ஆற்றில் நீராடசென்ற இருவர் நீரில் அடித்துச் சென்று பலி

0 627

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இங்குருஒயா மாப்பாகந்த பகுதியிலுள்ள ஆற்றில் நீராடச்சென்ற இரண்டு பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்  இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் விஜிராபுர பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தையுடைய இருவரும் உறவினர்களின் வீட்டுக்கு சென்றிருந்த வேளை குறித்த  ஆற்றில் நீராடச்சென்ற நிலையில்  இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 13 வயதுடைய அப்துர் ரஹ்மான் மற்றும் 42 வயதுடைய மொகமட் முஸ்தாக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பலியான இருவரின் சடலங்களும் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, நீதவான் முன்னிலையில் மரண விசாரணைகள் இடம்பெற்றவுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.