மனித உரிமைகளை மட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை கைவிடுமாறு இலங்கையை வலியுறுத்துங்கள்

சர்வதேச நாணய நிதியத்துக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடிதம்

0 56

மனித உரி­மைகள் தொடர்­பான தரா­த­ரங்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­கக்­கூ­டி­ய­வ­கையில் உத்­தேச அரச சார்­பற்ற அமைப்­புக்கள் தொடர்­பான சட்­ட­மூ­லத்தைக் கைவி­டு­மாறும், நிகழ்­நி­லைக்­காப்பு சட்­டத்தின் பிர­யோ­கத்தை இடை­நி­றுத்­து­மாறும், பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்­ட­மூ­லத்தில் அவ­சி­ய­மான திருத்­தங்­களை மேற்­கொள்­ளு­மாறும் இலங்கை அர­சாங்­கத்தைப் பகி­ரங்­க­மாக வலி­யு­றுத்­து­வதன் மூலம் சர்­வ­தேச நாணய நிதி­ய­மா­னது அத­னூ­டாக இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் உத­வித்­திட்­டத்தின் செயற்­திறன் மற்றும் நம்­ப­கத்­தன்மை ஆகி­ய­வற்றை உறு­திப்­ப­டுத்­த­வேண்டும் என மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இவ்­வி­ட­யத்தை வலி­யு­றுத்தி மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­ப­கத்தின் ஆசிய பிராந்­திய பிர­திப்­ப­ணிப்­பாளர் மீனாக்ஷி கங்­குலி மற்றும் அவ்­வ­மைப்பின் பொரு­ளா­தார நீதி மற்றும் உரி­மைகள் பிரிவின் பணிப்­பாளர் அர்விந்த் கணேசன் ஆகி­யோரால் சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் இலங்­கைக்­கான செயற்­திட்­டத்­த­லைவர் பீற்றர் ப்ரூவ­ருக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள கடி­தத்தில் மேலும் கூறப்­பட்­டி­ருப்­ப­தா­வது:

சிவில் சமூக இடை­வெ­ளியைத் தீவி­ர­மாக மட்­டுப்­ப­டுத்­து­வ­துடன், சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் உத­விச்­செ­யற்­திட்ட அமு­லாக்­கத்தை செய­லி­ழக்­கச்­செய்­யக்­கூ­டி­ய­வ­கையில் இலங்கை அர­சாங்­கத்­தினால் தயா­ரிக்­கப்­பட்­டு­வரும் புதிய சட்­ட­வ­ரை­பு­களைக் கைவி­டு­மாறு அர­சாங்­கத்­திடம் சர்­வ­தேச நாணய நிதியம் வலி­யு­றுத்­த­வேண்டும். குறிப்­பாக நல்­லாட்­சியை மேம்­ப­டுத்­து­வ­திலும், ஊழலை இல்­லா­தொ­ழிப்­ப­திலும் சிவில் சமூ­கத்தின் வகி­பாகம் மிக­முக்­கியம் எனினும், அடிப்­படை சுதந்­தி­ரத்தை மட்­டுப்­ப­டுத்தும் நோக்கில் திட்­ட­மிட்டு முன்­னெ­டுக்­கப்­பட்ட அண்­மை­ய­கால நட­வ­டிக்­கையே உத்­தேச அரச சார்­பற்ற அமைப்­புக்கள் தொடர்­பான (பதி­வு­செய்தல் மற்றும் கண்­கா­ணித்தல்) சட்­ட­மூ­ல­மாகும்.

அர­சாங்­கத்­தினால் அளிக்­கப்­பட்ட மறு­சீ­ர­மைப்­புசார் உத்­த­ர­வா­தங்­க­ளுக்கு அமைய சர்­வ­தேச நாணய நிதி­யத்­தினால் இலங்­கைக்கு வழங்­கப்­பட்ட சுமார் 3 பில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான உத­வித்­திட்­ட­மா­னது கடந்த 2022 ஆம் ஆண்டு கடன்­களை மீளச்­செ­லுத்­த­மு­டி­யாத நிலைக்குத் தள்­ளப்­பட்ட இலங்கை, அப்­பொ­ரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்து உட­ன­டி­யாக வெளி­வ­ரு­வ­தற்கு உத­வி­யது. இருப்­பினும் அடிப்­படை உரி­மை­களை மிகத்­தீ­வி­ர­மாக மட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­வ­கையில் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க அர­சாங்­கத்­தினால் நிறை­வேற்­றப்­பட்ட சட்­டங்கள் அடுத்­த­கட்ட முன்­னேற்­றத்­துக்கு அச்­சு­றுத்­த­லாக அமைந்­தது. கடந்த ஜன­வரி மாதம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட நிகழ்­நி­லைக்­காப்பு சட்­ட­மா­னது கருத்து வெளிப்­பாட்­டுச்­சு­தந்­தி­ரத்தை வெகு­வாகக் கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­வ­கை­யி­லான சரத்­துக்­களை உள்­ள­டக்­கி­யி­ருக்­கின்­றது. அதே­போன்று தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்கும் பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்­ட­மூ­ல­மா­னது கருத்து வெளிப்­ப­டுத்­த­லுடன் தொடர்­பு­டைய புதிய குற்­றங்­க­ளையும், கைது­செய்­வ­தற்­கு­ரிய தன்­னிச்­சை­யான அதி­கா­ரங்­க­ளையும் கொண்­டி­ருக்­கின்­றது. அடுத்­த­தாக அரச சார்­பற்ற அமைப்­புக்­களை ஒழுங்­கு­ப­டுத்­து­வ­தற்கு முன்­மொ­ழி­யப்­பட்­டி­ருக்கும் சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­படும் பட்­சத்தில் இலங்­கையில் சிவில் சமூக செயற்­பா­டு­களை சுதந்­தி­ர­மான முன்­னெ­டுக்­க­மு­டி­யாத நிலை ஏற்­ப­டக்­கூடும்.

நாடு கடந்த 2022 ஆம் ஆண்டு மிகத்­தீ­விர பொரு­ளா­தார சீர்­கு­லை­வுக்கு முகங்­கொ­டுத்­தி­ருந்த வேளையில், இலங்­கை­யர்கள் அனை­வரும் ஒன்­று­தி­ரண்டு நல்­லாட்­சியை உறு­திப்­ப­டுத்­து­மாறும், ஊழல் மோச­டி­களை முடி­வுக்­குக்­கொண்­டு­வ­ரு­மாறும் வலி­யு­றுத்­தினர். இருப்­பினும் தற்­போது மனித உரி­மை­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விளை­விக்­கக்­கூ­டி­யதும், சாதக மறு­சீ­ர­மைப்­புக்­களில் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­து­மான மிக­மோ­ச­மான சட்­டங்­களும், கொள்­கை­க­ளுமே வகுக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன. நாட­ளா­விய ரீதியில் இடம்­பெற்ற மக்கள் போராட்­டங்கள் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க ஆட்­சி­பீ­ட­மே­று­வ­தற்கு உத­வின. ஆனால் ஜனா­தி­பதி மக்­களின் குர­லுக்கு செவி­சாய்ப்­ப­தற்குப் பதி­லாக, அமை­தி­யான முறை­யி­லான கருத்து வெளிப்­பாட்டை ஒடுக்க முற்­ப­டு­கின்றார்.

அர­சாங்­கத்­தினால் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள அரச சார்­பற்ற அமைப்­புக்கள் தொடர்­பான சட்­ட­வ­ரைபு கடந்த ஜன­வரி மாதம் 30 ஆம் திகதி தெரி­வு­செய்­யப்­பட்ட சில சிவில் சமூக உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­ட­துடன், அது­பற்­றிய பின்­னூட்­டங்­களை சமர்ப்­பிப்­ப­தற்­கென 3 வாரங்கள் கால அவ­காசம் அளிக்­கப்­பட்­டது. அச்­சட்­ட­வ­ரைபின் ஊடாக அவ­சி­ய­மான விட­யங்கள் எவையும் ஈடேற்­றப்­ப­ட­வில்லை. மாறாக சிவில் சமூக அமைப்­புக்­களை அர­சாங்­கத்தின் கண்­கா­ணிப்பு மற்றும் தலை­யீட்­டின்கீழ் கொண்­டு­வர முற்­ப­டு­வ­துடன், அதில் கூறப்­பட்­டி­ருக்கும் நிர்­வாக செயன்­மு­றைக்கு அமை­வாக இயங்­காத அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­ப­டக்­கூ­டிய அச்­சு­றுத்­த­லையும் தோற்­று­வித்­துள்­ளது.

இவ்­வா­றா­ன­தொரு பின்­ன­ணியில் மனித உரி­மைகள் தொடர்­பான தரா­த­ரங்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­கக்­கூ­டி­ய­வ­கையில் உத்­தேச அரச சார்­பற்ற அமைப்­புக்கள் தொடர்­பான சட்­ட­மூ­லத்தைக் கைவி­டு­மாறும், நிகழ்­நி­லைக்­காப்பு சட்­டத்தின் பிர­யோ­கத்தை இடை­நி­றுத்­து­மாறும், பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்­ட­மூ­லத்தில் அவசியமான திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் இலங்கை அரசாங்கத்தைப் பகிரங்கமாக வலியுறுத்துவதன் மூலம் சர்வதேச நாணய நிதியமானது அதனூடாக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் உதவித்திட்டத்தின் செயற்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்தவேண்டும்.

சர்வதேச நாணய நிதியம் உள்ளடங்கலாக இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும் சர்வதேசப் பங்காளிகள், இப்பொருளாதார நெருக்கடிக்கு தவறான ஆட்சி நிர்வாகமும், ஊழல் மோசடிகளுமே பிரதான காரணம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே அவர்களது முயற்சிகள் வெற்றியடையவேண்டுமேயானால், அடிப்படை சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை ஒடுக்கக்கூடியவகையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக இருக்கவேண்டும் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.