வெள்ளம் வரும் முன்னரே தயாராகவிருப்போம்

0 130

நாட்டின் பல பகு­தி­க­ளிலும் கடந்த சில வாரங்­களாக தொடர்­ச்­சி­யா­கப் பெய்த மழை கார­ண­மாக வெள்ளப் பெருக்கு, மண்­ச­ரிவு போன்ற அனர்த்­தங்களுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­­டது. குறிப்­பாக வெள்ள அனர்த்தம் கார­ண­மாக கிழக்கு மாகாணம் பலத்த பாதி­ப்­புக்­களை சந்­தித்தது.

அனர்த்த முகா­மை­த்துவ நிலை­யத்தின் தக­வல்­க­ளின்­படி கடந்த வெள்­ளிக்­கி­ழமை வரை கால நிலை சார் அனர்த்­தங்­க­ளால் 7 மாவட்டங்­களைச் சேர்ந்த 53641 குடும்­பங்கள் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்த வாரம் நிலைமை சுமு­க­ம­டைந்­­துள்ள போதிலும் சில மாவட்­டங்­களில் மக்கள் இன்­னமும் இடைத்தங்­கல் முகாம்­க­ளி­லேயே தங்­கி­யுள்­ள­னர்.

கிழக்கு மாகா­ணத்தில் ஏற்­பட்ட வெள்­ளத்­தினால் ஆயிரக்கணக்­கான குடும்­பங்கள் தமது வீடு­களை விட்டும் வெளி­யேற வேண்­டி ஏற்­பட்­டது. இக் காலப் ­ப­கு­தியில் பள்­ளி­வா­சல்கள், சிவில் அமைப்­புகள், இளைஞர் அமைப்­புகள், தொண்­டர்கள், தனவந்தர்கள் ஆகி­யோரின் பங்­க­ளிப்­பினால் பாதிக்­கப்பட்ட மக்­க­ளுக்கு சமைத்த மற்றும் உலர் உண­வுகள் வழங்­கப்­பட்­டமை பாராட்டுக்குரிய­தாகும். விலை­வா­சிகள் உயர்ந்­தி­ருக்கும் பொரு­ளா­தார நெருக்­க­டி­மிக்க இக்­கா­லப்­ப­கு­தியில் கூட தேவை­யு­டைய மக்­க­ளுக்­கு உத­வு­வதில் எவரும் பின் நிற்­க­வில்லை. இந்த மனி­தா­பி­மானம் என்றும் நீடிக்க வேண்டும் எனப் பிரார்த்­திக்­கி­றோம்.

இம்­முறை கிழக்கு மாகாணத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்­பட்டு பல­ர­து வீடு­க­ளுக்குள் நீர்­புக கா1ரணம் அப் பகுதி­க­ளில் அமைக்­கப்­பட்­டுள்ள சட்­ட­வி­ரோதக் கட்­டி­டங்­களும் வடி­கான்கள் முறை­யாகப் பரா­ம­ரிப்­ப­டா­மை­யுமே என சமூக ஆர்­வ­லர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். குறிப்­பாக மழை காலங்­களில் கடல் மற்றும் ஆறு­களை நோக்கி நீர் செல்லும் வழி­களை மறித்து கட்­டி­டங்கள் கட்­டப்­பட்­டுள்­ளன. இதனால் நீர் ஓடும் வழிகள் முற்­றாக தடுக்­கப்­பட்­டுள்ளன. அதே­­போன்­றுதான் பிர­தான வீதிகள் மற்றும் உள் வீதி­களில் அமைக்­கப்­பட்­டுள்ள வடிகான்­க­ளுக்குள் கற்­களும் மணலும் குப்­பை­களும் நிறைந்­துள்­ளன. இது­­வும் வீதி­களில் தேங்கும் நீர் உடனடி­யாக வழிந்­தோட முடி­யாது வீடுகளுக்குள் நுழையக் கார­ண­மாகும்.

அவ்வப் பிர­தேச உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் இவற்றைத் துப்­பு­­ரவு செய்ய நடவ­டிக்­கை எடுக்­கின்ற போதிலும் பொது மக்­களின் ஒத்­து­ழைப்­பின்­மையே இந்த நெருக்­­கடி நிலை­மைக்கு காரணம் என்றும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது. கிழக்கில் மக்­கள் செறிந்து வாழும் பகு­தி­களில் குப்­பை­களை உரிய முறையில் அகற்றாதுள்­ள­மையும் மக்கள் குப்­­­பை­­களை வடி­கான்­க­ளு­க்குள் வீசு­கின்­ற­மையும் கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

என­வேதான் எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான வெள்ள அனர்த்­தங்கள் ஏற்­ப­டு­வதைத் தவி­ர்க்கும் வகையில் மழை காலத்­திற்கு முன்­ன­ரா­கவே வடி­கான்கள் துப்­பு­ரவு செய்­யப்­ப­டு­வ­துடன் நீரோ­டை­க­ளை மறைத்­துள்ள கட்­­டு­மா­னங்­களும் அகற்­றப்­பட வேண்டும். அப்­போ­துதான் அடுத்த வருட­மும் இவ்­வா­றா­ன­­தொரு வெள்ளப் பாதிப்பு ஏற்­ப­டு­வதைத் தடுக்க முடி­யும்.

வெள்ளம் வந்த பிற்­பாடு பல இலட்ச ரூபா­ய்­களை செலவு செய்து நிவா­ரணம் வழங்­கு­வ­தை விட அதற்கு முன்­ன­ரா­கவே மிகக் குறைந்த செலவில் வடி­கான்­களைத் துப்­பு­ரவு செய்து நீர் ஓடு­வ­தற்­கான வழி­வ­கை­களை ஏற்­ப­­டுத்­து­வதே வினைத்­தி­றன்­மிக்­க­தாகும். இது குறி­த்து கிழக்­கி­லுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்கள், பள்­ளி­வாசல் சம்­மே­ள­­னங்கள், சிவில் சமூக நிறு­வ­னங்கள், தொண்டு அமைப்­புகள் கவனம் செலுத்த வேண்டும்.

அக்­கு­றணைப் பிர­தேசம் அடிக்­கடி வெள்­ளத்தில் மூழ்­கு­வ­தற்கும் இவ்­வா­றான சட்­ட­வி­ராத கட்­டு­­மா­னங்­க­­ளே கார­ண­மாகும். இதே கார­ணத்­தி­னா­லே­யே இன்­று கிழக்கும் வெள்­ளத்தை எதிர்­கொண்­டுள்­ளது.

எனவே இவ்­வாறு வெள்ள அனர்த்த பாதிப்­பு­க­ளைச் சந்­திக்கும் பிர­தே­சங்கள் அனைத்தும் அடுத்த வருட வெள்­ளத்தை எதிர்­கொள்ள இப்­போ­தி­ருந்தே தயா­ராகுவது அவ­சியமாகும். இதற்கென முறையான திட்டங்கள் வகுக்கப்பட்டு, துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தயும் விரும்­பு­கி­றோ­ம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.