 19 தொற்­றினால் மர­ணிப்­ப­வர்­களின் உடல்கள் அனைத்தும் தகனம் செய்­யப்­பட வேண்டும். கொவிட் 19 தொற்­றினால் மர­ணித்­த­வர்­களின் உடல்கள் அடக்கம் செய்­யப்­பட்டால் நிலத்­தடி நீர் மாசு­படும் என்­பது நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ள­தாலே அரசு இத்­தீர்­மா­னத்தை மேற்­கொண்­டுள்­ளது என வர்த்­த­மானி அறி­வித்­தலில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் (WHO) வழி­காட்டல் ஆவ­ணங்கள் கொவிட் 19 தொற்று உடல்கள் அடக்கம் செய்­யப்­ப­டு­வது பாது­காப்­பா­னது எனத் தெரி­வித்­தி­ருந்த நிலை­யிலே இவ்­வா­றான வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டது. அத்­தோடு மனித உரி­மைகள் செயற்­பாட்­டா­ளர்­களும் அர­சாங்­கத்தின் இக்­கொ­டு­மை­யான கொள்­கைக்கு எதிர்ப்பு வெளி­யிட்­டனர். முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ரான, அவர்­க­ளது சமய வழி­மு­றைக்கு மாறான இந்த கொள்­கைக்கு எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டது. என்­றாலும் இந்த நிர்ப்­பந்த தகனம் 2021 பெப்­ர­வரி மாதம் வரை நீடித்­தது.

சுமார் 300 ஜனா­ஸாக்கள் இவ்­வாறு பல­வந்­த­மாக, கொவிட் 19 தொற்று காலத்தில் தகனம் செய்­யப்­பட்­ட­தாக மனித உரி­மைகள் செயற்­பாட்­டா­ளர் சிறீன் சரூர் தெரி­வித்­துள்ளார். இந்த எண்­ணிக்­கையை சுகா­தார அமைச்சின் அதி­கா­ரி­களும் உறுதி செய்­துள்­ளனர்.

மன்­னிப்பு வழங்­கு­வதை விட இந்த கொடு­மை­யான பல­வந்த தகன கொள்கை மற்றும் அதன் மூல­கா­ர­ணத்தைக் கண்­ட­றி­யவே நாம் விரும்­பு­கிறோம். இந்தத் தேவையே எமக்­குள்­ளது. அப்­போ­தைய ஜனா­தி­ப­தி­யாக இருந்த கோத்­தா­பய ராஜபக்ஷ தான் எழு­தி­யுள்ள புத்­த­கத்தில் இவ்­வா­றான ஒரு தீர்­மா­னத்தை தான் மேற்­கொள்­ள­வில்லை எனத் தெரி­வித்­துள்ளார்.

இவ்­வாறு மன்­னிப்பு வழங்­கு­வதன் மூலம் பல­வந்த தகனம் தொடர்­பாக நாம் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கக் கூடிய அனைத்து வழி­க­ளையும் அர­சாங்கம் அடைத்து விட முயற்­சிக்­கி­றது. பல­வந்த தகனம் தொடர்­பாக அர­சாங்கம் மேற்­கொண்ட தவ­றான தீர்­மா­னத்தை வெளிக் கொணர்­வதை மன்­னிப்பு மூலம் தடுத்து விட முடி­யாது. பல­வந்த தகனம் தொடர்­பாக கடு­மை­யான விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்டும். அதன்­மூ­லமே இவ்­வா­றான சம்­ப­வங்கள் எதிர்­கா­லத்தில் தொட­ராமல் தடுக்க முடியும் எனவும் சிறீன் சரூர் தெரி­வித்தார்.

மேலும் அவர் கருத்து தெரி­விக்­கையில், அர­சாங்கம் இவ்­வாறு மன்­னிக்கும் தீர்­மா­னத்தை மேற்­கொண்­டுள்­ளமை இஸ்­லா­மிய நாடு­களின் அமைப்­பினைச் (OIC) சேர்ந்த இஸ்­லா­மிய நாடு­களின் ஆத­ர­வினை இவ்­வ­ருட இறு­தியில் ஐ.நாவின் மனித உரி­மைகள் கவுன்­ஸிலில் பெற்­றுக்­கொள்­வ­தற்­காகும் எனவும் அவர் கூறி­யுள்ளார்.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் பொது மக்கள் பாது­காப்பு அமைச்சர் டிரான் அலஸை தொடர்பு கொண்டு வின­வி­ய­போது அவர் கருத்து தெரி­விக்க மறுத்­து­விட்டார். இவ்­வி­வ­காரம் தொடர்­பாக எதுவும் தெரி­யாது என்று அவர் கூறினார். அர­சாங்கம் மன்­னிப்பு தெரி­விப்­பது தொடர்­பாக தான் அறி­ய­வில்லை என்றும் தெரி­வித்தார்.

2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்­லா­மிய நாடு­களின் அமைப்பு (OIC) முஸ்லிம் ஜனா­ஸாக்­களின் பல­வந்­த­மான தகனம் குறித்து கவலை வெளி­யிட்­டது. சில மாதங்­களின் பின்பு 2021 மார்ச் மாதத்தில் இலங்கை ஐ.நா. மனித உரி­மைகள் கவுன்­ஸிலில் ஒரு வாக்­கினை இழந்­தது. அந்தச் சந்­தர்ப்­பத்தில் முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ மற்றும் முன்னாள் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ ஆகிய இரு­வரும் முஸ்லிம் நாடுளின் ஆத­ர­வினை இது விட­யத்தில் கோரி இரா­ஜ­தந்­திர தொடர்­பு­களை மேற்­கொண்­டார்கள்.

2021 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் அர­சாங்கம் தனது பல­வந்த தகனம் கொள்­கை­யினை மாற்றிக் கொண்­டது. கிழக்கில் ஓட்­ட­மா­வ­டியில் கொவிட் 19 தொற்று ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்கு மைய­வா­டி­யொன்­றினை ஒதுக்­கி­யது. ஓட்­ட­மா­வடி கொவிட் 19 மைய­வா­டியில் 3634 உடல்கள் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன. இவர்­களில் 2992 பேர் முஸ்­லிம்கள், 287 பேர் பெளத்­தர்கள், 270 பேர் இந்­துக்கள், 85 பேர் கிறிஸ்­த­வர்கள் ஆவர்.

கடந்த 2ஆம் திகதி நீர்­வ­ழங்கல் மற்றும் தோட்ட உட்­கட்­ட­மைப்பு அமைச்சர் ஜீவன் தொண்­டமான் ஹட்­டனில் நடை­பெற்ற இப்தார் நிகழ்வில் கடந்த அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்தில் கொவிட் 19 தொற்று முஸ்லிம் ஜனா­ஸாக்கள் தகனம் செய்­யப்­பட்­ட­மைக்கு மன்­னிப்புக் கோரினார். ‘‘இந்த புனி­த­மான ரமழான் மாதத்தில் முஸ்லிம் சகோ­தர சகோ­த­ரி­க­ளிடம் நான் மன்­னிப்பு கோரு­கிறேன். கட்­டாய தகனக் கொள்­கை­யினால் இஸ்­லா­மிய சமூ­கத்­துக்கு ஏற்­பட்ட பாதிப்­புகள் மற்றும் காயங்­க­ளுக்கு அர­சாங்கம் முறை­யாக மன்­னிப்பு கோர வேண்டும்.கடந்த வருடம் ஜன­வரி மாதமே நான் நீர்­வ­ழங்கல் அமைச்சைப் பொறுப்­பேற்­றி­ருந்தேன். என்­றாலும் கடந்த காலங்­களில் யார் இந்த அமைச்சுப் பத­வியை வகித்த போதிலும் தற்­போ­தைய அமைச்சர் என்ற வகையில் நிலத்­தடி நீர் ஊடாக கொவிட் வைரஸ் பர­வாது என்ற உண்­மையை ஏற்­றுக்­கொள்ள வேண்­டி­யது எனது பொறுப்பு. நீர்­வ­ழங்கல் அமைச்சைப் பொறுப்­பேற்ற பின்பு இது தொடர்பில் சுயா­தீன ஆய்­வொன்­றினை மேற்­கொள்­ளு­மாறு அதி­கா­ரி­க­ளுக்குப் பணித்தேன். கொவிட் 19 தொற்று உடல்கள் அடக்கம் செய்­யப்­பட்டால் நிலத்­தடி நீர் மூலம் வைரஸ் பர­வுமா என்று ஆய்வு செய்­யு­மாறு வேண்­டினேன்.

ஸ்ரீ ஜய­வர்­தனபுர பல்­க­லைக்­க­ழக நிபு­ணர்கள் தலை­மையில் இலங்­கையின் பல்­வேறு இடங்­களில் மேற்­ப­ரப்பு மற்றும் கழிவு நீர் மூலம் வைரஸ் பர­வு­கி­றதா என ஆய்வு செய்­யப்­பட்­டது.

அத்­தோடு பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் நீர் தொழில்­நுட்­பத்­துக்­கான கூட்டு ஆராய்ச்சி மற்றும் விளக்க மையம் ஒரு விரி­வான ஆய்­வினை முன்­னெ­டுத்­தது. கொவிட் 19 தொற்று உடல்களை அடக்கம் செய்வதால் நிலத்தடி நீர் மாசுபடுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் இறுதியில் தொற்று நோய்களின் போது முறையான பாதுகாப்புடன் புதைகுழிகளில் சடலங்களை அடக்குவதால் நிலத்தடி நீருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தவறான வழிநடத்தல்கள் மூலம் பலவந்த தகனம் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, விரைவில் கொவிட் 19 தொற்று ஜனாஸாக்கள் பலவந்த தகன கொள்கைக்கு அமைய தகனம் செய்யப்பட்டமைக்கு மன்னிப்பு கோருவதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றினைச் சமர்ப்பிக்கவுள்ளேன் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.