அனர்த்­தங்­களை எதிர்­கொள்­ள தனி­யான பிரி­வுகள் அவ­சி­யம்

0 233

2024 ஆம் ஆண்டு இலங்­கையைப் பொறுத்­த­வ­ரைக்கும் அனர்த்­தங்­க­ளு­ட­னேயே பிறந்­துள்­ளது. கடும் மழை, வெள்ளம், மண்­ச­ரிவு அபாயம் மற்றும் மினி சூறா­வளி போன்ற அனர்த்­தங்­க­ளுக்கு நாட்­டின் பல மாகா­ணங்கள் முகங்­கொ­டுத்­துள்­ளன. அனர்த்த முகா­மைத்­துவ நிலை­ய­த்தின் தக­வல்­க­ளுக்­க­மைய ஊவா, சப்­ர­க­முவ, கிழக்கு, மத்­திய, வட மத்­திய, வட மேல் மற்றும் தென் மாகா­ணங்கள் இந்த அனர்த்­தங்­களால் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­ன.

அனர்த்த முகா­மைத்­துவ நிலை­ய­த்தின் நேற்று மாலை வரை­யா­ன புள்­ளி­வி­ப­ரங்­க­ளுக்­க­மைய 9573 குடும்­பங்­களைச் சேர்ந்த 33286 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அனர்த்­தங்­களால் 459 வீடு­களும் சேத­ம­டைந்­துள்­ளன. தமது இருப்­­பி­டங்­களை விட்டும் வெளி­யே­றிய மக்கள் பொது இடங்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

புது வருடம் பிறந்த கையோடு மக்கள் தமது வீடு­களை விட்டும் வெளி­யே­ற வேண்டி ஏற்­பட்­டுள்­ளமை துர­திஷ்­ட­­வ­ச­மா­ன­தாகும். அதே­போன்­றுதான் கடும் மழை கார­ண­மாக ஆயிரக் கண­க்கானோர் தொழில்­க­ளையும் இழந்­துள்ளனர்.
வற் வரி அதி­க­ரிப்பு கார­ண­மாக பல்­வேறு அத்­தி­ய­வ­சியப் பொருட்­களின் விலை­க­ளிலும் அதி­க­ரிப்பு ஏற்­பட்­டுள்­ளது. குறிப்­பா­க எரி­பொருள் மற்றும் எரி­வாயு என்­ப­வற்றின் விலை­களில் கணி­ச­மான அதி­க­ரிப்பு ஏற்­பட்­டுள்­ளதால் அன்­றாட உணவுப் பொருட்­களின் விலை­க­ளிலும் கணி­ச­மான அதி­­க­ரிப்பு ஏற்­பட்­டுள்­ளது. அதே­போன்­றுதான் பல்­வே­று சேவை­க­ளுக்­கான கட்­ட­ணங்­க­ளும் அதி­க­ரித்­துள்­ள­ன.

இவ்வா­றா­ன­தொரு பொரு­ளாதார நெருக்­க­டிக்கு மத்­தியில் நாட்டின் பல பகு­திகள் இயற்கை அனர்த்­தங்­களால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­ன­து மக்­களை மேலும் நெருக்­க­டிக்­குள்­ளாக்­கி­யுள்­ளது. என­வேதான் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்குத் தேவையான நிவா­ர­ணங்­களை உட­ன­டி­­யாக வழங்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். எனினும் எமது நாட்டின் அரச கட்­ட­மைப்பு இன்று ஏற்­பட்ட வெள்­ளத்­திற்­கு பல வாரங்கள் கழித்தே நிவா­ரணம் வழங்கும் என்­பதே நித­ரி­­ச­ன­மாகும். அந்த வகையில் தொண்­டு நிறு­வ­ன­ங்­களும் சிவில் அமைப்­பு­களும் தம்மால் இயன்ற உத­வி­களை மக்­க­ளுக்கு வழங்க வேண்­டி­யது காலத்தின் தேவை­யாகும். தற்­போதும் கூட தன்­னார்வ தொண்­­டர்­களும் சில நிறு­வ­னங்­களும் இப் பணியில் ஈடு­பட்­டுள்­ளனர். எனினும் மிகவும் நெருக்­க­டி­மிக்க இக் காலப்­ப­கு­தியில் மேலும் பல அமைப்­பு­களும் தன­வந்­தர்­களும் முன்வந்து மக்­க­ளுக்குத் தேவை­யான உத­வி­களை வழங்க வேண்டும் என வலி­­யு­றுத்த விரும்­பு­கி­றோம்.

அதே­போன்­றுதான் நாம் அடிக்கடி வலி­யு­றுத்­து­கி­ன்ற ஒரு விட­யமே இயற்கை அனர்த்­தங்­களால் தொடர்ச்­சி­யாக பாதிக்­கப்­ப­டு­கின்ற பகு­தி­களில் அரச கட்­ட­மைப்­புக்குப் புறம்­பாக ஓர் அனர்த்த முகா­மைத்­துவப் பிரிவு இயங்க வேண்டும் என்­ப­தாகும். அனர்த்தம் ஒன்று ஏற்­பட்ட பிற்­பாடு ஆர்­வ­முள்­ள­வர்கள் ஒன்­றி­ணைந்து திட்டம் தீட்­டு­வதை விட ஏலவே அதற்குத் தயா­ரா­க­வி­ருப்­ப­தா­னது மக்­க­ளுக்கு ஏற்­ப­டு­கின்ற பாதிப்­புக்­களை குறைப்­ப­தற்கு ஏது­­வாகும். அந்த அடிப்­ப­டையில் பள்­ளி­­வா­சல்­களை மையப்­ப­டுத்­தி­ய­தாக அனர்த்த முகா­மைத்­துவ பிரி­வு­களை ஸ்தா­பிக்க வேண்­டி­யது அந்­தந்தப் பகுதி செயற்­பாட்­டா­ளர்­களின் கட­மை­யாகும்.

அடிக்­கடி வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­படும் அக்­கு­றணை நகரில் தற்­போது இதற்­கான முயற்­சிகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இதற்­கென தனியான அனர்த்த முகா­மைத்­துவ பிரிவு ஒன்றும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இது வர­வேற்­­கத்­தக்­க­தாகும். இதே­­போன்ற கட்­ட­மைப்­புகள் ஏனைய பகு­தி­க­ளிலும் உரு­வாக்கப்­பட வேண்டும். அப்­போ­துதான் இவ்­வாறு பாதிக்­கப்­படும் மக்­க­ளுக்குத் தேவை­யான உத­வி­களை வழங்க முடி­­யு­மா­க­வி­ருப்­பதுடன் அனர்த்­தங்­க­ளி­லி­ருந்து ஓர­­ளவு பாது­காப்­பையும் பெற்றுக் கொள்ள முடியும். இது குறித்து அனை­வரும் கண்­டிப்­பாக சிந்­திக்க வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.